Saturday, September 16, 2017

உலகிலேயே இந்தியாவில் தான் விடுமுறை தினங்கள் அதிகம்!


By DIN  |   Published on : 14th September 2017 01:55 PM  | 
India_Holiday_Holi_1
Ads by Kiosked

உலக அளவில், இந்தியாவில்தான், ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் பொது விடுமுறை விடப்படுகின்றது என்கிறது ஒரு ஆன் லைன் பயண வலைதளம். இந்த ஆய்வு விபரங்கள் :
ஐரோப்பாவில், சுவீடன் மற்றும் லிதுவேனியா நாடுகள், ஆண்டுக்கு, தலா, 15 நாட்கள் பொதுவிடுமுறை அளிக்கின்றன. லிதுவேனியா, கூடுதலாக, ஊதியத்துடன், 28 நாட்கள் விடுமுறை வழங்குகிறது. 
செகஸ்லோவேக்கியா 14 நாட்களும், ஆஸ்திரியா, பெல்ஜியம், நார்வேயில் தலா, 13 நாட்களும், ஃபின்லாந்து, ரஷ்யாவில் தலா, 12 நாட்களும் பொது விடுமுறை அமலில் உள்ளன. ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகள், தலா எட்டு நாட்கள் விடுமுறை வழங்குகின்றன. 
ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தாண்டு, 11 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, மெக்சிகோவில் தான் மிகக் குறைவாக, அதாவது ஏழு நாட்கள் பொது விடுமுறை விடப்படுகிறது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், பொது விடுமுறையை பொறுத்தவரை, அடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ் (18), சீனா (17), ஹாங்காங் (17), தாய்லாந்து (16), மலேசியா (15), வியட்னாம் (15), இந்தோனேஷியா (14), தைவான் (13), தென் கொரியா (13), சிங்கப்பூர் (11), ஆஸ்திரேலியா (10), நியூசிலாந்து (10) ஆகிய நாடுகள் உள்ளன. 
இந்தியாவில் பண்டிகை நாட்கள் அதிகம் இருப்பதால் ஆண்டுக்கு 21 நாட்கள் பொது விடுமுறை விடப்படுகின்றனது. இந்நிலையில் உலகில் அதிக விடுமுறையை கொண்டவர்கள் நாம் என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே?

அநீதிக்கு துணை போகலாமா?


By டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்  |   Published on : 15th September 2017 01:21 AM 
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது.
நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சில கட்சியினர் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது. தனியார் கல்லூரிகளை அதிக அளவில் நடத்தும் தலைவர்களின் கோரிக்கை இதில் அடங்கியுள்ளது. நீட்டை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு துணைபோவதாகும்.
தமிழக அரசின் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு வேண்டும். தமிழக அரசின் உயர்கல்வி இடங்கள் எதற்கும் மத்திய அரசு தனது நுழைவுத் தேர்வை திணிக்கக் கூடாது. மாநில அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுதான் நடத்த வேண்டும்.இதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்பதுதான் சரியான கோரிக்கையாகும்.
ஆனால், இதைவிடுத்து நீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஏதும் அறியாத மாணவர்களும், இளைஞர்களும் இக்கோரிக்கைக்கு இரையாகின்றனர். இது வருத்தமளிக்கிறது.
மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரான நீட்டிலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு வேண்டும்.அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நீட்டே வேண்டாம் என்பது சரியல்ல.
ஏனெனில், இந்தியாவில் 63,000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன. 462 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இவற்றில் சரிபாதிக்கும் மேல், தனியாரிடம் உள்ளன. இவை, மாணவர் சேர்க்கையில் மிகப் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. இந்நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி வந்தன. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இம் முறைகேடுகளுக்கு முடிவு கட்ட முடியும்.
நாடு முழுவதும் உள்ள அரசு சாரா மருத்துவக் கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தின. அகில இந்தியத் தொகுப்பிற்கும், ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதனால், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், 50-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயநிலை இருந்தது. நீட் இதற்கு முடிவு கட்டியுள்ளது. இது வரவேற்புக்குரியது.
நீட், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் நிலவி வந்த பேக்கேஜ் முறையை ஒழித்துள்ளது. அதாவது, ரூ.2 கோடி முதல் 4 கோடி வரை முன் கட்டணமாக செலுத்தி இளநிலை முதல் உயர் சிறப்பு மருத்துவம் வரை படித்துவிட்டு வெளியில் வரும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இதுவும் வரவேற்புக்குரியது.
மத்திய அரசின் நிறுவனங்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள்,தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு , நுழைவுத் தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்திட முடியாது.
ஏனெனில் மேற்கண்ட நிறுவனங்களில் அனைத்து மாநிலத்தவரும், வெவ்வேறு கல்வி வாரியங்களில் படித்தவரும் சேர முடியும். மத்திய அரசு இந்த இடங்களுக்காக, ஒரு நுழைவுத் தேர்வை நடத்தியே தீரவேண்டும்.
இந்த நீட் தேர்வில் பல குறைபாடுகள் உள்ளன.அவை களையப்பட வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்வு இப்பொழுது ஒரு தகுதி காண் தேர்வாகவும் (N​a‌t‌i‌o‌n​a‌l E‌l‌i‌g‌i​b‌i‌l‌i‌t‌y c‌u‌m E‌n‌t‌r​a‌n​c‌e T‌e‌s‌t) உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். அதை ஒரு பொது நுழைவுத் தேர்வாக (C‌o‌m‌m‌o‌n E‌n‌t‌r​a‌n​c‌e T‌e‌s‌t) மட்டுமே நடத்த வேண்டும்.
எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களையும் நீட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
இத்தேர்வை மத்திய தேர்வாணையம் மூலம் நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் இத்தேர்வுகளை நடத்த அனுமதிக்கக்கூடாது.
நீட் நுழைவுத்தேர்வுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும். தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு அரசே உதவி செய்ய வேண்டும்.
= அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசே நுழைவுத் தேர்வை நடத்துவதோடு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
= அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் நிரம்பிய பிறகே அரசு சாரா மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
= அரசு சாரா மருத்துவக் கல்லூரிகள் , எந்தக் காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்திட அனுமதிக்கக் கூடாது.
= நிகர் நிலை மருத்துவ இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.
= ஆண்டு குடும்ப வருமானம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள் அரசு சாரா கல்லூரிகளில் பயின்றால் ,அவர்களது கட்டணம் முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்.
= நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு 50 விழுக்காடு இடங்களை வழங்கிட வேண்டும்.
= டிப்ளமோ மருத்துவப் படிப்புகளில் தொலைதூர மற்றும் கடினமான (R‌e‌m‌o‌t‌e a‌n‌d D‌i‌f‌f‌i​c‌u‌l‌t)) பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுபோல் கிராமப்புற, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அகில இந்திய தொகுப்பு இடங்களிலும் 50 விழுக்காட்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
= தொலைதூர மற்றும் கடினமான (R‌e‌m‌o‌t‌e a‌n‌d D‌i‌f‌f‌i​c‌u‌l‌t) பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதலாக 30 விழுக்காடு வரை மதிப்பெண்கள் வழங்கிட, இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது.
அதுபோல், கிராமப்புற, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்க திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போன்றவற்றில் இம்மாணவர்கள் அதிக இடங்களைப் பெற முடியும்.
= முதுநிலை மருத்துவக் கல்வியிலும், உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட , இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும்.
இவற்றை மத்திய அரசு செய்தால், மாணவர் சேர்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்படும். ஏழை எளிய மாணவர்களுக்கும் அரசு மற்றும் அரசுசாரா மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கும்.
கல்வித்தரத்தையும், பாடத்திட்டத்தையும் மாநில அரசு மேம்படுத்த வேண்டும். வட்டாரந்தோறும் தங்கும் வசதியுடன் கூடிய இலவச பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சியை வழங்க வேண்டும்.
பயிற்சி முறைகளில் மாற்றம் கொண்டுவருதல், ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்குதல் வேண்டும். இவற்றை செய்வதின் மூலம் தமிழக மாணவர்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் சேர முடியும். வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை, ஓரிரு மதிப்பெண்கள் கட் ஆஃப்பில் குறைந்தால் கூட, அடுத்த ஒரு வாய்ப்பையே மறுத்துவிடுகிறது. இது பிளஸ் 2 தேர்வின் போது மாணவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இம்முறை கை
விடப்படவேண்டும். மாநில அரசே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நுழைவுத் தேர்வை நடத்திட வேண்டும்.
மத்திய - மாநில அரசுகள், மருத்துவக் கல்லூரிகள் உட்பட, பல்வேறு படிப்புகளுக்கான ,உயர் கல்வி நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கிட வேண்டும்.
இவற்றை எல்லாம் முன்னிறுத்திப் போராடாமல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென முழங்குவது, தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களின் அநீதிக்கு துணைபோவதாகாதா?

