Tuesday, August 27, 2019

யோகா மருத்துவ படிப்பு கவுன்சிலிங் நாளை துவக்கம்

Added : ஆக 26, 2019 23:41


சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், சென்னையில், நாளை துவங்குகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டில், 358 இடங்கள் உள்ளன; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 192 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.இந்த படிப்பில் சேர, 1,688 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், 1,631 மாணவர்களுக்கான, தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில், நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது.மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...