Sunday, February 3, 2019


ஓய்வுபெற்ற பஸ் டிரைவருக்கு , ஓய்வூதிய பலன்: ஐகோர்ட் உத்தரவு

Added : பிப் 03, 2019 03:05

சென்னை:'நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

கோவை மாவட்டம், உப்பிலியாபாளையத்தை சேர்ந்தவர், ஆர்.கணேசன். அரசு போக்குவரத்து கழகத்தில், டிரைவராக பணியாற்றி, 2018 செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கான ஊதியம் வழங்க கோரி, 2018 ஜனவரியில், உயர் நீதிமன்றத்தில், இவர் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதிய பலன்கள் வழங்கும்படி, போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு மனு அனுப்பினார். எந்த நடவடிக்கையும் இல்லை. 

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், கணேசன் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி, எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உரிமைகள் கேட்டு, நீதிமன்றத்தை நாடுவது, ஒருவரது அடிப்படை உரிமை. அதற்காக, ஊழியருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது.ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைப்பதில், எந்த நியாயமும் இல்லை. ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி, மனுதாரர் மனுவும் அளித்துள்ளார்.எனவே, ஒன்பது மாத தவணைகளில், ஓய்வூதிய பலன்களை அளிக்கும்படி, கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது. முதல் தவணை, இம்மாதத்தில் இருந்து துவங்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.


துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை

Added : பிப் 03, 2019 04:10

சிதம்பரம்:'இட மாறுதல் காலக்கெடுவை நீட்டிக்க கூடாது' என, அண்ணாமலை பல்கலைக் கழக இடமாறுதல் ஊழியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2015 வரை, 13 ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியில் இருந்தனர்.முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடியால், அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2013ல் சிவ்தாஸ் மீனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நிதி நெருக்கடியை சீரமைக்க, பல்கலையில் பணியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை அரசு துறையில், பணி நிரவல் திட்டத்தில் இடமாறுதல் செய்ய அவர், பரிந்துரை செய்தார்.கடந்த, 2015 முதல், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

மூன்று ஆண்டுகள் முடிந்த ஆசிரியர்களுக்கு, மேலும், மூன்று ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்து, அரசு உத்தரவிட்டதால், அவர்கள் அதே இடத்தில் பணியில் உள்ளனர்.இந்நிலையில், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், தங்களுக்கு இடமாறுதல் கால நீட்டிப்பு செய்யக்கூடாது என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

*அண்ணாமலை பல்கலைக் கழக பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்கலைக் கழகத்தில் பணி செய்த, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை, மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக பணிக்கு அழைத்துக்கொள்ள வேண்டும். 

பணி நிரவல் செய்யப்பட்ட, 70க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.அவர்கள் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணப்பயனை அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் அவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.

*பணி நிரவல் முறையில் இடமாறுதல் செய்யப்பட்ட, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, ஒப்பந்த காலம் முடிந்த பின், மேலும் பணி நீட்டிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும்.இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக பொது நுாலகம் அருகில், 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின், ஊர்வலமாக சென்று, துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டனர். இதனால் பல்கலைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிடம்...மாற்றம்!

தமிழகத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பிய போதிலும், அவர்கள் மீதான நடவடிக்கையை, பள்ளிக் கல்வித்துறை கைவிடவில்லை. அவர்கள் மீதான பிடியை இறுக்கும் விதமாக, அரசு விதித்த கெடுவுக்குள், பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள், அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வினர், மாநிலம் முழுவதும், ஜன., 22 முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சஸ்பெண்ட்




:'போதிய நிதி இல்லாததால், தற்போது, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது. போராட்டத்தை கைவிட வேண்டும்' என, அரசு தரப்பில், பல முறை வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்க மறுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணிகளை புறக்கணித்து, மறியலில் இறங்கினர். அதனால், கைது செய்யப்பட்டனர்; பின், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

அதோடில்லாமல், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை என, அரசு தரப்பில், அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பணிக்கு வராதவர்களின், பணியிடங்கள்

காலியானதாகவும் அறிவிக்கப்பட்டன. அதன்பின், பணிக்கு திரும்பி வந்தாலும், அதே இடத்தில் பணிபுரிய இயலாது; வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என்றும், அரசு எச்சரித்தது. 

அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர். எனினும், அவர்கள் மீதான பிடியை தளர்த்தாமல், அரசு இறுக்கி வருகிறது. அரசு விதித்த கெடுவுக்குள், பணிக்கு வராத ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை :

அதன்படி,  கல்வி மாவட்ட வாரியாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, பணியிடம் மாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 383; அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில், 43; இலுப்பூர் கல்வி மாவட்டத்தில், 159 பேர் என, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத, ஐந்து ஆசிரியர்கள், கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், 400 ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும், அரசு விதித்த கெடுவிற்குள், பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். இதையடுத்து, 'போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை, கைவிட வேண்டும்' என, அனைத்து சங்கங்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ரூ.150 கோடி செலவில் ஏழுமலையான் கோவில்

Added : பிப் 03, 2019 00:11




திருப்பதி:ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
சமீபத்தில், தமிழகத்தின் கன்னியாகுமரியில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில், பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்திலும், மார்ச்சில், ஏழுமலையான் கோவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல, ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் உள்ள வெங்கடபாளையம் அருகே, ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தானத்திற்கு, 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக, ஆந்திர மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. 

அதில், 150 கோடி ரூபாய் செலவில், ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்தது.அதற்கான பூமி பூஜை, நேற்று முன்தினம் காலை நடந்தது. ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான் கோவில் கருவறை அமைய உள்ள நிலத்தை, ஏர் கலப்பையால் உழுது, நவதானியம் விதைத்து, பூஜை நடத்தினார்.

இதன்பின், செய்தியாளர்களிடம், சந்திரபாபு நாயுடு கூறியதாவது:திருமலை மலைப் பாதையில், 2003ல் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து, ஏழுமலையான் என்னை காபாற்றி, மறுஜென்மம் அளித்துள்ளார். தினமும், ஏழுமலையானை வழிபட்டு வருகிறேன். அமராவதியில் கோவில் கட்டும் பணி, இரண்டு ஆண்டுகளில் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆவின் பால் விற்பனை கத்தார் நாட்டில் துவக்கம்

Added : பிப் 03, 2019 03:11

கத்தார் நாட்டில், ஆவின் விற்பனையை, பால் வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும், ஆவின் பாலுக்கு, வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரவ உணவை பதப்படுத்தும் முறையில், பாலை கொதிக்க வைத்து பதப்படுத்தி, ஒரு லிட்டர் அளவில், 'பேக்' செய்து, வெளிநாடுகளுக்கு, ஆவின் நிறுவனம், சப்ளை செய்து வருகிறது.இவ்வாறு அனுப்பப்படும் பால், குறைந்தது ஆறு மாதங்கள் வரை கெடாது. இந்தப் பாலை, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
ஆவின் பால், வெளிநாடுகளில் உள்ள, சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரபல கடைகளில், விற்பனை செய்யப்படுகிறது.வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், ஆவின் பாலை, ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஏற்கனவே, சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில், ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில், ஆவின் பால் விற்பனை துவக்க நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விற்பனையை துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''கத்தார் நாட்டு மக்கள், சுவையான பாலை அருந்த, மன்னர் அனுமதி பெற்று, ஆவின் பால் விற்பனையை துவக்கி உள்ளோம். ஆவின் பால் சுவையானது. இதை அருந்துபவர்கள், வேறு பாலை அருந்த மாட்டார்கள். அந்த அளவிற்கு, ஆவின் பால் தரமானது,'' என்றார்.

இந்நிகழ்ச்சியில், கத்தார் நாட்டிற்கான, இந்திய துாதர் குமரன், துணைத் துாதர் பகத், தமிழக பால்வளத் துறை முதன்மை செயலர் கோபால், ஆவின் வெளிநாடு விற்பனை பொது மேலாளர், புகழேந்தி பங்கேற்றனர்.

- நமது நிருபர் -
ஓட்டாக மாறுமா, 1,000 ரூபாய் பரிசு?

