Thursday, February 23, 2017

திசை மாறுகிறது "தீபா" புயல்?

By திருமலை சோமு  |   Published on : 22nd February 2017 08:58 PM  |   
deepa
தமிழக அரசியலில் கடந்த டிசம்பர் மாதம் அடிக்க தொடங்கிய புயல் ஒரு புரட்டு புரட்டி அடித்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணச் செய்தியில் தொடங்கி பல்வேறு காட்சிகள் தினமும் நம்மை விறுவிறுப்பாக கண்காணிக்க செய்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நாள்தோறும் நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகும் இன்னொரு புயலாக கிளம்புவார் என்று பேசப்பட்டது.
ஜெயலலிதாவின் அபிமானிகள், ஆதரவாளர்கள் எல்லோம் அவரை இன்னொரு ஜெயலலிதாவாகவே பார்க்கத் தொடங்கினர். தினம் தோறும் அவர் வீட்டு முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்ததோடு அவரை அரசியலுக்கு வருமாறும் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் ஆரவார குரல் எழுப்பினர். அதுமட்டும் இன்றி மாநிலம் முழுவதும் வரவேற்பு பதாகைகளும், தொண்டர்களின் ஆரவாரமும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில்தான் எதிர்பாராமல் வந்த ஜல்லிக்கட்டு தன்னெழுச்சிப் போராட்டம் தீபா புயலை முடக்கிப் போட்டது. என்றாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீண்டும் மையம் கொள்ளத் தொடங்கிய தீபா புயல் மெல்ல தீவிரம் அடையும் நேரத்தில் அரசியலில் புதிய சூறாவளியாக புறப்பட்டதுதான் பன்னீர் செல்வத்தின் அதிரடி முடிவுகள்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமையை ஏற்க முடியாமல் திடீர் என ஞானோதயம் தோன்ற ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வந்து தியானம் செய்த அவர் அம்மாவின் ஆன்மா உந்தியதால் வெகுண்டு எழுந்ததாகவும் மனசாட்சியோடு ஒரு யுத்தம் நடத்தியப் பின் இறுதியில் இங்கு வந்து பேசுகிறேன் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து தமிழகத்தின் கடைக்கோடி மனிதனையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்த அதிர்வலையில் செய்வது அறியாமல் சசிகலா அணியை விட அதிகம் திணறியது, தீபாவின் அரசியல் கனவுதான் என்று சொல்ல வேண்டும். வெவ்வேறு திசையில் புறப்பட்ட இரண்டு புயல் சின்னங்கள் ஒரே இடத்தில் மையம் கொள்வது போல தீபா, ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்தார்.
இதில் அவரின் ஆதரவாளர்கள் பலருக்கும் அதிருப்திதான் என்றாலும் வேறு வழியிலாமல் அப்போதைய சூழலுக்கு அதை செய்ய வேண்டியதாகியது. அந்த முடிவுக்குப் பின் சசிகலாவின் சிறைவாசம், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறைவைப்பு, போன்ற சம்பவங்கள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக மாறும் என்றே அவர்கள் எண்ணினர். ஆனால்  சசிகலா அணியை அவர்களால் வீழ்த்தக் கூடிய அளவுக்கு வலிமையையும் ஆதரவும் அவர்கள் தரப்பில் இல்லை என்பதால் சட்டப் பேரவை பெரும்பான்மை நிகழ்வில் சசிகலா அணியே வென்றது.

சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு: களத்தில் இறங்கி ஆய்வு செய்த நீதிபதிகள்!



சிவகங்கை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்படுவதை கண்காணிக்கும் வகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் களத்தில் இறங்கி ஆய்வு செய்ததால் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் காடுபோல் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறபித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பூவந்தி பகுதியில் சீமை கருவேல மரங்கள் எந்த அளவுக்கு அழிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், வைத்தியநாதன், கலையரசன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனால், களத்தில் நின்று பணியாற்றிய அதிகாரிகளும், ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிபதிகளின் இந்த திடீர் ஆய்வை கண்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தனர். முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் செல்வம் மற்றும் கிருபாகரன் ஆகியோர் மதுரை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனால், மதுரை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அழிப்பதை, மதுரை மாவட்ட ஆட்சியர் தீவிரப்படுத்தி உள்ளார்.

-சல்மான்

கோவைக்கு நாளை மோடி வருகை: 5,000 போலீசார் பாதுகாப்பு


கோவை ஈஷா மையத்தில் ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மோடி நாளை வர உள்ளதால், பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முகத் தோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை மகா சிவராத்திரியையொட்டி இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்துப் பேசுகிறார். இதனிடையே பிரதமர் மோடி வருகைக்கு, கோவையில் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், பாதுகாப்பு பணியில் சுமார் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

விழா நடைபெறும் இடம் மலையை ஒட்டியுள்ள பகுதி என்பதால், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால், அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப்பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டுபாக்கூர் கையெழுத்தால் தாசில்தாரை அதிர வைத்த வியாபாரி!





பால் வியாபாரி கொடுத்த வாரிசு சான்றிதழைப் பார்த்த கிண்டி தாசில்தார் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். கிண்டி தாசில்தாரின் கையெழுத்தால் அந்த சான்றிதழ் பூர்த்தி செய்யப்பட்டிருக்க, இது தாசில்தார் அலுவகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் என்ற சந்திரன். இவர், வாரிசு சான்றிதழ் கேட்டு கிண்டி தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த அம்பேத் என்ற ஆனந்தன் ஆகிய புரோக்கர்கள் சந்திரனை அணுகினர். வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு சந்திரனும் சம்மதித்தார். இதையடுத்து சில நாட்களுக்குப் பிறகு வாரிசு சான்றிதழை சந்திரனிடம் கொடுத்தனர்.
அந்த சான்றிதழுடன் கிண்டி தாசில்தார் ஆனந்த மகாராஜாவிடம் விண்ணப்பித்தார் சந்திரன். அப்போது சான்றிதழில் உள்ள கையெழுத்தில் சந்தேகம் அடைந்த தாசில்தார், சந்திரனிடம் விசாரித்தார். பிறகு அந்த சான்றிதழுடன் எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆனந்தன், சுப்பிரமணியன் ஆகிய இருவரும் போலி வாரிசு சான்றிதழைத் தயாரித்தது தெரியவந்தது. உடனடியாக இருவர் வீடுகளிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலிச் சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய 32 ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் போலி சாதிச் சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து புரோக்கர்கள் ஆனந்தன், சுப்பிரமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் போலிச் சான்றிதழ் தயாரித்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சந்திரனிடம் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் சந்திரன், பத்தாம் வகுப்பு படித்துள்ளார் என்றும், பால்வியாபாரம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "போலிச் சான்றிதழ் புரோக்கர்கள் அம்பேத், சுப்பிரமணி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சான்றிதழுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். சந்திரனிடம் கொடுக்கப்பட்ட சான்றிதழ் அவருக்கு போலி என்று தெரியவில்லை. இதனால்தான் அவர் அந்த சான்றிதழைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட தாசில்தாரிடமே விண்ணப்பித்துள்ளார். தாசில்தாரின் கவனத்துக்கு அந்த சான்றிதழ் வரவில்லை என்றால் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்க முடியாது. இவர்கள் யாருக்கெல்லாம் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அளிக்க குழு அமைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By DIN  |   Published on : 23rd February 2017 04:16 AM  |
meet
அரசு ஊழியர்களுக்கான 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசுப் பணியாளர்களுக்கு செயல்முறைபடுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனை
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க தனி குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவானது தனது பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்குள் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, அலுவலர் குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்தக் குழுவில் 5 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருப்பர்.
குழுவில் யார் யார்? நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபீதா, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருப்பர். குழுவின் உறுப்பினர் செயலாளராக பி.உமாநாத் ஐ.ஏ.எஸ். செயல்படுவார்.
இந்த அலுவலர் குழு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராயும். அவற்றை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்.
மேலும், இந்தக் குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் -குடும்ப ஓய்வூதியம், திருத்திய ஓய்வுக்கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் உரிய பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலை குழு அளிக்கும் அறிக்கையையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளையும் இக்குழு வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், ஏனைய சங்கங்கள் இந்த அலுவலர் குழுவுக்கு ஊதிய விகிதம், ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான்கு மாதங்கள்: அலுவலர் குழுவானது தனது அறிக்கையை நான்கு மாத காலத்துக்குள், அதாவது ஜூன் 30-ஆம் தேதிக்குள் அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கி ஏடிஎம்.மில் ரூ.2,000 போலி நோட்டுகள்!

