Friday, June 5, 2015

Cameras installed in women’s coach of Rameswaram express

In a move aimed at ensuring the safety of women passengers, the Southern Railway has installed surveillance cameras in the women’s compartment of Chennai-Rameswaram-Chennai Express.

This is the first time that surveillance cameras have been fitted on board any train in the Southern Railway zone.

Four advanced cameras have been installed at key positions inside the women’s coach of the Rameswaram Express (Train No. 16101 / 16102) which takes about 13 hours to reach the island town from Chennai Egmore.

Top railway officials told The Hindu that cameras have been fitted in a brand new women’s compartment manufactured by the Integral Coach Factory (ICF) in Chennai. The ICF has spent about Rs. 3 lakh for installing the devices as a safety measure.

The cameras equipped with night-vision capability keep recording the activities inside the coach even when the train is on the move, a top railway officer said.

Besides capturing the face of the travellers, the cameras would also record the time making it possible to recreate the sequence of events in case of offences inside the compartment.

The device would only record the activities taking place in the public place of the compartment such as corridor and seats.

The cameras would enable the agencies to identify a culprit in case of any complaint from the women passengers.

The recordings in the cameras would be downloaded to sift through the images. Identity of male passengers travelling in women’s compartment could also be detected through the cameras, the officials said.

The cameras have been installed as a trial measure in the express train, officials said adding that such devices would be put in place in other trains based on feedback.

Misuse of funds for Nehru’s guests: HC directs DVAC to register case

The Madras High Court Bench here on Thursday ordered the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) to register a case with respect to misuse of public money to the tune of Rs. 32.88 lakh for entertaining guests of Dravida Munnetra Kazhagam Tiruchi district secretary K.N. Nehru when he was the Minister for Transport between 2006 and 2011.

Allowing a direction petition filed by a former employee of Tamil Nadu State Transport Corporation (TNSTC), Justice S. Nagamuthu expressed shock over the allegation of diversion of TNSTC funds to meet the air travel, food and lodging expenses of the Minister’s guests in Tiruchi having been proved in an enquiry conducted by an Inspector of Police in 2012.

“The preliminary report (submitted by the Inspector to the Vigilance Commissioner on March 9, 2012) clearly makes out cognisable offences warranting investigation. When such is the case, I do not understand as to why instead of registering a case, the Inspector recommended only departmental action against the TNSTC officials concerned,” the judge wondered.

He said that the Inspector, attached to the DVAC wing in Tiruchi, had admittedly examined 62 witnesses and collected 56 documents before recommending departmental action against 18 TNSTC officials, including the then Deputy Manager Rajendran. It amounted to conduct of a preliminary enquiry in which “illegal” use of public funds had been confirmed, he added.

‘A menace’

“Corruption in public life is a menace to the peaceful existence of society. It is like a cancer. Like the cancer spreads into the human body so quickly to take away the life if not treated, corruption in public life would also spread in equal pace to take away the soul of society. An offence relating to corruption cannot be, therefore, viewed lightly.

“It needs to be dealt with deterrence. There can be no justification to refuse to register a case when there are prima facie materials that the public servants and the persons in the helm of affairs have misappropriated public funds for their own use, thereby indulging in corruption,” he concluded.

The petitioner, N. Govindaraju, had filed the direction petition on the basis of information obtained under the RTI Act.





மாற்றுத்திறனாளி வாலிபருக்கு குரூப்-1 தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,