எல்லாரும் விளையாடுவோம்


By அருணன் கபிலன்  |   Published on : 15th September 2017 01:22 AM  | 
உலகத்தில் ஓட்டம் என்பதே இயக்கத்தைக் குறிப்பதாகும். இரத்தநடை என்று யாரும் குறிப்பிடுவதில்லை. இரத்த ஓட்டம் என்பதுதான் வழக்கு. அதுபோலவே நீரோட்டம் தொடங்கி எண்ணவோட்டம் வரை நீள்கிறது ஓட்டம்.
கிராமப்புறங்களில் ஏதோ வண்டி ஓடுது என்று கூறுவது வாழ்வின் இயக்கத்தைப் பற்றித்தான் என்பதை எல்லாரும் அறிவார். கையில் ஓட்டம் இல்லை என்பது பொருளாதாரத்தைக் குறிக்கும் அதே வழக்குத்தான். ஆக மொத்தம் வாழ்வியலின் இயக்கமே ஓட்டம்தான்.
இன்றைய ஓட்டம் பெரும்பாலும் உட்கார்ந்த படியேதான் இருக்கிறது. விளையாட்டுக்குக் கூட யாரும் ஓடி விளையாடுவதைக் காணோம். ஓட்டத்தின் ஊற்றுக்கண்ணே விளையாட்டுத்தான். அது இன்றைக்கு முடங்கிப் போய்க் கிடக்கிறது.
மைதானங்களிலும், வயல் வரப்புகளிலும் ஓடி விளையாடுகிற சிறுவர்களைக் கூடக் காண முடிவதில்லை.
அதனால் கைகளில் செல்லிடப் பேசியை வைத்துக் கொண்டோ அல்லது மடியில் மடிக்கணியைச் சுமந்து கொண்டோ ஏதோ ஓர் உருவத்தை ஓட வைத்துக் கொண்டிருக்கிற வேடிக்கையை எல்லா இடங்களிலும் காண முடிகிறது.
ஓடுதலும் குதித்தலும் தாண்டுதலும் மரமேறுதலும் நீந்துதலும் ஆகிய பல விளையாட்டுகள் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகின்றன.
அவை வெறும் விளையாட்டல்ல, அவற்றுக்குப் பின்னால் கதைகளும் பாடல்களும் உடற்கூற்று நுட்பங்களும் இயற்கையியலோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
நாந்தான் வீரன்டா நல்லமுத்து பேரன்டா வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரன்டா தங்கச் சிலம்பெடுத்துத் தாலிகட்ட வாரன்டா சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு என்ற பாடலோடு குறிப்பிட்ட கோடுகளுக்குள் எதிராளியைத் தொட்டு விட்டு வருவதும் தன்னைத் தொட வருகிற எதிராளியை மடக்கிச் சாமர்த்தியமாய்த் தரை சாய்ப்பதும் உடல் மற்றும் உளத்திற்கு உவகை ஊட்டும் அற்புதமான விளையாட்டல்லவா?
ஒத்தையா ரெட்டையா என்னும் விளையாட்டு- பருவ காலங்களில் எங்கும் பரவிக் கிடக்கும் புளிய முத்து(விதை)களை ஒன்று சேர்த்து ஆடும் ஆட்டம். கணக்கீட்டிற்கு உகந்த அருமையான விளையாட்டு.
கைப்பிடிக்குள் இருக்கின்ற முத்துகள் ஒற்றை இலக்கமா, இரட்டை இலக்கமா என்று அனுமானித்துச் சொல்லுகிற விளையாட்டு.
"ஒத்தையா ரெட்டையான்னச் சொல்லு முத்தையா தப்பா இருந்தா தரணும் ரெட்டிப்பு சரியா இருந்தா நாந்தாரேன் ரெட்டிப்பு' என்று சொல்லிக் கொண்டே மூடிய கைகளுக்குள் இருக்கிற முத்தைக் காட்டுவோரிடம் ஒத்தை என்றோ ரெட்டை என்றோ சொன்னால் விடை பின்னால் கணக்கிடப்பட்டு முத்துகள் வெற்றி பெற்றவருக்கு இரட்டிப்பாய் வந்து சேரும்.
கணக்கு விளையாட்டு இது. ஆழ்மனப் பயிற்சிக்கு வித்திடுகிற விளையாட்டு.
பளிங்குகளால் ஆன குண்டுகளைக் கொண்டு விரல்களுக்கும் கண்களுக்கும் ஒருசேர விசைதந்து ஆடும் ஆட்டம் கோலி எனப்படும் குண்டு விளையாட்டு.
இடது கைக் கட்டை விரலை நிலத்தில் அழுந்தப் பதித்து, அதே கையின் நடுவிரலின் நுனியில் கோலியைப் பொருத்திக் கொண்டு வலது கையின் நடுவிரலாலும் துணைப்பகுதிகளைக் கொண்டும் குறி வைத்துத் தூரத்தில் இருக்கிற மற்றொரு குண்டை அடிக்கிற விளையாட்டு.
"அடிக்கிற குண்டுல அம்பாரி செதறும் விடுக்கிற விசையில வெம்பாறை நொறுங்கும் என் விரலு வில்லாக கோலி அம்பாக குறி பாத்து அடிப்பேன் உங்கோலி பொடிப்பேன்' என்று பாடிக் கொண்டே ஆடும் ஆட்டம்.
எல்லாருக்கும் பிடித்ததான கண்ணாம்பூச்சி என்னும் கண்பொத்தி விளையாட்டு கண்களுக்கு மட்டுமல்ல உடலில் இருக்கும் காந்தப் புலத்துக்கே நல்ல பலனைத் தரும் விளையாட்டு.
எந்தத் திசையில் நிற்கிறோம் என்பதை மனத்தாலே ஊகித்துக் கொண்டு நகர்ந்து தன்னைப் பழிப்புக் காட்டுகிற எதிராளியைத் துரத்திப் பிடிக்கிற விளையாட்டு.
"கண்ணு ரெண்டும் கட்டிக்கிட்டு, கையை மட்டும் நீட்டிக்கிட்டு காத்துக் குதிரையேறி களவாணியப் பிடிக்கப் போறேன் பாத்து இருந்துக்கோ பதுங்கி இருந்துக்கோ தொட்டாப் போதும் தோட்டாத் தேவையில்லை சுட்ட மாதிரியே சுருண்டு விழுந்திரணும்' என்று சொல்லிக் கொண்டே துரத்தி ஓடி விளையாடுகிற விளையாட்டு இந்த ஆட்டம். ஞான திருஷ்டிக்கு உரிய நல்ல ஆட்டம் இது.
சிறுதேர் உருட்டி விளையாடுவதும் சங்க கால விளையாட்டுத்தான். அது இன்றைக்குக் கிராமப்புறங்களில் நொங்கு வண்டி, டயர் வண்டி என்ற பெயர்களில் மறைந்து கொண்டு வருகிறது. ஓட்டத்துக்கும் நுட்ப ஒழுங்குக்கும் கைவினைக்கும் எடுத்துக்காட்டு இந்த விளையாட்டு.
பன நுங்கினை உறிஞ்சிக் குடித்தபின் அதனை நன்றாகச் செதுக்கி வாகனங்களின் அச்சினைப் போல டயராகச் செய்து இடையில் ஒரு கழியால் இணைப்புக் கொடுத்து கவட்டை என்னும் பெரியகழியால் ஸ்டியரிங் செய்து கொண்டு ஊர்முழுக்க வலம் வருகிற அந்த விளையாட்டு நடையும் ஓட்டமுமாய் இருக்கும்.
மேற்சொன்ன எல்லா விளையாட்டுகளுமே ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டவைதான். சிறுவர்களுக்குத் தரப்பட்ட தண்டனை கூட விளையாட்டை அடிப்படையாகக் கொண்டவைதான். தோப்புக்கரணம், முழங்காலிடல், கொக்குப் பிடித்தல், மைதானத்தைச் சுற்றி வருதல் இவையெல்லாம் தண்டனையா? உடற்பயிற்சியல்லவா?
இவை ஏதோ சிறுவர்களுக்கானது என்றில்லை. விளையாட்டுகள் வாழ்க்கையைப் போலவே விதியை அடிப்படையாகக் கொண்டவை. அவை வாழ்க்கையைச் சிறுவயதிலிருந்தே தெளிவாகக் கற்றுத் தருகின்றன. பாரதியார் ஓடி விளையாடு என்று சொன்னது பாப்பாக்களுக்கு மட்டுமில்லை; எல்லா வயதினருமே ஓடி விளையாட வேண்டும்.

