Friday, April 3, 2015

ஆவின் கால் லிட்டர் பாக்கெட் பால்: இன்று முதல் விற்பனை

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கால் லிட்டர் (250 மி.லி.) அளவு கொண்ட பாக்கெட் பால் சென்னை மாநகர் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.67 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றில் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 7.5 லட்சம் லிட்டரும், மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் 4.17 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.
தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலையில், தரமான முறையில் கிடைக்கும் என்பதால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
சந்தையில் தற்போது 4 வகையான பாலில், 500, 1,000 மி.லி. கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
பிப்ரவரியில் அறிமுகம்:
இந்த வரிசையில், நிகழாண்டில் பிப்ரவரியில் பொதுமக்கள் வசதிக்காக 250 மி.லி. அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆவின் நிறுவனம், சென்னை மாநகரில் ஒவ்வொரு பகுதியாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனையை விரிவுப்படுத்தி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.3) முதல் சென்னை மாநகர் முழுவதும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலைப்படுத்தப்பட்ட பால் வகையில் (பச்சை நிறம்) 250 மி.லி. அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் முதல் கட்டமாக ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை போன்ற வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளிலும், வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர், விருகம்பாக்கம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் 2-ஆவது கட்டமாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது.
மாநகர் முழுவதும் விற்பனை:
பரிசோதனை முயற்சியாக, நாளொன்றுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு பாக்கெட்டின் விற்பனை விலை ரூ.11 ஆகும். இதற்கு நுகர்வோர் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகையால், வெள்ளிக்கிழமை முதல் சென்னை மாநகர் முழுவதும் 250 மி.லி. கொள்ளளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும்.
ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகங்களில் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும். அதைத் தொடர்ந்து, ஓரிரு வாரங்களில் சில்லறை விற்பனை கடைகளிலும், முகவர்கள் வாயிலாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும் என்றார் அவர்.

