மருத்துவ கவுன்சில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 27, 2017, 04:15 AM
சென்னை,
போலி ஆவணங்கள் மூலமும், ஆள்மாறாட்டம் செய்தும் ஹோமியோபதி டாக்டர்களாக பலர் பதிவு செய்துள்ளது குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஹோமியோபதி டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில், தலைவராக முன்பு பதவி வகித்துள்ளேன். மத்திய அரசின் ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலில் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், மத்திய மருந்தக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளேன்.
இந்தநிலையில், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில், ஆள்மாறாட்டம் செய்து, போலி சான்றிதழ் மூலம் பலர் ஹோமியோபதி டாக்டராக பதிவு செய்துள்ளதாக கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன்.
என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மீண்டும் புகார் மனுவை போலீசாரிடம் வழங்கவேண்டும் என்றும் அந்த புகார் மனு மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி, அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் 2013-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி உத்தரவிட்டது.
இதன்படி நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல், குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் அப்போதைய தலைவர் டாக்டர் ஜி.பி.ஹனிமன் கொடுத்த விளக்க கடிதத்தின் அடிப்படையில், 2014-ம் ஆண்டு புகாரை முடித்து வைத்து விட்டார்.
டாக்டர் ஜி.பி.ஹனிமன் கொடுத்த புகாரில் ஏராளமான குளறுபடிகளும், பொய்யான தகவல்களும் இருந்தன. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினேன்.
இந்தநிலையில், போலி சான்றிதழ் கொடுத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் பலர் ஹோமியோபதி டாக்டராக பதிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் கடந்த ஆண்டு புகார் செய்துள்ளார். இதை பரிசீலித்த முதன்மை செயலாளர், இந்த மோசடி குறித்து போலீசில் புகார் செய்யும்படி பதிவாளருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பதிவாளரும் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம், புகார் அளித்துள்ளார்.
இந்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று, இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு மீண்டும் புகார் மனு அனுப்பினேன். ஹோமியோபதி மருத்துவ பதிவாளர் புகார் செய்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இதுவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
எனவே, ஆள் மாறாட்டம் செய்தும், போலி சான்றிதழ் கொடுத்தும் ஹோமியோபதி டாக்டராக பதிவு செய்துள்ளவர்கள் குறித்து ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு (மோசடி வழக்குகளை விசாரிக்கும்) இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு வருகிற ஆகஸ்டு 2-ந் தேதிக்குள் சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை ஆகஸ்டு 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
VIDEO : தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 6 பேர் கைது - காவல் துறை இணை ஆணையர் அன்பு
All Videos
Sponsored by Revcontent
15 Celebs Who Got Disgustingly Fat and Ugly
Viral IQ
25 Photos North Korea Doesn't Want You To See. 3 Will Break Your Heart
SnoopyPlanet
Your Lost Hair Can Be Regrown in Days - Try This Simple Trick
FollicleRX
Diet for Lazy Ones! Just 1 Glass of This Before Bed - Fat Will Go Away in 7 Days
NUTRALYFE
How to Cure Arthritis? You Can Do It With This Remedy in 14 Days
ArthroNEO
86% Can't See Whats Wrong With These Pictures - Can You?
Viral IQ
ஆசிரியரின் தேர்வுகள்...
1. காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் சபீர்ஷா திடீர் கைது
2. “கலாம் சலாம்” பாடலை மோடியுடன் இணைந்து 5 கோடி மாணவ மாணவிகள் பாடுகின்றனர்
3. இரு தரப்பு உறவுகளின் பிம்பத்தை காட்டி சார்க் மாநாட்டை இந்தியா சீர்குலைக்கிறது; நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு
4. எல்லையில் இந்திய படைகள் ஊடுருவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டு
5. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
அதிகம் வாசிக்கப்பட்டவை
1. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
2. ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம்
3. தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம்
4. கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை ஒலிபரப்ப வேண்டும்
5. தனியார் நிறுவனங்களின் பாலை பரிசோதிக்க தமிழக அரசுக்கு தடை