Saturday, April 18, 2015

ஆன் - லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு:சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி.,

புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில், டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் சத்தமின்றி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில் தான் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். கடந்த 1ம் தேதி முதல், புதிய முன்பதிவு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. படுக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம், 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், 'ஏசி' வசதி கொண்ட டிக்கெட்டுக்கான முன்பதிவு கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 'ஏசி' பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம், 14 சதவீத சேவை வரி வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சி.பி.ஆர்.ஓ., சந்தீப் தத்தா கூறியதாவது:

ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட, உறுதியான டிக்கெட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படாததால், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை பெற்ற பின் தான், சேவை கட்டணம் இரு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. சேவை கட்டணம் உயர்த்தப்பட்ட முதல் நாளில், ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இனி அறிவிக்க என்ன இலவசங்கள் இருக்கின்றன?

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட இலவசங்கள், மக்களின் மனோபாவத்தையே உழைப்பில் இருந்து இலவசங்கள், மானியங்களை தேடும் நிலைக்கு மாற்றிவிட்டது. தேர்தல் வரும்போது நாங்கள் கடந்த தேர்தலின்போது அறிவித்த இந்த இலவசங்களையெல்லாம் வழங்கிவிட்டோம், இந்த மானியங்களையெல்லாம் வழங்கிவிட்டோம், எங்களை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்யுங்கள், உங்களுக்கு இன்னும் தருகிறோம் என்று கூறுகிறார்கள். எதிர்த்து போட்டியிடும் கட்சியோ, ஆகா! பார்–பார் உன்னைவிட நான் சொல்கிறேன், அதிக இலவசங்கள், மானியங்களை என்று ஒரு நீண்ட பட்டியலையே தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்து போட்டியிடுகிறார்கள். இறுதியில் ஒரு கட்சி இந்த போட்டியில் வெற்றியும் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிவிடுகிறது. இப்படியே சேர்த்து சேர்த்து முந்தைய அரசாங்கம் தந்த இலவசங்களையும் கொடுத்து, இவர்கள் பங்குக்கு தந்த இலவசங்கள், மானியங்களையும் சேர்த்து அரசு வருவாயில் கணிசமான அளவுக்கு பெரும் தொகையை விழுங்கிவிடுகிறது. வரி இல்லா பட்ஜெட் போடவேண்டும் என்ற நோக்கில், வருவாய் பெருகாத நிலையில் கைவசம் இருக்கும் நிதியில் பெரும்பகுதி இப்படி இலவசங்களுக்கே போய்விடுவதால், வளர்ச்சித்திட்டங்களுக்கு சொந்த வருவாய் இல்லாமல் கடன் வாங்கி, அந்த கடனும் வட்டிக்குமேல் வட்டியாக சேர்ந்துபோய்விடுகிறது.

தமிழ்நாட்டில் இப்போது கருவில் தொடங்கி, கல்லறைக்கு போகும் வரையில் எல்லாமே இலவசமயமாகிவிட்டது. இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அரசின் வருவாய் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 681 கோடியே 33 லட்ச ரூபாயாகும். இந்த தொகையை வைத்துத்தான் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றவேண்டும். பட்ஜெட் மதிப்பீட்டில் 59 ஆயிரத்து 185 கோடி ரூபாய் உதவித்தொகைகள், மானியங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு 41 ஆயிரத்து 215 கோடியே 57 லட்ச ரூபாயும், ஓய்வூதியத்துக்கு 18 ஆயிரத்து 667 கோடியே 86 லட்சமும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அரசுக்கு இருக்கும் 2 லட்சத்து 11 கோடியே 483 ரூபாய் கடனுக்கு இந்த ஆண்டு 17 ஆயிரத்து 856 கோடியே 65 லட்ச ரூபாய் வட்டியாக மட்டும் கட்டவேண்டியது இருக்கும் என கருதப்படுகிறது. ஆக, பெரும்பகுதியான அரசின் வருவாய் இந்த இனங்களுக்கே சென்றுவிட்டால், வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதிக்கு எங்கே போவது? ஒன்று கடன் வாங்கவேண்டும், அல்லது வளர்ச்சித்திட்டங்களைச் சுருக்கவேண்டும். வளர்ச்சித்திட்டங்கள் இல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றத்தை காணமுடியாது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. பசியாக இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுத்தால் அந்த ஒருவேளை பசியாறுவான். ஆனால், அவனுக்கு மீனை பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், அவனே தன் வாழ்நாள் முழுவதும் மீனைப் பிடித்து தானே தன் பசியைப் போக்கிக்கொள்வான். இந்த பழமொழியை அரசியல் கட்சிகளும் பின்பற்றி ஆட்சிக்கட்டிலில் அமரும்போது தேவையான இலவசங்கள், மானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும், உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார திட்டங்களிலும் அக்கறைகாட்டினால், மாநிலம் வளர்ச்சி பெறமுடியும். இலவசங்கள் இல்லாத குஜராத் முன்னேற்றத்தைக்காணும்போது, தமிழ்நாட்டால் ஏன் முடியாது? இவ்வளவு இலவசங்களை வழங்கிவிட்ட நிலையில், இனிவரும் தேர்தலில் அறிவிப்பதற்கு என்ன இலவசம் பாக்கி இருக்கிறது? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும். இலவசங்கள், மானியங்களை தேடாமல் உழைக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் வளர்க்க வேண்டும்.

