Thursday, April 9, 2020

காய்கறி பைகள் வழங்க கூட்டம் சேர்த்த எம்.எல்.ஏ.,

Added : ஏப் 08, 2020 22:44

சேலம் : சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., காய்கறி பைகள் விற்பனையை துவக்கி வைத்தது, சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட, மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் தெற்கு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சக்திவேல், தோட்டக்கலைத் துறை மூலம், 100 ரூபாய் காய்கறி பை விற்பனையை, செவ்வாய்ப்பேட்டை, லைன் ரோட்டில் நேற்று துவக்கி வைத்தார்.காலை, 7:00 மணிக்கு நடக்க இருந்த விழாவுக்கு, 6:00 மணி முதலே, நுாற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடினர்.

7:30 மணிக்கு வந்த, எம்.எல்.ஏ., சக்திவேல், 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், காய்கறி விற்பனையை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,விடம் பைகளை வாங்கிய பலர், முக கவசம் கூட அணியவில்லை. கொரோனா வைரஸ் நோயின் பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே அரசின் உத்தரவை மதிக்காமல், ஆட்களை கூட்டி பைகளை வினியோகித்தது, மக்கள், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...