Tuesday, February 14, 2017

சசிகலா குற்றவாளி

DINAMALAR

புதுடில்லி: சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறதியாகி உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27 ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற மூன்று பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே நான்கு பேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர்.

 இந்த வழக்கில் ஜெ., உள்ளிட்ட நான்கு பேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் தேதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு அளிப்பதை, 2016 ஜூன், 7 ம் தேதி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...