Showing posts with label Gold. Show all posts
Showing posts with label Gold. Show all posts

Thursday, October 2, 2025

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று இருமுறை உயர்வு.



ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று இருமுறை உயர்வு.

தங்கம் இணையதளச் செய்திப் பிரிவு

Published on: 01 அக்டோபர் 2025, 5:05 pm

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) புதன்கிழமை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தில் சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, அவரது புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி கடந்த செப்.6-ஆம் தேதி ரூ.80,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை சவரன் முதல் முறையாக ரூ.85,120-க்கு விற்பனையானது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.86,160-க்கு விற்பனையானது.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,860- க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 87,120 -க்கும், ஒரு கிராமின் விலை ரு. 10,890 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,950-க்கும், சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது.

இதன்மூலம் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 161-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

NEWS TODAY 13.12.2025