Tuesday, August 13, 2019

தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள், 'சப்ளை': பொறுப்பில்லாத செயல்!

Added : ஆக 13, 2019 02:24

சேலம்:தனியார் மருத்துவமனைக்கு, நோயாளியை அனுப்பி வைத்த, அரசு மருத்துவமனை தினக்கூலி ஊழியர், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'பத்மாவதி ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் சர்வீஸ்' என்ற தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளது.அதற்காக, 370 பெண்கள் உள்பட, 460 பேர், தினக்கூலிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், துப்புரவு பணிக்கு மாறாக, மருத்துவமனை பணியில் அதிகம் ஈடுபடுவதால், மருத்துவமனை பணியாளர்களுடன் அடிக்கடி மோதல் போக்கு உருவாகிறது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, 'மூளை சலவை' செய்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும், 'வேலை'யிலும், தினக்கூலி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.சேலம், திருமலைகிரியை சேர்ந்தவர், வீரமணி, 36; துப்புரவு ஊழியர். இவர், சமீபத்தில், விஷம் அருந்தி சிகிச்சைக்கு வந்தவரை, தனியார் மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளார்.அதற்கான, மாமூல், 1,000 ரூபாய் கேட்டு, ஆம்புலன்ஸ் டிரைவரிடம், மொபைல் போனில் மிரட்டி உள்ளார். 

அந்த உரையாடல், சமூக வலைதளங்களில் பரவியது.இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், ஆர்.எம்.ஓ., ராணி ஆகியோர், சம்பவம் குறித்து விசாரித்தனர்.விசாரணையில், பணம் கேட்டு, வீரமணி மிரட்டியது அம்பலானது. இதையடுத்து அவர், பணியில் இருந்து நீக்கப்பட்டார்.இது குறித்து, டீன் ராஜேந்திரன் கூறியதாவது:ஏற்கனவே, பல்வேறு புகாரால், கடந்தாண்டில், வீரமணியை பணியில் இருந்து நீக்கினோம். அரசியல்வாதிகள் நெருக்கடியால், மீண்டும் பணியர்த்தப்பட்டார்.தற்போது, முறைகேடு செய்ததால், இரண்டாம் முறையாக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனி, யார் சிபாரிசு செய்தாலும், ஏற்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...