Friday, April 17, 2015

இரவுத் தூக்கம் குறைவது ஏன்?

முதுமையில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம்கூடப் போதுமானதுதான். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுகிறார் என்பதுதான் முக்கியம்.

தூக்கத்தின் அவசியம்

உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும், ஓர் இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.

முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்,

தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவுக்குத் தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களுடைய தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறார்கள்.

ஒருவருக்குத் தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்குக் கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

தூக்கம் குறைவது ஏன்?

1900-களில் எட்டு மணி நேரமாக இருந்த தூக்கமானது, இன்றைய அவசர உலகில், அரக்கப்பறக்க அதிகாலையில் எழுந்து பணிக்குச் செல்வதில் தொடங்கி இரவில் படுக்கையில் சாயும்வரை ஓய்வில்லாத ஓட்டக்களமாக உள்ளது. பரபரப்பான இந்த வாழ்க்கை முறையில் தூக்கம், ஆறு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு.

பல வீடுகளில் பணியிலிருந்து திரும்பிய பிறகும்கூட செல்போனில் பேசுவது, கணினியில் வேலை செய்வது போன்றவற்றில் நேரம் செலவழிவதால் பலருக்கும் தூக்க நேரம் சுருங்கிப்போகிறது.

கூட்டுக் குடும்பம் என்ற கலாச்சாரம் மறைந்துபோய் தனிக்குடித்தனம் என்ற கலாச்சாரம் வந்தபிறகு முதுமையில் பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தத் தனிமை அவர்களுடைய தூக்கத்துக்கு வேட்டு வைக்கிறது.

‘வயதாகிவிட்டது, இனி உடற்பயிற்சி தேவையில்லை’ என நினைத்து முதுமையில் பலரும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தூக்கமின்மைக்குப் பாதை போடுகிறது.

இழப்பு, சோகம், கடன், நிதி வசதிக் குறைவு போன்றவற்றால் ஏற்படுகிற மனக் கவலை, மன அழுத்தம் போன்றவை இரவுத் தூக்கத்தைக் குறைக்கும். முதுமையில் ஏற்படுகிற மூட்டுவலி, ஆஸ்துமா, இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், நெஞ்செரிச்சல், இரைப்பைப் புண், புராஸ்டேட் வீக்கம், குறட்டை போன்றவற்றாலும் தூக்கம் கெடும்.

பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டால் இரவில் தூக்கம் வருவது தாமதமாகும். இரவு நேரத்தில் அறை விளக்குகளை அணைத்துவிட்டு டி.வி. பார்ப்பது, கணினியில் வேலை செய்வது போன்றவை கண்களைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் தூக்கத்தையும் பாதிக்கும்.

சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளாலும் தூக்கம் கெடுவதுண்டு. உதாரணத்துக்கு நீர் பிரியும் மாத்திரைகள். இரவில் காபி, தேநீர் அல்லது மது அருந்துவதும் தூக்கத்தைக் கெடுக்கும்.

இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை அவர்களாகவே மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த மாத்திரையின் பக்கவிளைவால் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.

பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ரத்தச்சோகை மற்றும் கெண்டைக்கால் தசைகள் இழுத்துக்கொள்வது ஆகியவற்றால் தூக்கம் கெடலாம். இதுபோல் ‘மெனோபாஸ்’ எனும் மாதவிலக்கு நின்றுபோன காலகட்டத்தில் தூக்கம் பாதிக்கப்படும். இவர்களுக்கு இந்தச் சமயத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களால், தொடர்ச்சியாகத் தூங்க முடியாமல் இடையிடையே விழிப்பு உண்டாகி தூக்கம் கெடும்.