By DIN  |   Published on : 23rd February 2017 02:17 AM  |   
fake
தில்லியின் சங்கம் விஹார் பகுதியிலுள்ள வங்கி ஏடிஎம் ஒன்றில், "சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா' என்று அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது: ரோஹித் குமார் என்ற நபர், சங்கம் விஹார் பகுதியிலுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-மில் கடந்த 6-ஆம் தேதி பணம் எடுத்துள்ளார். அவருக்கு, 4 போலி ரூ.2,000 நோட்டுகள் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, ரோஹித் குமார் போலீஸாரை அணுகினார்.
அந்த போலி நோட்டுகளில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்குப் பதிலாக சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆர்பிஐ குறியீட்டுக்கு பதிலாக பி.கே. என்று குறியீடு இருந்தது. ரூபாய் சின்னம் இல்லை. மேலும், ரூபாய் நோட்டின் வலது ஓரத்தில் "வாட்டர் மார்க்' பகுதியில் "சுரான் லேபிள்' என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதனிடையே, அந்த ஏடிஎம் மையத்துக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டார். அவர் பணம் எடுத்தபோதும், அதேபோன்ற ரூபாய் நோட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, மோசடி தடுப்புச் சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட ஏடிஎம்-மில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், அதில் கடைசியாக பணம் நிரப்பிய நபரை அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். இதுபோல், வேறெந்த நபரிடம் இருந்தும் எங்களுக்கு புகார்கள் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அந்த அதிகாரி.

 அமெரிக்க குடியேற்ற விதிகளில் கட்டுப்பாடு: 3 லட்சம் இந்தியர்களை பாதிக்க வாய்ப்பு

By DIN  |   Published on : 23rd February 2017 01:30 AM  |
உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் தங்கி பணியாற்றுபவர்கள், கல்வி பயில்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றச் சலுகைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டது.
அதற்காக குடியேற்றச் சட்டத்தில் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு ஆயத்தமாகி வருகிறது.
இதன் விளைவாக 3 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமெரிக்கவாழ் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றச் சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள், சொந்த நாட்டில் வாழ்வுரிமை அச்சுறுத்தல் இருப்பவர்கள் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைவரும் புதிய குடியேற்றச் சட்டத்தின்படியே அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும்.
சட்டவிரோதமாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் தங்கியிருக்க எவருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு விதிகளுக்குப் புறம்பாக அமெரிக்காவில் வசிப்பவர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.1 கோடி பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனத் தெரிகிறது.

ரூபாய் நோட்டு விவகாரம்: 70 வயதைக் கடந்தவர்களுக்கு வருமான வரித் துறை சலுகை

By DIN  |   Published on : 23rd February 2017 02:16 AM  |   
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, 70 வயதைக் கடந்த முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 லட்சம் வரை செலுத்தப்பட்டிருந்தால், அவர்களிடம் வருமான வரித் துறை எவ்வித ஆதாரங்களையும் கேட்காது.
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பற்றிய விவரங்களை வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது.
இந்தக் காலகட்டத்தில், 70 வயதுக்கும் கீழானவர்கள், தங்களது வங்கிக் கணக்குகளில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை செலுத்தியிருந்தால், அவர்கள், வருமான வரித் துறையின் இணையதளத்தில், தங்களுடைய வருமானத்துக்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான தொகை, முந்தைய ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்குடன் ஒத்துப்போகும் அளவுக்கு இருந்தால், அந்த நிலையிலேயே விவரங்கள் சரிபார்ப்புப் பணி முடித்துக் கொள்ளப்படும்.
ஆனால், வங்கிக் கணக்குகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் ரொக்கப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அந்தத் தொகைக் கிடைத்ததற்கான ஆதாரங்கள் கேட்கப்படும்.
70 வயதுக்கும் கீழானவர்கள் ரூ.2.5 லட்சம் வரை செலுத்தியிருந்தாலும், 70 வயதைக் கடந்தவர்கள் ரூ.5 லட்சம் வரை செலுத்தியிருந்தாலும், அந்தத் தொகை, அவர்களது கடந்த கால சேமிப்புத் தொகை அல்லது கடந்த கால வருமானமாகக் கருதப்படும். எனவே, அவர்களிடம் எந்த ஆதாரமும் கேட்கப்படாது.
சந்தேகத்துக்கிடமான வகையில் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்டு, மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் அந்த மூத்த அதிகாரி.

சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரிப்பு'

By DIN  |   Published on : 23rd February 2017 04:10 AM  |  
சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு வருகை தரும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுற்றுலா வாரிய இயக்குநர் ஜி.பி.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தோனேசியா, சீனா, மலேசியாவுக்கு அடுத்தபடியாக 4-ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2016-ஆண்டில் இந்தியாவிலிருந்து 11 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். இது கடந்த 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக மும்பை, சென்னை, தில்லி, பெங்களூத்ஞ் நகரங்களிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
சிங்கப்பூர் கடந்த 10 ஆண்டுகளில் பொழுதுபோக்கு அம்சங்கள், படப்பிடிப்பு தளங்கள், சொகுசு கப்பல்கள், விருந்தோம்பல் மேம்பாடு, இயற்கை வள பராமரிப்பு என பல்வேறு துறைகலில் வியத்தகு வளர்ச்சி பெற்றுள்ளது. சுற்றுலாட்க் பயணிகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளோம். "உலகம் சுற்றும் வாலிபன்', "பிரியா', "நினைத்தாலே இனிக்கும்' உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெற்றுள்ளன. தற்போது இரண்டு ஹிந்தி படங்களின் ஷூட்டிங்கை நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.
சிங்கப்பூருக்கு சுற்றுலா வர வேண்டும் என இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று அழைப்பு விடுத்து வருகிறோம். தற்போது எங்கள் நாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய தமிழகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம். சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சுற்றுலா துறையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றார் அவர்.

Wednesday, February 22, 2017

ஏப்ரல் முதல் மின்னணு குடும்ப அட்டைகள்: தமிழக அரசு அறிவிப்பு

By DIN  |   Published on : 22nd February 2017 04:34 AM  |  
ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அதிகாரிகளுடன் அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில், அவர் பேசியது:-
இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்போது வரை 5 கோடியே 65 லட்ச்தது 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர். இது தமிழகத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும்.
புதிய அட்டைகள்: இதுவரை 18 லட்சத்து 54 ஆயிரத்து 700 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 29,815 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
இன்று வரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீதிக்காக இறுதிவரை போராட இருக்கும் பாவனா!

By எழில்  |   Published on : 22nd February 2017 10:45 AM  | |  
bhavana1xx1

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது கார் எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் பாவனா காரை வழிமறித்தது. வேனில் இருந்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரைத் தாக்கி பாவனாவை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது பாவனாவை துன்புறுத்தி, அந்த காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். பிறகு, காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து, காக்கநாடு பகுதியில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று பாவனா உதவி கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் அழுத்தங்களால் நடிகை பாவனா இந்த வழக்கை திரும்பப் பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் பாவனாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரிமா கலிங்கல் இதை மறுத்துள்ளார்.
தன்னுடைய ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது: எல்லோருக்கும் பரபரப்பான கதைகள்தான் தேவைப்படுகின்றன. எல்லோருக்கும் சில பெயர்களை சொல்லவேண்டும் என்கிற ஆவல் உள்ளது. ஆனால் யாருக்கும் உண்மை அவசியமில்லை. அவர் கடைசிவரை இதற்காகப் போராடுவார். மனிதம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் அவருக்குத் துணையாக இருப்பார்கள் என்று பதிவு எழுதியுள்ளார்.

ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட ஊதியக் குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By DIN  |   Published on : 22nd February 2017 12:29 PM  |      |  
edapadi_meeting

சென்னை: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :
1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை
2. முதன்மை செயலாளர், உள்துறை
3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை
4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.
2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

வீணாகும் உணவு!

