Tuesday, August 27, 2019

தீபாவளி: பஸ்களுக்கு இன்று முதல் முன்பதிவு

Added : ஆக 27, 2019 05:53


சென்னை:தீபாவளி பண்டிகையை கொண்டாட, வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக, அரசு பஸ்களில், இன்று(ஆக.,27) முதல், முன்பதிவு துவங்குகிறது.

தீபாவளி பண்டிகை, அக்., 27ல் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட, அக்., 25 முதல், வெளியூர் செல்வோருக்கு வசதியாக, தமிழக அரசு போக்குவரத்து கழகம், இன்று முன்பதிவை துவக்குகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், சிறப்பு ரயில்களுக்காக ரயில் பயணியர் காத்திருக்கின்றனர். பஸ்களில் செல்ல விரும்புவோர், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில், முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.

பொதுவாக, அரசு பஸ்களில், 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, அக்., 25ம் தேதி, சொந்த ஊர் பயணிக்க விரும்புவோர், இன்று, www.tnstc.in என்ற, அரசு விரைவு போக்குவரத்து இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...