நல்ல தூக்கத்துக்கு என்ன செய்வது?

காலையில் எழுந்துகொள்ளும் நேரமும் இரவில் படுக்கப்போகும் நேரத்தையும் ஒழுங்குக்குள் கொண்டுவரவேண்டும். பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும். தூக்கப் பிரச்சினை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கிற பழக்கம் நல்ல தூக்கத்துக்கு வழிகொடுக்கும்.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வரும். இரவில் கொழுப்பு, மசாலா, காரம் மிகுந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு காபி, தேநீர், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். இவற்றில் விழிப்பைத் தூண்டுகிற ‘காஃபீன்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இவற்றுக்குப் பதிலாக பால் அருந்தலாம்.

தூங்கச் செல்வதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். இரவு எட்டு மணிக்குப் பிறகு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, தியானம், யோகா செய்வது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, ஓவியம் வரைவது, தோட்டம் வளர்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் மனம் அமைதி அடைந்து, தேவையில்லாத சிந்தனைகள் ஒழிந்து, நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

குடும்பப் பிரச்சினை காரணமாக மன அழுத்தம் இருந்தால், நெருங்கிய நண்பர்களுடன் அடிக்கடி பேசும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இப்படிப் பேசிவிட்டுத் தூங்கச் சென்றால் இரவுத் தூக்கம் அவ்வளவாக குறையாது. குளித்துவிட்டு உடனே தூங்கப் போனால் உறக்கம் நன்றாக வரும் என்று சிலர் நம்புகிறார்கள். இதில் சிறிய மாற்றம். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு குளித்துவிடுவது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

குறட்டைத் தொல்லை உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் ‘ஸ்லீப் ஆப்னியா’ எனும் உறக்கத் தடை வந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

வேலை, வேலை என்று எப்போதும் உழைப்பே கதி என்று இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது மனதுக்கு இதம் தருகிற ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிட வேண்டும்.

முதுமையான வயதில் பலதரப்பட்ட நோய்கள், ஒரே நேரத்தில் பாதிப்பதால் பல்வேறு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அந்த `மாத்திரைகளால் தூக்கம் கெடுமா?’ என்பதைக் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்வது நல்லது.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பழக்கத்துக்கு விடை கொடுப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் இரவில் எட்டு மணிக்குப் பிறகாவது புகைபிடிக்காமல் இருப்பது நல்லது. மதுப் பழக்கமும் கூடாது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் புராஸ்டேட் வீக்கம் உள்ள ஆண்களுக்கும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழியும். இதனால் தூக்கம் கெடும். இதைத் தவிர்க்க சர்க்கரை நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். புராஸ்டேட் வீக்கத்துக்குத் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தூக்க மாத்திரை நல்லதா?

நன்றாகத் தூங்கி எழுவதற்குத் தினமும் தூக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால் உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், திடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும்.

அதிக காலம் தூக்க மாத்திரையைப் பயன்படுத்தினால் ஞாபக மறதி ஏற்படும். பகலில் மயக்க நிலையை ஏற்படுத்தும், நடை தடுமாறும். மனக் குழப்பம் தலைகாட்டும். எனவே, முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். பக்கவிளைவுகள் அதிகமில்லாத மாத்திரைகளை மருத்துவர்கள் தருவார்கள்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

HRD ministry rejects UGC’s recommendations to clear 34 blacklisted universities..THE INDIAN EXPRESS 17.4.2015

In a tacit endorsement of the UPA regime’s decision to blacklist deemed varsities over grave deficiencies, the Smriti Irani-led Ministry of Human Resource Development (HRD) has rejected University Grants Commission (UGC)’s recommendations to clear 34 out of 44 blacklisted varsities and termed the higher education regulator’s reports as “flimsy” and “untenable”.

In its affidavit submitted in the Supreme Court, the ministry has stated: “UGC’s expert committees have inspected and submitted their reports in 2009 without cognisance to any criteria. The relevant provisions under the UGC Act, Guidelines and Regulations have not been taken into cognisance for inspection and formulation of the reports..it is technically and legally untenable for the ministry to take an informed decision on the basis of such flimsy reports”.

