Saturday, February 25, 2017


உத்தரப்பிரதேச ஏடிஎம்மிலும் போலி ரூபாய் நோட்டு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் போலி ரூ.2,000 நோட்டு ஒன்று வந்துள்ளது. புனித் குப்தா என்பவர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்துள்ளார். அப்போது, ஐந்து 2,000 ரூபாய் நோட்டுகளில், ஒரு ஸ்கேன் செய்யப்பட்ட நோட்டு இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக, வங்கி மற்றும் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி எஸ்பிஐ ஏடிஎம்மில் போலி ரூ.2,000 நோட்டுகள் வந்து அதிர்ச்சியை கிளப்பியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது, உத்தரப் பிரதேச ஏடிஎம்மிலும் போலி நோட்டு வந்துள்ளது.
Dailyhunt

No comments:

Post a Comment

BHOPAL NEWS