Thursday, May 7, 2015

பிளஸ் 2 உயிரியல் தேர்வு: 195 மதிப்பெண் பெற முடியாது என்ற கவலையில் விடைத்தாள் முழுவதையும் அடித்த மாணவி

பிளஸ் 2 உயிரியல் தேர்வில் 195 மதிப்பெண் பெற முடியாது என்று கருதி, மாணவி ஒருவர் விடைத்தாள் முழுவதையும் பேனாவில் அடித்து கோடு போட்டுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) வெளியாக உள்ளன. மன அழுத்தம், பயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசின் 104 தொலைபேசி சேவை உளவியல் ஆலோசனைகள் அளித்து வருகிறது. 

104 தொலைபேசி சேவைக்கு புதன்கிழமை காலையில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவியின் தந்தை ஒருவர் பேசினார்.
தனது மகள் உயிரியல் தேர்வு எழுதிய அன்று, தேர்வு எழுதி முடித்த பின்பு தனது விடைத்தாளை மதிப்பிட்டுள்ளார். உயிரியல் தேர்வில் 195 மதிப்பெண் பெற வேண்டும் என்பது அவர் எண்ணமாக இருந்துள்ளது. 

விடைத்தாளை மதிப்பிட்டபோது ஒரு மதிப்பெண் கேள்விகள் நான்குக்கு விடை தவறாக இருந்ததாகத் தோன்றியுள்ளது. இதனால் தனக்கு 195 மதிப்பெண் கிடைக்காது என்று கருதி, விடைத்தாள் அனைத்தையும் கோடு போட்டு அடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். வீட்டிலும் இதனைத் தெரிவிக்கவில்லை.

தேர்வு முடிவுகள் நெருங்க நெருங்க, பயத்தின் காரணமாக இதை இப்போதுதான் தெரிவித்ததாகவும், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தொலைபேசியில் அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 104 சேவை அதிகாரிகள் கூறியது:
மாணவியின் செயலைக் கொண்டு வீட்டில் அவரை யாரும் திட்டவோ, கடுஞ்சொற்களை பயன்படுத்தவோ வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் இந்தத் தேர்வுக்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது
.
வேறு ஒரு மாணவர், சக மாணவர் ஒருவருக்கு தேர்வு முடிவு குறித்த பயத்தின் காரணமாக தற்கொலை எண்ணம் எழுந்துள்ளது என்று கூறி அழைத்தார். 

அவரிடம் பேசியபோது, அந்த மாணவர் தான் கணக்குத் தேர்வு சரியாக எழுதவில்லை. தோல்வி பயத்தின் காரணமாக தனது பெயரைக் குறிப்பிடாமல் நண்பனுக்கு என்று ஆலோசனை கேட்க முயன்றது தெரியவந்தது
சென்னையைக் காட்டிலும் திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. 80 சதவீதம் மாணவர்களும், 20 சதவீதம் பெற்றோர்களும் ஆலோசனைகளைப் பெறுகின்றனர் என்று 104 சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாராக இருந்தால் என்ன?

Dinamani


2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை கார் விபத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, திரையுலகுக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருப்பினும் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
சல்மான் கானை போல, இன்னும் எத்தனை எத்தனையோ மேட்டுக்குடியினரின் போதை சாகசங்களுக்கும், விளையாட்டுகளுக்கும் பலியாகும் சாலையோரவாசிகளின் அவலம் பற்றி அரசும் சரி, நாமும் சரி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்குத் தங்கும் விடுதிகள் அமைத்துக் கொடுக்கத் தவறிவிட்ட அரசையும், மாநகராட்சியையும் கூடத் தீர்ப்பில் கண்டித்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் சல்மான் கானின் வழக்குரைஞர் குறிப்பிட்டதைப்போல, அவர் மனிதாபிமான சேவை புரிந்தவர் என்றாலும்கூட, சாலையோரம் படுத்திருந்த நபரின் மீது மது போதையில் வாகனத்தை ஏற்றிக் கொன்ற செயலை நீதிமன்றம் ஒதுக்கிவிட மறுத்துவிட்டது.
இந்த வழக்கிலிருந்து தான் எப்படியும் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த சல்மான் கான், தீர்ப்பு வழங்கும் நாளன்று வரையிலும்கூட தான் காரை ஓட்டவில்லை என்றே குறிப்பிட்டார். இதற்கிடையே, கடைசி முயற்சியாக, உயிரிழப்பை ஏற்படுத்திய காரை கிரேன் மூலம் தூக்கியபோது அது தவறி விழுந்ததாகவும், ஏற்கெனவே காயமடைந்திருந்த நபர் அந்த விபத்தில்தான் இறந்திருக்கிறார் என்றும்கூட ஒரு புதுமையான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்கள்.
இந்த வழக்குத் தொடர்பாக சல்மான் கான் மேல்முறையீடு செய்யவும், தண்டனை குறைக்கப்படவும்கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், அவர் மீதான மான் வேட்டை வழக்கு ஒன்றும் இப்போதும் நிலுவையில் இருப்பதையும், அந்த வழக்கில் சல்மான் கானுக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இருப்பதும், அவரது சிறைவாசத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வாகனங்களுக்கு ஓட்டுநர் இருந்தாலும்கூட மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதென்பது அவர்களால் விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. அதன் விளைவுதான் இத்தகைய விபத்துகளும் மரணங்களும்! குறிப்பாக, வசதி படைத்த இளைஞர்களிடம் இத்தகைய மனநிலை அதிகமாகவே காணப்படுகிறது.
மது அருந்தி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு தாங்கள் பிடிபட்டாலும் கையூட்டு தந்தால் வீடு சென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. போக்குவரத்து வட்டார அலுவலர்கள், காவல் துறையினர் இந்த நம்பிக்கையைத் தகர்த்தாலே போதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை கணிசமாக சரியும்.

தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு மசோதாவில் மிகவும் கடுமையான விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மது அருந்தியவர் என நிர்ணயிப்பதற்கான, ரத்தத்தில் சாராய அளவை மேலும் குறைத்துள்ளனர். ஓட்டுநர் உரிம ரத்தும், அபராதமும், தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சட்டத்தைக் கண்டித்து லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் அண்மையில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தார்கள் என்பதுதான் விந்தையிலும் விந்தை.
ரயில் ஓட்டுநர் ஒவ்வொருவரும் பணியைத் தொடங்கும்போது மது அருந்திய சோதனைக்கு உள்படுத்தப்படவும், ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் சாராயம் இருப்பின் அவரை அன்று பணிசெய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய நடைமுறையை ரயில்வே அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு.
நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், இன்னமும் அந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவேயில்லை.

மது அருந்தி, போதையில் வாகனம் ஓட்டினால் எத்தகைய தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்கின்ற விழிப்புணர்வை இன்றைய இளைஞர்களிடமும் நடுவயதினரிடமும் இந்தத் தீர்ப்பு ஒரே நாளில் நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களிலும் சுட்டுரைகளிலும் இதுபற்றிப் பேசாதவர்களே இல்லை. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு கணிசமான அச்ச உணர்வைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி சாலை விபத்து
களில் உலகம் முழுவதிலும் ஓராண்டில் 12 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 5 கோடிப் பேர் காயமடைகிறார்கள். இவர்களில் மது அருந்திய விபத்தால் மரணமடைவோர் எண்ணிக்கை 4.8 லட்சம். காயமடைவோர் 200 லட்சம் பேர். சற்றொப்ப, பாதிக்குப் பாதி விபத்துகள் மது, போதை மாத்திரைகளால் நேரிடுகின்றன. இந்தியாவில் இந்த விகிதம் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதே நேரத்தில், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக இந்தியாவில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தண்டிக்கப்படுவோரும் சரி, அபராதம் மற்றும் நீதிமன்றம் கலையும் வரையிலான சிறைத் தண்டனை மட்டுமே பெறுவர். விபத்துகளை ஏற்படுத்திய இனங்களில் மட்டுமே, அதிலும்கூட மது அருந்தியது உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே ஓட்டுநர்கள் சிறை செல்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் இந்தியாவில் மிகமிகக் குறைவு. இதில் பெரும் பணக்காரர்களும், பிரபலங்களும் சிக்காமல் தப்புவதுதான் வழக்கம்.

இப்போது சல்மான் கான் தண்டனை பெற்றிருக்கிறார் என்றால், 13 ஆண்டுகள் வழக்கு இழுத்தடித்துக் கொண்டு, சாட்சிகள் ஜோடிக்கப்பட்டு, ஊடகங்களில் அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு அனுதாபம் ஏற்படுத்தியும்கூட, சட்டம் தனது கடமையை செவ்வனே செய்து முடித்திருக்கிறது. இதுவே இனி வரும் காலங்களில் முன்னுதாரணமாக ஆக்கப்படும் என்பதால் இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

Wednesday, May 6, 2015

மது அருந்தி கார் ஓட்டிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி: மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என மும்பை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நூருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் 2002 அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை 2006ஆம் ஆண்டு பாந்த்ரா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடங்கியது.

அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு இவ்வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, புதிதாக விசாரணை தொடங்கியது. 2013ஆம் ஆண்டு சல்மான் மீது மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
சல்மான் கான் மது அருந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டு சாட்சியங்களும் பெறப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தின் போது தான் கார் ஓட்டவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங்தான் கார் ஓட்டினார் எனவும் சல்மான் வாக்குமூலம் அளித்தார். அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ தேஷ்பாண்டே இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி கூறும்போது, உங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகிவிட்டது. சம்பவத்தன்று நீங்கள் மது அருந்தியிருந்தீர்கள். அன்றைய தினம் நீங்களே காரை ஓட்டியிருக்கிறீர்கள். மேலும் லைசன்ஸ் இல்லாமலும் காரை ஓட்டியிருக்கிறீர்கள். இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதைத் தொடர்ந்து சல்மான் கானிடம், "நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா" என நீதிபதி கேட்டார். அதற்கு சல்மான் கான், "நான் காரை ஓட்டவில்லை" என்று தெரிவித்தார்.

நீதிபதி தீர்ப்பு வழங்கும்போது, டெல்லியில் நிகில் நந்தா என்பவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.

நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது, சல்மான் கான் கண்களில் கண்ணீர் மல்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  

அந்த வழக்கில் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

சரியாக எழுதிய விடையை கோடுபோட்டு அடித்தனர் பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் அதிகாரிகளின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வரும் புதிய மோசடி


சென்னை,

பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

200–க்கு 200 மதிப்பெண்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைந்தது. மாணவர்கள் மருத்துவம் அல்லது முன்னணி கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கட் ஆப் மதிப்பெண் 200–க்கு 200 பெறவேண்டும் என்று நினைப்பது வழக்கம்.

சில மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் தேர்வுகளில் 150–க்கு 140 மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலையில் தேர்வு எழுதினார்கள். 150–க்கு 150 மதிப்பெண் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டால் சரியாக எழுதிய விடைத்தாள் அனைத்தையும் அடித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் விடைத்தாளை திருத்துபவர்கள் நீங்கள் அடித்த பகுதியை மதிப்பீடு செய்யாமல் 0 மதிப்பெண் போட்டு விடுவார்கள் என்று சில பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

அதற்கு காரணம், பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும். அப்போது கேள்விகள் எளிதாக இருக்கும். 150–க்கு 150 மதிப்பெண் எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் மருத்துவத்துப்படிப்பில் அல்லது என்ஜினீயரிங் கல்லூரிகளில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும் என்று அந்த மாணவர்களின் ஆசிரியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது.

விடைத்தாளில் கோடு போட்டனர்

ஆசிரியர்கள் சொன்னது போலவே, குறைவான மதிப்பெண் கிடைக்கும் என்று நினைத்து மாணவர்கள் விடைத்தாள்களில் சரியாக எழுதியதை கோடு போட்டு அடித்துவிட்டு அந்த தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளனர். அவ்வாறு கோடு போட்டால் அதை திருத்தாமல் விடுவது வழக்கம்.

இவ்வாறு கோடு போட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் இந்த தகவலை அரசு தேர்வுத்துறைக்கு தெரிவித்துள்ளார். எனவே அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி வழியாக அரசு தேர்வுத்துறை அதிகாரி வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால்

சில பிளஸ்–2 மாணவர்கள் விடைத்தாள்களில் எழுதியது அனைத்தையும் அடித்து உள்ளனர். இது பெரிய பிரச்சினை ஆகும் என்று கருதி அந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் வந்து எங்கள் பிள்ளைகள் தெரியாமல் விடைத்தாளில் கோடு போட்டுவிட்டனர். அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர். இதையொட்டி அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தேர்வுத்துறை விடைத்தாள்களை திருத்திவிட்டதால் பெயிலாகி மீண்டும் தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் எடுக்கலாம் என்று கனவு கண்டவர்களின் கனவு தவிடு பொடியாகிவிட்டது

இந்த தந்திரம் தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Periyar University gets ‘A’ Grade

Periyar University has been accredited with an ‘A’ Grade by the National Assessment and Accreditation Council (NAAC).

The NAAC team has accorded final Cumulative Grade Point Average (CGPA) of 3.15 points (performance descriptor “Very Good”), while according “A” Grade to Periyar University.