By ஆசிரியர்  |   Published on : 22nd February 2017 01:28 AM  |  
உலகெங்கிலும் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், உணவுப் பொருள்களை முறையாக விநியோகிப்பது குறித்தும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மிகப்பெரிய அளவில் உணவுப்பொருள்கள் வீணாகின்றன, வீணாக்கப்படுகின்றன என்கிற வேதனையான உண்மையையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையின் தேவையைவிட இரட்டிப்பு மடங்கு உணவுப் பொருள்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் கோடிக்கணக்கான பேர் நாள்தோறும் உணவுக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்கும் அவலம் காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப்.ஏ.ஓ.) ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி ஆண்டுதோறும் 1.3 பில்லியன் டன் (130 கோடி டன்) உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் 750 பில்லியன் டாலர் (சுமார் ரூ.50 லட்சத்து 22 ஆயிரம் கோடி). அதாவது மனிதனின் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான உணவுப் பொருள்கள் வீணாகின்றன அல்லது வீணாக்கப்படுகின்றன.
உணவுப் பொருள்களை சேதமில்லாமல் பாதுகாப்பது, வீணடிக்காமல் இருப்பது என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளுமே எதிர்கொள்ளும் சவால்தான். ஆனால், வளர்ச்சியடையும் நாடுகளில்தான் இந்தப் பிரச்னை மிக அதிகமாக காணப்படுகிறது. அதற்குக் காரணம் உற்பத்தி செய்த பொருள்களை முறையாக சேமித்து வைக்கவோ, இழப்பில்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதுதான்.
உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள் வீணாக்கப்படுவது என்பது பயிராகும் இடத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. அங்கிருந்து சந்தைக்கு கொண்டு போகும்போதும், பதப்படுத்தல் அல்லது சேமிப்புக் கிடங்குகளில் பத்திரப்படுத்துதல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக்கு கொண்டு சேர்த்தல் என்று ஒவ்வொரு செயல்பாட்டிலும் உற்பத்திச் செய்யப்பட்ட பொருளின் ஒரு பகுதி வீணாவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பழங்கள், காய்கறிகளைப் பொருத்தவரை ஆரம்பக்கட்டத்திலேயே கூட வீணாகி விடும் அளவு அதிகம்.
ஏனைய நாடுகள் எல்லாவற்றையும்விட இந்தியாவில் இந்தப் பிரச்னை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு புள்ளிவிவரத்தின்படி ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் உள்ள உணவுப் பொருள் அறுவடைக்கு முன்பும் அறுவடைக்குப் பிறகும் வீணாகிறது. இதில் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை அடக்கம். நமது விவசாயிகள் உற்பத்தி, இழப்பு அல்லது வீணாதலை இன்னும் குறைக்க முற்படவில்லை.
உணவுப் பொருள்களைப் பொருத்தவரை மிக அதிகமான இழப்பு அல்லது வீணாகிப் போதல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உற்பத்திச் செய்யப்பட்ட பொருளை கொண்டு செல்லும்போதும், சேமித்து வைக்கும்போதும்தான் ஏற்படுகிறது. உற்பத்திச் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பு வசதி விரிவுபடுத்தவும், மேம்படுத்தப்படவும் செய்யப்பட்டால் மட்டுமே இந்த இழப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
அழுகிப் போகக்கூடிய பழங்கள், காய்கறிகளின் இழப்பை பெரியஅளவில் குறைக்க வேண்டுமானால், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் பரவலாக நிறுவப்பட வேண்டும். இந்தியாவில் நாம் குளிர்பதன சேமிப்பு, சரக்கு கையாளுதல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். உணவுப் பதனிடுதல் துறையில் மிக அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள், தடையில்லா மின்சாரம் ஆகியவை உறுதிப்படுத்தப்படாமல் குளிர்பதனசேமிப்புக் கிடங்குகளை பரவலாக அதிகரிப்பது இயலாது. இதில் அந்நிய முதலீட்டுக்கு வழிகோலப்பட்டிருப்பது என்றாலும்கூட, போதுமான அளவு முதலீடும் வரவில்லை, முயற்சிகளும் முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை.
மேலைநாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லும்போது புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு அவை உறைகளிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் அடைக்கப்படுகின்றன. உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் கையாள்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து விற்பனைக்கு வருவது வரை எங்கெல்லாம் இழப்புகளை குறைத்து பொருள் வீணாகாமல் பாதுகாப்பதில் அவர்களைப் போல நாம் கவனம் செலுத்துவதில்லை.
இந்தியாவில் ஆறு பேர்களில் ஒருவர் பட்டினியாக இருக்கிறார் அல்லது ஊட்டச்சத்து குறைந்தவராக இருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். உலக பட்டினி குறியீடு, 118 நாடுகளில் இந்தியாவை 97-ஆவது இடத்தில் காட்டுகிறது. இந்த நிலையில் நாம் உற்பத்திச் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை வீணாகாமல் கையாளாமலோ, சமைத்த உணவுப் பொருள்களை வீணாக்கவோ செய்தால் அது மனித இனத்திற்கே செய்கின்ற துரோகம். உணவுப் பொருள் வீணாவதை கணிசமாக குறைக்க முடியுமேயானால் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டம் வெற்றியடைந்து அனைவருக்கும் உணவு என்கிற நிலை ஏற்படும்.
உணவுப் பொருளை வீணாக்குவது என்பது உணவு உற்பத்திக்கு தேவையான தண்ணீரையும் மின்சாரத்தையும் வீணாக்கு
வதையும் உள்ளடக்கியிருக்கிறது. அதனால் உணவுப் பொருள் வீணாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வும் பரப்புரையும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளைப் போலவே இன்றியமையாதவை.

jio

ஜியோ கட்டணம் தொடர்பான உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?


புது தில்லி: 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் ஜியோ நிறுவனம், ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் கட்டணம் தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
ஆனால், அந்த கட்டணம் தொடர்பான அறிவிப்பில், அவ்வப்போது சலுகை இலவசம், சலுகை தொடரும் என்ற வார்த்தைகளும், மாதக் கட்டணம் ரூ.303 என்பதும் ஒரு சில சந்தேகங்களை ஏற்படுத்தின. இதற்கு ஊடகங்களில் விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி தொலைத் தொடர்பு சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து, வெறும் 170 நாட்களில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு வினாடிக்கும் 7 வாடிக்கையாளர்கள் என்கிற கணக்கில் ஜியோ சேவையில் இணைந்து வருகின்றனர். இது, உலகில் எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் இதுவரையில் செய்திராத சாதனையாகும்.
ஜியோ தொலைத் தொடர்பு சேவையின் மூலம் 200 கோடி நிமிட அழைப்புகள், 100 கோடி ஜிபி-க்கும் மேற்பட்ட டேட்டா சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்று மகிழ்ந்துள்ளனர்.
நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சலுகை திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இருப்பினும், இலவச அழைப்பு மற்றும் தேசிய ரோமிங் சலுகைகள் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் தொடரும்.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டண விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பிற நிறுவனங்களைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான டேட்டா சேவை வழங்கும் திட்டமும் அதில் அடங்கும்.
தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் வரையில் இதே சேவையைப் பெற மாதத்துக்கு ரூ.303 கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். ஒரு முறை இணைப்புக் கட்டணமாக ரூ.99 செலுத்த வேண்டும்.
இனி வரும் மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா சேவையை வழங்கும் வகையில் அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதில் ஜியோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வரும் 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 99 சதவீத மக்களை ஜியோ தொலைத் தொடர்பு சேவைக்குள் கொண்டு வர திட்டமிடப்படுள்ளது என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Tuesday, February 21, 2017

VIKATAN

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான்... அடித்துச் சொல்றது யாருங்க?


''என்ன ஊரு சார் இது? தூங்கி எழுந்திருக்கறதுக்குள்ள சி.எம்மை மாத்திடுறாங்க''னு ஒவ்வொரு தமிழனும் புலம்புற நேரத்துல, 'நீங்க வாக்கெடுப்பு நடத்துங்க... நடத்தாம போங்க; ஆளுநர மீட் பண்ணுங்க... பண்ணாம போங்க; எங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் இவருதான்னு ஃபைனலா ஒரு முடிவு பண்ணிச் சொல்லுங்க'னு ஒரு முடிவோட, மாறாம இருக்குது... தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையோட இணையதளம்.

