Sunday, June 25, 2017

குழந்தைகளை நிமிடத்தில் மரணிக்கச் செய்யும் செடி இருக்கிறதா? வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

இரா.கலைச் செல்வன்

“ஜாக்கிரதை... இது ஓர் உண்மைக் கதை. சமீபத்தில் என் மகன், இந்தச் செடியின் இலையை சாப்பிட்டதால் இறந்து விட்டான். இது நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் ஒரு செடிதான். ஆனால், நாம் நினைப்பதுபோல் இது அத்தனை அழகானது அல்ல... மிகவும் ஆபத்தானது. இது ஒரு குழந்தையை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடும். ஒரு பெரியவரை 15 நிமிடத்தில் கொன்றுவிடும். இந்தச் செடியில் கைகளை வைத்துவிட்டால், தயவு செய்து அதைக் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை பறி போகும் வாய்ப்புகள் அதிகம். உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து, அவர்களைக் காப்பாற்றுங்கள்..." சமீபத்தில் இந்தச் செய்தி வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டது. இதே செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இப்படி பகிரப்பட்டது. ஆனால், இது உண்மை தானா?



இன்று டெக்னாலஜி ஆளும் யுகத்தில் இருக்கிறோம். ஜஸ்ட் ஒரு க்ளிக்... அவ்வளவுதான். எங்கும், எப்போதும் , எதுவும், கிடைக்கும். இன்று தகவல்கள் என்பது ஒரு கடல் அலை பொங்கி வருவது போல் நமக்கு கிடைக்கின்றன. அதிகப்படியான விஷயங்களைத் தெரிந்துக் கொள்வது நல்லதுதான். ஆனால், பல சமயங்களில் அந்த அலை பல குப்பைகளையும் கொண்டு வந்து விடுகிறது. இந்தத் தகவல்களில் உண்மையையும், பொய்களையும் பிரித்தறிவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது... அல்லது அதற்கான சிரத்தையை நாம் மேற்கொள்வதில்லை. சரி... இந்த செய்திக்கு வருவோம். நிச்சயம் நம்மில் பலர் இந்த செய்தியையோ... இப்படியான ஏதோ ஓர் செய்தியையோ அது என்ன, ஏது என்ற உண்மையை ஆராயமல் பலருக்கும் பகிர்வோம். அது பலருக்கும் தேவையற்ற அச்சத்தையும், உணர்வுக் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியும் கிட்டத்தட்ட அப்படித்தான்...

இது " டைஃபன்பேக்கியா " ( Dieffenbachia ) என்ற ஒரு செடி வகை. இது அழகிற்காக வளர்க்கப்படும் செடி. பெரும்பாலும் அபார்ட்மெண்ட்களில், அலுவலகங்களில் உள்ளேயே வைத்து வளர்க்கப்படுகிறது. இரண்டு வாரத்திற்கொரு முறை இதற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். குறைந்தளவிலான சூரிய வெளிச்சம் இதற்குப் போதும். தேவையும் அதுதான். வெட்டவெளியில் வைத்து வளர்த்தால் மொத்த செடியும் கருகிவிடும். இதன் பூர்வீகம் மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அர்ஜெண்டினா என்று சொல்லப்படுகிறது. இன்று உலகம் முழுக்கவே, அலங்காரத்திற்காக இந்தச் செடி வளர்க்கப்படுகிறது. பரவும் செய்திகள் சொல்லும் அளவிற்கு இது அபாயகரமானதா என்று கேட்டால்... பதில் இல்லை என்பதுதான்.



டைஃபன்பேக்கியா குறித்து முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டவர், அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் யூனிவர்சிட்டியின் பேராசிரியர் எட் க்ரென்ஸெலோக். அவர் பரவும் இந்த வதந்திகள் குறித்து இப்படியாக பதிவிட்டுள்ளார்...

“நான் பல ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். என்னைச் சுற்றி இந்த "டைஃபன்பேக்கியா"க்கள் எப்போதும் இருக்கும். ஆனால், என் அனுபவத்தில் இதுவரை இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதில்லை. சமயங்களில் இதிலிருந்து வெளியேறும் பால் கைகளிலோ, கண்களிலோ பட்டால் சற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்." என்று சொல்லியுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவியல் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.

டைஃபன்பீக்கியாவில் கால்சியம் ஆக்சோலேட் ( Calcium Oxalate ) என்ற வேதியியல் பொருள் உள்ளது. அது ஒரு ஊசியைப் போல, ஒரு பக்கம் கூர்மையாக உருமாறுகிறது. இதை ராஃபைட்ஸ் ( Raphides ) என்று சொல்கிறார்கள். அந்தச் செடியின் இலைகளை உடைக்கும் போதோ, அல்லது பிற பகுதிகளை தொந்தரவு செய்யும் போதோ, இந்த ராஃபைட்ஸ் நம் கைகளில் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஒரு வித எரிச்சலை அளிக்கும். சமயங்களில் மரத்துப் போகும் உணர்வினை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் சமயங்களில் மற்றபடி பார்வை பறி போகும் என்பதெல்லாம் வதந்திதான்.



டைஃபன்பேக்கியாவை "டம்ப் பிளான்ட்" ( Dumb Plant ) என்று சொல்கிறார்கள். அதாவது, " ஊமைச் செடி ". இதை சாப்பிடுபவர்கள் ஊமையாகிவிடுவார்கள் என்ற ஒரு வதந்தியும் இருக்கிறது. ஆனால், அது அப்படிக் கிடையாது. இலை நாவில் படும்போது, ராஃபைட்ஸ் நாவினை மரத்துப் போகச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல், அது வாயை வீங்கச் செய்துவிடும். இதனால், சில மணி நேரங்களுக்கு சரியாக பேச முடியாது. இது குறித்த ஒரு வரலாற்றுப் பதிவையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, அந்தக் காலங்களில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக கொண்டு செல்வார்கள். அப்போது, சில முதலாளிகள் அடிமைகளின் வாய்களில் இந்தச் செடிகளைப் போட்டு, அவர்கள் பயப்படுவதைக் கண்டும், பேச முடியாமல் அலறுவதைக் கண்டும் சிரித்து விளையாடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படி, நிகழ்கால ஆராய்ச்சிகளிலும், கடந்த கால வரலாறுகளிலும் கூட இந்தச் செடிகள் உயிரைப் பறித்தாக எந்த சான்றுகளும் இல்லை. இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி வேளான் அலுவலரான ரூபன் செல்வக்குமாரிடம் கேட்டபோது,

"அழகிற்காக வளர்க்கப்படும் இந்தச் செடிகள் அவளவு ஆபத்தானவை அல்ல. இதுகுறித்த ஆராய்ச்சிகள், தமிழ்நாட்டில் எங்கும் நடந்ததில்லை. அதனால், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், அதுதான் உண்மையாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், இந்தச் செடி உயிர் பறிக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கும்பட்சத்தில், உலகளவில் இது பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், அத்தனை வீடுகளிலும், அலுவலகங்களிலும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன. " என்று சொல்கிறார். இப்படி மொத்தமாக ஆராய்ந்துப் பார்க்கும்போது, பல லட்சம் ஷேர்களைக் கண்ட அந்த செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என்பது நிரூபணமாகிறது.



இன்றைய யுகத்தின் ஆகச் சிறந்த ஆயுதமாக இருப்பது நம்முடைய செல்போன்கள். அதில் நாம் பகிரும் ஒவ்வொரு தகவல்களும், ஒரு அணுகுண்டிற்கு ஒப்பானவை. எனவே, அந்த அணுகுண்டுகளைக் கைமாற்றும் போது அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனென்றால், அந்த குண்டு வெடித்தால் பாதிக்கப்படப் போவது நீங்களும் , நானும் தான்...

அற்றுப் போய்விடுமோ அரவை மில் சத்தம்..?

கரு.முத்து

நெல் அரவை மில்லில் இருந்து வரும் காதைப் பிளக்கும் கர..கர.. சத்தம். தவிட்டு மழையில் நனைந்து நிற்கும் அரவைக்காரர். கரகரப்பை மிஞ்சிய டெசிபலில் அவரோடு அரவைக் கூலியை அவதானிக்கும் சம்சாரிகள்.. இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் அரவே வழக்கொழிந்துவிடும் போலிருக்கிறது.

முன்பெல்லாம், ஓரளவுக்கு பெரிய ஊராக இருந்தால் நிச்சயம் ஒரு நெல் அரவை மில் இருக்கும். சம்சாரிகள் தங்களது நிலத்தில் அடித்த நெல்லை, கருக்கலில் அவித்து பக்குவமாய் காயவைத்து பதம் பார்த்து அரைப்பதற்காக இந்த அரவை மில்லுக்கு வண்டிகட்டி வருவார்கள்.

அலம்பல் அரவைக்காரர்
அரவைக்காரர் வருவதற்கு முன்னதாகவே நெல்லைக் கொண்டுபோய் வரிசையில் வைத்துவிட்டுக் காத்துக் கிடப்பார்கள். அரைக்கால் டிராயரை மாட்டிக் கொண்டு, கடைவாயில் வெற்றிலையை அதக்கியபடி ஒன்பது மணிக்கு ஆடி அசைந்து வருவார் அரவைக்காரர். மில் முதலாளிகூட அவ்வளவு பிகு பண்ணமாட்டார்.. இவரது அலம்பல் தாங்கமுடியாது. அதனால், நம்மவர்கள் அவரிடம் அவ்வளவு பவ்யம் காட்டுவார்கள்.

கிடக்கும் நெல் மூட்டைகளை கண்களால் கணக்குப் போட்டபடியே மெஷினைத் தட்டிவிடுவார்; கரகரக்க ஆரம்பித்துவிடும் சத்தம். பொழுது சாய்ந்த பிறகும் ஓயாத இந்த சத்தம் சில சமயங்களில் 2 கிலோ மீட்டருக்கு அப்பாலும் எதிரொலிக்கும். இப்படி, சம்சாரிகள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக ஏகாந்தம் பரப்பிய நெல் அரவை மில்களை இப்போது பார்க்கமுடியவில்லை. எல்லாம் ‘மார்டன் ரைஸ் மில்’ மயமானதால் சம்சாரிகளும் இப்போது பளபளக்கும் பை அரிசிக்கு மாறிவிட்டார்கள்.