சென்னை, திருமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்.ரமேஷ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாற்றுத்திறனாளியான நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-1 முதல் நிலை தேர்வில் வெற்றிப் பெற்றேன். இதையடுத்து ஜூன் 5-ந் தேதி (இன்று) முதல் 7-ந் தேதி வரை குரூப்-1 மெயின் தேர்வு நடக்க உள்ளது. தமிழ் சமூக நலத்துறை கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி பிறப்பித்த அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் 3 மணி நேரத்துக்குள் தேர்வினை எழுத முடியாது என்பதால், அவர்களுக்கு தேர்வு நேரத்தில் 50 சதவீதம் அதாவது ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனடிப்படையில் மெயின் தேர்வில் எனக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு மனு கொடுத்தேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல் சி.என்.ஜி. நிறைமதி, ‘உதவியாளர்களை கொண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வின்போது கூடுதலாக 30 நிமிடங்கள் மட்டுமே வழங்க முடியும்’ என்று கூறினார். இதை எதிர்த்து மனுதாரர் தரப்பு வக்கீல் கே.முருகேசன் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘1993-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி. தரப்பு அரைமணி நேரம்தான் வழங்கமுடியும் என்கிறது. எனவே, அரசாணையின் அடிப்படையில் மனுதாரருக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிடுகிறேன். வழக்கை பைசல் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேகி நூடுல்சில் உணவு பாதுகாப்புத்துறை

மேகி நூடுல்ஸ் இப்போது பலத்த சர்ச்சையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. நாடு முழுவதிலும் நூடுல்ஸ் விற்பனை கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நேரத்தில், உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கடைகளில் உள்ள சில மேகி பாக்கெட் சாம்பிள்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். இந்த பரிசோதனை முடிவில், அதில் மோனோசோடியம் குளுடாமேட் என்ற ருசி அதிகரிப்பதற்காக போடப்படும் சீன நாட்டு உப்பும், காரீயமும் அளவுக்கு மிகஅதிகமாக இருக்கிறது, இதனால், இதை சாப்பிடுகிறவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்ற அபாய சங்கை ஊதினார். உடனடியாக உத்தரபிரதேச அரசாங்கம், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது. இதுதொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் மேகி தயாரிக்கும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனம் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பல மாநிலங்களில் இப்போது மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் கூட மேகியை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மந்திரி ராம் விலாஸ் பஸ்வான், மேகி நூடுல்ஸ் விவகாரம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டு இருக்கிறது என்றும், நாட்டிலேயே முதல்முறையாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 12(1) (டி)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த முடிவு வந்தவுடன் தமிழ்நாட்டிலும் தடைவிதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

நூடுல்ஸின் விளம்பர தூதர்களாக சினிமா நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் இருக்கிறார்கள். இப்படி ஒரு கலப்பட பொருளை வாங்கச்சொல்லி விளம்பரத்தில் தோன்றினார்கள் என்று அவர்கள்மீது பீகாரில் வழக்குப்போட்டு, இப்போது கோர்ட்டும் அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரவலாக கோரிக்கை வலுத்து வருகிறது. விளம்பர தூதர்கள் மீது நடவடிக்கை என்பது அபாண்டமானது. அதில் நியாயமேயில்லை. அந்த கம்பெனி கலப்படம் செய்தால் அவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?. மேலும், அவர்கள் விளம்பரத்தில் நடிக்கும்போது பரிசோதனைகூட ஆய்வறிக்கையை காட்டும் நேரத்தில் எந்தக்குறையும் இல்லை என்கிறார்கள். அதன்பிறகு குறையிருந்தால் அவர்களை குறைசொல்லி பயனேயில்லை. இவ்வளவுக்கும் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசிலும் உணவு பாதுகாப்புக்கென தனித்துறைகள் மற்றும் அமைப்புகள் இருக்கிறது. மேகி மட்டுமல்லாமல், அனைத்து உணவுப்பொருட்களையும் பரிசோதித்து ஆய்வுகூடங்களுக்கு அனுப்பவேண்டியது அவர்கள் கடமையாகும். அவர்கள் நடவடிக்கை தீவிரமாக இருந்திருந்தால், விற்பனைக்கு வரும் முன்பே தடுத்து இருக்கமுடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, கோக்கோ கோலா, பெப்சி குளிர்பானங்கள் மீதும் பூச்சி மருந்து இருந்ததாக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையமே தெரிவித்திருந்தது. அந்தநேரத்திலும், இதுபோல பரபரப்பாக பேசப்பட்டதே தவிர, நடவடிக்கை எதையும் காணோம். அதுபோல இல்லாமல், இனி உணவுப்பொருட்கள் பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட துறைகள் மிகவும் விழிப்போடு செயல்படவேண்டும். மக்கள் உயிருக்கு பாதுகாப்பு என்ற முறையில், இதில் தொய்வே இருக்கக்கூடாது. மேலும், மத்திய அரசாங்கம் இப்போது கொண்டுவர திட்டமிட்டுள்ள சட்டத்தில் இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் வகையிலான வலிமையான பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும்.