ரேஷன் கடைகளில் அ.தி.மு.க., 'சர்வே'


பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் வழங்கியது, லோக்சபா தேர்தலில், ஓட்டுக்களாக மாறுமா என, ரேஷன் கடைகளில், அ.தி.மு.க.,வினர், ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.






விரைவில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதனுடன், தமிழகத்தில், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், அ.தி.மு.க., ஆட்சி நீடிக்கும். இதனால், எப்படியும் வெற்றி பெற, அக்கட்சி திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா, முதல்வராக இருந்த போது, கடலோர மாவட்டங்களை, 2004ல், சுனாமி தாக்கியது. சென்னையில்,

2005ல், கன மழையும் பெய்தது. இதையடுத்து, இடத்தில் கூட வெற்றிரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 4,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களுடன், 4,000 ரூபாய் ரொக்கம் என, மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் தான், 2004 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஒரு பெறாத நிலையிலும், அக்கட்சி, 2006 சட்டசபை தேர்தலில், 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெற்றி பெற்று, பலமான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
ஆட்சியை பிடித்த, தி.மு.க.,விற்கு, 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை.தற்போது, ஜெயலலிதா மறைவாலும், தினகரன் கட்சியாலும், அ.தி.மு.க., ஓட்டுகள் குறைந்து உள்ளன. இது, எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு சாதகமாக அமையும் என, தெரிகிறது. அதை தடுக்க, 2006 தேர்தலை போல், தோல்வி கிடைத்தாலும், படுதோல்வி அடையக் கூடாது என, அ.தி.மு.க., கருதுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், தமிழக அரசு, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காகவே, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, முதல்வர்,

இ.பி.எஸ்., பெயர், அனைத்து மக்களையும் சென்றடைந்து உள்ளது.
அது, ஓட்டுகளாக மாறுமா என்பதற்காக, ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம், 'லோக்சபா தேர்தலில், யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?' என, கேட்குமாறு, ஊழியர்களிடம், கூட்டுறவு சங்க நிர்வாக பொறுப்புகளில் உள்ள ஆளுங்கட்சியினர் கூறியுள்ளனர். அதன்படி, அவர்களும், மக்களிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் மன நிலையை கேட்கின்றனர். கருத்து தெரிவித்த பலரும், 'எங்கள் பணத்தை எங்களுக்கு, அரசு கொடுத்தது; யாருக்கு ஓட்டு என்பதை, தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்' என்று தான் கூறியுள்ளனர். இதனால், மக்கள் மனநிலையை அறிவதில், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.
ம.பி., தலைமை செயலகத்தில் மீண்டும், 'வந்தே மாதரம்'

Added : பிப் 03, 2019 00:21


போபால்:மத்திய பிரதேச மாநில தலைமை செயலகத்தில், 'வந்தே மாதரம்' தேச பக்திப் பாடல் பாடும் நடைமுறை, நேற்று முன்தினம் மீண்டும் துவங்கப்பட்டது.

ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம் மாநிலத்தில், முந்தைய, பா.ஜ., ஆட்சி யின் போது, ஒவ்வொரு மாதமும், முதல் வேலை நாளில், மாநில தலைமை செயலகத்தில், வந்தே மாதரம் பாடல் பாடும் வழக்கத்தை, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் செயல்படுத்தினார்.முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு, ஆட்சிக்கு வந்த பின், வந்தே மாதரம்பாடுவது நிறுத்தப்பட்டது.
இதற்கு, பா.ஜ., கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தலைமை செயலக வளாகத்தில், முன்னாள் முதல்வர்சவுகான் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், வந்தே மாதரம் பாடலை பாடினர்.இந்நிலையில், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து, மந்திராலயம் எனப்படும் தலைமை செயலகம் வரை, முதல்வர் கமல்நாத் தலைமையில், அமைச்சர்கள், தலைமைசெயலக ஊழியர்கள், பொது மக்கள் ஊர்வலமாகவந்தனர்.

தலைமை செயலக வளாகத்தில் உள்ள பூங்காவில், அனைவரும் வந்தே மாதரம் பாடலை பாடினர். போலீஸ் வாத்தியகுழுவினர், தேசபக்தி பாடல்களை இசைத்தனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...