Sunday, August 18, 2019

மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி

Added : ஆக 17, 2019 23:54

சென்னை, திருமண செலவிற்கு பணம் கிடைக்காததால், மருத்துவ மாணவி, கடலில் குதித்துதற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் அபிநயா, 25; மருத்துவம் படித்துள்ள இவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், எம்.டி., பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவருக்கு, செப்., 12ல் திருமணம் நடக்க உள்ளது. திருமண தேவைக்கான பணம் கிடைக்காததால், நேற்று மாலை, மெரினா கடலில் குதித்து, தற்கொலைக்கு முயன்றார்.இதைப்பார்த்த, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார், பிரபு ஆகியோர், அபிநயாவை காப்பாற்றி, உழைப்பாளர் சிலை அருகே இருந்த, ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து விசாரித்த அண்ணா சதுக்கம் போலீசார், அபிநயாவை எச்சரித்து, அவரது உறவினர், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தமருதவாணனிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...