இதுவும் எத்தனை நாளைக்கோ?
இதனால், பெரும்பாலான ஊர்களில் அரவை மில்கள் இழுத்துமூடப்பட்டு விட்டன. மிளகாய் பொடி, மாவு வகைகள் அரைப்பதை நம்பி ஏதோ ஒரு சில மில்கள் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் ஓடிக் கொண்டி ருக்கின்றன. இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ! “எங்க மில்லை ஆரம்பிச்ச புதுசுல இங்கிருக்கிற மழவராயர் வீட்டுல ரெண்டு நாளு காத்துக்கிடந்து நெல் அரைச்சிட்டுப் போவாங்களாம். ஆனா இப்ப, நாள் முழுக்கக் காத்துக் கெடந்தாலும் ஒரு மூட்டை நெல் அரவைக்கு வரமாட்டேங்குது. இந்த லட்சணத் துல ஓடுனா கரன்டு பில்கூட கட்டமுடியாதுன்னு தெரிஞ்சுது. அதனால, மில்லை மூடிட்டோம்’’ என்கிறார் மூன்றாவது தலைமுறையாக அரவை மில் வைத்திருந்த நல்லூர் ரமேஷ்,

என்ன நெல்லுல வந்த அரிசின்னே தெரியாம, எப்படி தயாராகுதுன்னே தெரியாம அதை வாங்கிச் சாப்டுறாங்க. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க.

“எங்க மில்லை ஆரம்பிச்ச புதுசுல இங்கிருக்கிற மழவராயர் வீட்டுல ரெண்டு நாளு காத்துக்கிடந்து நெல் அரைச்சிட்டுப் போவாங்களாம். ஆனா இப்ப, நாள் முழுக்கக் காத்துக் கெடந்தாலும் ஒரு மூட்டை நெல் அரவைக்கு வரமாட்டேங்குது. இந்த லட்சணத் துல ஓடுனா கரன்டு பில்கூட கட்டமுடியாதுன்னு தெரிஞ்சுது. அதனால, மில்லை மூடிட்டோம்’’ என்கிறார் மூன்றாவது தலைமுறையாக அரவை மில் வைத்திருந்த நல்லூர் ரமேஷ்,

பை அரிசிக்கு பழகிட்டாங்க
தட்டுத் தடுமாறி அரவை மில் நடத்திக் கொண்டி ருக்கும் ஆச்சாள்புரம் மயில் வாகனன், “விவசாயக் குடும்பங்கள்லயே இப்ப நெல் அரைச்சுச் சாப்பிடும் பழக்கம் குறைஞ்சு போச்சு. வெளஞ்ச நெல்ல களத்து மேட்டுலயே வித்துக் காசாக்கிட்டு பை அரிசியை வாங்கிச் சாப்பிடப் பழகிட்டாங்க. அதனால, எங்களுக்கு வேலை இல்லாம போச்சு. ஏதோ, மிளகாய் பொடி, மாவுன்னு அரைக்க வர்றவங்களால எங்களுக்கு வாய்க் கும் கைக்குமா பொழப்பு ஓடுது’’ என்கிறார்.
சீர்காழி அருகே திருமைலாடி யிலிருந்து நெல் அரைக்க வந்திருந்த ராஜேந்திரன் “பகட்டா தெரியும் பை அரிசியில எவ்வளவு கெடுதல் இருக்கு தெரியுமா? என்ன நெல்லுல வந்த அரிசின்னே தெரியாம, எப்படி தயாராகுதுன்னே தெரியாம அதை வாங்கிச் சாப்டுறாங்க. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. ஒருமூட்டை நெல் அரைச்சா இரண்டு மாசத்துக்கு வரும். தீர்ந்துட்டா திரும்ப அரைச்சுக்குவோம். இதுல உள்ள திருப்தியும், தெம்பும் வேற எதுலயும் வராதுங்க’’ என்கிறார்.

ராஜேந்திரன்கள் இருப்பதால் தான் இன்னமும் எங்காவது ஒரு மூலையிலாவது நெல் அரவை மில்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருக் கின்றன.

அமெரிக்கா போக ஆசையா? - விசா நேர்காணல் எப்படி இருக்கும்?

சுற்றுலா விசாவுக்கான நேர்காணல் எப்படி நடக்கும்? என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? அதற்கு நாம் எப்படித் தயாராவது?

நிர்மலா, கோவை.
பொதுவாக விசா நேர்காணல்கள் சுருக்கமாக, அதாவது 2 முதல் 3 நிமிடங்களுக்குள்தான் இருக்கும். உங்கள் பயணத்தின் நோக்கம், விசா பெறுவதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கிறீர்களா என்பவற்றைத் தீர்மானிக்கும் கேள்விகளை அதிகாரி உங்களிடம் கேட்பார். உங்களைத் தயார்படுத்த உதவும் விசா கேள்விப் பட்டியல் என்று ஏதும் கிடையாது. ஒவ்வொரு விண்ணப்பதாரரின் பின்னணியும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால், உங்கள் வாழ்க்கை சார்ந்த விஷயங்களையே விசா அதிகாரியிடம் சொல்ல வேண்டும். நேர்காணலுக்கு வருபவர்களுக்கு ஒரு டிப்ஸ்: அதிகாரியுடன் பேசுங்கள்... உண்மையைப் பேசுங்கள்.

என்னுடைய சுற்றுலா விசா காலாவதியாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது நான் மீண்டும் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். என்னிடம் ஏற்கெனவே இருக்கும் விசாவைப் புதுப்பித்துக்கொள்ள முடியுமா? அல்லது மீண்டும் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

ரகு, புதுச்சேரி.

நீங்கள் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்குப் பார்க்க வேண்டிய இணையதளம்: www.ustraveldocs.com/in
நான் அமெரிக்கச் சுற்றுலா விசா வாங்கி மூன்றாண்டுகள் ஆகின்றன. அதிலும், என் பாஸ்போர்ட்டிலும் என் பெயருக்குப் பின்னால் என் அப்பாவின் பெயர் உள்ளது. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு எனக்குத் திருமணமானது. இப்போது என் புதிய பாஸ்போர்ட்டில், என் பெயருக்குப் பின்னால் என் கணவரின் பெயரைச் சேர்க்க நினைக்கிறேன். அதே போலவே, என் அமெரிக்கச் சுற்றுலா விசாவிலும் பெயரை மாற்ற நினைக்கிறேன். அதற்கு என்ன வழிமுறைகள்?

தேவகி, திருப்பூர்.

விசாவில் பெயரை மாற்ற நீங்கள் விரும்பினால், உங்கள் பாஸ்போர்ட்டில் உரிய மாற்றம் செய்த பின், புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டில் என்ன பெயர் இருக்கிறதோ அதுவே விசாவிலும் பதிவாகும்.

என்னுடைய சுற்றுலா விசா காலாவதி ஆவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. சுற்றுலா விசாவில் ஆறு மாதம்வரை அமெரிக்காவில் தங்கலாம் என்று அறிகிறேன். எனில், நான் அமெரிக்கா சென்று மூன்று மாதங்களில், என்னுடைய விசா காலாவதி ஆகும். அப்போது என்னுடைய சுற்றுலா காலத்தை நீட்டிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

லக்ஷ்மி ராஜன், ஈரோடு.

அமெரிக்க விசா, விமான (வழியாக) நிலையம் அல்லது தரை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சுங்கம், எல்லைப் பாதுகாப்பு ஆய்வாளரிடம் அனுமதி கோர இடமளிக்கிறது. ஆகவே, அமெரிக்காவுக்குள் நீங்கள் நுழையும்போது, உங்கள் விசா செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். அமெரிக்காவுக்குள் நுழையும் இடத்தில் (port of entry), குடியேற்ற அதிகாரி குறிப்பிடும் காலம்வரை அங்கே நீங்கள் தங்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிட்டால், மறுபடியும் உங்கள் விசாவைப் புதுப்பித்து அங்கு செல்லலாம்.
முதியவர்கள் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஏதேனும் சலுகைகள் வழங்கப்படுகின்றனவா?

ஸ்ரீரமணன், சென்னை.
80 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம், உரிய ஆவணங்களை அதற்குரிய பரிசீலனைப் பெட்டியில் (Drop Box) போடலாம். நேர்காணலுக்கு வரத் தேவையில்லை.
நன்றி: அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை

இளமை .நெட்: போன், ஆனா போன் இல்லை!

சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன் உலகில் ‘இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்! பெயர் மட்டுல்ல; உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிடத் தயார் என்றால் நீங்களும்கூட ‘நோபோன் ஸ்டோர்’ தளத்தில் இந்த போனை வாங்கலாம்.
இந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட் போன்களில் செய்யும் எதையும் செய்ய முடியாது. ஸ்மார்ட் போன்களில் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய எந்த அம்சமும் இந்த போனில் கிடையாது. அதனால்தான் இது நோபோன்.

இப்படி ஒரு போன் எதற்கு? ஸ்மார்ட் போன் மோகத்திலிருந்து விடுபடுவதற்குத்தான்!
செவ்வகக் கட்டை

ஆம், பேசுகிறோமோ இல்லையோ, அழைப்பு வந்திருக்கிறதோ இல்லையோ, சில நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்துப் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறதே. காலையில் கண் விழித்ததும், பல் துலக்குவதற்கு முன்னர் போன் திரையைப் பார்த்து விட்டுத்தானே வேறு வேலை பார்க்கிறோம். இரவிலும் படுக்கச் செல்வதற்கு முன் போன்தான் பக்கத்தில் இருக்கும்.
இப்படி ஸ்மார்ட் போன் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மானே தேனே போட்டுக்கொள்வது போல, வாட்ஸ் அப்பில் உலாவுவது, செல்ஃபி எடுத்துத் தள்ளுவது என இதர பாதிப்புகளை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்.

பஸ்ஸிலோ ரெயிலிலோ பயணிக்கும்போதும் பலரும் ஸ்மார்ட் போனில் மூழ்கியபடி தனி உலகில் சஞ்சரிக்கின்றனரே தவிர, பக்கத்தில் உள்ளவர்களைக் கவனிப்பதுகூட இல்லை. இந்தப் பிரச்சினைக்கு எல்லாம் தீர்வாக அறிமுகமானதுதான் நோபோன். இது ஸ்மார்ட் போன் போலவே தோற்றம் கொண்ட செவ்வகக் கட்டை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதைக் கையில் வைத்திருந்தால், போனை வைத்திருக்கும் அதே உணர்வைப் பெறலாம் எனும் உத்திரவாதத்தை நோபோன் அளிக்கிறது.

