14 ஆண்டு சிறைவாசத்திற்கு பின் டாக்டரான ஆயுள் தண்டனை கைதி
Updated : பிப் 15, 2020 17:37 | Added : பிப் 15, 2020 17:36 |
பெங்களூரு : கர்நாடகாவில் 14 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த ஆயுள்தண்டனைக் கைதி ஒருவர், அதன் பிறகு டாக்டராகி சேவை செய்து வருகிறார்.
கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டம் அப்சல்புரா பகுதியை சேர்ந்த சுபாஷ் பாட்டீல். இவர் 1997ல் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த நிலையில் 2002ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். 3ம் ஆண்டு மருத்துவ மாணவரான சுபாஷுக்கு கொலை வழக்கில் 2006ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் நன்னடத்தை காரணமாக 2016ம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அதன் பின்னர் மருத்துவப் படிப்பை மீண்டும் தொடர்ந்து 2019ல் முடித்துள்ளார். எம்.பி.பி.எஸ் பட்டம் பெறுவதற்கு அவசியமான ஓராண்டு மருத்துவப் பயிற்சியையும் முடித்துள்ளார். தடைகளை தாண்டி தனது சிறுவயது கனவை சுபாஷ் பாட்டீல் 40 வயதில் எட்டிப்பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment