Tuesday, February 27, 2018

மகளிருக்கான இருக்கை ரயில்வே புது முடிவு

Added : பிப் 27, 2018 01:35 |



புதுடில்லி : ரயில்களில், பெண்களுக்கான, 'பெர்த்' எனப்படும் துாங்கும் வசதி உடைய இருக்கைகளின் ஒதுக்கீட்டில், புதிய முறையை மேற்கொள்ள, ரயில்வே திட்டமிட்டுள்ளது.

காத்திருப்போர் பட்டியல்

முன்பதிவு வசதியுள்ள ரயில்களில், பெண்கள், வயதானோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு என, தனி ஒதுக்கீடு உள்ளது. முன்பதிவுக்கான காலம் முடிந்த பின், இதில் காலியாக இருக்கும் இருக்கை, பாலின பாகுபாடு இல்லாமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும்.

புதிய முறைப்படி, இவ்வாறு பயன்படுத்தப்படாத இடங்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பின், காத்திருப்போர் பட்டியலில் உள்ள வயதானோருக்கு வழங்கப்படும்.

அவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லாமல் இருந்தால், அதை ரயில் டிக்கெட் பரிசோதகர், கடைசி நேரத்தில் பயணம் செய்ய வரும் பெண்கள் அல்லது வயதானோருக்கு ஒதுக்கித் தரலாம்.

நடவடிக்கை

இது தொடர்பான சுற்றறிக்கை, சமீபத்தில் ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெண் பயணியர் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment

BHOPAL NEWS