நிஜ உலகில் சஞ்சாரிக்க...

சதா சர்வ நேரமும் போனைக் கையில் எடுக்கும் உணர்வுக்கு மாற்றாக அமையக்கூடிய தொழில்நுட்பம் சாராத இந்தத் தீர்வு நிஜ உலகுடனான உங்கள் தொடர்பை அதிகமாக்கிக்கொள்ள உதவும் என்பதுதான் நோபோன் அறிமுகத்துக்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. 2014-ம் ஆண்டு வாக்கில் இணைய நிதி திரட்டும் மேடையான ‘கிக்ஸ்டார்ட்டர்’ மூலம் இந்த போனுக்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேட்டரி இல்லை, கேமரா இல்லை, புளூடூத் இல்லை, உடையாது, நீர்புகாது என்பவையெல்லாம் இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்பட்டன.
ஸ்மார்ட் போன் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு இல்லாத போனுக்கான தேவையைப் பலரும் உணர்ந்ததால், நிதி உதவியும் குவிந்து போனும் விற்பனைக்கு வந்தது. இப்போது, நோபோன் ஸ்டோர் மூலம், அடிப்படையான நோபோன் மட்டும் அல்லாது ‘நோபோன் ஜீரோ’ போன்ற பிற மாதிரிகளையும் வாங்கலாம். நோபோன் ஜீரோ என்றால், ஸ்மார்ட் போன் பட்டன் மாதிரிகள் எல்லாம் இல்லாத வெறும் செவ்வகப் பலகை, அவ்வளவுதான். ஆனால், பாதி விலையில் வாங்கலாம். ‘நோபோன் ஏர்’ மாதிரியும் இருக்கிறது. உள்ளே ஒன்றும் இல்லாமல் இருப்பது போன்ற வெற்றுத்தோற்றம்தான் இதன் சிறப்பம்சம்.

இது தவிர செல்ஃபி நோபோனும் உண்டு. நோபோனில் கேமராவே இல்லையே எப்படிப் படம் எடுப்பது என்று கேட்கலாம். நல்ல கேள்வி? முகம் பார்க்கும் கண்ணாடி கொண்ட நோபோன் இதற்குப் பதிலாகிறது. கேலியும் கிண்டலும் கலந்த முயற்சி என்றாலும், நம் காலத்து ஸ்மார்ட் போன் மோகத்தின் மீதான நயமான விமர்சனமாக நோபோன் அமைந்துள்ளது. அதனால்தான் இன்னமும் ‘அப்டேட்’ ஆகிக்கொண்டே இருக்கிறது.

சமூக ஊடக ‘மருந்து’...

நிற்க, நோபோன் போலவே, இப்போது சமூக ஊடகச் செயலி ஒன்றும் அறிமுகமாகியுள்ளது.
‘பிங்கி’ (Binky) எனும் அந்தச் செயலி கொஞ்சம் புதுமையானது. வழக்கமாகச் சமூக ஊடகச் செயலிகளில் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் இதிலும் செய்யலாம். அதாவது, நிலைத்தகவல்களை வரிசையாகப் பார்க்கலாம், அவற்றை லைக் செய்யலாம், பின்னூட்டம் அளிக்கலாம், இப்பக்கமும், அப்பக்கமும் நகர்த்திப் பார்க்கலாம். இவற்றில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இவை எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாமே தவிர, ஒருவரும் பார்க்க முடியாது!

ஆம், ‘பிங்கி’ செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு, அதில் எப்போது நுழைந்தாலும் ஏதாவது உள்ளடக்கத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் செய்வது போல இந்தத் தகவல்களை வரிசையாகப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இடையே ஏதாவது படத்தை லைக் செய்யலாம். கருத்து தெரிவிக்க விரும்பினால், தட்டச்சு செய்யலாம். முதலெழுத்தை மட்டும் அடித்தால் போதும், மற்ற எழுத்துகள் தானாகத் தோன்றும்.
அவ்வளவுதான். ஆனால், நாம் தெரிவிக்கும் லைக்குகளும் கருத்துகளும் வேறு யாரையும் சென்றடையாமல் இணைய வெளியில் கரைந்து காணாமல் போய்விடும். இதில் தோன்றும் நிலைத்தகவல்கள் விலங்குகள், பறவைகள் சார்ந்தவை. நம்முடைய நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுடையவை அல்ல. எதற்கு இப்படி ஒரு செயலி?

எல்லாம் சமூக ஊடகப் பழக்கத்துக்கு ஒரு மாற்று தேவை என்பதால்தான்!
எப்போதும் ஸ்மார்ட் போனைக் கையில் வைத்துக்கொண்டு அதில் சமூக ஊடகப் பதிவுகளைப் பார்த்தபடி இருக்கிறோம் அல்லாவா? அந்தப் பழக்கத்துக்கு மாற்று மருந்துதான் இந்தச் செயலி என்கிறார் இதை உருவாக்கியுள்ள மென்பொருளாளர் டான் கர்ட்ஸ்.

சமூக ஊடக உலகில் உலாவிய உணர்வைப் பெறலாம், ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற உரையாடல், லைக் கணக்கு, துவேஷம் போன்றவற்றைத் தவிர்த்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் என்கிறார் கர்ட்ஸ். ரயிலில் செல்லும்போது, அனிச்சையாக போனை எடுத்து சமூக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும் தனது சொந்த அனுபவம் குறித்து யோசித்தபோது, தகவல் தேவை இருக்கிறதோ இல்லையோ போனைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகத் தோன்றியதாக கர்ட்ஸ் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, விளையாட்டாக இந்தச் செயலிக்கு வடிவம் கொடுத்துள்ளார். ஆனால், இதைப் பார்த்தவர்கள் எல்லாம், இதன் சமூக ஊடகம் அல்லாத சமூக ஊடகத்தன்மையை விரும்பவே, செயலியை முழு வீச்சில் உருவாக்கி ஐபோனுக்காக அறிமுகம் செய்துள்ளார். ஆண்ட்ராய்டு வடிவமும் வரவுள்ளது. வேறு பல துணை அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கர்ட்ஸ் கூறியிருக்கிறார்.

பிங்கி செயலி இணையதளம்: http://www.binky.rocks/
நோ போன் இணையதளம்: https://www.thenophone.com/

மொழி கடந்த ரசனை 37: உன் நினைவு வாட்டாத உலகம் வேண்டும்!

எஸ். எஸ். வாசன்


காதல் உணர்வை வெளிப்படுத்தும் திரையிசைப் பாடல்கள், அவற்றைக் கேட்டு ரசிக்கும் தொடக்க நிலையில் ஏற்படும் பரவச உணர்வோடு தேங்கிவிடுவதில்லை. அதைத் தாண்டி, அவை எழுதப்பட்ட மொழியைப் பேசும் மக்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் எடுத்துக்காட்டும் தடயங்களாகத் திகழ்கின்றன. சங்கத் தமிழ்ப் பாடல்கள் முதல் சமீபத்திய தமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரை, தலைவி அல்லது காதலி காதலனை எண்ணி ஏங்குவதாகவும் அவன் பொருட்டு எதையும் செய்யத் தயாராக அவள் இருப்பதாகவும் மட்டுமே அமைந்திருக்கும்.
தலைவன் அல்லது காதலன் தன் நிலை தாழ்ந்து, தனது காதலுக்காக எதையும் இழப்பானே அன்றி, அவனது காதலிக்காக ஓரளவுக்கு மேல் இறங்கி வராத சுயமரியாதை உள்ள மனிதனாகவே தமிழ்த் திரைப் பாடல்களில் வலம் வருவான்.
‘உனக்காக, கண்ணே உனக்காக இந்த உயிரும் உடலும் ஒட்டி இருப்பது உனக்காக… இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீ இருந்தா, இந்து மகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்’ என்பது போன்ற வரிகள்கூட, ஒரு காதல் வயப்பட்ட நகைச்சுவை நடிகனின் பகடியாக மட்டுமே வெளிப்படும். கதாநாயகன் இப்படியெல்லாம் தன் காதலை மிகைப்படுத்தும் தமிழ்த் திரைப் பாடல்கள் அரிது. அதற்கு நம் தமிழ் திரைப் பண்பாடு இடம் தராது போலும்.
இதற்கு மாறாக அமைந்திருக்கும் இந்திப் படப் பாடல்கள் வாயிலாக, இந்திப் பட நாயகன் தன் காதலை நாயகியிடம் வெளிப்படுத்தும் வரிகளும் சூழலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த வேறுபாட்டைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் விதமாக “ஜிஸ் கலி மே தேரா கர் ந ஹோ பாலுமா” என்று தொடங்கும் ‘கட்டி பதங்க்’ (அறுந்த பட்டம்) என்ற திரைப்படத்தின் பாடல் அமைந்துள்ளது. ராஜேஷ் கன்னாவுக்குத் தன் குரல் பொருந்தாது என்பதால் அதிகம் அவருக்குப் பின்னணி பாடாத முகேஷ் பாடிய, இந்தப் பாடல், காதலனின் உச்சகட்ட யாசக உணர்வாக விளங்கும் ஒப்பற்றதொரு பாடல்.
பொருள்.
உன் வீடு இல்லாத எந்தத் தெருவின் மீதும்
என் கண் கூடப் படாது. (அதில் நுழைய மாட்டேன்)
உன் வீட்டின் வாசற்படிக்கு அருகில் இல்லாத
பாதை எதன் மீதும் நான் கால் பதிக்க மாட்டேன்
வாழ்க்கையில் உள்ளன வசந்தங்கள் அனேகம் - ஏற்றுக்கொள்கிறேன்
எங்கும் பூத்திருக்கின்றன எழில் மலர் மொட்டுகள்
ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எந்தத் தோட்டத்தின் முள் உன் காலைக் குத்துகிறதோ
அந்தத் தோட்டத்தின் மலரை ஒருபோதும் நான்
கொய்ய மாட்டேன்.
(உலகு உன் மீது சுமத்தும்) இந்த சம்பிரதாயம்
இந்த சத்தியம் எல்லாவற்றையும் உடைத்துவிட்டு
ஓடி வா என்னிடம் ஒளிரும் காதல் மேலாடை அணிந்து- (இல்லையென்றால்) நான் இந்த உலகை விட்டு ஓடிவிடுவேன்
எந்த உலகில் உன் நினைவு என்னை வாட்டுகிறதோ
அந்த உலகில் ஒரு நிமிடம்கூட இருக்க மாட்டேன்.
நைனிடால் ஏரியின் அழகைச் சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்ட இப்பாடல் முகேஷின் மிக மென்மையான குரலில் ஒரு காதலனின் கெஞ்சலைக் கண் முன் கொண்டுவருகிறது. இப்பாடல் படமாக்கப்பட்ட அப்பகுதியின் அனைத்து இளம் பெண்களும் ராஜேஷ் கன்னாவின் உடல் மொழியில் மயக்கம் கொண்டு அவரின் தீவிர ரசிகைகள் ஆயினர் என்று அப்போது பேசப்பட்டது. பாடல் ஆசிரியர் ஆனந்த் பக்ஷி எளிய வரிகள் மூலம் இப்பாடலில் காதலின் ஆழத்தை எட்டியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.

டாக்டரைப் பார்க்கப் போகிறீர்களா? - குடும்ப மருத்துவரா, சிறப்பு மருத்துவரா?

டாக்டர் ராதா

முன்னொரு காலத்தில் ‘குடும்ப மருத்துவர்’ என்று ஒருவர் இருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். இன்றைய நாளில் சாதாரண தலைவலிக்குக்கூட சிறப்பு நரம்பு நரம்பியல் நிபுணரைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இப்போது இதய நோய் நிபுணர், சிறுநீரக மருத்துவர், மூட்டு மருத்துவர், நீரிழிவு நோய் நிபுணர், இரைப்பை சிறுகுடல் நிபுணர், முதுமை நோய் மருத்துவர் இன்னபிற சிறப்பு மருத்துவர்கள் எனப் பெருகிவிட்ட நிலையில் குடும்ப மருத்துவர்கள் அருகிவரும் உயிரினங்களாக மாறிவருகிறார்கள். சரி, இப்படிப் பல நிபுணர்கள் இருக்கும் நிலையில், நாம் சிகிச்சை பெறுவதற்கு யாரைத் தேர்ந்தெடுப்பது?

குடும்ப மருத்துவருக்கும் சிறப்பு மருத்துவருக்கும் அப்படி என்ன வித்தியாசம்?
# குடும்ப மருத்துவர்கள் (family doctors/family physicians) அல்லது பொதுநல மருத்துவர்கள் (general practitioners) என்று அழைக்கப்படுபவர்கள் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள். சிலர் கூடுதலாக சில பட்டயங்கள், சான்றிதழ்களையும் பெற்றிருக்கலாம்.

# இவர்கள் பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிலர் தனியார் மருத்துவ மையங்களிலும் பணிபுரிவார்கள்.

# இவர்கள் ஏறக்குறைய எல்லா நோய்களைப் பற்றியும் பொதுவான பயிற்சி பெற்றவர்கள். எனவே, பெரும்பான்மையான நோய்களைப் பற்றி அறிந்தவர்கள். ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட துணை மருத்துவத் துறையிலும் கூடுதல் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.

# எல்லா நோய்களுக்கும் சிறப்பு மருத்துவம் தேவை இல்லை. சாதாரண நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதும் பெரிய நோய்களை அடையாளம் கண்டு சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பதுமே இவர்களுடைய முக்கியப் பணி.

# ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் நீண்ட காலமாக ஒரே பொதுநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருவதால், நாளடைவில் இரு தரப்பினரிடைய வலுவான ஓர் உறவு ஏற்படுகிறது; மருத்துவர் மேல் நம்பிக்கையும் உண்டாகிறது. இந்த பரஸ்பர உறவு மருத்துவ சிகிச்சையில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

# பொதுநல மருத்துவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல, தானாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஒரு பொதுநல மருத்துவரை சில முறை பார்த்து பரிச்சயம் செய்துகொண்ட பின்னரே, அவர் தனக்கு ஏற்புடையவர் தானா என்பது தெரியவரும்.

# சிறப்பு மருத்துவர்கள் தாம் சாந்த துறையில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே, பொதுநல மருத்துவர் ஒருவரின் ஆலோனையின் பேரிலேயே இவர்களை நாடுவது நல்லது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் சிறப்பு மருத்துவர்களிடம் செல்ல பொதுநல மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் அவசியம்.

# தனியார் சிறப்பு மருத்துவர்கள் வாங்கும் கட்டணம், தனியார் பொதுநல மருத்துவர்களைவிட பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

# சிறப்பு மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை அதிகமாக செய்யச் சொல்லுவது உண்டு; சில நேரம் ‘ஒரு ஸ்கேன் செய்துப் பார்க்கலாமா?’ என்று தானாக அவரைக் கேட்கும் நோயாளிகளும் உண்டு!

# நோயின் அறிகுறிகள் தோன்றும்போது முதலில் பொதுநல மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதுவே சிறந்தது. அவரது ஆலோசனையைப் பெற்று, சிறப்பு மருத்துவர் ஒருவரை நாடலாம். காலமும் செலவும் மிஞ்சும்.

# மருத்துவ உலகில், பொதுநல மருத்துவர்கள் வழங்குவது முதல் நிலை மருத்துவப் பராமரிப்பு என்றும், சிறப்பு மருத்துவர்கள் வழங்குவது இரண்டாம் நிலை மருத்துவ பராமரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

# பாகுபாடின்றி அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்குவற்கு முதல் நிலை மருத்துவ பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதுதான் சிறந்தது என்பதே எல்லா நாடுகளும் கடைப்பிடிக்கும் கொள்கையாக இருந்துவருகிறது. மத்திய அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை (2017) இதையே வலியுறுத்துகிறது.

வேண்டாம் வினோத சிகிச்சைகள்

By வாதூலன்  |   Published on : 24th June 2017 02:17 AM  |   
அண்மையில் பிரபல நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஹைதராபாத்தில், ஒரு மையத்தில் குறிப்பிட்ட வகை மீன்களை நிறைய வரவழைத்திருப்பதாகவும், அங்கு ஆஸ்துமா வியாதிக்கு சிகிச்சை பெற பல நோயாளிகள் காத்திருப்பதாகவும் வெளிவந்த செய்திதான் அது. கூடுதல் தகவல் என்னவெனில், தெலங்கானா மாநில அமைச்சர் ஒருவரும் அங்கு வருகை தந்திருக்கிறார் என்பது.
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் கடுமையான மூச்சிரைப்பால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை எடுத்தும் பலனில்லை. தீவிரமான சைவ குடும்பத்தைச் சார்ந்த அவரிடம் கேட்டபோது, "எத்தனையோ மாத்திரைகளை விழுங்குகிறோம், அதிலெல்லாம் என்ன கலந்திருக்குமென்று யார் கண்டார்கள்?' என்று பதில் வந்தது (இன்று, அதே மையத்தில் சைவப் பழக்கமுள்ளவர்களுக்கு வேறு விதமான மாத்திரைகள் தருகிறார்களாம்).
கிட்டத்தட்ட இதேபோன்று, கோவையில் ஒரு சிற்றூரில் காது கேளாதோருக்கு, பல வருட முன் சிகிச்சை அளித்து வந்தார்கள். நிறைய விளம்பரங்கள் அதுபற்றி, வார ஏடுகளில் வரும். கருவி பொருத்தப்பட்டவர்கள் இங்கு வரக் கூடாது' என்ற வாசகம் விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கும்.
தற்போது, அந்தச் சிகிச்சை பற்றி அவ்வளவாக செய்திகளும், விளம்பரங்களும் காணப்படவில்லை. செவித் திறன் குறைவு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுப் பலரும் மூக்குக் கண்ணாடி போல, காதில் கருவி போட்டுக் கொள்வது ஒரு காரணமாக இருக்கலாம்.
மேற்சொன்ன இரண்டு சிகிச்சைகளையும் தூக்கிச் சாப்பிடும்படியான ஒரு செய்தி அண்மையில் ஆங்கில நாளேட்டில் வந்தது. ஆந்திர மாநிலம், சித்தூரில் இருக்கும் அம்மையார் ஒருவர் சிறுநீரகக் கற்களை வெறும் 250 ரூபாய் செலவில் குணப்படுத்துகிறாராம். வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்தால் இரண்டாயிரம் ரூபாயாம்.
ஏதோ சில மந்திரங்களை உச்சரித்த பின், நோயாளியின் உடலைத் தடவிக் கொடுக்கிறாராம். கற்கள் உதிர்ந்து விடுகின்றனவாம். "கற்களை இதுபோல் வெளியேற சாத்தியமே இல்லை' என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தன்னுடைய 12 வயது மகளை அந்த அம்மையார் குணப்படுத்தினதாக ஒருவர் சொல்கிறார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் இதுபற்றி விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார். அம்மையாரின் விந்தையான நிபந்தனை என்னவென்றால், "இங்கு சிகிச்சை பெற்றவர்கள், ஒரு மாதத்துக்கு எக்ஸ்ரே படம் எடுக்கக் கூடாது'.
சில நாள்பட்ட வியாதிகளுக்கு, தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும். மூன்று அல்லது நான்கு வருடமான பிறகு, மேற்சொன்னது மாதிரியான ஏதாவது "விசித்திர' சிகிச்சையை நாடுவார்கள். தற்செயலாக வியாதி குணமாகிவிடும். ஆஸ்துமா, நரம்புக் கோளாறு போன்ற நோய்களுக்கும் இது பொருந்தும்.
இன்று பல நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் புதிய வியாதிகள் இளம் வயதிலேயே பலரையும் பாதிக்கின்றன என்பதையும் மறுக்க இயலாது. அதனால்தானோ என்னவோ, மருத்துவர்களே மாத்திரைச் சீட்டு எழுதித் தரும்போது, வேறு வகை மருந்துகளையும் குறிக்கிறார்கள். எலும்பு, மூட்டு வலிக்கு, ஆயுர்வேதத் தைலத்தையும், அலோபதி மருந்துகளுடன் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
அலோபதி சிகிச்சை முறைக்கும், பிற சிகிச்சைகளுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. அலோபதி மருத்துவம் உலகளாவியது. இந்தியாவில் எங்கு சென்றாலும் அலோபதி மருந்துகள் கடைகளில் கிடைக்கும். ஏன், அயல்நாட்டுக்கே போனாலும், மூலக் கூறின் (ஜெனரிக்) பெயரை வைத்து, மாத்திரைகள் பெறலாம்.
அவர்கள் அளிக்கும் சிகிச்சையில் முழு நிவாரணம் கிடைக்காவிட்டால், வேறு பெரிய நிபுணரைச் சந்திக்கச் சொல்லுகிறார்கள். சில நேரங்களில் மருத்துவர்களுக்குள்ளேயே கலந்து பேசி, இரண்டாவது கருத்து பெற்று நோய்க்கு ஏற்ற மருந்து தருகிறார்கள். தவிரவும், இன்ன கோளாறுதான் என்பதைத் துல்லியமாக அறிய, ஆங்கில மருத்துவத்தில் பற்பல சோதனைகள் இருக்கின்றன.
பிற மருத்துவ முறைகள் குணம் அளித்தாலும், தகுதியான டாக்டர்களும், சிகிச்சை மையங்களும் குறைவு. மேலும், ஒரு மாத்திரையையோ, மூலிகைத் தைலத்தையோ வாங்கக் குறிப்பிட்ட இடத்துக்குதான் செல்ல வேண்டும். அதுபோன்ற இடங்கள் வெகு தொலைவிலிருந்தால் நோயாளிக்கு அலுப்பு ஏற்படக்கூடும்.
ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்குப் பற்பல சிகிச்சை முறைகள் உள்ளன. பலவித முறைகள் இருந்தும்கூட, சிலர் விசித்திரமான சிகிச்சைகளை நாடுவது ஏன்? முதலாவது காரணம் விளம்பரம். பத்து வருடங்களுக்கு முன்பு, தோல் வியாதிக்கும் மலட்டுத் தன்மைக்கும் மட்டுமே விளம்பரங்கள் வரும்.
ஆனால் இன்று? ஓர் உள்ளூர் ஏட்டில், ஆஸ்துமாவிலிருந்து மூட்டு வலி வரை, ரத்த அழுத்தம் உட்பட பல வியாதிகளைப்பற்றி விளம்பரமொன்று வந்தது. இதில் வேடிக்கை என்னவெனில், அரசு வங்கியின் பொது மேலாளர் ஒருவரும், தமிழக அரசு அதிகாரி ஒருவரும் இந்த மருத்துவருக்கு நற்சான்று அளித்திருந்தனர்.
இரண்டாவது காரணம் எக்கச்சக்க செலவு. மருத்துவக் காப்பீடு இருந்தாலும் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்தவுடன் மாத்திரைக்காகத் தொடர் செலவுகள்; மருத்துவருக்கான கட்டணம். ஒரு நரம்பியல் நிபுணர் தன் கட்டணத்தை ரூ.1,200 என்று நிர்ணயித்திருக்கிறார். அதே நிபுணர் ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தால் ரூ.2,000.
ஆனால் அரிதாக கருணையுள்ள மருத்துவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அறிந்த மருத்துவர் ஒருவர், மாதம் ஒரு நாள் ஏழைகளுக்கு ஐந்து ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கிறார். இவருடைய வழக்கமாகப் பெறும் கட்டணம் ஐநூறு ரூபாய்.
இன்று மருந்துச் சீட்டில், மூலக்கூறு பெயரை மட்டும் எழுதினால், மருந்துக் கம்பெனிகள் அதிக லாபத்திற்காக விலையை ஏற்றுவது குறையும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் வினோத சிகிச்சைகளை நம்பி ஏமாறுவது அறிவுடைமையல்ல. கண்களை விற்றுச் சித்திரம் வாங்கலாமா?
NEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்குஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!


தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை.

இந்தியா முழுவதும் 11,38,890 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். இதில் மாணவர்கள், 4,97,043. மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,11,539 பேர். மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221. மாணவிகள், 3,45,313. தேர்வெழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.4,78,546 பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்திருக்கிறது இந்தத் தேர்வு. நீட் தேர்வை எழுதிய 80 சதவீதம் பேர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்கள். 10 சதவீதம் பேர் இந்தியில் எழுதினார்கள். 15,206 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வை எழுதினார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வை எழுதியுள்ளார்கள். ஆங்கிலம், இந்தி தவிர்த்து, குஜராத்தியில் 47,853 மாணவர்களும், பெங்காலியில் 34,417 மாணவர்களும் தேர்வை எழுதினார்கள்.தேர்ச்சி பெற்றுள்ள 6,11,739 பேரில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 14,637 பேர் தான். எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 6,028 பேர். அகில இந்திய அளவில் பஞ்சாபைச் சேர்ந்த நவ்தீப் சிங் முதலிடத்தைப்பிடித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா இரண்டாம் இடத்தையும், மனீஷ் முல்சந்தானி மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். நான்காம் இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த சந்தீப் சதானந்தா பிடித்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த டெரிக் ஜோசப்6-வது இடத்தையும், தெலுங்கானாவைச் சேர்ந்த லக்கீம்ஷெட்டி அர்னாவ் திரிநாத் 12-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். டாப்-25 இடத்துக்குள் தென்னிந்தியாவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள்.

தமிழக மாணவர் ஒருவர்கூட அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Posted by kalviseithi.net




நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: சி.விஜயபாஸ்கர்

By DIN  |   Published on : 25th June 2017 05:02 AM  |   

vijayabasker

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இந்தப் பிரச்னையை பேரவையில் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
துரைமுருகன்: நீட் தேர்வின் முடிவுகள் வந்திருக்கின்றன. முடிவுகளைப் பார்த்தால் தமிழக மாணவர்கள் பலமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது முக்கியமான பிரச்னை என்பதால் அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்): நீட் தேர்வில் பிரச்னையில் மாநிலத்தின் விதிகள் என்னவாக இருக்குமென்று அறிய விரும்புகிறோம்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 4.2 லட்சம் பேரும், 4, 675 பேர் மத்திய பாடத் திட்டத்திலும் தேர்வு எழுதியுள்ளனர்.
மாநிலப் பாடத்திட்டத்தில் எழுதியவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு: இதைக் கருத்தில் கொண்டு கடந்த 22-ஆம் தேதியன்று அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தபடி இப்போது 15 சதவீதம் மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், உள் ஒதுக்கீடாக நம்முடைய மாநில மாணவர்களின் உரிமையை நிலைநாட்டக் கூடிய வகையில் மிகுந்த கவனத்தோடு மாநில பாடத் திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு (திமுக): பிளஸ் 2 மாணவர்கள் பெற்றிருக்கக் கூடிய மதிப்பெண்களின் நிலை என்ன, எந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு அமையும்?
அமைச்சர் விஜயபாஸ்கர்: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். மசோதாக்கள் ஏற்கப்படாத பட்சத்தில் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்துவோம். இருக்கும் அத்தனை இடங்களும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு போய்விடக் கூடாது என்பதற்காக பெரும்பான்மையாக இருக்கக் கூடிய 4.25 லட்சம் மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை நிலைப்படுத்தக்கூடிய வகையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
ஜூலை 17-இல் கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வரும் ஜூலை 17-இல் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு திமுக உறுப்பினர் க.பொன்முடி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்: ஜூலை 16-ஆம் தேதிக்குள் அகில இந்திய மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து விடும். அதன் பிறகு நமது மாநிலத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றார் விஜயபாஸ்கர்.
ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்
ஓய்வூதியம் என்றால் என்ன?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடைய இளமைகாலம் முழுவதும் உடல் பலமாக இருக்கும் போது அரசுக்கும் மக்களுக்கும் இடையே அச்சாணியாக சுழன்று அரசுக்கும் மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம்முழுவதும் முழு உழைப்பை செலுத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் முதுமை அடைந்து நாடி நரம்புகள் சுருங்கிய பின்பு எந்த வேலையும் செய்ய இவர்களதுஉடல் தகுதியற்றது எனும் போது 58 வயதில் பணியிலிருந்து அரசால் ஓய்வுஅளிக்கப்படுகிறது. அவ்வாறு ஓய்வு பெற்றவர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் சமுதாயத்தில் கெளரவமாகவும் வாழ்வதற்கும்
மற்றவர்நகளை நம்பி இருக்காமல் வாழ்வதற்கும், 20 ஆண்டுகளுக்கு
மேல் அரசாங்கத்திற்காக உழைத்த உழைப்பிற்காக அரசால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓர் ஊதியம் வழங்கப்படுகிறது.அந்த ஊதியமே ஓய்வூதியம் எனப்படுகிறது.ஓய்வூதியம் என்பது முதுமை வாழ்க்கையின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. அந்த ஓய்வூதியம் என்பது 2003க்கு பின்னர் அரசு பணியில்சேர்ந்தவர்களுக்கு கேள்வி குறியாகவே உள்ளது.

கேள்வி குறியான ஓய்வூதியம்

அதாவது 1.4.2003க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றோர்
மற்றும் பெறுவோரின் ஓய்வுக்கு பின் உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு ,உடை,மருத்துவம் போன்றவற்றிற்காக முதுமையில் சாலையில் கண்டவர்களிடம் கையேந்தி நிற்றல், யாராவது கொடுப்பாரா ?என எதிர்பார்த்திருத்தல், தள்ளாடும் நிலையில் மருந்துகள் வாங்க காசு இல்லாமல் சாகுதல், பணமில்லாததால் உறவுகளால் வீதியில் தள்ளப்படுதல், ஒரு வேலை சாப்பாட்டிற்காக வேறுவழிஇல்லாமல் ஏரி வேலை செல்லுதல் போன்ற அவலநிலைகளுக்குஉள்ளாகுகின்றனர்.இதற்கு காரணம் தற்போது நடைமுறையிலுள்ள cps என்னும் புதிய பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் தான். இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும்/
பெறுபவர்களுக்கும் ஓய்வூதியம் என்பதே இன்று வரை கிடையாது. Cps பணிபுரியும் ஊழியர்களாகிய நாம் ஓய்வு பெற்ற பின்
ஓய்வூதியம் இல்லாமல் அடிப்படை தேவைகளுக்காக நடுரோட்டில் கையேந்தி நிற்போம் என்பதில் எந்த வித மாற்றமில்லை என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்.

ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்

ஓய்வூதியத்திற்கு நீதித் துறையின் அங்கங்கமான நீதி மன்றத்தாலும், இந்திய
அரசியலமைப்பாலும் ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமையென பல்வேறுவரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இனி காண்போம்.

நீதித் துறையின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்
நமது நாட்டின் நீதித் துறையின் மிக உயர்ந்த அங்கமான உச்ச நீதி மன்றத்தால்
வழங்கப்படும் தீர்ப்புகள் என்பது எழுதப்படாத சட்டமாக கருதப்படுகிறது.அவ்வாறே ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளில் ஓய்வூதியம் என்பதை உரிமையென்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. அவைகளான# ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி 17.12.1982 அன்றுநகரா என்பவர் இந்திய அரசின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பின் படி ஓய்வூதியம் என்பது நன்கொடையோ அல்லது கருணை தொகையோ அல்ல. அது ஓய்வூதியர்களின் மதிப்புமிகு உரிமை என்றும் அரசு ஊழியர்களின்நீண்ட கால மற்றும் திறமையான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

# ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த ஜித்தேந்திர குமார் என்பவர் ஓய்வூதியம்
தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஓய்வூதியம் என்பது ஊழியரின்
உரிமையாகும்.இதனை இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 31 B உறுதி செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்

@ ART-14 சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்.(உரிமைகளை வழங்கும் போது முன்/பின் என்று வேறுபடுத்தி உள்ளது.)

@ ART-31B, சில சட்டங்களையும், ஒழுங்கு விதிமுறைகளையும் செல்லத்தக்கவனவாக்குதல்.

@ ART-41,முதுமை நோய் இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் போது அரசு வழங்க வேண்டிய உதவிகளை செய்து சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கைவாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி என்று வரலாற்று சிறப்புமிக்கதீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

@ ART-148 நகரா வழக்கின் தீர்ப்பில் அரசியல் சட்டம் 309 மற்றும்
148(5)ன்படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட்ட வேர்
ஊன்றி நிலைத்த உரிமையாகும் என்று ஓய்வூதியர்களுக்கு ஒரு உரிமை சாசனம்(Magna carta) வழங்கியுள்ளது.

@ ART-309 ஒரு மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணியின்
வரையறைகள், விதிகள் மற்றும் ஊதியங்கள் போன்றவற்றை மாநில அரசு வரையறை செய்யப்படவேண்டும். மேலும் அவ்வொழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்கள் உயிர்வாழ்வதற்க அந்தந்த மாநில அரசிடமிருந்துஓர் ஊதியம் பெற உரிமை உடையவராவார். இச்சரத்தின் அடிப்படையிலே தமிழக அரசும் தமிழ்நாடு ஓய்வூதியவிதிகளை 1978இல் உருவாக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்குவது நடைமுறையில்உள்ளது.ஆயினும் 01.04.2003க்கு பின் தமிழக அரசில் பணிநியமனம்பெற்றவர்களுக்கு இந்த பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்ததாது.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. 

முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை அரசு எதிர்த்து வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க சட்டம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு, அதை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த சட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதன் காரணமாக தமிழகம் உட்பட நாடுமுழுவதும் நீட் தேர்வுகள் நடந்து, நேற்று முடிவுகளும் வெளியானது. இதில், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள்.

இந்நிலையில், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது மாணவர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவிலான ரேங்கிங் வெளியிடப்படாது என்பதால், மாநில அளவில் யார் முதலிடம் பிடித்தார்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

நீட் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவை மையப்படுத்தி நடந்தது என்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவில் பயின்றவர்களே மருத்துவ பாடத்தைப் பயில முடியும் என்ற சூழல் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பலருக்கு, மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடை தவிர்த்த இடங்களில், 85 சதவிகிதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவிகிதம் இடங்கள் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

ஓரிரு நாளில் விண்ணப்ப வினியோகம் துவங்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு ஆறுதலைத் தரக்கூடும் என நம்பப்படுகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை ஏற்கெனவே குஜராத் மாநிலம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்  மருத்துவ பாடச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு அனுமதி பெற தொடர்ச்சியாக முயற்சிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செல்லாததாகிவிடும். தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது என்பதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், தற்போது மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு அறிவிக்கும்போது அதற்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவ கல்விக்கான சேர்க்கை என்பது இந்த முறை மிகுந்த குழப்பத்துக்குள்ளாகியுள்ளது.
படிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்


 படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஈரோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியி யல் கல்லூரியில் 1989 1993-ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவி யர்களின் 25-ம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் பேசியதாவது:

கடந்த 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள் இந்த கல்லூரியில் சேர்ந்தேன். நான் விரும்பிய கல்லூரி கிடைக் காமல் சாலை மற்றும் போக்கு வரத்து கல்லூரியில் என் விருப்பத்துக்கு மாறாக என் பெற்றோர் சேர்த்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நான் திரும்பி இந்த கல்லூரிக்கு முன்னாள் மாணவனாக வரும் போது, அன்றைய நாட்களில் நான்கண்ட கனவுகளில் சில வற்றை செயல்படுத்திட, இந்த கல்லூரி அடித்தளமிட்டுள்ளதை பெருமிதமாக கருதுகிறேன்.

என்னுடைய தந்தை நாமக்கல் லில் பாரத ஸ்டேட் வங்கியில் எனக்காக கல்விக் கடன் வாங்க சென்றபோது பல்வேறு காரணங் களால் கல்விக் கடன் மறுக்கப்பட் டது. அதனை நினைவில் கொண்டு நான் 2007-ல் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடியை கல்விக் கடனாக மாணவர்களுக்கு வழங்கினேன்.

நான் இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும்போதே குடிமை பணி (சிவில் சர்வீஸ்) தேர்வு எழுத தீர்மானித்தேன். என்னுடன் விடுதியில் தங்கியிருந்த ஒரு சில நண்பர்கள் எனக்கு உறுதுணை யாக இருந்தனர். அதில் சிலர் என்னை அப்போதே ‘ஜில்லா கலெக்டர்’ என்றே அழைப்பர். பின்னாளில் அவை அனைத்தும் நனவானது. இதே நாள் 1995 ஜூன் 23-ல் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி அன்றைய தினம் அதில் நான் இந்திய அளவில் 38-ம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி வெள்ளி விழாவில் 1989-1993ல் பயின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 110 மாணவ, மாணவியர்கள் குடும் பத்தினருடன் கலந்துகொண்டு தங்களது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

Posted by kalviseithi.net
மருத்துவ படிப்பு அரசு அறிவிப்பு: கோர்ட்டுக்கு போகும் மாணவர்கள்!
மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நீட் அரசாணை வெளியீடு குறித்து தமிழக சுகாதாரத் துறை இன்று ஜூன் 24ஆம் தேதி விடுத்துள்ள அறிவிப்பில் கூறுவதாவது, கடந்த மே-7 ஆம் தேதி மத்திய கல்வி வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு முடிவு நேற்று ஜூன்-
23ஆம் தேதி வெளியானது. இந்தியாவில் உள்ள 470 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 65,170 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 25,730 பி.டி.எஸ் இடங்களுக்கும் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வில் 8 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட 11 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இதில், 2,66,221 மாணவர்கள் 3,45,313 மாணவிகள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6,11,539 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்த ஆண்டு நிரப்படவுள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 8ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஜூலை 17-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும். இதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில், தற்போது மருத்துவ படிப்பில் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகித இடங்களை ஒதுக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்துள்ள மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்படும். அதேபோல், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவிகித இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 15 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அகில இந்திய அளவில் என்பதால், தமிழகத்தில் படித்த சி.பி.எஸ்.இ. மாணவர்கள், தாங்கள் தேர்வு எழுதியது தமிழகத்தில் தானே, அப்படியென்றால், தங்களுக்கும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டிலேயே அதாவது 85 சதவிகித இடத்திலேயே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
போரூர் மேம்பாலம் இன்று திறப்பு; ஏழு ஆண்டுகள் இழுபறிக்கு பின் விடிவு

பதிவு செய்த நாள்25ஜூன்
2017
07:01




சென்னை: சென்னை போரூர் மேம்பாலம், ஏழு ஆண்டுகள் இழுத்தடிப்பிற்கு பின், இன்று திறப்பு விழா காண இருக்கிறது.

மவுன்ட் - பூந்தமல்லி சாலையும், ஆற்காடு சாலையும் சந்திக்கும் இடமாக, போரூர் ரவுண்டானா உள்ளது. மேலும், மவுன்ட் - பூந்தமல்லி சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், இப்பகுதியில் போக்குவரத்து அதிகம் காணப்படும். அது மட்டுமல்லாமல், குன்றத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஆற்காடு சாலையை பயன்படுத்தி தான், சென்னை நகருக்குள் செல்கின்றன. இதனால், போரூர் சந்திப்பில், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனால், இந்த நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், 480 மீட்டர் நீளம்; 37.2 மீட்டர் அகலம், இருபுறமும் தலா, 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. போரூர் மேம்பாலம் கட்டுவதற்கு, தி.மு.க., ஆட்சியில், 15 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான பணிகள், 2010ல் துவங்கப்பட்டன.

சுமார் 7 ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பால பணி பல்வேறு பிரச்னைகளுக்கு பின் தற்போது முழவதுமாக தயாராகி இன்று திறப்புவிழா காண இருக்கிறது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சேலத்தில் 200–க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

ஜூன் 25, 2017, 04:30 AM

சேலம்,

சேலத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் அடித்தது. மாலை 6 மணியளவில் வானத்தில் கருமேகம் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறி தெரிந்தது. சிறிது நேரத்தில் காற்றுடன் பலத்த மழை கொட்ட தொடங்கியது. இந்த மழையால் சாலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். சில இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.வீடுகளில் தண்ணீர் புகுந்தது

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் வசதி, சாலை வசதி சரிவர இல்லாததால் மழைநீர் சாக்கடை கால்வாயை விட்டு வெளியே ரோட்டில் கழிவுநீர் கலந்து ஆறுபோல பெருக்கெடுத்தது. அத்துடன் பல இடங்களில் சாக்கடையில் குப்பைகள், பிளாஸ்டிக் தம்ளர்கள் கிடந்ததால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் மழைநீருடன் வெளியேறியது. வாகன ஓட்டிகள் இந்த தண்ணீரில் மெதுவாக சென்றனர்.

சேலம் 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு, கிச்சிப்பாளையம், பெரமனூர் நாராயணபிள்ளை தெரு 20 அடி ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சீத்தாராம் செட்டி ரோடு உள்பட பல்வேறு தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நகரில் 200–க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அதை பொதுமக்கள் பாத்திரங்கள், வாளி மூரம் அகற்றினர். இரவிலும் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையப்பகுதி மழைநீர் வெளியேற வழியின்றி குட்டைபோல தேங்கி நின்றது.
பிறக்க முக்தி தரும் தலம் ‘திருவாரூர்’. இங்கு இறைவன் எந்த காலத்தில் எழுந்தருளினார் என்பது யாரும் அறியாத ரகசியம். அதனால் தான் திருவாரூரை ‘அந்தரகேசபுரம்’ என்கிறார்கள்.

ஜூன் 23, 2017, 06:00 AM

பிறக்க முக்தி தரும் தலம் ‘திருவாரூர்’. இங்கு இறைவன் எந்த காலத்தில் எழுந்தருளினார் என்பது யாரும் அறியாத ரகசியம். அதனால் தான் திருவாரூரை ‘அந்தரகேசபுரம்’ என்கிறார்கள். பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரிய தலமாக திருவாரூர் தியாகராஜர் ஆலயம் திகழ்கிறது.

ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கு இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. அப்போது தனக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு, தேவர்களின் தலைவன் இந்திரன், வீதி விடங்கரை பரிசாக வழங்கினான். இந்திரனிடம் இருந்து பெற்ற வீதி விடங்கர் சிலை திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவரே தியாகராஜர் என்று அழைக்கப்படுகிறார். அந்தரகேசபுரத்து அரசரும் அவர் தான். ரத்தின சிம்மாசனத்தில், வாள்படை வீரர்கள் முன் நிற்க வீற்றிருக்கும் தியாகராஜ பெருமானைப் பார்த்தாலே, அவரை அரசர் என்று போற்றுவதன் பொருள் விளங்கும்.

கொண்டி அம்மன், முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த கோலத்தில் அருள்புரியும் தியாகராஜரின் பாதங்களை, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தரிசிக்க முடியும். ஒன்று பங்குனி உத்திரம், மற்றொன்று மார்கழி திருவாதிரை. மற்ற நாட்களில் தலை பாகத்தைத் தவிர உடல் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மார்கழி திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் வணங்கலாம். தியாகராஜரின் பாதத்தை தரிசிப்பதால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்ற அமைச்சர்

பதிவு செய்த நாள்24ஜூன்
2017
23:08

சாகர்:மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர், தன் தியேட்டரில் வெளியிடப்பட்ட படத்துக்கு, டிக்கெட் வழங்கியதைக் கண்டு, படம் பார்க்க வந்தவர்கள் வியப்படைந்தனர்.

ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சாகர் மாவட்டத்தில் உள்ள கர்ஹகோட்டா கிராமத்தை சேர்ந்த, கோபால் பார்கவ், 64, மாநில உள்ளாட்சி துறை அமைச்சராக உள்ளார். இங்கு, அவருக்கு சொந்தமாக, 'ஸ்ரீ கணேஷ் டாக்கீஸ்' என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர், 1978 முதல் இயங்கி வருகிறது.

இக்கிராமத்தில் ஒரே ஒரு சினிமா தியேட்டர் இருந்தாலும், பொழுதுபோக்கு மற்றும் சினிமா பார்ப்பதற்கு, மக்கள் அதிகம் செலவழிப்பதில்லை என்பதால், டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு.நேற்று முன் தினம், நடிகர் சல்மான் கான் தயாரித்து, கதாநாயகனாகவும், சீன நடிகை ஜூஜூ கதாநாயகியாகவும் நடித்த, டியூப்லைட் என்ற ஹிந்திப் படம் நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. அமைச்சரின் தியேட்டரிலும் இந்தப் படம் திரையிடப்பட்டது.

அப்போது, தியேட்டருக்கு வந்த அமைச்சர், டிக்கெட் கவுன்டரில் அமர்ந்து, வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்தார்.மாநில அமைச்சர் எந்தவித பந்தாவும் இல்லாமல், கவுன்டரில் அமர்ந்து டிக்கெட் விற்றதைக் கண்ட கிராம மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
வேகம்!யோகியின் நடவடிக்கையால்உ.பி.,யில் வளர்ச்சி திட்டங்கள்
உ.பி.,யில், அரசு திட்டங்களின் செயல்பாடு மற்றும் அதன் நிலை குறித்து, மாநில அமைச்சர்களேநேரடியாக கண்காணித்து, அது குறித்த அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். இந்த அறிக்கையின்அடிப்படையில், பணிகளை மேலும் சீர்படுத்த, முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு உள்ளார்.



உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். சட்ட சபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மார்ச்சில், முதல்வர் யோகி தலைமை யிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.ஆட்சி பொறுப்பேற்றது முதலே,மாநிலத்தில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும்,முதல்வர் யோகி, அரசின்திட்டங்கள் யல்படுத்தப்படுவதை, அமைச் சர்கள் நேரடியாக கண்காணித்து, அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநிலத்தில் மொத்தமுள்ள, 75 மாவட்டங்களுக்கும், பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டனர். ஒவ்வொரு அமைச்சருக் கும் தலா, மூன்று மாவட்டங்கள் ஒதுக்கப் பட்டன.'அரசு அறிவித்த திட்டங்கள், அந்த மாவட்டங்களில் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன; வேறு எந்த வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்; திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் நிறை, குறைகள் ஆகியவை குறித்து,

அமைச்சர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டார்.இதையடுத்து, மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, முதல்வர் உட்பட, கேபினட்அமைச்சர்கள், 25 பேரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பா.ஜ., அரசு ஆட்சிபொறுப்பேற்று, மூன்று மாதங்கள் நிறைவடைந் துள்ள நிலையில், மத்திய, மாநில அரசின் திட்டங் களின் நிலை குறித்து கண்காணித்த அமைச்சர்கள், தங்கள் முதற்கட்ட ஆய்வறிக் கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை, முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், எந்தெந்த மாவட்டத்தில், அரசு திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கிறதோ, அங்கு பணிகளை விரைவுபடுத்த, முதல்வர் உத்தரவிடுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது.

சில மாவட்டங்களில், போதிய நிதி இல்லாத காரணத் தாலும், அரசு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அந்த பிரச்னைக்கும், விரைவில் தீர்வு கிடைக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். முதல்வர் யோகியின் அதிரடி நடவடிக்கைகளால், மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், அரசு திட்டங்களை கண்காணிக்கும் அமைச்சர்களிடம், தங்கள் குறைகள் குறித்து, நேரடியாக புகார் அளிக் கின்றனர்.இதன் மூலம், தங்களின் பலபிரச்னை களுக்கு உடனடிதீர்வு கிடைத்துள்ள தாக வும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

நம்பிக்கை அதிகரித்துள்ளது!

உ.பி.,யில், அரசு திட்டங்களின் நிலை குறித்து, மாநில அமைச்சர்கள் நேரடியாக கண்காணிப் பது குறித்து, மாநில மின் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த்

சர்மா கூறியதாவது:மாநிலத்தில், முதல்வர் யோகி தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப் பேற்ற, 50 நாட்களில், 23 ஆயிரம் வீடுகளுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது வரை மின் இணைப்பு பெறாத, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் பணி கள் வேகமாக நடந்து வருகின்றன. 2018 இறுதிக்குள், மாநிலத்தின் அனைத்து பகுதி களிலும் மின் இணைப்பு வழங்கப்படும்.

மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள அமைச்சர்கள், அரசு திட்டங்களை கண்காணித்து, அதன் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளித்துள்ளதால், கிடப்பில் இருக்கும் திட்டங்கள் வேகப்படுத்தப்படும்.

மத்திய அரசின் திட்டங்களை, முந்தைய சமாஜ் வாதி அரசு சிறிதும் செயல்படுத்த வில்லை. மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகை, உரிய வகையில் பயன் படுத்தப்படா மல் வீணடிக்கப்பட்டு உள்ளது. இனி, அது போன்ற நிலை இருக்காது. மக்கள், இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -
விதைப்பதோ 7 கிலோ... கிடைப்பதோ 300 கிலோ விவசாயிகளின் வாழ்வாதாரமாக சீனி அவரைக்காய்

பதிவு செய்த நாள்25ஜூன்
2017
02:01


நரிக்குடி:மழை பொய்த்த நிலையிலும் 7 கிலோ விதையில், மூன்று மாதத்தில் 300 கிலோ விதை கிடைப்பதால் விருதுநகர் மாவட்ட நரிக்குடி பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக சீனி அவரைக்காய் மாறிவருகிறது.

நரிக்குடி பகுதியில் மைலி, மிதலைக்குளம், புளியங்குளம், கோரைக்குளம், மேலேந்தல், நல்லதரை, குருந்தங்குளம், குண்டுகுளம் உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட கிராமங்களில் மோட்டார் பாசனத்தில் சீனி அவரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், குறைந்த தண்ணீர் இருந்தாலே அறுவடையும் செய்து விடலாம் என்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் இதில் ஈடுபடுகின்றனர். இதில் சீனி அவரைக்காயை அப்படியே வியாபாரம் செய்யாமல் அதன் விதையினை மட்டும் தனியாக எடுத்து விற்கின்றனர்.

முதலீடு இல்லா விவசாயம்

கோவில்பட்டி மற்றும் மேட்டுப்பட்டிப்பகுதி வியாபாரிகள் இப்பகுதி விவசாயிகளிடம் சீனிஅவரைக்காய் விதைகளை கொடுக்கின்றனர். விவசாயிகள் இதை விதைத்து அறுவடை செய்து மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்கள் கொடுத்த விதையை எடுத்துக் கொண்டு மீதி விதைக்கு பணம் கொடுக்கின்றனர். ஒரு கிலோ விதை 100 ரூபாய்க்கு விவசாயிகளிடம் விற்று, அதே விலைக்கு மீண்டும் வாங்குகின்றனர். சீனி அவரைக்காய் வளர்ச்சி காலம் 3 மாதங்கள் மட்டுமே. ஒரு ஏக்கருக்கு 7 கிலோ விதை தேவைப்படுகிறது. அறுவடை செய்யும் போது ஏக்கருக்கு 250 லிருந்து 300 கிலோ வரை விதைகள் கிடைக்கும்.
எந்த வித முதலீடும் இல்லாமல் அதிக செலவின்றி உழைத்து இப்பகுதி விவசாயிகள் லாபம் பார்க்கின்றனர்.