'தமிழ்நாட்டுக்கு யாருதான் முதலமைச்சர்' எனத் தெரியாமல் மக்கள், சில நாள்களுக்கு முன்புவரை குழம்பிக்கொண்டிருந்தனர். இத்தனை வருடங்களாக தி.மு.க. அல்லது அ.தி.மு.க கட்சிகளில் ஏதேனும் ஒன்றுதான் தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தை ஆட்சி செய்துவருகிறது. கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து அ.தி.மு.க வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தீவிரச் சிகிச்சைக்கு பிறகு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைந்த பிறகு அ.தி.மு.க தலைமை யாரிடம் என்ற கேள்வி எழுந்தது. 2011 மற்றும் 2014 ஆகிய வருடங்களில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இரண்டு முறை சிறைக்குச் சென்றிருந்தபோது... ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் முதல்வராகப் பணியில் அமர்த்தினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் நம்பிக்கையானவராக இருந்தார் பன்னீர்செல்வம். இதனையடுத்து ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் பன்னீர்செல்வமே மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இந்தச் சூழலில், கடந்த டிசம்பர் 31-ம் தேதி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழியான சசிகலா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியும், ஆட்சியும் ஒருசேர இருக்க வேண்டும். அதற்குத் தம்மை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்... சசிகலா, தம் ஆதரவாளர்கள் மூலம் கட்சியினரிடம் காய்நகர்த்தினார். இதனால், பிப்ரவரி 5-ம் தேதி சசிகலாவை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற முடிவெடுத்த கட்சி நிர்வாகிகள், பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவைத்தனர். ஆளுநரும் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற பன்னீர்செல்வம், சுமார் 40 நிமிடங்கள் தியானத்தில் இருந்தார். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் சொன்ன தகவல்களால் தமிழக அரசியலில் புயல் வீசியது.

பன்னீர்செல்வத்தின் அதிரடியைக் கண்டு பீதியுற்ற சசிகலா... செய்தியாளர்களிடம், ''தி.மு.க-வின் தூண்டுதலினால் பன்னீர்செல்வம் அப்படி நடந்துகொண்டார்'' என்றார். இதனால், அ.தி.மு.க-வை ஆள... இருவர் போட்டி போடத் தொடங்கினர். அவர்கள் இருவரும் வெளிப்படையாக ஒருவரையொருவர் எதிர்க்கத் தொடங்கினார். பணத்தையும், பதவியையும் காட்டி சசிகலா தரப்பு ஆசை வார்த்தை கூறியதாலும், அதிக நேரங்களில் மிரட்டப்பட்டதாலும் கட்சியில் பெரும்பாலானோர் சசிகலாவுக்கே ஆதரவு தெரிவித்தனர். தன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவிவிடாமல் இருக்க... கூவத்தூரில் உள்ள ’கோல்டன் பே ரிசார்ட்’டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இதன்பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து... சசிகலா, 15-ம் தேதி பெங்களூரு பரப்பர அக்ரஹாரா சிறைக்குச் சென்றார்.



இந்த நிலையில், சசிகலா தரப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தபோதிலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். 19-ம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் பல பிரச்னைகளுக்கு பிறகு, எதிர்க் கட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் எடப்பாடி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து தமிழக முதல்வராக அவரே தொடர்கிறார். ஆனாலும், இதை அறிந்திடாத அந்தக் கட்சியின் சட்டமன்றப் பேரவை இணையதளம், இப்போதும் பன்னீர்செல்வமே முதலமைச்சராக இருக்கிறார் என்று அவருடைய படத்தையே வைத்திருக்கிறது. ''ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மாறியிருப்பதுகூடத் தெரியாமல் இணையங்களை வைத்திருப்பவர்கள் எப்படித்தான் ஆட்சி நடத்தப்போகிறார்கள். அவர்களுக்குத் தற்போது பணமும், பதவியும் மட்டுமே. மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அப்படியிருக்கும்போது இதையெல்லாம் எப்படி மாற்றுவார்கள்'' என்கின்றனர் மக்கள்.

அந்தத் தளம் அப்டேட் செய்யப்படாமல் இருக்க காரணங்கள் என்னவாக இருக்கும்?

ஒருவேளை, சட்டமன்றம் சனிக்கிழமை நடைபெற்றதால், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அந்தத் தளத்தை அப்டேட் செய்ய முடியாமல் இருந்திருக்கலாம். அப்டேட் செய்ய வேண்டிய ஊழியர் (IT Wing) விடுமுறையில் இருந்திருக்கலாம். எப்படியும் மாறப் போகும் பதவிதானே என்று கருதி... அதை அப்படியே விட்டிருக்கலாம். இது, அ.தி.மு.க கட்சியில் இருக்கும் ஒரு சிலரின் சதியாகக்கூட இருக்கலாம். இதில் எந்தக் காரணமாக இருந்தாலும், இணையதள தகவல்படி இன்றைக்குக்கூட அ.தி.மு.க கட்சியின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான்.

விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரண உதவித்தொகை! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு



விவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் பயிர் இழப்பு வறட்சி நிவாரண உதவித்தொகை ­வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம்தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப்பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.03 மி.மீ, மழையே கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் இது போன்ற குறைந்த மழையளவை தமிழ்நாடு சந்தித்தில்லை. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

மாநிலம் முழுவதும் நேரடி பயிர் ஆய்வு செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாநிலம் முழுவதும் கள ஆய்வினை மேற்கொண்டு, வறட்சி குறித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்தனர்.

வறட்சி குறித்த கள ஆய்வின் முடிவில், மொத்தம் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டது. இவற்றுள், 1,564 கிராமங்களில் பயிர்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 87 விழுக்காடு வரை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பேரில் வறட்சி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு அவற்றின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்:

* அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது.

* அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய 1426-ம் பசலி ஆண்டுக்குரிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்ய ஆணையிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய காலக் கடனாக மாற்றியமைப்பதற்கு தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

* 33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்க வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து கணக்கெடுப்பு மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, கணக்கெடுக்கும் பணி முடிவு பெற்றுள்ளது.

* வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வாயிலாக, பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க 6.91 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

* வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வனத் துறை மூலம் அவற்றுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

* வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

* வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

* பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்களை மேம்படுத்த 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

* கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், இறந்தவர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

* புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதால், நடப்பு ஆண்டில் பயிர்க் காப்பீட்டிற்கு அரசின் பங்களிப்பு தொகையான 410 கோடி ரூபாய் வேளாண்மைத் துறை மூலம் செலுத்தும்பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 14.99 லட்சம் விவசாயிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 30.102 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

* பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை பெற ஏதுவாக, பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டது. இதுவரை 44,489 பயிர் அறுவடை பரிசோதனைகள் பல்வேறு பயிர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சோதனைகளில் பெறப்பட்ட மகசூல் விவரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் விரைவில் வழங்கப்படும்.

* தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 39,565 கோடி ரூபாய் நிதியுதவி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையினை பார்வையிட 9 உறுப்பினர்கள் கொண்ட குழு 23.1.2017 முதல் 25.1.2017 வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

* விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட, வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து செய்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன் மூலம், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28,99,877 விவசாயிகளுக்குச் சொந்தமான 46,27,142 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 2,049 கோடி ரூபாயும், தோட்டப்பயிர் சாகுபடி செய்த 3,27,398 விவசாயிகளுக்குச் சொந்தமான 4,04,326 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 197 கோடி ரூபாயும், பட்டுப்பூச்சி வளர்ப்புக்காக மல்பெரி சாகுபடி செய்த 2,916 விவசாயிகளுக்குச் சொந்தமான 3,658 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 1 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 2,247 கோடி ரூபாய் வேளாண் இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்படவேண்டும்.

* மேற்கண்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று (21.2.2017) எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், 32,30,191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை 2,247 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் மற்றும் இதர பாசன பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465ம், மானாவாரி பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000ம், நீண்டக்கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,287ம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,428 லிருந்து ரூ.3,000 வரை இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும்.

* இதைத் தவிர, மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் பயனாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 இலட்சம் விவசாயிகள், பதிவு செய்துள்ள பயிருக்கு ஏற்றவாறும், மாவட்டத்திற்கு ஏற்றவாறும், பயிர் இழப்புக்கு ஏற்றவாறும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீட்டுத் ஈட்டுத் தொகையாக பெற இயலும். பயிர் அறுவடை பரிசோதனை முடிய முடிய, இந்த காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் விடுவிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

* பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது போன்றவற்றை உறுதி செய்யும் வகையில், கிராம அளவில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.