தாமதங்களைத் தவிர்க்க முடியும் ....By க.ப. அறவாணன்

 Dinamani

கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
  
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை புரிந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நாடு திரும்பியவுடன், செய்தியாளர்களின் வினாக்களுக்கு விடையளித்தபோது, இந்திய நிர்வாக முறை நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்று சொல்லிச் சிரித்தார்.
சிங்கப்பூர் சென்றவர்களுக்குத் தெரியும் 1965 வாக்கில் சுதந்திரம் பெற்று மலேசியாவில் இருந்து தனி நாடாகப் பிரிந்த சிங்கப்பூர் தொடக்கக் காலத்தில் தொழிலாளர்களின் கலவர பூமியாக இருந்தது. தொழிலாளர் அமைதியின்மை, வேலையின்மை ஆகியன அந்த நாட்டை வாட்டி வதைத்தன. முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற லீ பத்தே ஆண்டுகளில் இரண்டு முக்கியமான சிக்கல்களைத் தீர்த்தார்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத அந்த நாட்டில் குடிநீர் வேண்டுகிற அளவு கிடைக்க வழி செய்தார். மலேசியாவில் இருந்து இடையில் உள்ள கடல் மேல், குழாய் அமைத்து சிங்கப்பூரில் வந்து தண்ணீர் கொட்டும்படி செய்தார். இப்போது நம் நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுக்களின் படையெடுப்பு அங்கும் இருந்தது. அவற்றை ஒழிக்க நவீன நடவடிக்கை எடுத்தார். நீங்கள் அங்கு சென்றால், கொசுக் கடி என்றால் என்ன என்று கேட்கும்படியாக இருக்கும்.
வீடு கட்ட நிலம் இல்லாத நாட்டில், 15 அடுக்கு, 20 அடுக்கு என்று அடுக்கு வீடுகளைக் கட்டினார். இந்த வீடுகளில் 24 மணி நேரமும் இயங்கும் மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகள். கொசு மருந்து அடிக்கிற நகராட்சி ஊழியர் வீடுவீடாக வந்து வீட்டில் ஈரம் ஒதுங்கும் இடங்களிலும் கழிவறைகளிலும் மருந்து அடித்துச் செல்வதைக் காணலாம்.
நிர்வாகத்தில் சொல்லவே வேண்டாம், அவ்வளவு வேகம். சிங்கப்பூர் தொலைக்காட்சியோ, வானொலியோ உங்களை அழைக்குமானால், உங்கள் நிகழ்ச்சி பதிவாகி நீங்கள் வெளியே வரும்போது கையில் காசோலையை நீட்டுவார்கள். இப்படியெல்லாம் எப்படி முடிகிறது?
நான் ஐந்தாண்டுகள் பிரெஞ்சு காலனி நாடான செனகலில் பணியாற்றினேன். அந்த நாட்டின் அதிபர் செங்கோர் அழைப்புக்கு இணங்க, அங்கு உள்ள டக்கார் பல்கலைக்கழகத்தில் மானிட இயல் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினேன்.
இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்து சென்றவர். இந்தியப் பழக்கவழக்கங்களுக்கும் ஆப்பிரிக்கப் பழக்கவழக்கங்களுக்கும் ஆதி காலம் முதல் தொடர்பு இருந்தது என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக அறிந்தவர், நம்புகிறவர். அவருடன் எனக்குக் கடிதத் தொடர்பு அடிக்கடி நிகழும். நான் கடிதம் எழுதிய அதே நாள் மாலையிலோ அல்லது அடுத்த நாளிலோ விடை மடலை எடுத்துக்கொண்டு அதிபர் அலுவலக மோட்டார் சைக்கிள் நம் வீட்டுக்கு வந்துவிடும்.
அவ்வளவு விரைவாக இயங்க முடிந்தது, இயங்க முடிகிறது. இதே வேகம் நம் நாட்டில் நிகழ்வதில்லையே, ஏன்?
உடனடியான விடை, ஆங்கிலேயர் காலத்தில் நம் மேல் அவநம்பிக்கையால் அவர்கள் அறிமுகப்படுத்திய நிர்வாக முறை, அப்படியே அட்சரம் பிசகாமல் நீடிப்பதுதான். அதுவே நாம் தற்போது கடைப்பிடித்து வரும் சிவப்பு நாடா முறை.
நம் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்றால், அங்கே உள்ள அலுவலக மேஜை ஒவ்வொன்றிலும் பத்துக்குக் குறைவில்லாத கோப்புகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கோப்பையும் அட்டையால் சாத்தி, சிவப்பு நாடா கொண்டு முடிந்து வைத்திருப்பார்கள்.
அலுவலர் ஒவ்வொன்றாகப் பிரித்து, கோப்பைப் பார்த்து அவரது கையொப்பத்தைத் தன்னுடைய கருத்தோடு பதிவு செய்வார். அந்தக் கோப்பை நாம் உற்றுப் பார்த்தால், ஒரு 10, 15 கையெழுத்துகள் சில குறிப்புகளுடன் அமைந்திருக்கும்.
கோப்பை முதலில் வாங்கிய எழுத்தர், தலைமை எழுத்தர், அதற்கு மேல் உள்ள கண்காணிப்பாளர், அவருக்கு மேல் உள்ள உதவிப் பதிவாளர், அவருக்கு மேல் உள்ள துணைப் பதிவாளர் ஆகியோர் கையெழுத்தோடும், குறிப்புகளோடும் பதிவாளர் மேஜைக்கு அடுக்கடுக்காக வந்து சேரும்.
அடுத்து அந்தக் கோப்பைப் பார்க்கிறவர், அதில் எழுதப்பட்ட அனைவருடைய வாசகங்களையும் படித்து முடிவெடுக்க வேண்டும். ஒரு கோப்பு கீழேயிருந்து மேல் அதிகாரிக்கு வந்து சேர நாள் கணக்கும் ஆகும். மாதக் கணக்கும் ஆகும். சில சமயம் ஆண்டுக் கணக்கும் கூட ஆகும்.
பல்கலைக்கழகத்தை ஆளும் பல்கலைக்கழக நல்கைக் குழு (யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் - யு.ஜி.சி.) தில்லியில் உள்ளது. நான் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, அங்கிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்து முடியாமலும், அங்கிருந்த வரவேண்டிய காசோலையை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாமலும் நேரே செல்வோம். முதலில் நமது கோப்பு எங்கே இருக்கிறது, எந்தப் பிரிவில் இருக்கிறது, எந்த மேஜையில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
