Tuesday, February 27, 2018

ராமேஸ்வரம் மருத்துவ மாணவர் மர்ம மரணம்

Added : பிப் 27, 2018 00:42





ராமேஸ்வரம்: சண்டிகரில் பட்ட மேற்படிப்பு படித்த ராமேஸ்வரம் மருத்துவ மாணவர், விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் 'ராக்கிங்' கொடுமையாக இருக்க கூடும் என உறவினர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் கோயிலில் குருக்களாக பணிபுரியும் ராமசாமி மகன் கிருஷ்ணபிரசாத்,24, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்ததும், எம்.டி., படிக்க நடந்த தகுதி தேர்வில் இந்திய அளவில் 7 வது இடம் பிடித்தார். கடந்த டிச.,16ல் சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம். இ.ஆர்., மருத்துவ கல்லுாரியில் பொது மருத்துவம் பாட பிரிவில் சேர்ந்து, ஒரு மாதத்திற்கு பின் 'ரேடியோ டைக்னாலஜி' பிரிவில் சேர்ந்தார். இவருடன் ஒரு தமிழக மாணவரும் படித்தார். நேற்று கல்லுாரி விடுதியில் கிருஷ்ணபிரசாத் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.இத்தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சண்டிகருக்கு சென்றுள்ளனர்.சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்து தற்கொலைக்கு துாண்டி இருக்கலாம், கல்லுாரியில் ஒரு மாதத்தில் ரேடியோ டைக்னாலஜி பாட பிரிவுக்கு சென்றதால், ஆத்திரமடைந்த பிற மாணவர்கள் கிருஷ்ணபிரசாத்தை கொலை செய்திருக்க கூடும். எனவே மாணவர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரத்தில் உள்ள கிருஷ்ணபிரசாத்தின் உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

BHOPAL NEWS