ஆடம்பரம் தவிர்ப்போம்


By இரா. இராஜாராம்  |   Published on : 16th September 2017 03:22 AM  |     
ஆடம்பரத்திற்கு அளவுகோல் உண்டா என்றால் இல்லை என்று உறுதியாக கூறிவிடலாம். ஆடம்பரத்தின் மூலம் அமைதியும் ஆனந்தமும் பெருகிடுமா, அதுவும் இல்லை. மாறாக, அடங்கா ஆசையும் ஆர்ப்பரிப்பும் தன் முனைப்புமே வளர்ந்திடும்.
"மனநிறைவு என்பது இயற்கையிலேயே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை' என்கிறார் சாக்ரடீஸ்.
நாம் போற்றிப்புகழும் எத்தனையோ அருளாளர்களும் அறிஞர்களும் சிறந்த தலைவர்களும் வசதி வாய்ப்புகள் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை முறையே மேற்கொண்டு நிறைவு கண்டனர்.
நம்மில் பலர் வசதி வாய்ப்புகள் வந்த வுடன் தங்களின் செல்வாக்கைப் பறைசாற்றும் விதமாக வீட்டில் தேவைக்கு மிகுதியான ஆடம்பரப் பொருட்கள், விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், வாகனங்கள் என வாங்கிக் குவிப்பதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது உறவினர்களும் நண்பர்களும் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் பகட்டாக நடத்துவதும் வகைவகையான உணவுகளைத் தயாரித்துப் பரிமாறுவதும் அதில் ஒரு பகுதி இலையிலேயே உண்ணாமல் வீணாக்கப்படுவதும் அதிகரித்து வரும் ஆடம்பரக் கலாசாரமாகிவிட்டது.
பல்லாயிரம் ரூபாய் பெருமதிப்புள்ள பட்டாசுகளை மண்டபத்திற்கு முன்பாகச் சாலையில் வைத்து வெடிக்கச் செய்வதும் அதனால் அங்கு நச்சுப் புகைமண்டலம் சேர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களுக்கும் சாலையில் செல்வோருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுவதும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாவதும் சரியா?
நம் வீட்டு நிகழ்ச்சிக்கோ விருந்துக்கோ வரும் விருந்தினர்களைப் பாரபட்சமின்றி மனமுவந்து உபசரித்து உவகை கொள்வதுதானே சிறந்த விருந்தோம்பல் பண்பு.
அதனைவிடுத்து ஆடம்பர உடை உடுத்தி, அளவில்லா ஆபரணங்கள் அணிந்து, சொகுசு காரில் வருபவர்களை ஒருவிதமாகவும் எளிமையான தோற்றத்துடன் வரும் விருந்தினர்களைத் துச்சமாக நினைத்து அவர்களை வேறுவிதமாகவும் நடத்துவதைப் பார்க்கும்போது வெற்றுப் பகட்டுக்கும் புறத்தோற்றத்திற்குமே மதிப்பளிப்பதாக ஆகிவிடாதா?
வசதி படைத்தோர் நடத்திடும் ஆடம்பர நிகழ்ச்சிகளைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் கடனை வாங்கியாவது தம் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளையும் ஆடம்பரமாக நடத்திட வேண்டும் என்று நடத்திப் பின்னர் கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் வருந்தியவர்கள் பலர்.
வீட்டில் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஆடம்பரம் எது, அவசியம் எது என்பதை நன்கு உணர்த்திட வேண்டும். குழந்தைகள் விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த முயல்வது அவர்கள் பின்னாளில் பிடிவாதக்காரர்களாகவும், ஊதாரிகளாகவும் உருவாகிட வழிவகுத்துவிடும்.
குடும்ப நிலவரத்தை குழந்தைகள் உணரச் செய்வதும், தாய் - தந்தையர் தாம் பொருள் ஈட்ட படும் பிரயத்தனங்களை அவர்கள் அறியச் செய்திடவும் வேண்டும்.
நற்பண்புகளான எளிமை, இரக்கம், அன்பு, அடக்கம் போன்றவற்றை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றச் செய்திடல் பெற்றோரின் கடமையாகும். அதுவே பின்னாளில் அவர்கள் வாழ்விலும் ஏற்றம் தரும் நற்பண்புகளாகப் பரிணமிக்கும்.
குடும்பத்தில் ஆடம்பரச் செலவுகளும், அதிகத் தேவைகளையும் வளர்த்துக் கொண்டால் குடும்பத் தலைவன் தகாத முறையில் பொருள் தேடிக்கொண்டு வருவதற்கு வழிகுத்துவிடும்.
முறையற்ற வகையில் தேடும் செல்வம் தகாத நண்பர்களின் சேர்க்கைக்கும் வேண்டாத பழக்கங்களுக்கும் அடிமையாவதற்குக்கூட காரணமாகிவிடும்.
வருவாய் அதிகமாக வருகிறது என்பதற்காகத் தேவைக்கு மிகுதியான ஆடம்பர உடைகள், பொருட்களை வீட்டில் வாங்கிக் குவிப்பது என்பது வீண் செலவு மட்டுமின்றி அதனைக் கையாள்வதும் பாதுகாப்பதுமே பெரும் சுமையாகிவிடும்.
ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால் பணம் மீதமாகித் தக்க சமயத்தில் அது பயன்படும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல் வழிக்காட்டியாய் இருக்க வேண்டும்.
படிக்கின்றபோதே கைபேசியும், இரு சக்கர வாகனம் மற்றும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் தேவையின்றிச் சுற்றிடவும், கைபேசியே கதி என்று பொன்னான நேரத்தை வீணாக்கிடவும் படிப்பில் கவனமின்றி ஒழுங்கீனம் வளர்வதற்கும் வாய்ப்பாகிவிடும்.
நம் முன்னோர்களால் எளிமையாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலும், அமைதியாக நடைபெற வேண்டிய இறுதிச் சடங்குகளிலும் ஆடம்பரச் செலவினங்களும் ஆர்ப்பரிப்புகளும் அதிகரித்துவிட்டனவே, இதனை நாகரிக வளர்ச்சி என ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஒருவன் எப்படிப் பணம் ஈட்டுகிறான் என்பதைவிட எப்படிச் செலவிடுகிறான் என்பதை வைத்தே அவன் எத்தகையவன் என்பதைத் தீர்மானித்து விடலாம். குறைவான வருவாய் உள்ளோர் அதற்குள் தங்கள் செலவினங்ளைத் திட்டமிடலாம். அதிக வருவாய் பெறுவோர் ஏழை, எளியவர்களுக்காக எத்தனையோ வகையான நலத் திட்டங்களுக்கு உதவிடலாம்.
இலவச மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏற்படுத்திச் செலவுகள் செய்திடலாம். தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைத் தரலாம். ஊனமுற்றோருக்கு ஏற்ற தொழிற்கூடங்கள் அமைத்து உதவலாம்.
ஆடம்பரப் பகட்டு வாழ்க்கைக்காக அனாவசியமாகச் செலவிடுவதைத் தவிர்த்துத் தனது செல்வத்தால் அறச் செயல்கள் பல செய்து நிறைவு காண்பதே செல்வம் பெற்றதன் பயனாகும்.

