Thursday, March 21, 2019


கடலுக்கு அடியில் இயங்கும் ஹோட்டல்

Added : மார் 21, 2019 04:42




ஓஸ்லோ: ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கடலுக்கு அடியில் இயங்கும் ஹோட்டல் ஒன்று நார்வே நாட்டில் துவங்கப்பட்டுள்ளது. அண்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் உணவருந்தியவாறே கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்களை அவற்றின் இயற்கை சூழலியே வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விதவிதமான மீன் உணவு வகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 12 ஆயிரம் பேரையாவது கவர்ந்திழுக்க வேண்டும் என்பது ஹோட்டல் நிர்வாகத்தின் இலக்காக உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025