Sunday, August 18, 2019

நவஜோதிர்லிங்க சுற்றுலா ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

Added : ஆக 17, 2019 23:47

கோவை, இந்திய ரயில்வேயின், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், 25ம் தேதி, நவஜோதிர்லிங்க யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.திருச்சியில் இருந்து புறப்படும் ரயிலில், சென்னை பெரம்பூர் வழியாக, நவஜோதிர்லிங்க யாத்திரை சுற்றுலா, 'ஏசி' ரயில் இயக்கப்படுகிறது.மகாராஷ்டிராவில் பீம்சங்கர், திரையம்பகேஸ்வரர், குருஸ்ணேஸ்வரர், அவுங்நாக்நாதர், பார்லி வைத்யநாதர், உஜ்ஜெயினில் மகாகாளேஸ்வரர், ஓம்காரேஸ்வரர், குஜராத்தில் சோம்நாத், ஆந்திராவின் ஸ்ரீ சைலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமல்லிகார்ஜூனசுவாமி என, ஒன்பது ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கலாம்.மொத்தம், 12 நாட்கள் யாத்திரைக்கு, 39 ஆயிரம் ரூபாய் முதல், 53 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விபரங்களுக்கு, 90031 40655, 82879 31965 ஆகிய அலைபேசி எண்களிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., முதுநிலை செயல் அதிகாரி, மாலதி ரத்தினம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...