    வெட்கித் தலைகுனிவோம்!


    By ஆசிரியர்  |   Published on : 14th September 2017 01:26 AM  |
    ஒருபுறம் உலகக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இந்தியர்கள் பலர். இன்னொருபுறம் வறுமையின் பிடியில் சிக்கி, இருக்க இடமில்லாமல் தெருவோரங்களில் அகதிகளாய் லட்சக்கணக்கானோர். ஒருபுறம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். இன்னொருபுறம் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அப்படியானால், இந்தியாவின் வளர்ச்சி என்பது நிஜமா அல்லது தோற்றமா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
    எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் மனித மலத்தை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது கிடையாது. பொலிவுறு நகரங்கள் குறித்தும், தூய்மை இந்தியா குறித்தும் நாம் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவின் பல பாகங்களில் மலம் அள்ளும் பணியில் இன்னும் பலர் ஈடுபடுகின்றனர் என்கிற வெட்கத்துக்குரிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.
    மனித மலம் அள்ளும் தொழிலாளர்களை நாம் இன்னும் முழுமையாக அகற்றிவிடவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, குறைந்தது 1,82,505 பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 7,40,078 வீடுகளில் இன்னும்கூட மனிதர்கள் மலம் அள்ளும் விதத்திலான 'உலர் கழிப்பறை' கழிப்பறைகள்தான் காணப்படுகின்றன. 1993-இல் உலர் கழிப்பறைகளில் மலத்தை மனிதர்கள் சுத்தம் செய்யும் வழக்கத்துக்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றப்பட்டும்கூட, இந்த அநாகரிகத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை. 
    1993-இல் இயற்றப்பட்ட சட்டம், 2013-இல் சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் பழக்கத்துக்கும் தடை பிறப்பிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும்கூட பல மாநிலங்கள் இந்தச் சட்டத்தை பின்பற்றுவதில்லை என்பதற்கு வன்மையான கண்டனத்தை மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்திருக்கிறார். 
    இதுகுறித்து திடீர் விழிப்புணர்வு வருவதற்கு, கடந்த மாதம் தில்லியில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் விஷவாயு தாக்கி மரணப்பட்டதுதான் காரணம். ஊராட்சி, நகராட்சி அமைப்புகளின் அக்கறையின்மையும் சமுதாயத்தில் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும் சமூக வழிமுறைகளும் இதுபோன்ற மரணங்களுக்கு வழிகோலுகின்றன. மனிதாபிமானமற்ற முறையில் சக மனிதனை நடத்துகிறோம் என்கிற குற்ற உணர்வே இல்லாமல் நாம் இருப்பதன் அடையாளம் இது என்றும் கூற வேண்டும்.
    ஊராட்சி, நகராட்சி அமைப்புகள் சாக்கடை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை முறையாக அடையாளம் காணவில்லை என்பதும், சாக்கடைத் துப்புரவுப் பணியின்போது இறந்தவர்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பதும், மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து முனைப்பு காட்டாமல் இருப்பதால்தான் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 22 மாநிலங்கள் மனித மலம் அள்ளுபவர்கள், சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்கள் குறித்த எல்லா தகவல்களையும் மறைத்துவிட்டிருக்கின்றன. அதனால் அந்தத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இழப்பீடு உதவி தரவோ, வேறு உதவிகளைச் செய்யவோ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
    மலக்கழிவை அகற்றும் பணியாளர்களுக்கும் சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்களுக்கும் மறுவாழ்வு அளிப்பதற்கான திட்டமொன்றை மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசுகளிடம் அழுத்தம் கொடுத்து அவர்களிடமிருந்து இவர்கள் குறித்த தகவல்களை கேட்டு வாங்காதது மட்டுமே மத்திய அரசின் தவறு என்று கருதிவிட வேண்டாம். மனிதகுலத்துக்கே இழிவை ஏற்படுத்தும் இந்த வழிமுறையை அகற்றுவதில் மத்திய அரசும் முனைப்புக் காட்டாமல் இருந்துவருகிறது என்பதுதான் உண்மை.
    இவர்களின் மறுவாழ்வுக்காக 2013-14 நிதியாண்டில் ரூ.557 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டில் அது வெறும் ஐந்து கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறதே, அப்படியானால் இந்தியாவில் மனித மலம் அள்ளுபவர்களும், சாக்கடைகளில் இறங்கி பணியாற்றுபவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று பொருளா? எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் இந்த சமுதாய இழிவை அகற்றுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைத்தான் துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது எடுத்துக்காட்டுகிறது.
    தூய்மை இந்தியா திட்டம், மனித மலம் அள்ளுபவர்கள் குறித்தோ, சாக்கடையில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் குறித்தோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை. தூய்மை இந்தியா திட்ட முனைப்பு முழுக்க முழுக்க வெட்டவெளியில் மலம் கழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத்தான் இருக்கிறது. எங்கெல்லாம் கழிப்பறைகள் இல்லையோ அங்கெல்லாம் நவீனக் கழிப்பறைகள் கட்டுவது என்பதிலும், மக்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதை பழக்கப்படுத்துவது என்பதிலும்தான் முனைப்பு காட்டுகிறது. மனிதர்கள் மூலம் அள்ளப்படும் ஏறத்தாழ 26 லட்சம் உலர் கழிப்பறைகள் குறித்து தூய்மை இந்தியா திட்டம் கவலைப்படவில்லை. முதலில் அந்தக் கழிப்பறைகளை, நவீனக் கழிப்பறைகளாக மாற்றுவதற்கான திட்டத்தை அல்லவா அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.
    காலங்காலமாக இருந்துவரும் இந்தக் கொடுமைக்கு சட்டத்தின் மூலம் மட்டுமே முடிவு கட்டிவிட முடியாதுதான். ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வும் ஒட்டுமொத்த மனித இனத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்கிற உறுதியும் இருந்தால் மட்டும்தான் இந்தக் கொடுமை தீரும். அது தீராதவரை இந்தியா உலகின் வல்லரசே ஆனாலும் அதில் பெருமையில்லை!

    நெஞ்சு பொறுக்குதில்லையே...