Thursday, June 4, 2015

தமிழகத்தில் மேகி உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை: அரசு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ''பன்னாட்டு நிறுவனமான, ‘நெஸ்லே’ (NESTLE), இயதியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் (MAGGI NOODLES) 'காரீயம்'-ன் (LEAD) அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியுமாறு உத்தரவிட்டார்கள்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் ‘மேகி நூடுல்ஸ்’ மற்றும் அதைப் போன்ற இதர ‘நூடுல்ஸ்’ உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயம்-ன் (LEAD) அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 அதாவது 2.5 Parts Per Million (PPM) என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

‘நெஸ்லே’ நிறுவனத்தின் ‘மேகி நூடுல்ஸ்’, 'வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ்' ('Wai Wai Xpress Noodles'), 'ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்' ('Reliance Select Instant Noodles'), 'ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ்' ('Smith and Jones Chicken Masala Noodles') ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம்-ன் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மேற்சொன்ன ‘நூடுல்ஸ்’ உற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006, பிரிவு 30(2)(a)-ன் கீழ் இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார். மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.

Apple watch to be available in Singapore from June 26 -



SINGAPORE - Apple Watch will be available in Singapore from June 26, according to a press statement on Apple's website on Thursday.

Fans will be able to buy the smartwatch from Apple's online and retail stores, and selected authorised resellers.

Selected models of the Apple Watch will also be available from boutique store Malmaison by The Hour Glass in Singapore.

The watch will also be available in six other countries on June 26 - Italy, Mexico, South Korea, Spain, Switzerland and Taiwan.

- See more at: http://www.straitstimes.com/news/singapore/more-singapore-stories/story/apple-watch-be-available-singapore-june-26-20150604#sthash.UuSN8e47.dpuf

இனிமேல் பிடுங்கிச் சாப்பிட வேண்டாம்

பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் எப்படா லஞ்ச் டைம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். லெக்சரும் போரடிக்க, பசியும் வயித்தைக் கிள்ள கலர் கலரான உணவு வகைகள் கண்முன்னே ஓடும். அம்மா இன்னிக்கு என்ன கட்டியிருப்பாங்க என்று நாக்கு ஊறும். ஆனா இந்தச் சிந்தனை எல்லாருக்கும் இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. சிலர் யாரோட டிபன் பாக்ஸைப் பிடுங்கி சாப்பிடலாம்னு யோசிச்சிட்டு இருப்பாங்க. வீட்டில் தங்காமல் விடுதியில் இருக்கும் மாணவர்கள்தான் இவர்கள். மெஸ், கேண்டீன், ஹாஸ்டல்களில் சாப்பிட்டு வெறுத்துப் போனவர்கள் இவர்கள். வேறு வழியில்லாமல் எல்லோரும் ஷேர் பண்ணிச் சாப்பிடுவார்கள்.

வீட்டிலிருந்து கொண்டுவந்தவர்கள் பெருந்தன்மையாக ஷேர் பண்ணிக் கொண்டாலும் சில சமயம் பகிர்ந்துகொள்வதில் சங்கடமும் இருக்கும் இல்லையா? ஆனால் இப்போது அப்படியெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை. இனி உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை ‘மம்ஸ் மெனு’ இணையதளம் மூலம் ஆர்டர் செய்து அம்மாவின் கைகளால் செய்யப்பட்ட உணவைத் தினமும் சாப்பிட்டு மகிழலாம்.

