Thursday, January 18, 2018


எம்ஜிஆர் 101-ஆவது பிறந்த நாள்: முதல்வர் - துணை முதல்வர் மரியாதை

By DIN | Published on : 18th January 2018 01:32 AM |


அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

அதிமுக அலுவலகம்: ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்திலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

நிதி உதவி: எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பிறகு 1973-இல் திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக முதல்முறையாக போட்டியிட்டது. அப்போது கட்சி பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்டார். ஆறுமுகத்தின் மனைவி சுந்தரி தனது வீட்டுக் கடனை மீட்டு, வங்கி ஏலத்திலிருந்து மீட்டுத் தருமாறு கோரியிருந்தார். இதனையேற்று அவருக்கு கடன் தொகையான ரூ.4.80 லட்சத்தை அதிமுக சார்பில் முதல்வரும் துணை முதல்வரும் வழங்கினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மாரடைப்பால் உயிரிழந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ரவிக்குமாரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியல் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025