    By ஆசிரியர்  |   Published on : 15th September 2017 01:14 AM  |  
    இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை உருவாக்கிய அரசு, அந்த குழந்தைகளின் பாதுகாப்பை ஏனோ பள்ளி நிர்வாகங்களுக்கே வழங்கிவிட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம் தங்கள் கல்விச்சாலையில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கையில்தான் பெற்றோர்களும் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பள்ளிக்கூடங்கள் சட்டத்தின் உணர்வையோ, பெற்றோர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையோ குறித்துக் கவலைப்படாமல் செயல்படுகின்றன என்பதைத்தான் தில்லியை அடுத்த குருகிராமில் இயங்கும் ரயான் உறைவிடப் பள்ளியில் அரங்கேறியிருக்கும் கோர சம்பவம் உணர்த்துகிறது.
    கடந்த வெள்ளிக்கிழமை ரயான் உறைவிடப் பள்ளியில் பயிலும் பிரத்யுமன் தாக்கூர் என்கிற ஏழு வயதுச் சிறுவன், அந்தப் பள்ளியில் பணிபுரியும் வாகன நடத்துநரான அசோக்குமார் என்பவரால் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டிருக்கிறது. தனது பாலியல் இச்சைக்கு உடன்பட மறுத்த அந்தச் சிறுவன் கழிப்பறையில் பேருந்து நடத்துநரால் கொல்லப்பட்டிருப்பது ரத்தத்தை உறையவைக்கும் கொடூர நிகழ்வு.
    குருகிராமில் செயல்படும் ரயான் உறைவிடப் பள்ளியில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுகின்றன. கழிப்பறையை பயன்படுத்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் காவலாளிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் அதே கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனால் குழந்தைகள் பாலியல் இச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கான சூழல் காணப்பட்டது.
    ஏழு வயது பிரத்யுமன் தாக்கூரின் கொலையாளி எந்தவித சோதனையோ கண்காணிப்போ இல்லாமல் கத்தியுடன் பள்ளிக்கூடத்திற்குள் வளைய வருவது தங்கு தடையில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தது. ரயான் உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களின் பின்னணி குறித்து, காவல்துறையிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தும்கூட அவை செயல்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படவில்லை.
    அசோக்குமார் என்கிற பேருந்து நடத்துநரான அந்தக் கொலையாளி, மாணவர்கள் பயன்படுத்தும் அதே கழிப்பறையை பயன்படுத்தியதும், அதில் நுழைந்ததும் பள்ளி சிறார்களின் பாதுகாப்பு குறித்த குருகிராம் காவல்துறையினரின் வழிகாட்டுதலை மீறிய செயல். காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் வேலைபார்க்கும் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்களும், நடத்துநர்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நுழைய முடியும். அப்படியிருக்கும்போது ரயான் உறைவிடப் பள்ளியில் அசோக்குமார் என்கிற அந்த வாகன நடத்துநர் எப்படி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் நுழைந்தார் என்பது குறித்தும், கத்தியுடன் அந்தப் பள்ளிக்குள் அவரால் எப்படி வளைய வரமுடிந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும். இதற்கு முன்னால் இதுபோல எத்தனை மாணவர்கள் அசோக்குமார் போன்ற ஊழியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
    ரயான் உறைவிடப் பள்ளி என்பது மிகப்பெரிய கல்வி நிறுவனம். இந்தியாவில் மட்டும் 304 பள்ளிக்கூடங்களையும், இந்தியாவுக்கு வெளியில் 43 பள்ளிக்கூடங்களையும் நடத்துகிறது என்பதிலிருந்து அது எவ்வளவு பெரிய நிறுவனம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். சாதாரண தனியார் பள்ளிகளைவிடப் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கும் இந்தக் குழுமத்தின் குருகிராம் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதும், தீயணைப்புக் கருவிகள் செயல்படாமல் இருப்பதும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அவை கண்காணிக்கப்படாமல் இருப்பதும், ஊழியர்களின் பின்னணி குறித்த விவரங்கள் அறியப்படாமல் இருப்பதும், சிறார்களுக்குப் பாதுகாப்பில்லாத கழிப்பறைகள் காணப்படுவதும், இதுபோன்ற பள்ளிகளில் எந்த அளவுக்கு நிர்வாகம் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
    ரயான் உறைவிடப் பள்ளி போன்ற அதிகக் கட்டணம் பெறும் தனியார் பள்ளிகளிலேயே இதுதான் நிலைமை என்றால், இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் கோடிக்கணக்கான குழந்தைகளின் நிலைமை என்ன என்பது குறித்து சிந்திக்கும்போது அச்சம் மேலிடுகிறது. தனியார் பள்ளிகள் புற்றீசலாய் பெருகிவிட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கேகூட ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத நிலை. கல்வித்துறையும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறை காட்டாத போக்கு - இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி, யார்தான் உறுதிப்படுத்துவது?
    பள்ளிச் சிறார்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மகிழ்ச்சி. ஜூலை 16, 2004-இல் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மற்றும் சரஸ்வதி மழலையர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் குறித்த வழக்கில், ஜூலை 30, 2014-இல் விசாரணை நீதிமன்றம் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. ரயான் உறைவிடப் பள்ளி வழக்கிலும் இதுபோல நடக்காது என்பது என்ன நிச்சயம்? பாவம் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள்!

      ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு

      By DIN  |   Published on : 16th September 2017 03:44 AM  |    
      தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
      இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
      அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
      இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.
      முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
      முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,
      பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
      அலுவலகங்களில் நடத்தப்படும்.
      முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

        துணை மருத்துவப் படிப்புகளுக்கு செப்.19 முதல் கலந்தாய்வு: தகுதிப் பட்டியல் வெளியீடு


        By DIN  |   Published on : 16th September 2017 03:59 AM  | 
        தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தகுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
        தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிஓடி (இயன்முறை மருத்துவம்), பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியா மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, இளநிலை ஆக்குபேஷனல் தெரபி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் படிப்பு) ஆகிய 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 7}ஆம் தேதி முதல் 23}ஆம் தேதி வரை நடைபெற்றது.
        இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. மொத்தம் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 25,293 பேருக்கான தகுதிப் பட்டியல் www.tnhealth.org, www.tnmedicalselcetion.org ஆகிய இணையதங்களில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
        தகுதிப் பட்டியலின் அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் நாள் தொடங்குகிறது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு 20}ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 21 முதல் 23, 25 முதல் 27, அக்டோபர் 4 முதல் 7 என மொத்தம் 12 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

        பெற்றோரைப் பராமரிக்காத அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கிடையாது


        By DIN  |   Published on : 16th September 2017 02:17 AM  |    
        oldage
        Ads by Kiosked
        வயதான பெற்றோர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்ய வகை செய்யும் மசோதா அஸ்ஸாம் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
        நாட்டிலேயே முதன்முறையாக இதுபோன்றதொரு மசோதா கொண்டுவரப்பட்டது அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக வரவேற்பு கிடைத்தாலும், எதிர்க்கட்சிகள் அதை விமர்சித்துள்ளன. இதனிடையே, இதுபோன்று எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வது தொடர்பான புதிய மசோதாவும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது.
        சமூகத்தில் பொருளாதாரரீதியாக வசதியாக இருப்பவர்கள்கூட, தங்களது வயதான பெற்றோர்களையும், மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் சகோதர, சகோதரிகளையும் கவனிக்காமல் ஆதரவற்றோர் இல்லங்களில் விட்டுவிடும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
        இந்நிலையில், அத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முதல் முயற்சியை அஸ்ஸாம் மாநில அரசு மேற்கொண்டிருக்கிறது. அதுவும், அந்த மாநில அரசு ஊழியர்களிடத்தில் இருந்து அதைத் தொடங்கியிருக்கிறது.
        அதன்படி, புதிய சட்ட மசோதா ஒன்று அஸ்ஸாம் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர்களையும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் உடன்பிறந்தவர்களையும் கைவிட்டுவிட்டால் அவர்களது ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்ய அதில் வகை செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகையானது சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும் வழங்கப்படும்.
        மசோதாவை அறிமுகப்படுத்திய மாநில அமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா இதுதொடர்பாக பேரவையில் பேசியதாவது:
        இந்த சட்டத்தின் வாயிலாக அரசு ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாறாக ஆதரவற்று இருக்கும் சில பெற்றோர்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதே நோக்கம்.இதேபோன்று எம்எல்ஏ, எம்.பி.க்கள், பொதுத் துறை ஊழியர்கள் ஆகியோரது ஊதியங்களைப் பிடித்தம் செய்வது தொடர்பான மசோதாவும் விரைவில் கொண்டுவரப்படும் என்றார் அவர்.
        இதைத்தொடர்ந்து மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான தருண் கோகோய், பேசுகையில் "இத்தகைய மசோதாக்களைக் கொண்டுவந்து மாநிலத்தில் உள்ள மக்களை தவறாகச் சித்திரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது' என்றார். விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
        Man boards Goa flight with knife; CISF orders probe

        Saurabh Sinha| TNN | Updated: Sep 15, 2017, 22:58 IST



        NEW DELHI: The Central Industrial Security Force (CISF) has launched a probe into the lapse in hand baggage checking at IGI Airport on Thursday which saw a man board a Goa-bound flight with a kitchen knife.

