Friday, July 28, 2017


ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் புதிய வியூகம்

பதிவு செய்த நாள் 27 ஜூலை
2017
16:22



புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் இந்தியாவில் துவங்கப்பட்டது முதல் மற்ற டெலிகாம் சேவை நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதிய சலுகைகள் மற்றும் சேவை கட்டணங்களை அதிரடியாக குறைத்து வருகின்றன. இந்நிலையில் விலை குறைப்பு மட்டும் போட்டியை சமாளிக்க போதாது என்பதால் பாரதி ஏர்டெல் 4ஜி தொழில்நுட்பத்தில் அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்யும் வோல்ட்இ சேவையை துவங்க இருக்கிறது. அதன்படி தற்போதைய நிதியாண்டு நிறைவடையும் முன் வோல்ட்இ சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்தியாவில் 5 - 6 நகரங்களில் வோல்ட்இ சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் வோல்ட்இ சேவைகளை அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வோம். வோல்ட்இ சாதனங்களின் பயன்பாடு சான்றிதழ்களுக்கு ஏற்ப இருக்கும். என பாரதி ஏர்டெல் இந்தியா மற்றும் தென்கிழக்கு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே வோல்ட்இ தொழில்நுட்பம் சார்ந்து 4ஜி நெட்வொர்க் இந்தியாவில் வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்கள் தங்களது 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 2ஜி மற்றும் 3ஜி கொண்டு வழங்கி வருகின்றன. உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் 3ஜி சேவை பயன்பாடு வேகமாக குறைந்து விடும், மேலும் இந்தியாவில் 4ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் சில காலம் கூடுதலாக பயன்பாட்டில் இருக்கும் என கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...