Thursday, February 16, 2017

சசிக்கு அவகாசம் அளிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி சரணடைய, அவகாசம் அளிக்க வேண்டும்' என்ற சசிகலாவின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துள்ளது. 'உடனடியாக சரணடைய வேண்டும்' என, உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா உள்ளிட்டோருக்கு, தலா, நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.சசிகலாவின் முதல்வர் பதவி ஆசைக்கு, இந்த தீர்ப்பு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில், அவர் ஈடுபட்டார்.

 இந்நிலையில், சசிகலா சார்பில், மூத்த வழக்கறிஞர், கே.டி.எஸ். துளசி, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'தன் அரசியல் விவகாரங்களை கையாள வேண்டியுள்ளதால், சரண் அடைவதற்கு, சசிகலாவுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்து, நீதிபதி பினாகி சந்திர கோஷ் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:இந்த மனு மீது, எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. சொத்து குவிப்பு வழக்கில், நாங்கள் அளித்துள்ள தீர்ப்பில், எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது. ஏற்கனவே, அதிக பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை அளித்துள்ளோம். அதில் ஒரு வார்த்தையை கூட மாற்ற முடியாது; இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

உடனடியாக என்பதற்கு அர்த்தம் தெரியுமா? : ''சசிகலாவுக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், சரணடைய அவகாசம் அளிக்க வேண்டும்,'' என, மூத்த வழக்கறிஞர் துளசி வலியுறுத்திய போது, 'தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள், உடனடியாக சரணடைய வேண்டும் என, நாங்கள் தீர்ப்பில் கூறியுள்ளோம். உடனடியாக என்பதற்கு, உங்களுக்கு அர்த்தம் தெரியுமா' என, நீதிபதிகள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...