Sunday, April 12, 2020


ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடிக்க உத்தரவு

Added : ஏப் 12, 2020 00:24

சென்னை : ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தில், ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண பணிக்கு, நிதியுதவி தருமாறு, பொதுமக்களிடம் மத்திய - மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் ஒரு நாள் ஊதியத்தை தர முன்வந்தனர். அதை அரசு ஏற்றுள்ளது. இதையடுத்து, இந்த மாதம் ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறை பணியாளர்களின் சம்பளத்தில், ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, தமிழக பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

விருப்பம் உள்ளவர்களிடம் மட்டுமே, ஊதியம் பிடித்தம் செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...