யு.ஜி.சி. ஒரு சிறிய கட்டடமன்று. பல அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடம். கோப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்த பிறகு தேடி எடுத்துப் பார்ப்பார், உரிய கையெழுத்து ஆகிவிட்டதா என்று. சில சமயம் ஆகியிருக்கும், பல சமயம் ஆகியிருக்காது. அப்பொழுது நாமே கெஞ்சிக் கூத்தாடி உரியவரிடம் கையெழுத்துப் பெற்று நமக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால், அடுத்து செல்ல வேண்டிய ஒவ்வொரு பிரிவுக்கும் கோப்பை நாமே எடுத்துச் சென்று கையெழுத்துப் பெற்று வருவதற்கு நாள் முழுக்க ஆகிவிடும்.
கடைசியில் வெற்றியோடும் திரும்புவோம். பின்னர் வாருங்கள் என்ற அன்பு வார்த்தையோடும் திரும்புவோம். காசோலைகள் கூட தேங்கி விடுவதுண்டு.
நம் நாட்டில் பல்கலைக்கழக பி.எச்டி. ஆராய்ச்சிகள் நிகழுகின்றன. பதிவு செய்திருப்பவர் தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து, தேர்வாளரிடமிருந்து சாதகமான அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் காத்திருப்பு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை நீடிக்கும்.
டாக்டர் மால்கம் ஆதிசேஷையா காலத்தில் பி.எச்டி. பட்டம் பெறுவதற்கு முன்பு வாய்மொழித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் உள்ள நடைமுறை. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று தேர்வாளரிடமிருந்து அறிக்கைகள் வந்தபின் 15 நாள் இடைவெளி வைத்து வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். புறத்தேர்வாளர் ஒருவர் அழைக்கப்பெற்றுத் தேர்வை நடத்துவார். கேள்விகள் கேட்பவர்களுக்கு ஏற்ற விடையை ஆய்வாளர் அளித்தால், புறத்தேர்வாளர் இவருக்குப் பல்கலைக்கழகம் பி.எச்டி. பட்டம் வழங்கலாம் என்று பல்கலைக்கழகத்துக்குப் பரிந்துரை செய்வார்.
இந்தப் பரிந்துரை பெறப்பெற்று மூன்று தேர்வாளருடைய பரிந்துரைகளும், அவற்றுக்கு உரிய கோப்புகளும் ஆராய்ச்சி நிர்வாகப் பிரிவைத் தாண்டி, உதவிப் பதிவாளர், துணைப் பதிவாளர், பதிவாளர் ஆகியோரையும் கடந்து துணைவேந்தருக்கு வந்து சேரும். துணைவேந்தர் கோப்பைப் பார்த்துக் கையெழுத்து இட்ட பின்னர், இக்கோப்பு வந்த வழியே திரும்பி வரும்.
இதனை அடியொற்றி உரிய பிரிவு ஆய்வாளருக்கு பி.எச்டி. பட்டம் வழங்கலாம் என்பதைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது என்று தெரிவிப்பார். இது நடந்து முடிவதற்கு மாதக் கணக்காகும்.
எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தினோம். புறத்தேர்வாளர் முன்னிலையில் வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். தேர்வு முடிந்து புறத்தேர்வாளர் உரிய ஆய்வாளர் பட்டத்துக்குத் தகுதி உடையவர் என்று அறிவிக்கும்போதே அந்த மேடையிலேயே பி.எச்டி. சான்றிதழைத் தாற்காலிகமாக (புரொவிஷன்) வழங்க ஏற்பாடு செய்தோம். அத்தனை பேரும் வரவேற்றனர்.
ஆனால், இதனை அறிமுகப்படுத்திய துணைவேந்தர் பணிக் காலம் முடிந்த பிறகு இந்த முறை கைவிடப்பட்டது. காரணம் என்ன? நிர்வாக எதிர்ப்பு. மீண்டும் பழைய முறையிலேயே ஒவ்வொரு மேஜை, மேஜையாக கோப்பு பயணம் செய்தது.
நமது காலதாமதத்துக்குத் தனிப்பெரும் காரணம் முடிவெடுக்க அதிகாரம் இல்லாத அமைப்புகள்தான். நம்முடைய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாமல் தலைமையை நோக்கிக் குவிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு கோப்பும் நெடும்பயணம் மேற்கொள்ளும்போது தாமதம் தவிர்க்க முடியாததாகிறது.
அதிகாரத்தைப் பரவலாக்கி, முடிவெடுப்பதை கீழே உள்ளவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்கும்படி செய்தால் நம் நிர்வாகம் சீர்பெற வாய்ப்புண்டு. தற்போது செல்லிடப்பேசி அறிமுகம் ஆகிவிட்ட நிலையில், செல்லிடப்பேசியிலேயே பல தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் பெறுகின்றன.
மின்னஞ்சல், நெடுந்தொலைவை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. இதைப் பயன்படுத்திக் கொள்கின்ற நிர்வாக முறையை நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த நாளில் குறித்த நேரத்தில் செய்து முடிக்கும் பழக்கம் நம்மிடம் பொதுவாக இருப்பதில்லை. ஆனால், இந்தக் கால தாமதம் எல்லாவற்றிலும் நிகழ்வதில்லை.
சான்றாக, குறித்த நாளில், குறித்த நேரத்தில் ஒரு நொடி கூடப் பிசகாமல் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகள் நிகழுகின்றன. கோயில் அபிஷேகங்கள் நிகழுகின்றன. இவற்றையெல்லாம் குறித்த நேரத்தில் ஒரு கணம் கூடப் பிசகாமல் கடைப்பிடிக்கும் நமக்குக் கடமைகளைக் கடைப்பிடிக்க முடியாதா என்ன? முயற்சியிருந்தால் முடியும்.

சட்டம் போட்டால் ஆயிற்றா?

இரண்டு பேரின் மரணத்துக்கு காரணமான ஒரு சாலை விபத்தில் வாகனத்தை ஓட்டிய நபருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறைத் தண்டனையை, பஞ்சாப் நீதிமன்றம் 24 நாள்களாக குறைத்ததை உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது. 

இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ-இன் கீழ் தண்டனை வழங்கும் நடைமுறைகள் மீள்பார்வை செய்யப்பட வேண்டும், இந்த சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றோம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304ஏ-இன் படி, ஒரு நபர் தனது கவனக்குறைவினால் ஏற்படுத்தும் மரணத்துக்காக அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கின்றது. இந்த சட்டப் பிரிவை அனைத்து வகையான சாலை விபத்துகளுக்கும் பொருத்துவது முறையல்ல என்பதைத்தான் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

வாகன விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பணக்காரர்களும் வலியோரும் குறைந்த தண்டனையுடன் தப்பித்துவிடுகிறார்கள்; கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதற்கான சட்ட நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
2007-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நடிகர் சல்மான் கான் அதிவேகமாக காரை ஓட்டி, சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் இரண்டு பேர் இறந்த விவகாரம், இன்னும்கூட முடிவுக்கு வராமல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் சூழலில், பணக்காரர்களும் வலுத்தவர்களும் குறைந்த தண்டனை பெற்று தப்பிவிடுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியிருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த களம் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான பயண மசோதாவை, மக்கள் கருத்துக்கேட்பு முடிந்த நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துக் கேட்புக்காக அனுப்பியிருக்கிறது மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் மது அருந்தி வாகனம் ஓட்டுதல்தான். ஆகவே, இந்த மசோதாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம், தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-இல் விதிக்கப்பட்டுள்ள அபராதம், தண்டனையைக் கடுமையாக மாற்றியுள்ளனர். 

தற்போதைய நடைமுறைப்படி, ஒருவர் மது அருந்தியிருந்தார் என்பதற்கு, அவரது 100 மில்லி கிராம் ரத்தத்தில் 30 மில்லி கிராம் மது இருக்க வேண்டும். புதிய மசோதா இந்த அளவை, 100 மில்லி கிராம் ரத்தத்தில் 20 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டுநர் என்றால், முதல்முறை குற்றத்துக்கு ரூ.5,000 அபராதம், 50 மணி நேர சமூக சேவை (கம்யூனிட்டி சர்வீஸ்) அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து அதே குற்றத்தைச் செய்தால் ரூ.10,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. 

இதுவே கார், பேருந்து போன்ற நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் முதல் முறையாகப் பிடிபட்டால், ரூ.10,000 அபராதம், 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து அதே தவறைச் செய்து பிடிபட்டால் ரூ.20,000 அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, ஓராண்டுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது.
எந்த மாநிலமும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்காது என நம்பலாம். இதனை இன்னும் கடுமையாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஆனால், காவல் துறையினர் இந்தக் கடும் சட்டத்தை வெறும் லஞ்சம் பெறுவதற்கான மற்றொரு "சலுகைச் சட்டமாக' மாற்றிக்கொண்டால் குடிமகன் தப்பிப்பதும், இந்தியக் குடிமகன் இறப்பதும் தொடர் கதையாகவே இருக்கும். ஓட்டுநர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டும் வழக்கத்தை கடுமையான நடவடிக்கையால் தடுத்து நிறுத்த முடிந்தால் மட்டுமே, அதன் தொடர் நிகழ்வாகிய விபத்து மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆகவே, இந்தச் சட்டம் உயிர்ப்புடன் இருப்பதும் இல்லாததும் காவல் துறையின் அணுகுமுறையில்தான் உள்ளது. 

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளில் வாகன ஓட்டுநர் மது போதையில் இருந்தார் என்பது மறைக்கப்படுகிறது. இதற்காகப் பெருந்தொகை லஞ்சமாகத் தரப்படுகிறது. இதில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு கிடையாது. ஏழை என்றால் லஞ்சத்தின் அளவு குறையும். பணக்காரர் என்றால் லஞ்சத்தின் அளவு கூடும் என்பதாகத்தான் நிலைமை இருக்குமென்றால், இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கினாலும் பயன் விளையாது. 

குறைந்தபட்சமாக, மரணம் ஏற்படுத்திய விபத்துகளிலாகிலும் ஓட்டுநரின் ரத்த மாதிரிகளை எடுப்பதை காவல் துறை மட்டுமன்றி, வேறு அதிகாரிகளின் மேற்பார்வையிலும் நடத்தலாம். வேறு தடயங்கள், விடியோ பதிவுகள் மூலம் அந்த ஓட்டுநர் மது அருந்தியிருந்ததை காவல் துறையும் அதிகாரிகளும் மறைத்தார்கள் என்பது உறுதிப்படும்போது அவர்களைத் தண்டிக்கும் வெளிப்படைத்தன்மையும் உருவாக வேண்டும்.

நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் மது விற்பனை, மதுக்கூடம் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும்கூட இதுநாள்வரை அது நடைமுறைக்கு வரவில்லை. நிலைமை இதுவென்றால், பணக்காரர்களும் வலுத்தவர்களும் சட்டத்தின் பிடியிருந்து தப்பிக்கத்தான் செய்வார்கள்!

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி பேட்டி

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்லவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 580–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க். உள்ளிட்ட படிப்பை ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்து வருகிறது.
இவர்களுக்கு உடை கட்டுப்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கண்ணியமாக உடை அணிய வேண்டும் உடை கட்டுப்பாடு மாணவ– மாணவிகளுக்கு மிக தேவையான ஒன்று. இதை அந்தந்த கல்லூரி டீன்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மாணவர்களின் ஆடை கட்டுப்பாடு குறை குறித்து புகார் எதுவும் வரவில்லை. மாணவ– மாணவிகள் கல்லூரிகளுக்கு கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும்.
மாணவராக இருந்தால் டி–சர்ட், பனியன் ஆடை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை, சட்டை அணிந்து வரலாம். மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட், பனியன் ஆடை, கை இல்லாத ரவிக்கை ஆகியவை அணியக்கூடாது. மாறாக சேலை அணியலாம். சுரிதார் அணிந்து வரலாம். மொத்தத்தில் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது.
செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செல்போன்கள் இன்றைய காலக்கட்டத்தில் அவசியம்தான். கல்லூரிகளுக்கு செல்போன் கொண்டு வரலாம். ஆனால் வகுப்புக்கு செல்லும் முன் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். வகுப்பு முடிந்த பின்னர் செல்போனை ஆன் செய்து கொள்ளலாம். உடைகளையும், செல்போன்களையும் டீன் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்க புதிய தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

 

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓய்வூதியதாரர்கள்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் ‘‘பென்சன் பைலட் ஸ்கீம்’ என்ற திட்டத்தின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்றிதழ், வேறு வேலைக்கு சேர்ந்த சான்றிதழ், வேறு வேலையில் சேராமல் இருப்பதற்கான சான்று, மறு திருமணம் அல்லது திருமணம் ஆகாததற்கான சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் அளிக்கும் வங்கி அதிகாரிகள் முன்பு ஓய்வூதியதாரர் நேரிலும் ஆஜராகலாம்.

நோய் உட்பட தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வுச் சான்றிதழை பெறமுடியாமல் போய்விட்டால், அவர்களை வீட்டிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ அந்த வங்கி அலுவலர் நேரில் சென்று சந்தித்துவிட்டு வாழ்வுச் சான்றிதழை அளிக்கலாம்.

புதிய மாற்றங்கள்

இந்த ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது, ஓய்வூதியம் வழங்குவதை எளிமைப்படுத்துவது குறித்து அரசுக்கு கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட வாரியாக ஓய்வூதியம் வழங்கு அலுவலங்களிலும், ஓய்வூதியம் அளிப்பதை கண்டறிவதற்கான மென்பொருள் மற்றும் தகவல் மையம் இணைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், அவர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பது, ஓய்வூதியத்தை தாமதமில்லாமல் வழங்குவது போன்றவற்றுக்காக ஓய்வூதியதாரரின் ஆதார் எண் இணைப்பு போன்ற சில உயிரி தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்கள்

அதன்படி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவரும் இம்மாதம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய வாழ்வுச் சான்றிதழ் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட முறையில் கூடுதல் தகவல்கள், தேவையான சான்றிதழ்கள் போன்றவற்றை ஓய்வூதியம் வழங்கு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவை அரசு அதிகாரியால் சான்றொப்பம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஜூலை மாதம் நேரிலும் ஆஜராகலாம்.

மேலும், பொதுத்துறை வங்கிகள் திட்டம் என்ற பி.எஸ்.பி. திட்டத்தின்படி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தேவையான சான்றிதழ்களை நவம்பர் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வங்கிப் பிரிவில் வழங்க வேண்டும். இந்த கூடுதல் தகவல்களை ஓய்வூதியம் வழங்கு அலுவலகத்துக்கு வங்கி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.

என்னென்ன தகவல்கள்?

இது ஒருமுறை செய்யப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காத விவரங்களை, அவை கிடைத்த பிறகு சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் கூடுதல் தகவல்களை கொடுப்பது பற்றிய தகவல்களை பத்திரிகை செய்தியாக கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் வெளியிட வேண்டும்.

கூடுதல் தகவல்கள் பற்றிய விவரங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், வங்கிகளின் அறிவிப்புப் பலகையில் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, April 2, 2015

Indian-origin Singaporean nurse to be given achievement award



An Indian-origin nurse here will receive an international achievement award for her work in the healthcare sector of women and refugees, becoming the first Singaporean to get the prestigious biennial prize.

Dr Subadhra Devi Rai, a nurse and a senior lecturer at the School of Health Sciences (Nursing) at Nanyang Polytechnic in Singapore, will be bestowed by this year's International Achievement Award by the Florence Nightingale International Foundation.

Rai was selected as the recipient of the award for her outstanding work in the health of women and refugees.The International Achievement Award will be presented to Rai at a conference in Seoul on June 21.

FNIF is the International Council of Nurses (ICN) premier foundation. Its purpose is to support the advancement of nursing education, research and services.

The award recognises Rai's work in the health of women and refugees, and is the first time a Singaporean will be awarded the biennial award since its introduction in 1999.

Speaking to the media today, Rai said she felt "honoured and humbled to receive this recognition" and hopes that this award sends a "powerful message to other nurses to serve beyond the healthcare setting".

"Without a strong understanding and awareness of the people you are helping, there would be a mismatch between the support rendered and what is needed," Rai was quoted as saying by the local media.

Her area of interest focuses on issues such as gender-based violence, sexual health and the reintegration of refugees. Over the years, she had been volunteering and working with different organisations to help and raise policy awareness for these issues.

The NYP lecturer decided to go into teaching when she realised that the younger generation is the key to a better nursing industry in the future.

"Being in this position allows me to inculcate in my students what is it actually is to be a nurse," she said, adding that she wants to initiate change in the nursing profession by instilling pride of being a nurse in students.

Rai hopes that with this award, she can inspire her colleagues to aspire more, and that the "sky's the limit".

HRD Ministry rejects media report of UGC being scrapped

The Ministry of Human Resource Development (MHRD) has rejected media reports of the University Grants Commission (UGC) being scrapped.

Describing the news report as incorrect and uncalled for, the ministry in a statement said on Wednesday that it has constituted a committee of experienced and credible academicians to recommend the restructuring and strengthening of the UGC for attaining even better performance to meet the desired objective.

It said that the committee headed by Dr. Hari Gautam has submitted their report to the Secretary (Higher Education).

It said that the report is yet to be examined.

It said that the mandate given to the committee was to analyse, review and recommend to the ministry, the architecture required for the restructuring process.

"No such decision on the UGC getting scrapped has been taken and the recommendations are yet to be understood and analysed before any decision is taken in the matter. The UGC has been created by an Act of the Parliament and cannot be unilaterally scrapped," the MHRD statement said.


கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...