        Once inside the SpiceJetaircraft, this person took the knife from his bag and showed it to co-passengers — including minister of state in PMO Jitendra Singh — and said he did this to show the chinks in armour at one of India's most sensitive airports.

        "We have ordered an inquiry and action will be taken against the personnel found responsible," a CISF spokesman said.

        This lapse is being taken very seriously as the union home ministry had earlier this month asked airport security agencies to be extra vigilant in view of increased threat perception, including chemical attacks in modes of transport.

        The MHA wrote on September 1 to all states, aviation ministry and other agencies saying: "Central security agencies have intimated that terrorists are planning a range of attacks against commercial aviation targets." Based on this MHA alert, the Bureau of Civil Aviation Security had written to the top brass of CISF, Airports Authority of India and JV metro airports to step up security arrangements.

        According to the home ministry, intelligence inputs indicate explosives concealed inside personal electronics, small appliances and personal items could be taken on a plane or even shipped by airmail. "Further inputs indicate that terrorists remain interested in small arms attack and physical assaults on airports and other transportation hubs... it is advised that security at airports and transportation hubs (railway stations, bus terminals, metro stations etc) be stepped up to ensure stricter screening of items mentioned above and frisking of passengers properly in order to avoid any untoward incident," the MHA advisory had said.

        TOP COMMENTthis man should be rewarded for identifying the security lapses.Parmod Kumar

        But within a fortnight of this alert, the lapse at Delhi Airport happened on Thursday. Describing this, a SpiceJet spokesman had said: "A passenger on board SpiceJet flight SG 144 from Delhi to Goa on Thursday reported to the cabin crew that he had a kitchen knife in his hand baggage. The aircraft was at that point still on ground. The SpiceJet staff immediately brought the matter to the attention of the CISF. The passenger was offloaded and handed over to the airport police. The flight was released after all necessary checks as per regulatory guidelines."

        Passenger frisking and hang bag checking is done by CISF.
        Tamil Nadu strike: HC tells employees to resume work from now

        TIMESOFINDIA.COM | Updated: Sep 15, 2017, 12:50 IST

        HIGHLIGHTS

        The associations told the bench that they have decided to withdraw their strike temporarily and would resume work from Monday

        However, the court directed them to go to work by 2pm today

        Tamil Nadu chief secretary has been asked to to appear before the court on Sept 21



        CHENNAI: The striking Tamil Nadu government employees have agreed to resume work after the Madurai bench of the Madras high court directed the teachers and government employees' organizations to withdraw their strike.

        Adhering to the court direction, the associations told the high court bench that they have decided to withdraw their strike temporarily and would resume work from Monday. But, the court directed them to go to work by 2pm today.

        It also directed the Tamil Nadu chief secretary to appear before it on September 21.

        33,487 teachers are on strike: TN govt tells Madras HC

        The Tamil Nadu government had on Thursday informed the Madras high court that a total of 33,487 government teachers, affiliated to six unions, were abstaining from work across the state.

        Additional Advocate General Venkatramani representing the state government informed this to the court in an affidavit containing replies to various other queries raised on Wednesday by Justice N Kirubakaran with regard to a section of government teachers who are on strike pressing for their demands.

        In its affidavit, the state government further said that retired teachers were also working as office-bearers in the unions.

        The High Court had on Wednesday pulled up a section of Tamil Nadu government school teachers who are on strike, saying it affected students.

        Justice Kirubakaran made the observations on a petition by advocate A P Suryaprakasam, seeking a direction to the state government to form an expert committee to prepare students who scored low marks in NEET (National Eligibility- cum-Entrance Test) and provide them moral support.

        The court had also sought information from the authorities concerned on the number of teachers unions striking without attending classes, among others.

        The Joint Action Council of Teachers Organisations and Government Employees Organisations (JACTO-GEO) had given a call for the strike from September 7 to press for their demands, including restoration of the old pension scheme.

        (With inputs from PTI)
        Madras HC judge trolled for remarks against teachers boycotting classes

        A Subramani| TNN | Updated: Sep 15, 2017, 19:59 IST

        HIGHLIGHTS

        Justice asked striking teachers were not ashamed that only five students from government schools made it to MBBS course.

        More than 43,000 government school teachers were boycotting classes.

        Teachers are demanding implementation of the Seventh Pay Commission recommendations.


        The judge recorded their offer to file the copies of the offending messages before the court so that the court... Read More

        CHENNAI: Trolled and abused online for his caustic remarks against Tamil Nadu government school teachers boycotting classes, a judge of the Madras high courthas called for details of the offensive materials circulated online by unknown people.

        Justice N Kirubakaran on Wednesday asked whether the striking government school teachers were not ashamed of the fact that only five students from government schools made it to the MBBS course in any of 22 government medical colleges in Tamil Nadu this year.

        More than 43,000 government school teachers were boycotting classes participating in joint agitation by various employees associations demanding implementation of the Seventh Pay Commission recommendations and scrapping of contributory pension scheme.

        On Friday, when the court assembled for the day, advocates Senthil Kumar, Suryaprakasam, Gnanasekaran and G Sankaran mentioned trolling of the judge and sought action against those indulging in such indecent activities under the cover of anonymity.

        Justice Kirubakaran said, "Abusive, malicious, defamatory, false and obscene messages are spreading virally in social media, accusing and degrading the judiciary in general, and this court in particular. Advocates and others would complain before this court that these messages are uploaded in social media by persons who are aggrieved over some of the observations made in the orders passed regarding the teachers and other government servants, who are protesting against the government by boycotting the schools and offices."

        The advocates said such action not only amounted to contempt of court but also interference with justice delivery system.

        "If it is not checked and nipped in the bud, then any person who comes to court and fails to get a favourable order would definitely follow the same path, and there will be no end to it. Consequently, the majesty and dignity of the court will be damaged and degraded," they said.

        The judge recorded their offer to file the copies of the offending messages before the court so that the court could pass appropriate orders.

        India vs Australia ODI in Chennai: Southern Railway to run additional MRTS services

        Siddharth Prabhakar| TNN | Sep 15, 2017, 19:20 IST



        CHENNAI: Southern Railwaywill run additional MRTS services in view of the India vs Australia one day cricket match at Chepauk stadium in Chennai on Sunday.

        Special trains will depart from Chennai Beach at 12:30pm, 12:40pm and 12:49pm. They will go up to Thirumailai station.

        In the return direction, there will be specials at 1pm, 1:10pm and 1:20pm.

        Later, there will be four specials from Chennai Beach to Velachery -- at 10:30pm, 10:40pm, 10:49pm and 11:15pm.

        In the return direction, the specials will start from Velachery at 11:20pm, 11:40pm, 11:50pm and 12:05am.
        12 out of 25 institutions in TN get swachhta awards

        TNN | Sep 16, 2017, 00:13 IST

        Chennai: As many as 12 of the 25 higher educational institutions which received awards for swachhta rankings from the HRD Ministry are from the state. The awards were given across four categories: Technical institutions, Government institutions, Universities and Colleges.

        Five of the seven institutions chosen under the technical institutions category and five of the six institutions chosen under colleges category across the country, were from the state.

        Sri Ramachandra Medical College and Research Institute was one of the institutions that bagged the third rank under technical institutions category. SRU dean (research) S P Thyagarajan said the fact that so many institutions in the state were recognised was a positive indication of the awareness levels across campuses to maintain the hygiene. He said it was important that the awareness trickled down to campuses in the state's rural areas.

        "Higher educational institutions should focus on improving student facilities which not only promote a good ambience but also their overall health. We have adopted 8 villages near Vayalanallur to make it defaecation-free and plan to expand cleanliness campaigns to other villages too," said Thyagarajan.

        Expert committees of All India Council for Technical Education (AICTE) and University Grants Commission (UGC) visited campuses for verification. Status of maintenance of toilets, student-toilet ratio in hostels, availability of running water, novel methods of purification, garbage clearance, garbage disposal, hygiene in hostels, greenery in campus, overall cleanliness, number of buildings, students and staff, and extension work done in villages/nearby areas for cleanliness were the major parameters considered by the committees. Colleges also said 15% weightage was given for village adoption scheme to make them open defaecation-free.

