பணி மாறும், 'பைலட்'களுக்கு விமானப்படை, 'கிடுக்கி'
Added : பிப் 16, 2020 00:13
புதுடில்லி,: இந்திய விமானப் படையில், 250 முதல் 300 மணி நேரம் பறந்து, தங்கள் திறமையை நிரூபித்தவர்கள், 'பைலட்' எனப்படும், விமானிகள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இதில் ஓரளவு அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே விமானிகள், தனியார் விமான சேவை நிறுவனங்களில் சேர்ந்தால், நான்கு மடங்கு சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.மேலும், விமானப்படையை விட, தனியார் நிறுவனங்களில், வேலை பளு குறைவாக உள்ளதாக, விமானிகள் தெரிவிக்கின்றனர்
.இதனால், 20 ஆண்டுகள் சேவை முடித்த இந்திய விமானப்படை வீரர்கள், ஓய்வூதிய தகுதியுடன் வெளியேறி, தனியார் நிறுவனங்களில் பணியில் சேரும் போக்கு அதிகரித்து வருகிறது.இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இந்திய விமானப்படையில், சட்ட திட்டங்களை கடுமையாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்திய விமானப் படை பணியின் சிறப்பு மற்றும் அதில் கிடைக்கும் இதர சலுகைகள் குறித்து, வீரர்களுக்கு, விரிவாக விளக்கி, அவர்களின் மன மாற்றத்துக்கு வழி வகுக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment