Monday, May 22, 2017

Weldone Sahayam

சல்யூட் அடிக்கும் மார்க்கண்டேய கட்ஜு

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, தமிழ்நாட்டு விஷயங்கள் பற்றி தொடர்ந்து தன் கருத்தை பொதுத்தளத்தில் எந்தவித அச்சமும் இன்றி பதிவு செய்து வருகிறார். கடந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்கான ரஜினி அரசியல் பேச்சி குறித்தும், தன் அதிரடி கருத்தைப் பதிவிட்டார்.

'ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்? அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை' என்று எந்தவித அச்சமுமின்றி கட்ஜு தன் கருத்தை இணையம் வாயிலாக வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், 'வெல்டன் சகாயம்' என்று, சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸின் விக்கிபீடியா பக்கத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் கட்ஜு. சகாயம் தொடர்ச்சியாக, 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற கொள்கையின் மூலம் தமிழகத்தில் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுகுறித்து, அவரது விக்கிபீடியா பக்கத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்துவிட்டுத்தான் கட்ஜு இவ்வாறு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Sunday, May 21, 2017

Tirupathi

SUNDAY, MAY 21, 2017

Posted Date : 12:31 (20/05/2017)

திருப்பதியில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வழி!

 எஸ்.கதிரேசன்

திருப்பதியில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வழி! திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதென்றால், எந்நாளும் கூட்டம் பொங்கி வழியும். அதுவும் இப்போது கோடை விடுமுறை என்பதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினமும் கூட்டம் பெருமளவில் இருக்கிறது. பக்தர்கள் குறிப்பாக சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், சிறப்பு தரிசனம், என்று மூன்று விதமான முறைகளில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது சர்வதரிசனம் செய்பவர்களுக்கு வார நாள்களில் 8 மணி நேரமும், சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் 10 மணி நேரமும் ஆகின்றது. நடை பாதை தரிசனம் செய்பவர்களுக்கு வார நாள்களில் 6 மணி நேரமும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் 8 மணி நேரமும் ஆகின்றது. சிறப்புத் தரிசனம் செய்பவர்களுக்கு 3 மணி நேரமும் ஆகின்றது. முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தை உள்ளவர்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுவார்கள். ஒரு சிலர் சுவாமி தரிசனம் செய்யாமல், செய்ய முடியாமல் வந்து விடுவதும் உண்டு

இந்தக் குறையைப் போக்கும் வண்ணம் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், இத்தனை நேரம்  கியூ வரிசையில்  நின்று வெய்யிலில் வாட வேண்டாம் என்ற நோக்கத்துடன் அவர்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கும் வண்ணம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. ஆனால் இதற்காகச் சில கண்டிப்பான விதிமுறைகளை வகுத்துள்ளது.  

65 வருடங்கள்  வயது நிறைவுபெற்ற முதியவர்கள் மற்றும் அவருக்கு உதவியாக அவருடைய துணைவர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 

முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய வயதுச் சான்றிதழ், ஆதார் அட்டை மிகவும் முக்கியம்.
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும்,  புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்கள் காலை 10 மணி அளவிலும் பிற்பகல் 3 மணி அளவிலும் இரண்டு முறை அனுமதிக்கிறார்கள். இதற்கான முன்பதிவை காலை 8 மணி அளவிலேயே செய்துகொள்ள வேண்டும். 

எந்தவித தள்ளுமுள்ளுவும் இல்லாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் தரிசனம் செய்யலாம். இவர்களுக்கு 4 லட்டு டோக்கன் வழங்கப்படும். 

இந்தச் சலுகையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

64 வயதாகிறது இன்னும் ஒரு வருடம்தானே சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தால் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். அல்லது எப்படியாவது ஏதாவது சொல்லியோ, கையூட்டு கொடுத்தோ கூடுதலாக இன்னும் ஒருவரை அழைத்துச்செல்லலாம் என்றாலும் நிச்சயம் முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Parental care

குழந்தைகளைச் சமாளிக்க திணறுகிறீர்களா?

‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது.

கற்றலும் குணநலமும்

குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்கள் மட்டுமல்லாது சமூகத்திடமிருந்து பெறப்படும் விஷயங்களும் ஒரு குழந்தையின் குணநலனைத் தீர்மானிக்கின்றன. பெரும்பாலான நேரத்தில் ‘இவனை டிவி பார்க்கவிட்டால் ஒரு தொந்தரவும் இருக்காது’ எனக் குழந்தைகளின் போக்குக்கு விட்டுவிடுகிறோம். நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்பதே இதன் பின்னணிக் காரணம்.

கோழிப்பண்ணைகளில் சென்று பார்த்தால் அங்கு உள்ள கோழிகள் 24 மணி நேரமும் குனிந்த தலை நிமிராமல் தீனி தின்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். ஒரே மாதத்தில் கறிக்குத் தயாராகும் அளவுக்கு எடையும் கூடிவிடும். அது போலத்தான் இன்று கல்வியுடன் குணநலனையும் வளர்க்க வேண்டிய கல்விக்கூடங்கள் பத்தாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் ‘பிராய்லர் கூடங்களாக’ மாறிவருகின்றன.

இதனால் குழந்தை வளர்ப்பைப் பற்றி கருத்தரங்கம் நடத்திச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

பெற்றோரின் பங்கு

ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் அடிப்படை பாடம். வேலைப்பளுவைக் காரணம் காட்டுவதைவிட, யாருக்காக இவ்வளவு உழைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால், இதில் உண்மை விளங்கும். குழந்தைகள் எதிர்பார்ப்பது உங்கள் சம்பாத்தியத்தைவிட அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தைத்தான். ‘பைக் வேண்டும், விலையுயர்ந்த வாட்ச் வேண்டும் என எதிர்பார்க்கிறான்/ள், நான் அதிகம் சம்பாதித்தால் தானே அதை நிறைவேற்றி வைக்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான், ஆனால் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டுப் பாருங்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையும், உங்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தையாக, ஆக்கபூர்வமான குறிக்கோளைக் கொண்டவராக இருப்பார்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைதான். பொறுமையைக் கையாண்டு ரசித்துச் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அன்றாடம் நடக்கும் விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்தாலே பெரிய விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஒரு காரின் ஸ்டியரிங்கை சிறிது திருப்பினாலே அந்தக் கார் முழுவதுமாகத் திரும்புவது போலத்தான், ‘Behaviour Therapy’ என்றழைக்கப்படும் நடத்தை சீர்திருத்தப் பயிற்சிகள். இவை குழந்தைகளிடம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

குழந்தை வளர்ப்பின் சூட்சுமம்

செய்த தவறைக் குழந்தையையே திருத்தும்படி செய்தால், அதே தவறைத் திரும்பச் செய்யும் வாய்ப்பு நாளடைவில் குறையும். உதாரணமாக வேண்டுமென்றே ஒரு பொருளைக் கீழே கொட்டினால், அதை அந்தக் குழந்தையையே திரும்ப அள்ளச் சொல்லலாம்.

சர்க்கஸில் டால்பின் பந்து விளையாடுவதை டிவியில் பார்த்திருப்போம். ஆனால், நன்றாகப் பந்தைக் கையாண்டுவிட்டுத் தண்ணீருக்குள் மூழ்குவதற்கு முன் ஒவ்வொரு முறைக்கும் இடைப்பட்ட நொடிப் பொழுதில் பயிற்சியாளர் வீசும் மீன் துண்டை, அது சுவைப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதில்தான் இந்த நடத்தைப் பயிற்சியின் சூட்சுமமே இருக்கிறது. ஒரு விலங்கையே பயிற்சியின் மூலம் மாற்ற முடியும் என்றால், நிச்சயமாகக் குழந்தை வளர்ப்பிலும் இது நல்ல பலனைத் தரும். என்ன, கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.