நண்பர்களுக்கும் வீட்டுச் சாப்பாடு

‘மம்ஸ் மெனு’வை நடத்தும் தமீம் அன்சாரி இதைத் தொடங்கிய கதையைக் கேளுங்கள். படித்துக்கொண்டிருந்தபோது, தமீமின் கல்லூரி விடுதி நண்பர்கள் தினமும் கேண்டீன் உணவைச் சாப்பிட்டதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அதையே தினமும் சாப்பிட்டுவந்தார்கள். இது தமீமுக்கு ஆழமான கவலையை ஏற்படுத்தியது.

அந்தக் கவலைக்கான தீர்வு பல ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. அவரும் அவருடைய நண்பர் அப்துல்லும் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த யோசனை தோன்றியது. தன் அம்மா சுவைபடச் சமைக்கும் உணவைத் தான் மட்டுமல்லாமல் பலரும் சாப்பிட அளிக்கலாமே என தமீமும் அப்துல்லும் நினைத்தார்கள்.

அம்மா கை மணம்

தமீமின் அம்மா முதலில் ஒப்புதல் தெரிவித்தார். பின்னர் நண்பர்களுடைய அம்மாக்களும், அக்கம் பக்கம் சமையலில் ஆர்வமுள்ள தாய்மார்களும் கைகோத்தார்கள். இப்படிக் கூட்டு முயற்சியால் அவரவருக்குப் பிடித்த உணவு வகைகளை நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு முதலில் சமைத்துக் கொடுத்தார்கள். சாப்பிட்ட அனைவருக்கும் ரொம்பவே பிடித்துப்போக ‘மம்ஸ் மெனு’ விடுதி, மேன்ஷன்களில் தங்கும் இளைஞர்களுக்கு ருசியோடு பசியாற்றிவருகிறது.

‘மம்ஸ் மெனு’வில் பணியாற்றும் பல தாய்மார்களில் முபினும் ஒருவர். 28 ஆண்டுகளாக இல்லத்தரசியாய் இருக்கும் முபினுக்குக் குழந்தைளைப் பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். இப்போது பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால், வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று நினைத்தபோது ‘மம்ஸ் மெனு’ விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பம் போட்டார். “முன்பு நான் என் கணவரைச் சார்ந்திருந்தேன். இப்போது சுதந்திரமாக உணர்கிறேன்” என ‘மம்ஸ் மெனு’ தந்த மகிழ்ச்சியை விவரிக்கிறார் முபின்.

ஆர்டர் செய்தால் கமகம சாப்பாடு!

‘மம்ஸ் மெனு’வில் சமையல் செய்யும் இல்லத்தரசிகள் ஒரு குழுவாக இணைந்து வாரந்தோறும் ஒரு உணவுப் பட்டியலைத் தயார் செய்கிறார்கள். இந்தப் பட்டியலின்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை வழங்குகிறார்கள். இது வேலைக்குச் செல்லும் எல்லோர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் சுவை மட்டுமில்லாமல் வட இந்திய, சைனீஸ் வகை உணவுகளையும் செய்து தரும் இவர்கள் இரவு மற்றும் மதிய உணவை விநியோகித்துவருகிறார்கள். மதிய உணவுக்குக் காலை பத்து மணிக்கு முன்பும் இரவு உணவுக்கு மாலை ஆறு மணிக்கு முன்பும், ஆர்டர் செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் ஆடர் செய்த பிறகே அம்மாக்கள் சுடச் சுட சமைக்கத் தொடங்குவார்கள். காம்போ சலுகைகளில் சேலட், அப்பளம், கலவை சாதம் போன்ற வகைகள் இருப்பதால் இதைப் பெரும்பாலானவர்கள் ஆர்டர் செய்கிறார்கள். இவ்வகை உணவுகளைப் பார்க்கும்போதே சாப்பிட ஆர்வம் தூண்டும்.

ஹாஸ்டல் / மேன்ஷன்வாசிகளே, இனிமேல் வீட்டிலிருந்து வரும் உங்கள் நண்பர்கள் உங்கள் டிபன் பாக்ஸைப் பிடுங்கித் தின்னப்போகிறார்கள்.

இதோ இணையதள முகவரி: http://www.mumsmenu.com/

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...