Sunday, February 16, 2020

ஓடுபாதையில் விமானம் ஜீப் புகுந்ததால் பதற்றம்

Added : பிப் 16, 2020 00:07

புனே: புனே விமான நிலைய ஓடுபாதையில், பயணி யர் விமானத்திற்கு முன் ஜீப் குறுக்கிட்டதால், பெரும் விபத்தை தவிர்க்க, விமானி, விமானத்தை உடனடியாக மேல் நோக்கி செலுத்தினார்.

நேற்று காலை, ஏர் இந்தியாவிற்கு சொந்தமான, ஏ--௩௨௧ விமானம், புனே விமான நிலையத்திலிருந்து, டில்லி செல்வதற்கு, ஓடுபாதையில், 222 கி.மீ வேகத்தில் சென்றது. அப்போது, ஓடுபாதையில் திடீரென ஜீப் ஒன்று வரவே, அதன் மீது இடித்து, விபத்து ஏற்படாமலிருக்க, விமானி, விமானத்தை உடனடியாக மேல் நோக்கி செலுத்தினார்.

இதில், விமானத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது என்றாலும், டில்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. இதுகுறித்து, விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புனேயில், விமானம் ஓடுபாதையில் சென்ற போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, விமானத்தின், 'ரிக்கார்டரை' தரும்படி, ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அந்த விமானத்தின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.12.2024