* தமிழக அரசு வறட்சி குறித்த நிலைமையினை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்படும் அனைத்து துயர் துடைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Posted Date : 17:24 (20/02/2017)

வறண்ட வீராணம் ஏரி... கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை..! #TNDrought2017




சென்னையின் குடிநீர்த் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும்போது அவ்வப்போதிய சென்னையின் குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும். ஆனால் கடந்த வருடம் இரண்டு பருவமழைகளும் ஏமாற்றிய நிலையில் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இதனால் சென்னையின் குடிநீர்த் தேவையை சமாளிக்க விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்தல், ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல் என தங்களால் முடிந்த ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள நான்கு ஏரிகளிலும் நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.



இதில் இன்றைய நிலவரப்படி, மொத்தம் 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவுடைய பூண்டி ஏரியில் 842 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியானது 41 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. ரெட்ஹில்ஸ் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 577 கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அதிக தண்ணீரைக் கொண்டிருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெறும் 208 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் தற்போது நான்கு ஏரிகளிலும் இருக்கும் தண்ணீரை சேர்த்து 1,668 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவான பத்தில் ஒரு சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே தேதியில் 8,367 மில்லியன் கனஅடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் குடிநீர்த் தேவைக்காக ஆந்திரா கிருஷ்ணா நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டது. இதுதவிர, வீராணம் ஏரியிலிருந்தும் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டுவரப்பட்டது.



தற்போது கோடை ஆரம்பிக்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே தற்போது வீராணம் ஏரி வறண்டு விட்டது. இதற்கு முன்னர் வீராணம் ஏரியினை பற்றி சற்று தெரிந்துகொள்வோம். இந்த வீராணம் ஏரியானது கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரம். வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47 அடி. வீராணம் ஏரிக்கு காவிரியில் இருந்து கொள்ளிடம் வழியாக சின்ன செங்கால் ஓடை, பெரிய செங்கால் ஓடைகளின் வழியாகவே இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இதுதவிர, மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரானது வடவாறு வழியாகவும் வீராணத்துக்கு வருகிறது. இந்த ஏரியானது செம்பரம்பாக்கம் ஏரி போலவே கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தில் தண்ணீர் அதிகமாக வந்தபோது திறந்துவிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்னர் மூன்று வருடங்களாக விவசாயிகள் கேட்டும் தண்ணீரைத் திறந்து விடவில்லை. தண்ணீர் அதிகமாக வருகிறது என்று தண்ணீர் திறந்துவிட்டு சுற்றிலும் பாசனம் செய்த பயிர்களானது மூழ்கடிக்கப்பட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம், பொதுவாக கடலூர் மாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீர்நிலைகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆகியவை தூர்வாரப்படவில்லை என்பதே உண்மை. இதனுள் வீராணம் ஏரியும் அடங்கும். வீராணம் முழுமையாக தூர்வாரப்படாமல் மணலும், வண்டல் மண்ணும் அதிக அளவில் படிந்துள்ளது. இதனால் இந்த ஏரியில் தண்ணீரை அதிக அளவில் தேக்கி வைக்க முடியவில்லை. அதிலும் மிஞ்சும் தண்ணீரானது சென்னையின் குடிநீர்த் தேவைக்கு எடுத்துக்கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலிருந்து 2010-ம் ஆண்டு வெள்ளம், 2011- தானே புயல் மற்றும் 2015-ம் ஆண்டு வெள்ளம் என கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டமாக ஆகிப்போனது. இதற்கெல்லாம் காரணம் நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததுதான்.



வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் பயன்படுத்தவே இந்த ஏரியானது சோழ மன்னர்களால் 11-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. ஆனால், பின்னர் சென்னையின் குடிநீர்த் தேவைக்கு ஏற்ப அதிக அளவு தண்ணீர் தேக்கப்பட்டு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. முன்னரெல்லாம் 20 அடி தோண்டினாலே தண்ணீர் சுரக்கும் கடலூர் மண்ணில் நெய்வேலி சுரங்கத்தால் நீர் வரத்தும் குறைந்து விட்டது. பொதுவாக விவசாயம் மற்றும் குடிநீர் தேவை என இரண்டில் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள ஏரியானது தூர் வாரப்பட்டே ஆக வேண்டும். ஏரியினை முழுமையாக தூர்வாரினால் அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ள முடியும். முழுமையாக தூர்வாரப்பட்டால் வீராணம் ஏரியானது குடிநீர்த் தேவைக்கு மட்டுமின்றி விவசாயத் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். தற்போது இந்த ஏரியானது முழுமையாக வறண்டு போயுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஏரியினை தூர்வாரினால் அடுத்த பருவமழைக்கான தண்ணீரை முழுமையாக தேக்கி வைத்து வீராணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். கடலூர் வீராணம் ஏரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதே போல கடந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் வீராணம் தண்ணீர் இல்லாமல் வறண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஶ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரப்படும் மணலிலும் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் தூர்வாரப்படும் பணிகளும் முழுமையாக நடந்தால் மட்டுமே முழுமையாக தண்ணீர் தேக்குவதும் சாத்தியம்.




சென்னையைப் பற்றிய ஏரிகளின் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள சென்னை மாநகர குடிநீர் வாரியத்தை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி "வரும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே 4 ஏரிகளின் தண்ணீரானது சென்னை மக்களின் பயன்பாட்டுக்கு வரும்" என்பதோடு முடித்துக்கொண்டார். மேற்கொண்டு தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பொதுப்பணித்துறையை தொடர்பு கொண்டதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை. வீராணம் ஏரி மற்றும் வறண்ட அத்தனை ஏரிகளும் அதற்குத் தண்ணீர் வரும் கால்வாய்களும் இதற்கு பின்னராவது தூர்வாரப்பட்டால் அடுத்த பருவமழைக்காவது அதிக அளவு தண்ணீர் கிடைக்கும் என்பதை பொதுப்பணித்துறை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நாளில் இப்படியெல்லாம் இருந்து பாருங்களேன்! #MorningMotivation​



உங்களை உற்சாகப்படுத்துகின்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வகையில், உங்களுடைய நாட்களை நீங்கள் நகர்த்திச்சென்றால், எப்பவுமே சந்தோஷம்தானே? சரி, எப்படி எல்லாம் ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ளலாம் எனக் கொஞ்சம் பார்ப்போமா…

உங்களுடைய லட்சியங்களை ஒவ்வொன்றாக எழுதிவைத்துக்கொண்டே வாருங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அதை எடுத்துப் பார்க்க, உங்களது மூளை அதை நினைவில் வைத்துக்கொள்ளுமாம். சிம்பிளா சொல்லணும்னா, சத்தியராஜ் ஒரு படத்தில் காலையில கண் விழிச்சதும் காதலியின் புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பாரே... அதே அதே!!

அடுத்ததாக, இன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், இந்தக் காலைப்பொழுது இருக்கிறதே... இது ஒரு கடினத் தன்மையுடைய நேரம். இரவில் கண்ட கனவு,நேற்றைய நிகழ்வு என நம் மனதை அலைபாயவிடும். எனவே, அன்றைய நாளில் முக்கியமாகச் செய்யப்படவேண்டியவற்றை மட்டும் மனதில் பதியவைத்துக்கொள்வது அவசியம்.

உடற்பயிற்சியுடன் நாளை ஆரம்பிக்கலாம். ‘நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்கச்செய்கின்ற கெமிக்கல் ரியாக்‌ஷனை ஃபீல் குட்-ஆகச் செய்கின்ற பயாலாஜிக்கல் ரியாக்‌ஷனாக மாற்றுவதே உடற்பயிற்சிகள்தான்" என்று சொல்கின்றன, அறிவியல் ஆய்வுகள். அது மட்டுமல்ல, இது உடலின் நன்னிலையிலான ஆரோக்கியத்தையும் அமைப்பையும் டபுள் டமாக்கா ஆஃபராகத் தருகிறதாம்.

உங்களுடைய செயல்களை எல்லாம் ஒழுங்குபடுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். சோஷியல் மீடியாக்கள் எல்லாம் பல தகவல்களைத் தந்துகொண்டுதான் இருக்கும். இருப்பினும் அதையெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு ஆஃப் செய்துவிட்டு, முதலில் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பது நல்லது.

