Wednesday, August 23, 2017

'நீட்' விவகாரத்தில் மத்திய அரசு பல்டி  அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு

புதுடில்லி, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான, மருத்துவ பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில், திடீர் திருப்பமாக, மத்திய அரசு 'பல்டி' அடித்துள்ளது.





'தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை' என, மத்திய அரசு கைவிரித்துள்ளது.இதையடுத்து, மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனே நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மாநில கல்வி வாரியத்தின், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, தமிழக மாணவர்கள் கோரி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த, முக்கிய அரசியல் கட்சிகள், இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.ஆனால், 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான,மருத்துவ பொது நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 'நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டசபையில் நிறைவேற்றம்

இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், ஆறு மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, மாநில கல்வி வாரியத் தேர்வு அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கும் வகையில்,அவசர சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இதை ஏற்கவில்லை.இதையடுத்து, நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கும் அளிக்கும் வகையிலான புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

இதற்கு, மத்திய அமைச்சரவையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தன.இதனால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கை நடக்குமென, தமிழக மாணவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். நீட் தேர்வில், தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமா என்பது குறித்த வழக்கை, 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை, நேற்றைய தேதி வரை தள்ளி வைத்திருந்தது
.
ஒப்புதல் அளிக்க மறுப்பு

இந்நிலையில், நேற்று,இந்த வழக்கு, நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீட் தேர்வை, அனைத்து மாநிலங்களும் ஏற்ற நிலையில், தமிழக அரசுக்கு மட்டும், அதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது; எனவே, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது' என, மத்திய அரசு சார்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செப்., 4ம் தேதிக்குள் முடிவு

இதையடுத்து, நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான, கலந்தாய்வை துவக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, நீட் தேர்வு தகுதிப் பட்டியல் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும். மாணவர் சேர்க்கை நடைமுறையை, செப்., 4ம் தேதிக்குள், தமிழக அரசு முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். -
பிரச்னை கோர்ட்டுக்கு வந்தபின் தான் மாறிவிட்டது. எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என பரிசீலிக்கப்படும். கடைசி நேரத்தில் நிலையை மாற்றியது குறித்து, மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும்.

-தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகர்

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...