Sunday, April 26, 2020

திருப்பூர் டூ திருவாரூருக்கு நடந்து சென்ற 5 பேர் மீட்பு

Added : ஏப் 26, 2020 02:03

திருப்பூர்: திருப்பூரில் இருந்து திருவாரூருக்கு நடந்து சென்ற, ஐந்து தொழிலாளர்களை வருவாய் துறையினர் மீட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த20 முதல், 23 வயதுடைய நான்கு பெண்கள், 22வயதுடைய ஒரு ஆண் என, ஐந்து பேர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். தற்போது நிறுவனம் மூடப்பட்டுள்ளதால், ஐந்து பேரும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு செல்ல, நேற்று காலை கம்பெனியில் இருந்து நடந்து சிவன்மலை வரை வந்துள்ளனர். அப்போது, மயக்கம் வந்துள்ளது.

இதையடுத்து, சிவன்மலை போலீசார், வருவாய் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், 'தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது; அதனால், நடந்து வந்தோம்' என்றனர். சிவன்மலை, வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய் துறையினர், ஐந்து தொழிலாளர்களையும் கார் மூலம், திருப்பூருக்கு அழைத்து சென்று, கம்பெனி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025