களை எடுக்கவே செலவு

விவசாயிகள் கூறுகையில்,' கடந்த ஐந்து ஆண்டுகளாக இதைச் செய்கிறோம். விவசாயம் பொய்த்துப் போன நிலையில் வேறு விவசாயம் இல்லாத நிலையில், இதில் ஓரளவு வருமானம் கிடைக்கிறது. விதைகளை மாசியில்விதைத்து மூன்றே மாதத்தில் அறுவடை செய்து விடுவோம். இதற்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படாது. ஓரளவிற்கு ஈரச் சத்து இருந்தாலே பயிர்கள் தானாக வளர்ந்து விடும். ஒரே ஒரு முறை மட்டும் களை எடுத்தாலே போதுமானது. இதற்கு மட்டுமே செலவு ஏற்படும். அறுவடை செய்த விதைகளை , எந்த வியாபாரியிடம் விதைகள் வாங்கப்பட்டதோ அங்கேயே விற்பனை செய்து விடுவோம்,” என்றனர்.
ஆதார் இணைக்காததால் திருப்பி அனுப்பப்படும் ஓய்வூதியம்

பதிவு செய்த நாள்25ஜூன்
2017
01:54

மதுரை:ஆதார் எண் இணைக்காததாக கூறி வங்கிகள் ஓய்வூதியத்தை கருவூலங்களுக்கு திருப்பி அனுப்புவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வங்கி கணக்குகள் உட்பட எல்லாவற்றுக்கும், ஆதார் எண்ணை பதிவு செய்வதை, மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. ஓய்வூதியர்களுக்கு, மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்க ஏதுவாக, மாவட்ட கருவூலங்கள், சார் நிலை கருவூலங்கள் ஓய்வூதிய பட்டியலை, ஒவ்வொரு மாதமும் 18 முதல் 22ம் தேதிக்குள் வங்கிகளுக்கு அனுப்புகின்றன. ஆனால் ஆதார் எண் இணைக்காதவர்களின் ஓய்வூதியத்தை வங்கிகள், கருவூலங்களுக்கு திருப்பி அனுப்பி விடுவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: 

வங்கிகள், சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு ஓய்வூதியத்தை திருப்பி அனுப்புவதை தவிர்க்க வேண்டும். ஆதார் எண் குறிப்பிடாதவர்கள் விபரங்களை கருவூலங்களில் தெரிவிக்கலாம். வங்கி அறிவிப்பு பலகைகளிலும் ஒட்டலாம். சில ஓய்வூதியர்கள் ஆதார் எடுக்க முடியாத நிலையில் வயது முதிர்ச்சியால் படுத்த படுக்கையாக உள்ளனர். கருவூல நேர்காணலுக்கு செல்ல முடியாமல், ஆன்லைனில் வாழ்வு மற்றும் மருத்துவ சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களது சிரமத்தை கருவூலங்களும் ஏற்று கொண்டுள்ளன. அதுபோல, வங்கி நிர்வாகங்கள் படுத்த படுக்கையாகவுள்ள முதியோர்களுக்கு மாற்று வழிகளை அறிவிக்க வேண்டும், என்றார்.
எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் எப்படி?

சென்னை: ''தமிழக மருத்துவ கல்லுாரிகளில், தமிழகத்திற்கான, 85 சதவீத இடங்களில், 15 சதவீதம், சி.பி.எஸ்.இ., உட்பட மத்திய பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறினர்.அவர்கள் கூறியதாவது:





*தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளுக்கு, இரண்டு வகை யான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அவை முறையே, அரசு மருத்துவ கல்லுாரிகள், அரசு பல் மருத்துவ கல்லுாரி, சுயநிதி மருத்துவ கல் லுாரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல் லுாரி கள், அரசுக்கு ஒப்படைத்துள்ள இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

* தமிழகத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லுா ரிகள் மற்றும் சிதம்பரத்தில் உள்ள, ராஜா முத் தையா மருத்துவ கல்லுாரியையும் சேர்த்து, மொத்தம், 3,050 இடங்கள் உள்ளன. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதம், அதாவது, 456 இடங்கள் ஒதுக்கப்படும்

* மீதம், 2,594 இடங்கள் உள்ளன. தமிழக அரசின்

சட்ட முன்வடிவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் தரா விட்டால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, 85 சதவீத இடங்கள், தமிழக மாணவர்களுக்குஒதுக்கப்படும்

* அதில், 15 சதவீதம், அதாவது, 391 இடங்கள், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., மற்றும் பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு, 'நீட்' மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்படும்

* மீதமுள்ள, 2,203 இடங்கள், மாநில பாடத்திட்டத் தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்

* மாநில அரசு ஒப்புதல் பெற்ற, 10 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசுக்கு, 783 இடங்கள் ஒப்படைக் கப்படும். அதில், 85 சதவீதமான, 664 இடங்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், மீதமுள்ள, 15 சதவீதமான, 119 இடங்கள், சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., மற்றும் பிற பாடத்திட்ட மாணவர் களுக்கும் ஒதுக்கப்படும்

* மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் கள், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், ஜூன், 27 முதல், ஜூலை, 7 வரை வழங்கப்படும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஜூலை, 8 கடைசி நாள்

* மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங் களுக்கு தீர்வு கூற, சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில், தகவல் மையம், இன்று துவக் கப்படும். மையம் துவக்கிய பின், தொடர்பு எண் அறிவிக்கப்படும்

* ஜூலை, 14ல், மருத்துவ மாணவர் சேர்க் கைக்கு, மாநில பாடத்திட்ட மாணவர்களின், தகுதி பட்டியல் வெளியிடப்படும்

* இட ஒதுக்கீட்டில், ஏற்கனவே உள்ள நடை முறை

பின்பற்றப்படும். அதன் முழு விபரம், விரைவில்அறிவிக்கப்படும்

* அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு விண்ணப் பிக்கும் மாணவர்கள், மாநில கவுன்சிலிங் கிற்கும் விண்ணப்பிக்கலாம்

* சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கும், மாநில மருத்துவ கல்வி இயக்குனரகமே, கவுன்சிலிங் நடத்தும்

* நிகர்நிலை பல்கலை மாணவர் சேர்க்கைக் கான கவுன்சிலிங், மத்திய சுகாதாரப் பணி இயக்குனரகம் மூலம் நடைபெறும்

* மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசா ணையை, அனைவரும் ஏற்றுக் கொள்வர். இதற்கு சட்ட பாதுகாப்பு வழங்க, உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத் திட்ட மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டே, இம்முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Saturday, June 24, 2017

கலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண விவரங்களை வெளியிடுவதுடன், அதைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவர்களிடம் பெறுவது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான "நீட்' தகுதித் தேர்வு முடிவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, தாமதமாகி வந்த இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்பை (எம்.பி.பி.எஸ்.) வழங்கும் 34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அவசர உத்தரவு ஒன்றை யுஜிசி பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு 34 நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு, சுகாதாரப் பணிகளுக்கான இயக்குநரகம் (டி.ஜி.ஹெச்.எஸ்.) சார்பில் நடத்தப்படும். இதில் மொழிச் சிறுபான்மை மற்றும் மதச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் சேர்த்துக் கொள்ளப்படும்.

மாநில ஒதுக்கீட்டுக்கு தனி கலந்தாய்வு: இதேபோல் அரசுக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வு மாநில அரசு சார்பில் நடத்தப்படும். இந்த இரண்டு கட்ட கலந்தாய்வின்போதும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண விவரத்தை மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், அந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவரிடம் கலந்தாய்வு அதிகாரிகள் பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கோவை அம்ரிதா விஷ்வ வித்யபீடம், சென்னை சேலையூர் பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதெமி, சென்னை எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை மீனாட்சி உயர்கல்வி ஆராய்ச்சி அகாதெமி, சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகிய 9 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பு வழங்கப்படுவதாக யுஜிசி பட்டியலிட்டுள்ளது.

Our education system keeps India away from Indians: Gurumurthy
By Express News Service | Published: 23rd June 2017 09:05 AM |




Political commentator and economist S Gurumurthy delivering an oration on ‘Economic Model Suited to India’ during the KIT Thomas Memorial Oration event at Sishya School in Adyar on Thursday | Sunish P Surendran

CHENNAI: The Indian education system is tuned to create employees, not entrepreneurs, said political commentator and economist, S Gurumurthy while delivering the KIT Thomas Memorial Lecture at Sishya School on Thursday.

In the lecture titled “Economic Model Suited to India,” Gurumurthy emphasised the need for a serious relook at what is taught to children.

“Education and enterprise are two different things,” said Gurumurthy. “You don’t need the former to be an entrepreneur. Our country is full of entrepreneurs and this entrepreneurial adventurism is what is required. Without it, there can be no development.”

He said this spark of entrepreneurship can be ignited by introducing competition within an identity group. Gurumoorthy went on to illustrate this point by talking of different communities in the country that may not have high educational qualifications but have created an environment for their communities to prosper.
Gurumurthy also elaborated on why Western theories of economy and society do not hold good in the Indian context.

“There is an absence of India in Indian discourse,” said Gurumurthy. “In no economic textbook will you find the word, ‘family’ which is so central to Indian society. Ours is not a contract-based society. It is a relationship-based society where concepts like ‘individualism,’ which are fundamental to economic theory, are missing. So it cannot be applied here.”

The speaker spoke of the need for people to realise that education should not be reduced to schooling. And that learning must not stop with exams and studying from textbooks.

"Our education system is so poor in making you understand what India is,” he said. “It has kept India away from Indians. The problem today is that we have people who have very little knowledge of India in positions of power. Unless you travel and familiarise yourself with the people of this country, you will not know what India is,” he added
AICTE office to move to own premises

By Express News Service | Published: 24th June 2017 01:50 AM |


TIRUCHY: The State government has allotted land at Saidapet in Chennai to set up the regional office of All India Council for Technical Education (AICTE) and the process of acquiring land would begin in a week, said Alok Prakash Mittal, AICTE member-secretary, on Friday.

He was in the city on the sidelines of a conclave on ‘Creating Competent Engineers for Make In India’. The meet was held to improve quality of technical education in all the engineering colleges. Speaking to reporters, Mittal said the AICTE’s regional office in Chennai has been functioning from a rented premises for the past 30 years.

“Within a week or so, we will get the allocated land from the government, which will enable us to carry out more developmental works,” he said.

NEWS TODAY 23.12.2025