Friday, March 16, 2018

திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் ரூ.25 கோடி செல்லாத நோட்டுகள்


திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலையில், ஏழுமலையான் கோவில் உள்ளது. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். தினமும், கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் வசூலாக கிடைக்கிறது. இந்த தொகை, உடனுக்குடன், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான,

 16.03.2018

2016 நவ., 8க்கு பின், பக்தர்கள், உண்டியலில் காணிக்கையாக செலுத்திய, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், தேவஸ்தானத்தின் சார்பில் தனியாக வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, செல்லாத ரூபாய் நோட்டுகள், தேவஸ்தானத்தின் கைவசம் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், பக்தர்கள், உண்டியலில் செலுத்திய, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை தனியாக பராமரித்து வருகிறோம். 25 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் உள்ளன.

பக்தர்கள், காணிக்கையாக செலுத்திய இந்த நோட்டுகளை, வங்கியில் செலுத்தி, செல்லத்தக்க தொகையாக மாற்ற அனுமதிக்கும் படி, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.பக்தர்கள், தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையில் செலுத்திய தொகை என்பதால், இதை, செல்லத்தக்கவையாக மாற்ற, ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரே நாளில் ரூ.4 கோடி

ஏழுமலையான் கோவிலில், நேற்று முன்தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், ஒரே நாளில், நான்கு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வியாபார நிறுவன உரிமையாளர்கள், தங்களுக்கு கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை, ஏழுமலையான் உண்டியலில் செலுத்தி வருவதால், முழு ஆண்டு கணக்கு முடிவின் போது, ஆண்டுதோறும் மார்ச்சில், உண்டியல் காணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...