The Tandon Committee, set up by then HRD minister Kapil Sibal in 2009, had recommended blacklisiting of 44 deemed varsities, asserting they were completely unfit for the recognition that endows an institution not only with authority to grant degrees but also an approval of quality, which in turn can draw students by large numbers. Of these, three voluntarily surrendered their deemed-to-be status or had gone on to become institutes of national importance. Subsequently, many of these universities challenged the report’s credibility in the top court.

However, putting a spanner in the controversy, UGC also came up with its own reports, recommending that only seven of the 41 blacklisted varsities should be deprived of the deemed- to-be university status.

With two conflicting reports on the table and none based on any fixed criteria of the respective scrutiny, a bench led by Justice Dipak Misra had asked HRD ministry to come clear on the validity of the UGC report as well as on the manner of conducting inspections.

The response has now stated that HRD ministry has rejected the UGC committee report, thereby turning down the regulator’s view that 34 of the originally blacklisted deemed varsities could be let off. It claimed that the reports by the UGC in respect of all 41 varsities, including eight others where the regulator had granted time for corrections, contained no specific advise or recommendation based on which the central government could form an “informed opinion” and take a statutory decision.

The ministry told the court that it was in favour of framing statutory rules to lay down criteria for the inspection of the deemed-to-be universities and that the government would need three months to do so.

Till such time the statutory rules are framed, HRD ministry said, no review of the deemed-to-be universities could be done and the UGC reports are to be ignored. “It is only after statutorily laid down specific criteria coming into existence that UGC should undertake the exercise of rendering its specific and categorical advise to the central government so that the government can form an informed opinion and can arrive at its own decision,” it added. The court will take up HRD ministry’s reply on April 23.

சாஸ்த்ரா பல்கலை.க்கு எதிரான புகாரை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு எதிராக தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த புகாரை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வி.ஸ்ரீனிவாசராவ், எஸ்.வெங்கடராமன், கே.ரமேஷ், ஸ்ரீனிவாச மூர்த்தி ஆகிய நான்கு பேரும் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அகாதெமியில் (சாஸ்த்ரா பல்கலை.) கடந்த 2010, ஜூன் மாதம் பி.டெக். படிப்பில் சேர்ந்தனர். இரண்டாவது ஆண்டு தொடக்கத்தில் வேறு கல்லூரியில் சேர இருப்பதாகக் கூறி மாற்றுச் சான்றிதழை கல்லூரியில் நான்கு பேரும் கேட்டனர்.

கல்விக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு நான்கு பேரின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் அளித்தது.

இந்த நிலையில் நாங்கள் கல்விக் கட்டணமாகக் செலுத்திய மொத்தப் பணத்தையும் திரும்பத் தருமாறு கல்லூரியிடம் கேட்டனர். கல்லூரி நிர்வாகம் தராததால், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நான்கு பேரும் புகார் அளித்தனர்.

அதில், "எங்கள் கல்வியின் முழுக்கட்டணத்தையும் பெறுவதற்கு கல்லூரிக்கு அதிகாரம் இல்லை. மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடையில் நின்றால் அவர்களது உண்மையான சான்றிதழை கல்லூரி நிர்வாகம் திருப்பித் தராமல் கல்வியின் முழுக் கட்டணத்தையும் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர். இது சட்ட விரோதமானது' என்று புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகாரை ரத்து செய்யக் கோரியும், அந்தப் புகாரை விசாரணை செய்வதற்கு நுகர்வோர் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் பல்கலைக்கழகம் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனம். ஒரு மாணவர் தான் படிக்கும்போது, கல்லூரியிலிருந்து இடையிலேயே விலகினால் அவரிடமிருந்து முழுக் கட்டணத்தையோ அல்லது குறிப்பிட்ட ஆண்டுக்கான கட்டணத்தையோ பெறுவதற்கு கல்லூரி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. இந்த வழக்கில் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை. சட்டப்படியும், உண்மையின் அடிப்படையிலும் அந்தப் புகார் தகுதியானது அல்ல.

எனவே, தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுதாரரின் புகார் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் இரண்டாவது பருவத் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்திய தேதியிலிருந்து மூன்று நாள்களுக்குள் அவர்களது சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மன இறுக்கம் - தற்கொலை தீர்வல்ல!

முதல் மனிதன் தோன்றிய அன்றைக்கு இருந்த அன்னப் பறவை, இன்று இல்லை. இங்கிதமான இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, விகாரமான ஓசை குறுக்கிட்டால், உடனே உயிரை விட்டுவிடுகிற அசுணப் பறவை இன்று இல்லை.

