Sunday, July 30, 2017

சிறிய பிழை இருந்தாலும்
வருமான வரி படிவம் நிராகரிப்பு 

 
வருமான வரி கணக்கு தாக்கலில் சிறு தவறு கள் இருந்தாலும், அந்த மனுக்களை வருமான வரித்துறை நிராகரிக்கிறது. தவறுகளை, திருத்தம் செய்ய, 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.




இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரித்துறை,ஒவ்வொரு பிரிவினருக்கும், கணக்கு தாக்கல் செய்ய, தனித்தனி படிவங்களை தயாரித்துள் ளது. சிலர், தங்களுக்குரிய படிவத்தை சமர்ப்பிக் காமல், தவறான படிவத்தில் கணக்கு தாக்கல் செய்து விடுகின்றனர். அது போன்ற படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

சமீபத்தில், ஒருவருக்கு, அலுவலகத்தில்   தரப்பட்ட, படிவம் - 16ல் இருந்த விபரத்திற்கும், அவர் தாக்கல் செய்த படிவத்திற்கும், வருவா யில், 300 ரூபாய் கூடுதலாக இருந்தது. அதனால், அந்த படிவம் நிராகரிக்கப்பட்டது.இது போல, வருமான வரி படிவத்தில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட் டால், அவர்களின், மொபைல் போன் எண்ணுக்கு, அதுகுறித்து, எஸ்.எம்.எஸ்.,அனுப்பப்படுகிறது.

அவர்கள், வருமான வரி சட்டம், 139 - 9ன் படி, தகவல் வந்த, 15 நாட்களுக்குள், அந்த தவறை திருத்தி, உரிய படிவத்தில், சரியான விபரங்களுடன், மீண்டும், கணக்கு தாக்கல் செய்யலாம். தாமதம் செய்தால், கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாகிவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழு வித படிவங்கள்

* ஆண்டு வருவாய், 50 லட்சம் ரூபாய்க்கு குறை வாக உடைய, மாத வருமானதாரர்கள்; ஒரு வீடு மட்டும் சொந்தமாக வைத்திருப்போர் மற்றும் வட்டி மூலம்வருவாய் பெறுவோர், ஐ.டி.ஆர்., - 1 என்ற படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்

* தொழில், வர்த்தகத்தில் ஈடுபடாத, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உடைய தனி நபர், கூட்டு குடும்பத்தினர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு வைத்தி ருப்போர், ஐ.டி.ஆர்., - 2 என்ற படிவத்தை தாக்கல்   செய்ய வேண்டும்
* ஒரு நிறுவனத்தை நடத்தி வருவாய் ஈட்டும் தனி நபர் அல்லது கூட்டு குடும்பத்தினர், ஐ.டி.ஆர்., - 3 என்ற படிவத்தையும்; வருவாய் கூடினாலும், குறைந்தாலும், அரசு நிர்ணயித்த வருவாய்க்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தும் வணிகர்கள் அல்லது தொழில் செய்வோர், ஐ.டி.ஆர்., - 4 என்ற படிவத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்

* அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் நடத் துவோர், ஐ.டி.ஆர்., - 5, 6, 7 ஆகிய படிவங்களை, பிரிவு வாரியாக, தாக்கல் செய்வது அவசியம்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...