Saturday, August 10, 2019

டாக்டர்கள் போராட்டத்தால் முதல்வர் காப்பீடு திட்ட பணிகள் நிறுத்தம்: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி


மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளை நிறுத்தினர்.

பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு மருத்துவமனைகளில் நோயா ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை அதி கரிப்பது, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் அரசு டாக்டர்களுக்கு ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோரிக்கை களை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு அரசு டாக்டர்கள் சங்கங்களை உள்ளடக்கிய தமிழ் நாடு அரசு டாக்டர்கள் கூட்ட மைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவின்படி, தமிழகம் முழுவதும் அரசு டாக்டர் கள் கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால், பயிற்சி முகாம்கள் நடத்துவது, பிறப்பு - இறப்பு சான்றிதழ் பணி உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக, அரசு மருத்துவ மனைகளில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளை டாக்டர்கள் நேற்று முதல் நிறுத்தி யுள்ளனர். இதனால், ஏழை நோயா ளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தைத் தான் நிறுத்தி உள்ளோம். அந்த திட்டம் மூலம் நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை இலவசமாக அளிக்கிறோம். இதனால், காப்பீட்டு பணம் வராமல் அரசு மருத்துவமனைகளில் வரு வாய் இழப்பு ஏற்படும். இதேநிலை தொடர்ந்தால் காப்பீட்டு பணம் மூலம் மருத்துவமனைக்கு வாங்கப் படும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தடைபடும்.

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள், அவர்களது குடும்பத் தினர் பங்கேற்கும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட் டம் சென்னையில் 23-ம் தேதி தொடங்கப்படும். இறுதிகட்டமாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் 27-ம் தேதி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு டாக்டர்கள், குடும்பத்தினர் பங்கேற்கும் மனித சங்கிலிப் போராட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும். சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் 23-ம் தேதி தொடங்கப்படும்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...