ஆணும், பெண்ணுமாய் பறந்து செல்கிறபோது, இடையில் ஒரு தாமரைப் பூ குறுக்கிட்டால் உயிரை விட்டுவிடுகிற அன்றில் பறவையினமும் இன்றில்லை.

என்றாலும் மனிதன் மட்டும் இன்றும் இருக்கிறான். காரணம் என்ன? டார்வின் கொள்கைப்படி காலம், இடம், நேரத்துக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வாழக் கூடியவன் மனிதன் மட்டுமே.

பலவிதமான படைப்புகளுக்கிடையில், மானுடப் படைப்பு அற்புதமானது, ஆச்சரியமானது என்றார் மாக்சிம் கார்க்கி. அந்தப் படைப்பிலே இன்று பலர், உலுக்கப்பட்ட புளிய மரத்திலிருந்து புளியம் பழங்கள் உதிர்வதுபோல், தற்கொலை செய்து கொள்கிறார்களே, அது ஏன்?

மன இறுக்கம், மனப் புழுக்கம், மன உளைச்சல் என்கிறார்கள். தனிமை, எதிர்மறை வாழ்க்கை - நம்பிக்கையின்மை, பாலியலால் ஏற்படும் அவமானங்கள், அதிகார வர்க்கம் தரும் மன உளைச்சல் போன்றவை தற்கொலைக்குக் காரணங்கள் ஆகின்றன என்கிறார் அமெரிக்க கான்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டோனி ஜுரிச்.

தலைநகர் தில்லியில், எய்ம்ஸ் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுப்ரியா மீனா என்ற மாணவி, அடிக்கடி வந்த நோயால் மனப் புழுக்கத்துக்கு உள்ளாகித் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வர்னிகா பாண்டே என்ற மாணவி (பல் மருத்துவம்) மன அழுத்தம் காரணமாகத் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குகிறாள்.

அந்தக் கல்லூரியிலேயே பயின்ற கீர்த்தி காஹர் என்ற மாணவி, தனது படிப்புக்காகப் பெற்றோர்கள் கஷ்டப்படுவதை எண்ணி நச்சுப் பொருளை உண்டு, தற்கொலை செய்து கொள்கிறாள்.

நம் நாட்டில் ஒரு மாநிலத்தின் ஆளுநரின் மகனே (மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மகன் சைலேஷ் யாதவ்) தனது பெயர் ஒரு பெரிய ஊழல் புகாரில் இணைக்கப்பட்டதை எண்ணி, தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

நம் நாட்டில் மட்டுமன்றி, அமெரிக்காவிலும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் ஒரு தற்கொலை அமெரிக்காவையே உலுக்கியது.

மேரி ஓஸ்மெண்ட் அந்நாட்டுச் சின்னத்திரைகளில் புகழ்பெற்ற இசைப் பாடகி. அவரது 18 வயது மகள் மிச்சேல் பிரையனின் தற்கொலை, ஊடக உலகத்தையே திகைக்க வைத்தது. மிச்சேலின் கணவர் பிரையன் விவாகரத்து செய்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாளாம்.

தற்கொலைகள் பெருகி வருவதைப் பற்றிக் கவலை கொண்ட பேராசிரியர் ஜீன் டுவென்கே (ஸான் டீகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்) ஒரு கள ஆய்வு செய்திருக்கிறார். அந்தக் கள ஆய்வு முடிவின்படி, அமெரிக்காவில் முன்பைவிட தற்கொலைகள் 5 மடங்கு அதிகரித்திருக்கிறதாம்.

100 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நிகழ்கிறதாம். 15 வயதிலிருந்து 24 வயதுக்கு உள்பட்டவர்களில் 20 விழுக்காட்டினர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம்.

மன இறுக்கம் - மன உளைச்சல் எல்லோருக்கும் இருக்கிறது. என்றாலும், சிலர் மட்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதன் முதல் காரணம், ஒரு பிரச்னைக்கு தற்கொலைதான் முடிவு என்று தவறாக எண்ணிவிடுவதுதான்.

தற்கொலை ஓர் உயிருக்குத்தான் முடிவே தவிர, பிரச்னைக்கு அன்று. ஒரு குடும்பத்தில் ஒருவன் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கிறான் என்றால், அதிலிருந்து அவன் தப்பிக்க முடியுமே தவிர, அவன் குடும்பம் தப்பிக்க முடியாது.