கொஞ்சம் இடைவெளிகள் தரலாம், தப்பில்லை. ஒவ்வொரு பணியின்போதும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்கிங், ஒரு கப் டீ (அ) காபி போன்றவற்றுக்காக நேரத்தைச் செலவிடுங்கள். வேலையில் இன்னும் கிரியேட்டிவிட்டி கூடி, நீங்கள் ராக் ஸ்டார் ஆகலாம்! ஆனா ஒண்ணு பாஸ்! ஒரு மணிநேரம் வேலைசெய்துவிட்டு, 10 நிமிடம் பிரேக் போகலாம். ஆனால், இருபது நிமிட வேலைக்கு 10 நிமிட இடைவெளி விடக்கூடாது. அது தவறு. புரிஞ்சுதோ?

உங்களுடைய மனதின் கவலைகளையும் நினைவுகளையும் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தால், அழுக்கு சேர்ந்து, 'திமிரு' பட வடிவேலின் மண்டைபோல வீங்கிவிடும். பகிர்ந்து கொண்டால், உணர்வுகள் புதுப்பிக்கப்பட்டு ஆற்றலை உருவாக்கும். ஷேரிங் நல்லது!

உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் ஃப்ரண்ட்ஸ்! உடல் ஆரோக்கியத்தைச் சீராக அமைத்துக்கொண்டால்தான், இன்று நாம் நன்றாக இருக்கிறோம் என்கிற நிறைவுணர்வு ஏற்படும். உங்களுக்கு எது பொருந்துமோ அதை அணியுங்கள். இயற்கையாகவே அது உங்களுக்கு நல்ல மன ஓட்டத்தைக் கொடுக்கும்.

ஒவ்வொரு நாளும், உங்களை நீங்கள் புதுப்பித்துக்கொண்டே இருங்கள். எல்லோரும் எல்லாமும் கற்றிருக்கவில்லை. நாம் ஒன்றில் வெற்றிகொண்டால், அதோடு அதை நிறுத்திக்கொள்ளக் கூடாது. அதன் அடுத்த பாதையை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். அடுத்த நிலைக்கான மைல்கற்கள் உண்டு என்பதை நினைவில்கொள்ள வேண்டும். துணிக் கடைகளில் பொம்மைகளுக்கு ஓர் ஆடை நன்றாக இருக்கிறதென்றால், அதை அப்படியேவா விட்டுவிடுகிறார்கள். நாளுக்கு நாள் உடைமாற்றி அழகு பார்க்கிறார்கள் அல்லவா... அது போலத்தான்.

ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றால், முழுக்க முழுக்க அந்த நாள் முழுதும் அதிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் சிரிப்பு,கொஞ்சம் கலகலப்பு எல்லாமே இருக்கலாம்.

ஒவ்வொரு நாளிலும் 24மணி நேரமுண்டு. அதில் ஒரு மணி நேரத்தைப் புதிய செய்தி ஒன்றை அறிந்துகொள்ள முயற்சி செய்யலாமே? இது, உங்களது சுய தரத்தை மதிப்பீடுசெய்யும் நம்பிக்கையைக் கொடுக்கும்.

வாழ்க்கையில இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். ஆனா அதுக்காக, சோர்ந்துட்டோம்னா சுவாரஸ்யமே இல்லாம இருக்கும். புதிய களங்கள் எப்போதுமே நமக்காகக் காத்திருக்கிறது. நாம்தான் அதில் பயணிக்க முனைப்புக் காட்டவேண்டும். அதேபோல எல்லா நெடிய பயணங்களும் ஒரு அடியில்தானே துவங்கும். முதல் அடியை எடுத்துவைக்க நீங்கள் தயாரா?

350 கி.மீ வேகத்தில் கடலுக்கு அடியில் சீறும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்..!




இந்திய ரயில்களின் வேகம் மட்டும் டெக்னாலஜியால் அதிகமாகிக்கொண்டே போனாலும், அவை சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதமாக வருவது வழக்கம் தான். இப்போது டெக்னாலஜியின் அடுத்த பாய்ச்சலால் சீறப்போகிறது இந்தியன் ரயில்வே. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இதையும் மற்ற ரயில் பாதைகளை போல அமைப்பார்கள் இதுல என்ன இருக்குனு யோசிக்கிறீங்களா? இருக்கு பாஸ்..

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் கடலுக்கு அடியில் ஓடப்போகிறது என்பதுதான் சிறப்பு. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்து கடலுக்கு அடியில் இந்த ட்ரெயினில் பயணம் செய்தால் ஒரு ‘வாவ்’ அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். டபுள் டெக் ட்ரெயினுக்கே க்யூல நின்னு போனவங்க பாஸ் நாம.

மும்பையில் இருந்து அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த புல்லட் ரயில் பாதையில் 7 கி.மீ தூரம் ஆழ்கடலின் அடியில் அமையப்போகிறது. தானே மற்றும் விரார் நகரங்களுக்கு இடையே 21 கி.மீ தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் பயிர்கள் பயிரிடப்படும் பாசனப்பரப்பு அதிகமாக இருப்பதால் அது பாதிப்படையாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த சுரங்கப்பாதையை வடிவமைத்துள்ளார்கள். இதுதான் இந்த புராஜக்ட்டில் பாரட்டப்பட வேண்டிய அம்சம்.

இந்த ரயில் அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் செல்லும் என்பதால் இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவை 3 மணி நேரங்களில் எளிதாக கடக்கலாம். மேலும் இரண்டும் மெட்ரோ நகரங்கள் என்பதால் புல்லட் ரயில் போக்குவரத்து மேலும் பல வசதிகளை மேம்படுத்த உதவும். புல்லட் ரயிலால் பயண நேரம் வெகுவாக குறையும்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கடலின் அடியில் 70 அடி ஆழத்தில் உள்ள மண் படுகைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கி விட்டன. 97,636 கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்திற்கு ஜப்பான் 81 சதவிகிதம் நிதி உதவி அளிப்பதோடு மட்டுமில்லாமல் ரயில் பாதை கட்டுமானம் மற்றும் இயக்கத்திலும் உதவி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நடைபெற்று வரும் பரிசோதனைகள் முடிவடைந்ததும் ரயில் பாதை கட்டுமானத்தை வரும் 2018 ம் ஆண்டில் தொடங்கி 2023 ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலகளாவிய அளவில் முன்னிலையில் இருப்பது ஜப்பான் நாடுதான் அங்கு 1964 ஆண்டிலேயே அதிவேக ரயில்கள் ஓடத் துவங்கி விட்டன.மேலும் கடலுக்கு அடியில் ரயில் பாதையை அமைப்பது என்பது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். அவர்களுக்கு அது பழக்கமான ஒன்றுதான். 1988 ஆம் ஆண்டே ஜப்பானின் ஹொன்சு மற்றும் ஹொக்கிடோ தீவுகளுக்கு இடையே 54 கி.மீ தூரத்திற்கு ஆழ்கடலின் அடியில் செல்லும் இரு வழி ரயில் பாதையை வடிவமைத்து அதில் புல்லட் ரயில் ஓட்டியவர்கள் ஜப்பானியர்கள். எனவே இந்தியாவின் புல்லட் ரயில் சகாப்தத்தையும் சிறப்பாக தொடங்கி வைப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.



அதுக்கு முன்பாக நம்ம பிரதமர் மோடிகிட்ட ஒரு கேள்வி. போன நவம்பர் மாசம் திடீர்னு ஒரு நாள் நைட்டு 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுனு சொல்லிட்டு எங்கள பணம் எடுக்க ஊர் ஊரா சுத்த விட்டு நீங்க ஜப்பானுக்கு போய் புல்லட் ட்ரெயில ஓட்டுற மாதிரி போஸ் குடுத்தீங்களே.. அது இந்த ரயில இந்தியாவுக்கு கொண்டு வர்றதுக்குக்குதானா?

சசிகலாவுக்கு திகார் சிறைதான் சரியான சாய்ஸ்!’ - கர்நாடக அரசை நெருக்கும் அமைப்புகள் #VikatanExclusive


கர்நாடகச் சிறையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. 'பாதுகாப்பு கருதி இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தால், அவருக்கு திகார் சிறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்' என ஊழல் எதிர்ப்பு அமைப்புகள், கர்நாடக உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகே, முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை சகாக்கள், சசிகலாவைச் சந்தித்து ஆசி பெற உள்ளனர். சட்டசபை வெற்றியின் மூலம் அவரது சபதம் வெற்றி பெற்றதாகவும் பேசிவருகின்றனர்.