        AICTE officials who carried out inspections said a large number of the applications came in from Tamil Nadu. The officials said when it came to kitchens, toilets and drinking water facility, the award-winning campuses were very well maintained. "The fact that so many colleges willingly came forward to put their names up for swacchta rankings indicated the confidence of these institutions in their campus maintenance," said AICTE regional officer, R Balmurugan.

        AICTE has decided to give out the AICTE 'Clean Campus Awards 2017' on October 2, under the regional and national categories. Officials said most of the entries for these awards too were from the state, so, they said, were mulling over hosting the award ceremony in Tamil Nadu. The criteria for the awards are solid waste management, water conservation and management including waste water management and reuse, rain water harvesting, energy conservation and electronic waste management
        வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறாவிட்டால், எப்படி நிறுத்த வேண்டும் என்பது தெரியும்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

        Published : 15 Sep 2017 11:36 IST

        கி.மகாராஜன்மதுரை




        வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எப்படி நிறுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

        தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இருப்பினும் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

        இதனால் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் இன்று ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

        இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இவர்கள் சார்பில் ஆஜரான வக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசுடன் கடந்த ஒரு ஆண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது'' என்றார்.

        அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''வேலை நிறுத்தத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன் பிறகும் போராட்டத்தை தொடர்வது தவறு. வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்று ஏன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என ஒருவர் கூறியுள்ளார். அவர் என்ன அரசியலமைப்பு சட்டத்தில் நிபுணரா?

        காலாண்டுத் தேர்வு தொடங்கியுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அம்மாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் மாணவர்களை பாதிப்படைய வைத்து விட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா?

        வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அப்படி வந்தால் திங்கள்கிழமை தலைமை செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, பேச்சுவார்த்தைக்கு உத்தரவிடப்படும். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்'' என்றனர்.

        தொடர்ந்து வழக்கறிஞர் பிரசாத் வாதிடும்போது, ''வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற முடியாது'' என்றார்.

        அதற்கு நீதிபதிகள், ''வேலை நிறுத்தம் கூடாது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த தீர்ப்பை யாரும் மீற முடியாது. சம்பளம் உயர்வு பெறுவது அடிப்படை உரிமை. அந்த உரிமை அரசால் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை நாட வேண்டியது தானோ. அதைவிடுத்து போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது'' என்றனர்.

        மேலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும் போராட்டத்தின் போதும் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் எப்படி விளையாட்டு பொருட்களாக சித்தரிக்கின்றனர் என்பதை ஊடகங்களில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

        தொடர்ந்து வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கிறோம். அதற்குள் நிர்வாகிகளுடன் பேசி, வேலை நிறுத்தப் போராட்டத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒத்திவைக்க முடிவு செய்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
        சமூக வலைதளங்களில் நீதிமன்றத்தை விமர்சிப்பவர்கள் பற்றி ஆதாரம் கொடுங்கள்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவு

        Published : 15 Sep 2017 15:51 IST

        சென்னை




        ஆசிரியர் போராட்டங்கள் குறித்த நீதிமன்ற கேள்விகளுக்கும் உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் ஆவணங்களாக தாக்கல் செய்ய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

        நீதிமன்றத்தை, நீதிபதியின் கருத்துகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.சங்கரன், ஏ.பி.சூர்யபிரகாசம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

        அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்ற உத்தரவுகளுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தினால் அவர் காவல் நிலையத்திலோ, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலோ புகார் அளிப்பார்கள்.

        ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி யாரிடமும் புகார் அளிப்பதில்லை என்பதால் கட்டுப்பாடில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து பதிவேற்றம் செய்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய சென்னை காவல் ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவரை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

        இது குறித்து பதிலளித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜகோபாலன், முறையீடு செய்பவர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். உரிய ஆதாரங்களை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

        இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: எந்த உத்தரவு போட்டாலும் விமர்சிக்கவே சிலர் இருக்கின்றனர். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்ன? என்று அதனைப் புரிந்து கொள்ளாமல் பேசுவதால் சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியாமல் பேசுகிறார்கள். ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை விமர்சிக்கும் ஒருவர், அந்தப் பெண்ணும் நீதிபதியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என விமர்சிக்கிறார்.

        ஹெல்மெட் கட்டாயம் என்று நான் உத்தரவு போட்ட போது, அதை விமர்சித்தும் கடிதங்கள் வந்தது. அவற்றில் 80% எதிர்மறை 20% ஆதரவு. முக்கியமாக விமர்சன கடிதங்களில், நான் இதுவரை தாய், தந்தை, ஆசிரியரிடம் திட்டு வாங்காத சொற்களில் வசை பாடப்பட்டேன்.

        உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா? குண்டுங்குழியுமான சாலையில் மனைவியிடன் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறாயா? என கடிதம் வந்தது. தற்போதைய விமர்சனங்கள் குறித்து ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள்.செப்டம்பர் 18 அன்று விசாரிக்கிறேன். அதற்குள் இன்னும் நிறைய கருத்துகள் கிடைக்குமே என்று தெரிவித்து நீதிபதி கிருபாகரன் வழக்கை செப்.18-க்கு ஒத்திவைத்தார்.
        ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன்: கமல் பதில்

        Published : 15 Sep 2017 22:13 IST

        சென்னை




        ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

        'தி இந்து' தமிழ் நாளிதழ் நடத்தும் 'யாதும் தமிழே' விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஒரு நிகழ்வாக கலந்துரையாடலில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்துப் பேசினார்.

        கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்டிவா செயல்பட்டபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?

        இதுக்கு கிட்டத்தட்ட பதில் சொல்லி விட்டேன். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொல்வதை விட நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அது தீர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல நடிகன் தான். இது நடிப்பாக இருக்கக் கூடும் என்று பல நடிகர்கள் நடித்ததால் இந்த எண்ணம் வந்திருக்கும். இதைப்பார்த்து தான் நானும் ஒதுங்கி இருந்தேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகி விட்டதால்தான் நானும் நடிக்கிறேன் என்று நினைக்கிறார்கள்

        இந்த உலகத்தில் கடவுள் இருப்பதை நிரூபிக்க ஒரு விஷயம் கூட இல்லையா கமலுக்கு?

        கடவுள் என்பதற்கான சொல் விளக்கம் நீ உனக்குள் கடந்து செல் என்பது தான். அனைத்து ஸ்லோகங்களும் என்னைக் குறிப்பிடுகிறது. இதை இல்லை என்று சொல்லும் பல பண்டிதர்கள் இருக்கின்றனர். மதம் ஒரு கார்ப்பரேட் ஸ்ட்ரக்சர் அது ஒரு பிசினஸ். ஆனால் கடவுளை நம்பும் மனிதர்களை நான் கும்பிடுகிறேன். உங்கள் பக்தியின் மேல் எனக்கு கோபம் இல்லை. இந்த பக்தியை பயன்படுத்தி விளையாடுகிறார்களே அவர்கள் மீதுதான் கோபம். எந்த மதத்தையும் நீங்கள் பகுத்தறிந்து உணரலாமே. மொழி போன்றது உங்கள் பக்தி. எனக்கு பேச வராது. ஆனால் வேறு மொழி இருக்கிறது அது அன்பெனும் மொழி. அன்பை சொல்லாதே, உடனே இணைவேன். வேறு வித்தை காட்டாதே.

        எனக்கு இஸ்லாத்தில் வைணவத்தில் சைவத்தில் சமணத்தில் தென்படுகிறது, மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒரு பிரிவு அசகாய சக்தி என்று பிரிக்கிறார்கள், இதையெல்லாம் பார்க்கிறேன். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் உள்ளது.

        பேஸ்புக்கால் உதவியா உபத்திரவமா?