An elated C. Swaminathan, Vice-Chancellor, Periyar University, in a statement here on Tuesday said that by getting a CGPA of 3.15, the University had got a special status among the State universities in Tamil Nadu. He also expressed that the grade would propel the development activities in the University to further heights and students would be benefited to a larger extent.

An expert team headed by Bhoomitra Dev, former Vice-Chancellor, Dean Dayal Upadhyay Gorakhpur, University, and Rohil Khand, Agra, visited Periyar University from March 18 – 20 in connection with the re-accreditation process.

The NAAC peer team assessed the University in various criteria to award the grade. It met all the stakeholders of the University including teachers, students, non-teaching staff, alumni and parents. The team assessed the level of academic, research and other facilities in the 24 University departments.

The peer team also assessed the performance of the various centres of the University. The NAAC team presented the report after assessing the activities at University and the grade is based on this report.


Mr. Swaminathan said that the quality of teaching and research activities and other extension activities had fetched this great pride to the University.

நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' : 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது; மார்ச், 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.43 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகிறது.
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமும் மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம்.இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதன்முறையாக அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்து உள்ளார்.
இணையதள முகவரி
www.tnresults.nic. in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

பிஞ்சுகளா? பிஞ்சிலே பழுத்ததுகளா? By ஜோதிர்லதா கிரிஜா

Dinamani

இளம் குற்றவாளிகள் பற்றிய பேச்சு அண்மைக்காலமாக ரொம்பவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பதினெட்டு வயது வரையில் உள்ளவர்களை சிறார்கள் எனக் கருதலாம் என்று இருக்கும் சட்டம் திருத்தப்பட்டு, அது பதினாறு வயதாகக் குறைக்கப்பட இருக்கிறது.
மக்களவையில் அது நிறைவேறிவிடக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகின்றன.
ஆனால், சில அமைப்புகள் மட்டுமன்றி மக்களில் ஒரு பகுதியினரும் பதினெட்டைப் பதினாறாகக் குறைக்கக் கூடாது என்று வாதிட்டு வருகின்றனர்.
இவர்களில் ஆண், பெண் இருபாலருமே அடக்கம். ஆண்கள் மறுதலிப்பதில் வியப்பு இல்லை. ஆனால், பெண்களில் சிலரும் ஆட்சேபிக்கின்றனர். அதற்குக் காரணம், அவர்களில் பலரும் ஆண் குழந்தைகளுக்குத் தாய்மார்களாக இருப்பதே காரணமாக இருக்கக்கூடும்.
தங்கள் பிள்ளைகள் அந்தத் தவறுகளைப் புரிந்துவிட்டால் என்ன செய்வது என்கிற கவலையே நியாயக்கண் அவிந்து போனதற்குக் காரணம்.
இதே தாய் - தந்தைமார்கள் தங்கள் மகள்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதன்பின் கொலையும் செய்யப்பட்டாலோ என்ன பேசுவார்கள், அந்தக் குற்றவாளியை எவ்வாறு அணுகுவார்கள் என்பது வெள்ளிடைமலை.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சொல்லப்படுகிறது. இது தப்பு என்றே படுகிறது. பிறப்பளவே ஆகும் குணம் என்று இதை மாற்ற வேண்டும் என்றும் தோன்றுகிறது.
