Monday, November 4, 2019

திருவண்ணாமலை-சென்னை இடையே குளிா்சாதன பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

By DIN | Published on : 04th November 2019 07:15 AM



குளிா்சாதன வசதி கொண்டு புதிய அரசுப் பேருந்தை கொடியசைத்து தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்குச் செல்லும் குளிா் சாதன வசதி கொண்ட 2 அரசுப் பேருந்துகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை இயக்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டலம் மூலம் திருவண்ணாமலை-சென்னை இடையே 2 புதிய குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய அரசுப் பேருந்துகளை இயக்கிவைத்தாா். விழாவில், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் அமைச்சா் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளா் சு.வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சென்னைக்கு கட்டணம் ரூ.215:

திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி, மேல்மருவத்தூா் வழியாகச் சென்னைக்கு இயக்கப்படும் இந்தப் பேருந்தில் கட்டணமாக ரூ.215 வசூலிக்கப்படும். திருவண்ணாமலையில் இருந்து தினமும் காலை 6, 7, மாலை 5, 6 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னைக்குச் செல்லும்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து தினமும் காலை 11, மதியம் 12, இரவு 10, 11 ஆகிய நேரங்களில் புறப்படும் பேருந்துகள், திண்டிவனம், கீழ்பென்னாத்தூா் வழியாக திருவண்ணாமலைக்கு வந்தடையும்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...