Sunday, February 16, 2020

மாணவர்களுக்கு மீம் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்திய சிபிஎஸ்இ 




பொதுத் தேர்வுகளை முன்னிட்டு சிபிஎஸ்இ நிர்வாகம், மாணவர்களுக்கு மீம் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று (பிப்.15) தொடங்கின. இதில் 10-ம் வகுப்புத் தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பில் தேர்வை எழுத சுமார் 12 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

10-ம் வகுப்புக்கு மார்ச் 20 ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 30-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வுகளை முன்னிட்டு சிபிஎஸ்இ நிர்வாகம், மாணவர்களுக்கு மீம் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.



இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிபிஎஸ்இ, பாடத் திட்டத்தை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டும் எனவும் தேர்வுக்காக தேர்வு மையத்தில் உரிய நேரத்துக்கு முன்னதாகவே வரவேண்டும் என்றும் மீம் வடிவில் விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு குவிந்து வருகிறது.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.12.2024