பிஹேவியரிசம் என்ற கொள்கையை முன் வைத்த ஜான் வாட்சன் என்ற அறிஞர் 1926-ல் ஒரு சவால் விடுத்தார். "வேறுபட்ட திறமைகளைக் கொண்ட ஒரு டஜன் குழந்தைகளை என்னிடம் கொடுங்கள். ஒவ்வொருவரையும் நான் விரும்பியபடி மாற்றி காட்டுகிறேன்; டாக்டராக, இன்ஜினியராக, வக்கீலாக, தொழிலதிபராக; ஏன் திருடனாக, பிச்சைக்காரனாகக்கூட" என்று கூறினார். அதனால் நினைத்தபடி குழந்தைகளை நல்ல முறையில் மாற்ற, இதை முயற்சித்துத்தான் பாருங்களேன்!

-கட்டுரையாளர்,

மனநல மருத்துவர்.

(தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com)

குழந்தை வளர்ப்பு: எளிய வழிகள்

அவசிய வழிகாட்டி

ஆர்வமுள்ள நல்ல விஷயங்களை ஊக்குவிக்க வேண்டும், தகுதி, வயதுக்கு மீறிய விஷயங்களைத் தடை செய்ய வேண்டும்.

குழந்தைகளின் தேவையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது விருப்பங்களைக் குழந்தைகளிடம் ஓர் அளவுக்கு மேல் திணிக்கக்கூடாது.

பெற்றோரின் மனநிலை, கோபம், மனஸ்தாபங்களைக் குழந்தைகளிடம் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிற விஷயங்களில் கண்டிப்பைத் தளர்த்தாமல் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை யாரைப் பார்த்தாலும் அடிக்கிறது அல்லது கடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெற்றோர் அதைக் கண்டிப்பார்கள். சில நேரம் "பேரன், பேத்தி அடிப்பது சுகமாக இருக்கிறது" எனத் தாத்தா, பாட்டி அதை ஊக்குவிப்பதுண்டு. இதனால் குழந்தைகள் எது சரி என்று புரியாமல் குழப்பமடைவார்கள்.

குழந்தைகள் சில விஷயங்களில் அடம்பிடித்துத் தொந்தரவு செய்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக அதை நிறைவேற்றக் கூடாது. கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில நாட்களில் தீவிரம் குறைந்துவிடும். குழந்தைகளின் மிரட்டலுக்குப் பெற்றோர் அடிபணியக் கூடாது.

அழுது அடம்பிடித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றப் போராடுவதைவிட, வேறு விஷயத்தில் குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்புவது எளிது.

ஒரு விஷயத்தைச் செய்யாதே எனத் திரும்பத் திரும்பச் சொல்வதைவிட, வேறொன்றைச் செய் என்று வழிகாட்டுவது பலனளிக்கும்.

டிவி பார்க்கும் நேரத்தை வரைமுறைப்படுத்தி, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.

மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

உற்சாகப்படுத்துங்கள்

நல்ல பழக்க வழக்கங்களைச் செய்யும்போதோ அல்லது ஒரு விரும்பத்தக்க பழக்கத்துக்கு மாறும்போதோ உடனடியாக உற்சாகப்படுத்துங்கள். உங்கள் ஊக்குவிப்பு சாதாரணப் பாராட்டு, தட்டிக்கொடுத்தலில் இருந்து சிறிய பரிசு பொருட்கள், சாக்லேட்டாகக்கூட இருக்கலாம்

நீங்கள் நினைத்த குறிக்கோளைக் குழந்தைகள் அடைந்தால் மட்டுமே வாக்குறுதி கொடுத்த பரிசையோ, பொருட்களையோ கொடுங்கள்.

பாராட்டும்போதோ, பரிசு கொடுக்கும்போதோ ‘நீ இப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாய் அல்லது இந்தக் கெட்ட பழக்கத்தைக் கைவிட்டிருக்கிறாய், அதற்காகத்தான் இந்தப் பரிசு’ என நினைவுபடுத்திக் கொடுங்கள்.

தண்டனை தேவையா?

குழந்தைகளுக்குத் தண்டனைகள் தேவைதான், ஆனால் அதைக் கொடுக்கும் விதம் மிகவும் முக்கியம்.

தவறான செயல்களை, அவற்றின் தீவிரத்துக்கு ஏற்ப உடனடியாகத் தண்டிக்க வேண்டும். காலம் தாழ்த்துவது எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.

தண்டனைகள் வயதுக்கு ஏற்றவையாக இருப்பது அவசியம். ஆத்திரப்படுதலைத் தவிப்பது நலம்.

குழந்தைகளுக்குத் தாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம் என்பது கண்டிப்பாகப் புரிந்திருக்க வேண்டும்.

அறியாமல் செய்த தவறுகளுக்குத் தண்டிக்கக் கூடாது. உதாரணமாகக் கையில் உள்ள டம்ளர் தவறி விழுவதால் தண்ணீரைக் கொட்டுவது 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றுதான். இது மாதிரியான விஷயங்களுக்கு அவசரப்பட்டுத் தண்டிக்கக் கூடாது.

ஒரு குழந்தை விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டால், அக்குழந்தைக்கு மிகவும் பிடித்தமானவற்றைக் கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம். உதாரணமாக 5-10 நிமிடங்கள் சுவர்ப்புறமாகத் திரும்பி உட்காரவைப்பது, அன்றைக்கு விளையாடும் அல்லது டிவி பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, சிறிது நேரம் பேச மறுப்பது போன்றவை பலன் கொடுக்கும்.

NRI admission..PG Medical seat

HC comes to the aid of NRI student for PG medical seat

SPECIAL CORRESPONDENT

CHENNAI, MAY 21, 2017 00:00 IST

Though she scored high marks and produced all documents, her application was rejected, claims petitioner

The Madras High Court has directed the Health Secretary, Selection Committee represented by its Secretary and the Directorate of Medical Education to keep one seat vacant in the PG medical courses for an NRI (non-resident Indian) candidate who approached the court.

Justice R. Mahadevan, before whom the petition came up, said, “It is apparent on the face of the records that the petitioner secured higher marks and her opportunity for admission for the said course has been rejected. Hence, as an interim measure there shall be an order of interim direction to the authorities to keep one seat vacant pending disposal of writ petition.”

In her petition S.Shwetha, a resident of Abu Dhabi, United Arab Emirates, sought a direction to the authorities to quash the provisional eligible list published by the selection committee dated May 15, and publish a fresh provisional eligible list for admission to the postgraduate degree/diploma courses under the NRI quota in self-financing medical colleges and colleges under deemed universities.

The petitioner, who was residing in Chennai, completed MBBS in 2015 from a private medical college and also completed the CRRI (Compulsory Rotatory Residential Internship) in April 23, 2015.

Permanent registration

Ms. Shwetha was given the Permanent Medical Registration Certificate for Practice by the Tamil Nadu Medical Council.

She got married and started living with her husband in Abu Dhabi from 2015. As she stayed for more than 182 days abroad she got the NRI status and hence, she applied under NRI quota for the PG Medical Courses.

Ms. Shwetha applied separately to both the self- financing colleges as well as deemed universities under the management quota and NRI quota.

She also sent proof of her NRI status issued by Embassy of India at Abu Dhabi in favour of her husband Saravanan and her Residential ID Card issued by the UAE and visa to the concerned authorities.

Court seeks documents

The Judge directed the petitioner to produce all documentary evidence before the Selection committee on May 23, and on verification if the authorities are not satisfied with the same directed them to file a counter and posted the matter for further hearing to June 2.

Metro Ride

Metro ride to airport smooth, but walk to terminal tiresome

U Tejonmayam | TNN | Updated: May 21, 2017, 12.14AM IST

Chennai: For commuters taking the metro train to the airport, heading to the terminal may not be as easy as boarding the air-conditioned coach.

Air passengers alighting at the airport station have to exit the facility and walk for 15 minutes to the terminal. While passengers complain that the shuttle service introduced by for air passengers from the metro station to the airport is erratic, promised facilities like walkalator and web check-in for easy access to the airport and hassle-free travel are yet to be in place.

The much-anticipated elevated line between Little Mount and Airport was launched in September 2016. Metro rail officials had said commuters would soon be get several new facilities at the airport station including the walkalator, to be built by Airport Authority of India, which will connect both the metro station with the airport terminal. A tube was constructed linking both the platform level of the metro station with the entry of the airport. But since there is no walkalator that would enable passengers, carrying heavy luggage, easily move between the two facilities, the tube has been cordoned off.

In October 2016, metro rail launched shuttle services to improve commuter mobility. Four battery operated cars have been shuttling air passengers between the metro station and airport, and back. But commuters complain that they had to wait for more than 15 minutes to catch a shuttle service. Hence, many of the air passengers end up walking to the terminal from the station.

"I started taking the metro train as the station is in front of the airport hoping it will connect through a subway or a foot overbridge. But it is such a hassle to walk out of the station and go to the airport. I might as well spend more money and take a cab. The shuttle service is also slow," said Sundar, a city resident, who works in Delhi.

With the launch of the underground line between Nehru Park and Thirumangalam, more commuters are now expected to take metro trains to the airport. The new line gives residents of localities like Shenoy Nagar and Anna Nagar an access to mass transit facility. Metro rail has also launched direct trains from Nehru Park to the airport every 30 minutes.

Court order

Denied entry to home, mechanic gets relief from HC

TNN | May 21, 2017, 12.56AM IST

Chennai: Rushing to the rescue of a bike mechanic, the Madras high court has directed authorities to stop construction of a bus shelter that would block entry into the mechanic's home-cum-workshop at Vanagaram on the Chennai-Bengaluru highway.

Justice R Mahadevan granted the relief to P Velmurugan after he narrated how a local AIADMK functionary was behind the bus shelter plan to deny him free entry and exit from his house.

Taking note of his grievance, the judge issued notice to K Perazhagan, who is at present the town secretary of Villivakkam unit of the AIADMK. He also issued notice to the Tiruvallur district collector and the Metropolitan Transport Corporation (MTC).

According to the petitioner, he is the absolute owner of 2,347sqft of land with a super structure in Vanagaram. His property has 21ft frontage on the Chennai-Bengaluru highway (Poonamallee high road). He has been living there with his family.

He said he had invested his hard earned money on the property. On May 14, 2017 the ruling party functionary, along with some others, started digging a pit for about 20x10 feet in front of his house.

When he inquired with the workers, he was informed that they were going to construct a bus shelter.

When protested that the construction would leave him without access to his house, the men threatened him. He was then constrained to approach the court.

Justice Mahadevan, after instructing the government pleader not to proceed with the construction of the bus shelter obstructing entry to the mechanic's home, posted the matter for further hearing on June 12.

VC search Panel

Three VC search panels submit names to governor

Siddharth Prabhakar | TNN | May 21, 2017

Chennai: After courting controversies and delaying the selection of vice-chancellors to three universities, the search committees of University of Madras, Anna University (AU) and Madurai Kamarajar University (MKU) submitted lists of VC nominees to governor C Vidyasagar Rao on Saturday.

"While the MKU and Anna University search panels met the governor on Friday, University of Madras panel got an audience only on Saturday morning," a government official told TOI. This comes after the Madras high court, acting on a public interest litigation, on Thursday giving two weeks for the chief secretary and the higher education secretary to fill the VC posts. UNOM since January 2016, Anna University since May 2016. Madurai Kamarajar University has been without a VC since April 2015, Univeristy of Madras since January 2016, and Anna University since May 2016.

Officials said the governor had been unhappy with the very constitution of the search panels. Officials said the governor insisted on a retired high court judge to head each panel, but the state government has requested that this time the condition may be relaxed. It is not known if the panels' meetings with the governor happened after he agreed.

