Wednesday, July 26, 2017

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்; பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்; பிரதமர் மோடி வாழ்த்து
 
கடந்த 17-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாரை தோற்கடித்தார். 
 
புதுடெல்லி,
புதிய ஜனாதிபதி ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பகல் 12.15 மணி அளவில் மைய மண்டபத்தில் இருந்த தலைவர்களின் பலத்த கரவொலிக்கு இடையே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ராம்நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த் இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதை குறிக்கும் விதமாக 21 குண்டுகளும் முழங்கப்பட்டது.

பதவி ஏற்பு விழா 12.30 மணிக்கு நிறைவு பெற்றதும் ராம்நாத் கோவிந்தும், பிரணாப் முகர்ஜியும் மீண்டும் ஜனாதிபதியின் காரில் மெய்க்காவலர்களின் அணிவகுப்புடன் ஜனாதிபதி மாளிகைக்கு மீண்டும் திரும்பினர். அப்போது பலத்த மழை கொட்டியது.

ஜனாதிபதி மாளிகை சென்றடைந்ததும், ராம்நாத் கோவிந்த் பதிவேட்டில் கையெழுத்திட்டு மாளிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் இருந்து 6 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் சென்று ராம்நாத் கோவிந்த் தனக்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சிறிது நேரத்தில், பிரணாப் முகர்ஜியுடன் ஜனாதிபதியின் பாரம்பரிய காரில் ராம்நாத் கோவிந்த் ராஜாஜி மார்க் பகுதியில் பிரணாப் முகர்ஜிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள புதிய பங்களாவிற்கு சென்று பார்வையிட்டார்.
புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ஜனாதிபதி ஆற்றிய உரை உத்வேகத்தை அளிக்கிறது. இந்தியாவின் பலம், ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை குறித்து அவர் அழகாக விவரித்தார் என்று கூறப்பட்டு இருந்தது.

பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் மற்றும் தலித் தலைவர்களில் 2-வது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...