"பெங்களூரு சிறைக்குச் செல்லும்போது, ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்துவிட்டுத்தான் சிறைக்குக் கிளம்பினார் சசிகலா. 'ஆட்சியைக் காப்பாற்றினால்தான் கட்சி நீடிக்கும்' என்பதால், எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் அடைத்துவைத்தனர். அவர்கள் நினைத்தபடியே ஆட்சியைத் தக்கவைத்துவிட்டனர். அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்து, சிறையில் நேற்று அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார் சசிகலா. அவருடன் டாக்டர்.வெங்கடேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். ஒரு வாரத்துக்குப் பிறகான சந்திப்பு என்பதால், அழுகையை அடக்க முடியாமல் பேசிக்கொண்டிருந்தார் சசிகலா" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் கடந்த 15-ம் தேதி முதல் சிறையில் உள்ளனர். சிறையில் அவருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம் சில வசதிகளைக் கேட்டு மனு அளித்தார் சசிகலா.


தற்போது கட்டில், மின்விசிறி, செய்தித்தாள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது சிறைத்துறை. நேற்று தினகரனுடன் நடந்த சந்திப்பில், பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதித்தார். இதற்காக, 'கர்நாடக உள்துறை அமைச்சகத்திற்கு எந்த வகையில் வேண்டுகோள் வைப்பது?' என்பதுதான் சந்திப்பின் சாராம்சமாக இருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுசெய்வது குறித்தும் விளக்கினார் தினகரன். தலைமைச் செயலக நடவடிக்கைகள், பன்னீர்செல்வம் அணியின் தோல்வி, சட்டசபைக் காட்சிகள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்தெல்லாம் நீண்ட நேரம் விளக்கிக்கொண்டிருந்தார் தினகரன். அனைத்தையும் கேட்டுக்கொண்டவர், 'புழல் சிறைக்கு மாற்றுவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள்' என்பதையே வலியுறுத்தினார் சசிகலா" என்றார்.

"புழல் சிறைக்கு மாற்றம் செய்வதற்காக, கர்நாடக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களை சசிகலா தரப்பில் உள்ளவர்கள் சந்தித்துப் பேசிவருகின்றனர். 'சின்னம்மாவை சென்னைக்கு மாற்றிவிட்டால் போதும்' என்ற மனநிலையில் அவர்கள் உள்ளனர். இதை எதிர்த்து கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் சசிகலா எதிர்ப்பு அணியினர் வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் மூலமாக, ஊழல் எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், உள்துறையின் கவனத்திற்குப் புகார் மனுக்களை அனுப்பிவருகின்றனர். அதில், 'ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்துறை அமைச்சகம் எந்தச் சலுகையும் அளிக்கக் கூடாது. குன்ஹா அளித்த தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறை பாதுகாப்பாக இல்லை என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைத்தால், அதை ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பு அதிகம் நிறைந்த திகார் சிறைக்கு அவரை மாற்றுங்கள். சென்னை சிறைக்கு மாற்றினால், ஊழல் குற்றவாளிக்கு கூடுதல் சலுகையை அளித்ததுபோல ஆகிவிடும். இதற்கு, கர்நாடக அரசு துணை போக வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளனர்.

புழல் சிறைக்கு மாற்றும் வேலைகள் நடந்தால், தொடர் போராட்டங்களை நடத்தவும் கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் பிரசாரம் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டதால், தேர்தல் ஆணையத்தைச் சரிக்கட்டும் வேலைகளையும் டெல்லியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் செய்துவருகின்றனர். இதையறிந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வேலையில் பன்னீர்செல்வம் அணியினர் செய்துவருகின்றனர். 'பொதுச் செயலாளரை முறையாகத் தேர்வுசெய்யுங்கள்' என ஆணையம் அழுத்தம் கொடுக்கும் வரையில் அவர்கள் ஓயப்போவதில்லை. ஆட்சி அதிகாரத்திலும் அவர்கள் வெகுநாட்கள் நீடிக்கப்போவதில்லை" எனக் கொந்தளிக்கின்றனர் பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

'பரப்பன அக்ரஹாரா டு புழல்' என்ற ஒற்றை இலக்கை குறிவைத்துக் காய் நகர்த்திவருகிறார்,அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. கர்நாடகத் தமிழர்களின் எதிர்ப்பு வெல்லுமா என்பதற்கு சில வாரங்களில் விடை தெரிந்துவிடும்.

நல்லா படிக்கணுமா? அப்போ இதைப் படிங்க..!
‘படிக்கணும். எல்லாத்தையும் படிக்கணும்; எல்லா யூனிட்டையும், ஒரு டாபிக் விடாம படிக்கணும்; ஆனா, எக்ஸாமுக்கு முந்துன நாள் மட்டும் படிக்கணும்; அதுக்கு என்ன பண்ணலாம்’னு நம்ம ஃப்ரண்ட்ஸ்கிட்ட அறிவுரை கேட்க, அதுக்கு அவன் ‘நீ இண்டெக்ஸ் பேஜ்தான் படிக்கணும்'னு கிண்டல் பண்ணுவான். இது தேர்வுக்கு முந்தைய நாள்களில் நடக்கும் வழக்கமான உரையாடல். தேர்வு நெருங்க நெருங்க உள்ளுக்குள் இனம்புரியாத பயம் ஏற்படுகிறதா? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.



என்னதான் பரிட்சைக்கு முந்தினநாள் படிக்கணும்னு நினைச்சாலும் இந்த ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் நம்மை சும்மா விடாது. ‘நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்’னு கூடவே வரும். அதையும் தாண்டி உட்கார்ந்தா, எங்கயோ கேட்குற பாட்டு, கிச்சன்ல இருந்து வர்ற வாசம் உங்க நாடி நரம்பை எல்லாம் சுண்டி இழுக்கும். இல்லையா? அப்போ, உங்களுக்கு கவனச்சிதறல் இருக்கு. இதனால, அமெரிக்காவுல 2005-ல் பல பில்லியன் டாலர் நஷ்டமாயிடுச்சாம். அடடா! ‘இது என்னடா... புது வியாதி’ன்னு நினைக்கிறீங்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ். இந்த நோயைக் குணப்படுத்தி உங்க வேலையை சரியாகச் செய்வதற்கான வழிமுறைகள். இதோ...

1. லிஸ்ட் போட்டு வேலை பாக்கணும்:
லிஸ்ட் போட இதென்ன மளிகைக்கடை பொருளான்னு நீங்க கேக்குறது புரியுது. இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான் நண்பா. இந்த விஷயத்தை இந்த டைம்ல பண்ணி முடிக்கணும்னு நோட் பண்ணி வச்சுக்கணும். அப்டி நோட் பண்ணுனா, சரி ஆகிடுமா? உடனே ஆகாது. இந்த மாதிரி நோட் பண்ணி வைக்கிறப்போ, நாம எவ்ளோ வொர்க் பண்ணாம விட்டு இருக்கோம்னு நமக்கு தெரியும். அப்போ நமக்குள்ளயே ஒரு பயம் வரும். அந்த பயம் எப்படியோ அடுத்த தடவை அந்த வேலையை முடிக்க வச்சுடும்.

2. சரியான இடத்தைத் தேர்ந்தெடுங்க :
எப்படி படிக்கிறோம் என்பது மட்டும் அல்ல, எங்கே படிக்கிறோம் என்பதும் முக்கியம். படிக்கிறவன் எங்க இருந்தாலும் படிப்பான்னு சொல்வாங்க. அதெல்லாம் படிக்கிற பையனுக்கு. நமக்கு? அதுக்குத்தான் சரியான விடையைத் தேர்ந்தெடு மாதிரி, சரியான இடத்தை தேர்ந்தெடுக்கணும். முதல்ல நம்மல சுத்தி டிவி, செல்போன், கம்யூட்டர், கதை புத்தகம் போன்ற அபாயகரமான பொருட்கள் இருக்கான்னு பார்க்கணும். அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்க. தீவிரமா வாசிக்கும்போது சின்னச்சின்ன சத்தம் கூட கடுப்பு ஏத்தும், அதுனால கொஞ்சம் வாய்விட்டு படிச்சா அந்த சத்தமெல்லாம் கேட்காது. மைண்டும் வேற எங்கும் போகாது.

