Wednesday, July 26, 2017

'ராமேஸ்வரம் வராதீங்க!' : எஸ்.பி., வேண்டுகோள்

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
22:10

ராமநாதபுரம்: ''ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் நினைவிடம் திறப்பு விழா மற்றும் ராமநாத சுவாமி கோவிலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடப்பதால், இன்றும், நாளையும் ராமநாதபுரம், -ராமேஸ்வரம் சாலை வழி பயணத்தை தவிர்க்க வேண்டும்,'' என, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்,இரண்டாவது நினைவு தினம், நாளை அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் பேக்கரும்பில், அவரது நினைவிட திறப்பு விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.நாளை, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், ஆடி திருவிழாவில் முக்கியநிகழ்வான, மாலை மாற்றுதல் நடக்கஉள்ளது.அன்று காலை, 6:00 மணிக்கு, சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டதும், நடை அடைக்கப்படும். ராமர் தீர்த்தம் அருகில், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். அது முடிந்து, மாலை, 5:30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படும்.இந்த இரு நிகழ்வுகளும், ஒரே நேரத்தில் நடப்பதால், வெளியூரில் இருந்து வரும் பயணியர் இன்று, நாளை இரு தினங்களும், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் சாலை வழி பயணத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025