As mandated by the state government, each committee has submitted three names based on UGC norms. This has raised hopes among academic circles that the governor would appoint the VCs at the earliest on the lines of Tamil Nadu Fisheries University, where he interviewed the candidates in person recently. Higher education minister K P Anbazhagan is likely to be part of the interview process.

Sources said the governor has the option of rejecting the names, since the selection process and constitution of the search panels have been mired in controversies. Noted academicians and social activists have submitted memoranda alleging bribery in the process.

"The governor may accept the names and appoint VCs. However, he will resort to redefining the composition of the search committees by fixing certain eligibility criteria for the members, which is lacking now," said a source. The appointment of Surendra Prasad, a civil engineer and a research scholar in University of Madras, as VC search panel member had raised eyebrows though the senate had nominated him for the committee through an election. Mu Ramasamy, a member of MKU search committee quit the post after ten months of his appointment, alleging irregularities in the selection process.

But MKU search committee convenor C Murukadas told TOI that "all allegations are false". Murukadas was part of the VC search committees of Annamalai University in 2014, and that of Tiruvallur University the following year. The retired professor has had a stint in many central and state organisations, and continued to be a member of TN Backward Classes Commission for nearly 17 years.

Last updated : 11:06 (19/05/2017)

விக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... தும்பை!

 எம்.மரிய பெல்சின்

அவளது சிரிப்பில்தான்
அறிந்து கொண்டேன்...
தும்பைப் பூவின் நிறத்தை!
ஆம்... அவளது
முத்துப்பற்கள்
வெள்ளைவெளேர்
என ஜொலித்தது...

- இது நிகழ்காலக் கவிஞனின் கவிதை வரிகள்.

‘தும்பைப் பூ நிறத்தில் சோறு பரிமாறப்பட்டது. கூடவே வீட்டு நெய்யும் ஊற்றப்பட்டது.’ - இது ஒரு சிறுகதையில் இடம்பெறும் வரி.

`தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம்...' - இது ஒருவரின் அனுபவப் பகிர்வு.

தும்பைப் பூ சிவனுக்குரிய மலர் என்பதற்கு பக்தி இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. சிவனுக்கு மட்டுமல்ல விநாயகர், துர்க்கை, சரஸ்வதி தேவி போன்ற பல தொய்வங்களுக்கு பூஜை செய்வதற்கு உகந்த மலராகும். இலக்கியத்தில், தும்பைப் பூ மாலை அணிந்து சென்றால் போர் உக்கிரம் என்று பொருள்படுமாம். மேலும், எதிராளியை வசீகரிக்கும் தன்மை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தும்பையின் தாவரவியல் பெயர் LEUCAS ASPERA.  இதன் இலை, பூ மற்றும் வேர் மருத்துவக்குணம் நிறைந்தவை. தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத் தும்பை, பேய்த் தும்பை, கழுதைத் தும்பை, கசப்புத் தும்பை, கவிழ் தும்பை மற்றும் மஞ்சள் தும்பை என்று பல வகைகள் உள்ளன.

விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இது எல்லாவகை மண்ணிலும் வளரும் என்றாலும் மணற்பாங்கான நிலத்தில் விரும்பி வளரக்கூடியது. தமிழகமெங்கும் எல்லாப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணப்படும் இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
தும்பைப் பூவில் உற்பத்தியாகும் தேனைக் குடிப்பதற்காக எறும்புகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் பிற வகைப் பூச்சிகள் காத்துக்கிடக்கும். இன்றைக்கு தேனீ வளர்ப்புத் தொழில் பிரபலமடைந்து வருகிறது. அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முருங்கை, சூரியகாந்தி போன்ற செடிகள் நிறைந்திருக்கும் இடங்களில் தேன் கூடுகளை வைப்பதுபோல தும்பைச்செடிகள் நிறைந்திருக்கும் பகுதிகளிலும் தேன் கூடுகளை வைப்பார்கள். ஏனென்றால் அது அதற்கென்று ஒரு விலை.