3. எலக்ட்ரானிக் பொருட்களை கொஞ்ச நேரம் மறந்துடுங்களேன் :



‘இது என்ன புதுசா இருக்கு’னு யோசிக்காதீங்க ப்ரோ. வீட்ல எப்பவும் திட்டுவாங்களே... ‘எருமை எப்ப பார்த்தாலும் போனையும் லேப்டாப்பையும் பார்த்துட்டே இருக்கு. வேற எந்த வேலையும் பாக்க மாட்டேங்குது'ன்னு ( என்னை எப்பவும் இப்டிதான் திட்டுவாங்க). அதுதான் எலக்ட்ரானிக் டிவைஸ் இந்த டிவி, போன், சிஸ்டம் எல்லாத்தையும் ஆஃப் பண்ணி வச்சிடணும். ஏன்னா... நம்ம படிக்கணும்னு நினைச்சு புக்கை எடுத்தாலும், நம்ம தளபதிகள் போன் பண்ணி, 'மச்சான் எவ்ளோ படிச்சிருக்க? நான் இவ்ளோதாண்டா முடிச்சிருக்கேன்'னு நம்மள ‘டிஸ்டர்ப்’ பண்ணிடுவாங்க, ஸோ... அதுக்கு முன்னாடியே போனை ஆஃப் பண்ணி வச்சிடுறது நல்லது. என்னைக்கும் இல்லாம அன்னைக்குத்தான் டிவி-ல நல்ல ‘ப்ரோகிராம்’ போடுவாங்க. நல்ல புது கேம் லேப்டாப்ல ஏத்தி வச்சு இருப்போம். அதைக் கொஞ்ச நேரம் பார்த்துட்டு படிக்கலாம்னு அடம்பிடிக்கிற மனசையும் இந்த எலக்ட்ரானிக் பொருள்களையும் நாம ஆஃப் பண்ணி வச்சு, அதை மறந்துடணும்.

4. தேவையான பொருட்கள் :

தேவையான பாடபுத்தகங்கள், பேனா, பென்சில், குறிப்பு எடுக்க நோட்டுகள் போன்றவற்றை முன்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன்னா... படிக்க ஆரம்பிச்ச அப்புறம் அடுத்து அடுத்து படிக்க வேண்டிய புக் நோட்ஸ் எல்லாம், முன்னாடியே இருந்தாதான் சரியா படிக்க முடியும். இல்லைன்னா, அடுத்து படிக்க நினைக்கிற புத்தகத்தை நாம தேடணும். அப்படி தேடும்போது அது கிடைக்காம போச்சுனா, டென்ஷ்ன் ஏறும். எல்லாம் மறந்துடும்.

5. விண்டோஸ்ஸை க்ளோஸ் பண்ணனும் :

இது நம்ம வீட்டுல இருக்க விண்டோஸ் இல்லை. நம்ம ப்ரவுசர்ல விண்டோஸ். நீங்க நினைக்கலாம்... அதான் எலக்ட்ரானிக் டிவைஸ் எல்லாம் ஆஃப் பண்ண சொல்லியாச்சே... ஏன்னா நம்ம பயலுவ என்னைக்கும் இல்லாம இன்னைக்குத்தான் ஏதும் டவுட்டு வந்தா, கூகுள்ல செக் பண்ணலாம்னு நினைப்பான். ஆனா கூகுள் போனா, நாம மறுபடியும் உலகத்தை நோக்கிய பயணத்துக்காக எல்லாத்தையும் (கண்டிப்பாக விளையாட்டு, சமூக வலைதளம் அப்போ ட்ரெண்டிங்ல இருக்க விஷயங்கள் ரொம்ப ஈர்க்கும்) தேட ஆரம்பிப்போம். அதனால வீட்டில் இருக்கும் விண்டோவையும் சிஸ்டத்தில் இருக்கும் விண்டோஸ்சையும் அணைத்துவிடுங்கள்.

6. ரிமைண்டர் செட் பண்ணுங்க :

ஒரு வேலை செய்யும்போது நேரம் போகிறதே தெரியாது. அதே மாதிரிதான் படிக்கும்போதும் ஒரே கேள்வியைப் படிச்சுகிட்டே இருப்போம். நம்ம படிக்க ஆரம்பிச்ச அப்புறம், நேரம் ரொம்ப போயிருக்கும். அதுனால மத்த கேள்வியெல்லாம் படிக்க முடியாது ( நாம படிக்கறதே ரெண்டு கேள்வியோ மூணு கேள்வியோ அதுல எந்த குறையும் வந்துடக்கூடாதுல) அதனால அலாரம் கடிகாரத்துல இந்த வேலையை, இந்த நேரத்துல முடிக்கணும்னு செட் பண்ணிக்கோங்க.

7. முடியாதுன்னு எதுவும் கிடையாது :

அனைத்து தடைகளையும் நாம தாண்டி படிக்கும் போதும், நமக்கு சில விஷயங்கள், பாடங்கள் புரியாமா போகும். அச்சோ! இதைப் படிக்க முடியாதோன்னு நமக்கு தோணலாம். இது அவ்ளோதான் நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு தோணும். அதெல்லாம் சும்மா... நம்ம மனவிஸ்கி. படிச்சதையே திருப்பித்திருப்பி நாலு தடவை படிச்சுப் பார்த்தா கண்டிப்பா ‘இன்ஜினியரிங்ல இருக்கிற எம்- 3’ பேப்பரே புரிஞ்சுடும். மத்த சப்ஜெக்ட் புரியாதா என்ன? நம்மளால முடியாதது ஒன்னும் இல்லைனு நினைச்சுட்டு படிக்கணும்..

8. அதிகமாக படிக்க, அளவாக படிங்க :



இது என்ன புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? நாம நிறைய படிக்கணும் அப்போதான் மேக்சிமம் எழுத முடியும். அதுக்கு படிக்சுட்டே இருந்தா எக்ஸாம் ஹால்ல எந்த கேள்விக்கு எந்த விடைன்னு தெரியாம போய்டும். சராசரியா 45 - 50 நிமிஷம் வரைக்கும்தான் ஒரு மனிதனோட கவனிக்கும் திறன் இருக்கும். ( அதனாலதான் வகுப்புகள் எல்லாம் 45 - 50 நிமிஷம் வெச்சிருக்காங்க) அதுக்குமேல ஒரே விஷயத்தை கவனிக்க முடியாது. ஸோ... படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை ஒரு 5 நிமிஷம் ரிலாக்ஸ் ப்ளீஸ். ( வாக்கிங் இல்ல... அமைதியா உக்கார்ந்து இருக்கணும் அதைவிட்டுட்டு வாட்ஸப் மெசெஞ்சர்லாம் செக் பண்ணக்கூடாது)..

9. இலக்கைத் தீர்மானியுங்கள் :

நம்முடைய குறிக்கோள் என்ன? எதுக்காக படிக்கிறோம்? இப்படி... உங்களைப் பத்தி நீங்க யோசிக்கணும்னு சிந்தனை சிற்பி வால்டேர் சொல்கிறார் "உலகத்திலே மிக கடினமான விஷயம் உன்னையே நீ அறிந்து கொள்வது தான்". சரி... அதை எப்படி தெரிஞ்சுக்கிறது? கண்ணை மூடி உட்கார்ந்து நாம எங்க இருந்து வந்தோம்? நாம இவ்ளோ தூரம் வந்து, எப்படி கடந்து வந்தோம்? அப்படி இப்படினு கொஞ்சம் எல்லாத்தையும் யோசிக்கணும் (இதைத்தான் தியானம்னு சொல்வாங்க).

10. முக்கியமான விஷயம் :

இப்போதான் நாம இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கோம். முக்கியமான விஷயம் என்னன்னா? மேல இருக்க டிப்ஸையெல்லாம் எப்படி படிச்சீங்களோ அதே மாதிரி ஃபாலோ பண்ணணும். உங்களுக்குத் தெரிந்த குணப்படுத்தும் வழிகளை கமென்ட்டில் கொடுக்கவும்.

- ச.செந்தமிழ் செல்வன்

( மாணவப்பத்திரிகையாளர்)

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...