எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்: குழப்பம் நீடிப்பு
By DIN | Published on : 24th June 2017 02:52 AM |
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விநியோகிப்பதில் குழப்பம் நீடிக்கிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவுக்கு இதுவரை குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. நீட் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காவிட்டால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் சட்ட வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறுகையில், தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கூறும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், ஜூன் 26-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டு, ஜூன் 27-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறுகையில், பிளஸ் 2 தேர்வு, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் வகையிலும் இரண்டு விதமான தகவல் ஏடு தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த முறையில் கலந்தாய்வு நடத்துவது என தமிழக அரசு உத்தரவிட்ட 24 மணி நேரத்துக்குள் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என்றார்.
மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.