இரண்டாவது காரணம், ஓர் உயிரின் மதிப்பு, அருமை - பெருமை அதனை இழப்போருக்குத் தெரியாததுதான். ஒரு விலை கொடுக்காமல் ஒரு தீப்பெட்டியைக்கூட வாங்க முடியாது. ஒரு விலை கொடுக்காமல் ஒரு படி உப்பைக்கூட வாங்க முடியாது.

ஆனால், விலை கொடுக்காமல் வாங்கப்படுவது உயிர் மட்டும்தான். இழப்பவன் அந்த உயிரைப் பெறுவதற்கு எந்த முயற்சியையும் செய்ததில்லை. ஒருமுறை போனால் திரும்பி வராதது உயிர் மட்டுமே.

மூன்றாவது காரணம், வாழ்க்கையைப் பற்றி ஒரு கணிப்பு இல்லாததே. வாழ்க்கையை அற்புதமாகக் கணித்தவர் புனித அகஸ்டின். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சாத்தான் என்ற பாம்பும் இருக்கிறது. அற்ப ஆசை என்ற ஏவாளும் இருக்கிறாள். ஆபத்தைத் தடுக்கிற ஆதாமும் இருக்கிறான்.

ஐம்பொறிகள் என்ற பாம்பு அற்ப சுகங்கள் எனும் ஏவாளைத் தூண்டி, ஆபத்துக்குள்ளாக்கும்போது, ஆதாம் என்ற விவேகம் வந்து தடுத்தாட்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலோரின் வாழ்க்கையில் ஆதாம் ஆகிய விவேகம், எழுந்து வருவதற்கு முன்னேயே சாத்தான் தன் வேலையை முடித்து விடுகிறான் என்றார்.

கவியரசர் கண்ணதாசனுடைய வாழ்க்கையில், விவேகம் வென்றதை, "தற்கொலைக்கு நான் முயன்ற சரித்திரங்கள் பல உண்டு. அத்தனையும் மீறி இங்கே யாருக்கு வாழ்கிறேன்? தத்தையவள் என் மனைவி தாலிக்கே வாழுகின்றேன்' எனச் சுவைப்படப் பாடுவார்.

மன இறுக்கத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் எத்தனையோ எச்சரிக்கைகளைச் செய்திருக்கிறார்கள்.

திருக்குரானிலே ஆண்டவர் ஓர் அருமையான செய்தியைத் தீர்க்கதரிசிக்குத் தெரிவிக்கிறார். "வாழ்க்கை என்பது ஓர் தேர்வு. இத்தேர்வில் பல சோதனைகளும், வேதனைகளும் சாதாரணமாக வந்து செல்லும். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோர்க்கு நபியே நீர் நன்மாராயம் கூறுவீராக' என்பதுவே அச்செய்தி.

நம் நாட்டில் நரிக் குறவர்கள் (குருவிக்காரர்கள்) என்றொரு நாடோடிக் கூட்டம் வாழ்கிறது. அவர்களுக்கு நிரந்தரமான வீடு கிடையாது (ரயில் நிலையம், ஆல மரத்தடிதான் வாழ்விடம்). நிரந்தர வருமானம் கிடையாது. ஓய்வூதியம் கிடையாது. காப்பீடு கிடையாது. பாசிமணி, ஊசிகள், டால்டா டின்தான் அவர்களின் மூலதனம். என்றாலும், அவர்கள் நிம்மதியாகத் தூங்குகின்ற தூக்கம் யாருக்குக் கிடைக்கும்?

மன இறுக்கத்தால், அதிர்ச்சியால் அவர்களில் யாரும் தற்கொலை செய்து கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

நமக்கு முத்து எப்படிக் கிடைக்கிறது? கடலுக்கு அடியில் கிடக்கும் சிப்பி மேலே வந்து, மழை நீர்த்துளியைத் தாங்கி, தன் வயிற்றுக்குள் இருக்கும் மணலோடு ஒரு புழுக்கத்தை உருவாக்கி, அந்தப் புழுக்கத்தாலேயே முத்தினை உருவாக்குகிறதே, அந்தப் புழுக்கம், மனிதர்கள் மத்தியில் மட்டும் ஏன் உயிரிழப்பை உருவாக்க வேண்டும்?

