எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்: வங்கிகளுக்கு நாளை விடுமுறை
பதிவு: ஜனவரி 16, 2017 12:49
சென்னை:
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வழக்கமான அரசு விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) வந்து விட்டன. சனிக்கிழமை பொங்கலும், ஞாயிற்றுக்கிழமை மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.
காணும் பொங்கல் தினமான இன்று (திங்கட்கிழமை) மட்டும்தான் கூடுதலாக விடுமுறை கிடைத்தது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி நாளை 17-ந்தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்தது.
மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் அரசு துறை ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா விடுமுறை இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி பொங்கல் விடுமுறையின்போது எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விடுமுறையும் சேர்ந்து கிடைக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விடுமுறை மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாளை அனைத்து தேசிய வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் விடுமுறை பற்றிய அரசாணை இணைய தளம் வழியாக அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படுகிறது.
நாளை வங்கிகள் செயல்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.
ஏற்கனவே வங்கிகளில் பணம் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் பொங்கல் விடுமுறை மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவுக்காக மேலும் ஒருநாள் விடுமுறை விடப்பட்டதால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகக் கூடும்.
ஏ.டி.எம்.கள் இன்னும் முழுமையாக செயல்படாத நிலையில் பொதுமக்கள் சிறு தொகை எடுக்கவும் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பொங்கல் பண்டிகை செலவுகளை எதிர்கொண்ட மக்களுக்கு மீண்டும் அவசர தேவையை மேற்கொள்ள பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் புதன்கிழமை தான் திறக்கும் என்பதால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் கவலை அடைந்துள்ளனர்.