முழுத் தாவரமும் இனிப்பு மற்றும் காரச் சுவை, வெப்பத்தன்மை கொண்டது. ஜலதோஷம் வந்தால் தும்பை இலைச்சாறு மூன்று சொட்டு எடுத்து மூக்கால் உறிஞ்சி தும்மினால் தலையில் கோத்திருக்கும் நீர் விலகுவதோடு தலைவலி விலகும். மேலும் இது சளியைக் கட்டுப்படுத்துவதோடு நல்லதொரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. குழந்தைகளுக்கான சளி, இருமல், வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு 10 சொட்டு பூச்சாற்றை காலையில் சாப்பிடக் கொடுத்தால் பலன் கிடைக்கும். பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் சளித்தொல்லை விலகும்.

அரை டம்ளர் காய்ச்சிய பாலில் 25 பூக்களை ஒரு மணி நேரம் ஊற வைத்து குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்து வந்தால் தொண்டையில் கட்டியிருக்கும் கோழை அகலும். இலைச்சாறு 10 முதல் 15 மி.லி வரை குடித்து வந்தால் ஒவ்வாமை (அலர்ஜி) நீங்கும். இதை 15 நாள்கள் தினமும் காலையில் குடித்து வர வேண்டியது அவசியம்.

அதிகாலையில் பூவை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும். 50 மி.லி நல்லெண்ணெயில் 50 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி மூக்கில் மூன்று சொட்டு வீதம் 21 நாள்கள் விட்டு வர குறட்டை விடும் பிரச்னை விலகும்.

பூக்களுடன் ஒரு மிளகு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் முழுச் செடியையும் எடுத்து வந்து நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி (வேது) பிடித்தால் பலன் கிடைக்கும்.

தும்பைப்பூவையும் ஆடுதீண்டாப்பாளை விதையையும் சேர்த்து அரைத்து பாலில் போட்டு குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும். இதேபோல் பூவுடன் கர்ப்பப்பை தொடர்பான நோயால் பாதிக்கப்படுபவர்கள் வெள்ளாட்டுப் பால் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி பாலை மட்டும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 40 நாள்கள் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். 20 பூக்களுடன் 5 கிராம் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பைக் கட்டிகள் கரையும். இலையுடன் உத்தாமணி எனப்படும் வேலிப்பருத்தி இலை சம அளவு எடுத்துக் கோலிக்காய் அளவு பால் சேர்த்துக் குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

தும்பை இலைச்சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு போன்றவற்றில் தனித்தனியாக சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் சரியாகும்.

செடியை அரைத்துத் தேமல் உள்ள இடங்களில் தொடர்ந்து பூசி வந்தால் குணம் கிடைக்கும். கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாக தும்பை இலைகளை அரைத்து, மேல் பூச்சாகப் பூச வேண்டும். 5 நாள்கள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். இலைச்சாற்றுடன் சோற்றுப்பு கலந்து கரைந்து சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசி உலர்ந்ததும் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.

தும்பையை நீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், மாந்தம் ஆகியவை நீங்கும்.

இலைச் சாற்றுடன் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்க வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும்.

கொப்புளம், நமைச்சல், சிரங்கு போன்றவை குணமாக இலைகளை மையாக அரைத்து ஐந்து நாள்கள் பூசி வர வேண்டும்.

தும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவு சேர்த்து அரைத்து பாக்கு அளவு எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்ந்து தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை குணமாகும்.

பாம்பு கடித்து விட்டால் ஒரு கைப்பிடி இலைகளை எடுத்து நசுக்கி அதன் சாற்றைக் குடித்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று சொட்டு சாற்றை மூக்கிலும் விட வேண்டும். இதனால் பாம்புக்கடி பட்டவர் மயக்கம் தெளிவதோடு சீக்கிரம் விஷம் முறியவும் வாய்ப்பு ஏற்படும்.

NEWS TODAY 21.12.2025