மனிதர்கள் முந்தைய பிறவி சார்ந்த நல்ல தன்மைகளுடனும், தீய தன்மைகளுடன் பிறக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்க வேண்டும். இல்லாவிடில், சில குழந்தைகள் மேதைகளாகவே பிறப்பதன் அடிப்படைதான் என்ன? இதே விதி பொல்லாதக் குணங்களுடனும் அவர்கள் பிறக்கக் கூடிய சாத்தியக்கூற்றையே
விளக்குகிறது.
எத்தனை வயது கடந்தாலும், பெற்றோருக்கு அவர்கள் குழந்தைகளே. ஆனால், அதற்காக என்ன குற்றம் புரிந்தாலும் அவர்களைக் குழந்தைகளாகக் கருதிச் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதோ, மிகக் குறைவான தண்டனைக்குப் பின் வெளியே விடுவதோ தவறாகும்.
அண்மையில் பதினாறு அகவை முடிந்த ஓர் இளைஞன் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முயன்றபோது அவனைத் தடுக்க முற்பட்ட அப்பெண்ணின் பாட்டியைக் கொலை செய்துவிட்ட செய்தி நாளிதழ்களில் வந்தது.
தான் செய்யப்போவது தப்பு என்பது தெரிந்திருந்ததால்தானே, அதைத் தடுக்க முயல்பவர்களைக் காயப்படுத்தி அச்சுறுத்தவோ, கொலை செய்யவோ வேண்டும் என்கிற முன் எண்ணத்துடன் அவன் தயாராகக் கத்தியும் கையுமாய் அந்தப் பெண்ணை அணுகி இருந்திருக்க வேண்டும். அந்தப் பெண்ணையும் அச்சுறுத்தும் எண்ணத்துடனும்தானே அவன் திட்டமிட்டு வந்திருக்க வேண்டும்.
இத்தகைய மனப்போக்கு உள்ள பிஞ்சில் பழுத்த வஞ்சகர்களைச் சிறார்கள் என்னும் பட்டியலில் எவ்வாறு சேர்ப்பது?
மேலும், நம் நாட்டில் தண்டனைகள் போதாது. அரபு நாட்டில் கையூட்டு வாங்குபவரின் கையை வெட்டிவிடுவார்களாமே! இங்கே செய்யும் குற்றம் எதுவாக இருப்பினும் பிரியாணி என்ன, முட்டை என்ன, இட்லி - சட்னி என்ன என்று வயிறு முட்டச் சோறு கிடைக்கும் சிறையில் அன்றோ அடைக்கிறார்கள்.
நமது நாட்டில் சிறையிலுள்ள குற்றவாளிகளுக்கு - அவர்கள் வெளியே வர முடிவதில்லை என்பது ஒன்று நீங்கலாக - மற்ற எல்லாமே கிடைக்கச் செய்கிறார்களாமே.
தன் காதலைப் புறக்கணித்த பெண்ணின் மீது அமிலத்தைப் பீய்ச்சி அவளைக் குருடாக்கும் கயவனுக்குச் சிறைத் தண்டனை மட்டுமே போதுமா? அவனையும் குருடாக்க வேண்டியதுதானே நியாயம்.
இப்படி ஒரு சட்டம் இருந்தால், எவனேனும் பெண்கள் மீது அக்கினிக் குழம்பை வீசத் துணிவானா? இப்படிச் செய்யும் கயவர்கள் பதினெட்டைக் கடந்தவர்களாக இருந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டுமா?
இந்த விஷயத்தில் பைத்தியக்காரத்தனமான ஒரு யோசனையும் சொல்லப்படுகிறது. அதாவது, மனோதத்துவ முறையில் அணுகுமுறை இருக்க வேண்டுமாம்.
இந்தக் குற்றவாளிகளின் குடும்பப் பின்னணி, வளர்ந்த முறை, கல்வி போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, எந்தெந்தக் காரணங்களால் இவர்கள் குற்றவாளிகள் ஆனார்கள் - அதாவது ஆக்கப்பட்டார்கள் - என்பது ஆராயப்பட
வேண்டுமாம்.
சமுதாயம், சுற்றுச்சூழல், குடும்பப் பின்னணி ஆகியவை சரியாக இல்லாவிட்டால், இவர்கள் மன்னிப்புக்கோ, குறைந்த தண்டனைக்கோ உரியவர்களாம்.
அப்படிப் பார்த்தால், இந்த அசட்டுத்தனமான மனோதத்துவம் பதினெட்டைத் தாண்டியவர்களுக்கும் கூடப் பொருந்துமே.
ஆக மொத்தம், எல்லாக் குற்றவாளிகளையும் வெளியே விட்டு விடவேண்டுமா அல்லது சிறையின் சொகுசான வாழ்க்கையைத் தண்டனை என்னும் பெயரால் இவர்களுக்கு அளிக்க வேண்டுமா? இதென்ன பிதற்றல்.
பதின்மர் வயதின் தொடக்கமே பிள்ளைப் பிராயத்தின் முடிவெனக் கருதுவதே சரியாக இருக்கும். அதாவது, பன்னிரண்டு வயது முடிந்ததும் ஒருவரின் குழந்தைப் பருவம் முடிந்து விடுவதாகக் கருதுவதே முறையாக இருக்கும்.
பதினெட்டு வயது நிறைந்தவர்களைக் குழந்தைகள் என்று கூறுவது சரியானதல்ல.
இருபத்தெட்டு வயதுக்காரன் செய்வதைப் பதினாறு, பதினேழு வயதிலேயே செய்யத் துணிபவனுக்குக் குற்றத்தின் தன்மைக்கேற்ற தண்டனையை வழங்க வேண்டுமேயல்லாது, அவனைச் சிறுவன் என்று சொல்லுவது அதனினும் அதிக முட்டாள்தனமானது.


NEWS TODAY 12.12.2025