Tuesday, April 25, 2017

தெர்மாகோல் காமெடி: ஆர்.டி.ஐ.,யில் மனு
பதிவு செய்த நாள்24ஏப்
2017
22:05



மதுரை: வைகை அணையில், நீர் ஆவியாகாமல் தடுக்க, அமைச்சர் ராஜு தலைமையிலான குழுவினர், தெர்மாகோல் அட்டைகள் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தமிழக நீர்வள ஆதார அமைப்பு மற்றும் தேனி கலெக்டர் அலுவலக பொது
தகவல் அலுவலர்களிடம், மதுரையைச் சேர்ந்த, தகவல் உரிமை ஆர்வலர் ஹக்கிம், அளித்துள்ள மனு:

l வைகை அணையில், ஏப்., 21ல், நீர் ஆவியாகாமல் தடுக்க செயல்படுத்திய தெர்மாகோல் பரப்பும் திட்டத்தின் மதிப்பு
l பயன்படுத்திய தெர்மாகோலின் எண்ணிக்கை; திட்டத்தை முன்னின்று நடத்திய அலுவலரின் பெயர் மற்றும் பதவி
l திட்டத்தை செயல்படுத்திய போது, அரசு சார்பில் கலந்து கொண்டவர்களின் பெயர்
பட்டியல்
l இதற்கு முன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட நீர்நிலைகளின் விபரம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

BHOPAL NEWS