Saturday, August 24, 2019

150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு வரும், 27ல் கவுன்சிலிங்

Added : ஆக 23, 2019 22:10

சென்னை:'மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருந்த, முத்துகுமரன் மருத்துவ கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கை, 27ம் தேதி நடக்கும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துஉள்ளது.சென்னை, முத்துகுமரன் மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
இதில், 75 இடங்கள், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கும்; 75 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் செல்கின்றன.வழக்குஅடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், உறுப்பு கல்லுாரி களில் இருந்து, முத்துக்குமரன் கல்லுாரியை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நீக்கியது.இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கையும், ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, மருத்துவ கல்லுாரி நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதற்கிடையே, மருத்துவ கல்லுாரியில் உள்ள வசதிகள் குறித்து, பல்கலை மற்றும் மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இவர்கள் கொடுத்த அறிக்கையை தொடர்ந்து, இந்தாண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த, உயர் நீதிமன்றம், நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, முத்துக் குமரன் மருத்துவ கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கை, 27ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.பங்கேற்கலாம்இதில், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்கள், நேரடியாக பங்கேற்கலாம்.இதற்கு முந்தைய கவுன்சிலிங்கில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெற்ற மாணவர்கள் பங்கேற்க முடியாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை, www.tnhealth.org,https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...