பூமிக்கடியில் கிம்பர்லிரேட் என்றொரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையிலிருக்கும் சில சில்லுகள், ஆண்டாண்டு காலமாய் அழுத்தப்பட்டு, அழுத்தப்பட்டு அல்லவா வைரக் கற்கள் ஆகின்றன. அழுத்தத்தினால், அந்தச் சில்லுகள் தற்கொலை செய்து கொள்வதில்லையே?

ஏனெஸ்ட் ஹெமிங்வே என்ற நாவலாசிரியர் நோபல் பரிசு பெற்றவர். கிழவனும், கடலும் (பட்ங் ஞப்க் ஙஹய் ஹய்க் ற்ட்ங் நங்ஹ) என்றொரு நாவல் எழுதினார். விடாமுயற்சிக்கும் லட்சியப் பிடிப்புக்கும் உதாரணமான நாவல் அது.

ஒரு கிழவர் படகிலே மீன் பிடிக்கப் புறப்படுகிறார். இரண்டு நாள்கள் கழித்து அவரது வலையில் பெரிய விலாங்கு மீன் சிக்குகிறது. அவர் அந்த மீனைப் படகுக்குக் கொண்டு வரப் போராடுகிறார். மீனோ அவரைக் கடலுக்குள் இழுக்கப் போராடுகிறது. பல நாள்கள் இந்தப் போராட்டம் நடக்கிறது. கடும் போராட்டத்துக்குப் பிறகு வலையைப் படகுக்குக் கொண்டு வருகிறார் பெரியவர். ஆனால், அந்த மீனின் சதையை மற்ற மீன்கள் உண்டுவிட்டதால், வலையில் மீனின் எலும்புக் கூடுதான் கிடக்கிறது. என்றாலும் பெரியவருக்கு பெருமகிழ்ச்சி.

ஏனென்றால், போராட்டத்தில் அவருக்கு லாபம் கிடைக்கவில்லையே தவிர, அந்தப் போராட்டத்தில் வென்றதே மகிழ்ச்சி. ஹெமிங்வே, கடலுக்குள் இருந்த மனிதனுக்காக எழுதவில்லை. கரைமேல் வாழ்பவர்களுக்காகத்தான் இதை எழுதினார்.

அற்பத்திலும், சொற்பத்திலும் மனித உயிர்கள் கழிவதைக் கண்டு கண்ணீர் வடித்தவன் மகாகவி பாரதி. மன இறுக்கத்திலும், உளைச்சலிலும் உயிர்கள் போகக் கூடாது என்பதை, "வண்மையெலாம் ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவதென்னே! பையத் தொழில்புரி நெஞ்சே!' என்று ஆணி அடித்துச் சொல்லியிருக்கிறான் அந்த மகாகவி.

மேலும், உறுதி கொண்ட நெஞ்சம் உடைய இளைஞர்கள் கருவிலேயே உருவாக வேண்டும் என நினைத்த பாரதி, "எமது பரத நாட்டுப் பெண்பல்லார் வயிற்றினுமந் (தாதாபாய்) நெளரோஜி போற்புதல்வர் பிறந்து வாழ்க' என வாழ்த்தினான்.

கழுமுனையிலும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் பாரதப் புத்திரர்கள். அமரர் வ.வே.சு. அய்யர், இந்தியா ஹவுஸிலிருந்து கொல்லைப்புற கதவைத் திறந்து கொண்டு பிரான்ஸூக்கு தப்பி ஓடும்போதுகூட, கம்ப ராமாயணத்தைக் கக்கத்திலே இடுக்கிக் கொண்டே ஓடினாரே, அதனைத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பகத் சிங்கின் தாய் வித்யாவதி தேவி, மதக் கலவரத்தின்போது லாகூரிலிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று இந்தியாவுக்கு ஓடி வருகிறார். அப்போது அவரது கைப்பையில் மூன்றே மூன்று பொருள்கள் இருந்தன.

அவை என்ன தெரியுமா? மகன் பகத் சிங் பயன்படுத்திய ஷேவிங் செட், சுகதேவின் தொப்பி, ராஜகுருவின் ஷூ (பாதக்குறடு). தற்கொலைக்கு முயலுபவர்கள், ஒரு நிமிடம் அந்தத் தாயை நினைத்துப் பார்க்கட்டும்.

Thursday, April 16, 2015

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி

செயல் விளக்கப் படம்: கூகுள் பக்கத்திலிருந்து.

கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம்.

உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் ஆப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிக்கேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும்.

எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...