        நமது சொசைட்டிக்கு எல்லாம் உதவும் ஃபேஸ்புக்கும் உதவும் ட்விட்டரும் உதவும். அதை நாம் பயன்படுத்த வேண்டும்

        பொது மேடைக்கு ஏன் வர மாட்டேங்கிறீங்க?

        தங்கைக்கான பதிலிதோ இந்த மேடை இன்னும் பல உண்டு

        அஹிம்சை முறையில் போராடி நம்மால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியுமா? ஒரு பிரச்சினைக்காக ஏன் எல்லோரும் ஒன்று கூட மாட்டேங்கிறாங்க?

        இது என்னை கேட்கிற கேள்வி இல்லை உங்களை கேட்கும் கேள்வி. அஹிம்சை வீரத்தின் உச்சகட்டம். அதனால் தான் என்னவோ மாபெரும் முனிவர்களை மஹாவீரர் என்று அழைக்கிறார்கள். அஹிம்சையின் உச்சகட்டம் மஹாவீரம். மஹாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? துப்பாக்கி தோட்டாவில் இருந்து வந்தது போல் துடித்து வந்ததாக நினைக்கிறேன்

        அடுத்த குல்லா என்னவாக இருக்கும்?

        முடிதான் என் குல்லா. இதுவும் உதிர்ந்துவிடும். குல்லாவுக்கு வேலை எல்லாம் இல்லைங்க, குளிருக்கு வேண்டுமானால் போட்டுக்கலாம்.சென்னையில் எதுக்குங்க

        கேரளாவிற்கு சென்றீர்களே. முதல்வரைப் போய் சந்தித்தீர்களே ஏன்?

        இங்கேயும் சந்திக்க ஆசைதான் போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமாக இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிசம் சென்றார்கள், நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிசம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன் ஆனால் முடிவை நான் தான் எடுப்பேன். இதோ 'தி இந்து'வுக்கு தெரியுமே அந்த சிஸ்டம் எப்படி வெற்றி அடைகிறது என்று நீங்கள் சொன்னது தான் என்கிறார்களே. அதைத்தான் நானும் சொல்கிறேன் நீங்கள் சொல்லுங்கள்.

        கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி,லேசா அழுத்தினால் போதும். ஊழலை எப்படி ஒழித்துக்கட்டுவது ஊழல் மட்டும்தான் இவரது தாரக மந்திரமா என்று நினைக்காதீர்கள். அது அவர்களின் தாரக மந்திரம். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். நீங்கள் நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை மூன்றே மாதத்தில் சம்பாதிக்கலாம். உங்களுக்கு அளிக்கும் ஐந்தாயிரம் உங்களுக்கு வர உள்ள மூன்று லட்சத்திற்கு சமம்.

        நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தால் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

        ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு மக்களிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம். உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசவில்லை என்று நினைக்கிறீர்களா, அல்லது அவரிடம் பேசுவதை உங்களிடம் தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

        சொந்த வாழ்க்கையை விமர்சிப்பதை எப்படி சந்திக்கப் போகிறீர்கள்?

        இதற்கு பதில் என் வாழ்க்கை. என் சொந்த வாழ்க்கை என் முடிவு என்பேன். அதே தைரியம் இதற்கும் உண்டு. என் சொந்த வாழ்க்கை அதற்கு பதில்.

        பணத்திற்கு ஏன் அப்படி பலம் வந்தது?

        பெரிய கோடீஸ்வரர்கள் உருவானது ஏழைகளால்தான். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

        அரசியலுக்கு வந்தால் உங்கள் கொள்கை எவ்வழி?

        பெரியார் எங்கிருந்து கற்றார் அரசியலை, அவர் கற்றது காந்திய வழி அங்கிருந்து அரசியலை கற்று பின்னர் தனக்கான பாதையை மார்க்சியம் வழியில் கற்றார். மார்க்சியம் என்பது லெனின் இவர்கள் வகுத்த பாதை, இவர்கள் தோளில் ஏறிப் பார்க்கும்போது எனக்கு தூரத்தில் ஒளி தெரிகிறது அதில் பாடுபடுகிறேன் 

        லோக்கல் கவர்னன்ஸ் குறித்து உங்கள் கருத்து?

        பர்சனல் கவர்னன்ஸ் நீங்கள் உங்கள் நிலை பற்றி யோசியுங்கள் சரி இல்லை சரி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 

        பன்முகத்தன்மைக்கு எதிராக , மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிய பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

        வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் முக்கியம்.வன்முறை அதற்கு தனியாக அறிவு கிடையாது. அது எப்போது வேண்டுமானால் மதம் மாறும். இப்போது நான் உங்களுக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை என்று நினைக்காதீர்கள். வன்முறைக்கு எதிராக என்ன சொல்ல இன்று போய் நாளை வா தோல்வி நிச்சயம். நாளை நானில்லாவிட்டால் யாராவது இருப்பார்கள். மாறி மாறி நடந்ததால் தான் நாடு இரண்டாக ஆனது.

        நீங்க அரசியலுக்கு வருவீர்களா வரமாட்டீர்களா என்று கேட்காதீர்கள். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம். பேசிக்கிட்டே இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். நாம் யாரை விட்டு வைத்தோம். 

        அரசியல் பிரகடனம் முறையாக எப்போது அறிவிப்பீர்கள்?

        அவசரமில்லாமல் பல மேடைகள் உள்ளது , நீங்களும் ஒத்துழைக்கணும். பல விஷயங்கள் உள்ளது. பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு. அது நான் வந்த நாள். நல்ல நாள் ஒன்று புரட்சி நடந்த நாளில் அதுவும் ரஷ்யப் புரட்சி தான் அவசியம்னு இல்ல ஏதாவது ஒரு நாளில் அறிவிப்பேன்.

        செப்டம்பர் 17 அன்று அறிவியுங்கள் ?

        கண்டிப்பாக எந்த வருடம் என்பது நான் முடிவு செய்வேன்.

        இவ்வாறு கமல் பதிலளித்தார்.
        ரிசார்ட்டில் தங்கியிருப்பது ஏன்
        தினகரன் அணி எம்.எல்.ஏ., விளக்கம்

        குடகு: ''ஆசிரியர் பணியையும், எம்.எல்.ஏ.,க்கள் பணியையும் ஒப்பிடமுடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்;நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராடவில்லை. ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காககூடியுள்ளோம்,'' என, தினகரன் அணி,எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.




        கர்நாடகாவின் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை, 'பேடிங்டன்' ரிசார்ட்டில் உள்ள தினகரன் அணி, எம்.எல்.ஏ.,

        தங்க தமிழ்ச்செல்வன் நேற்று அளித்த பேட்டி: நாங்கள், 19 எம்.எல்.ஏ.,க்களும், ஒற்றுமையாக இருக்கிறோம். அரசு நினைத்தால்,என்ன செய்யும். அதிகாரம் வைத்துள்ளஅரசு, எங்கள் ஒற்றுமையை குலைக்கநினைக்கும்; ஆனால், அது முடியாது.

        பன்னீர்செல்வம் உட்பட, 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவசர கோலத்தில், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.எங்கள் உறவினர்கள், ஜாதி அமைப்பினர் மூலம், சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.ஒரு சிலருக்கு மிரட்டல்கடிதமும் வந்துள்ளது. 20ம் தேதிக்குள், கட்சி பொதுக்குழு நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

        'வேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?ரிசார்ட்டில் முடங்கிக் கிடக்கும் குதிரை பேர அரசியல்வாதிகளுக்கு கிடையாதா?' என,நடிகர் கமல் கூறியிருப்பது குறித்து, நிருபர்கள் கேள்வி

        எழுப்பினர்.அதற்கு, ''ஆசிரியர் பணி, எம்.எல்.ஏ.,க்கள் பணிகளுடன் ஒப்பிட முடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராட வில்லை. 

        ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கூடியுள்ளோம்,'' என்றார்.தினகரன் இன்று, 'பேடிங்டன்' ரிசார்ட்வருவதாக கூறப்படுகிறது.
        'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் நடிகை படம் : குறும்பு செய்வோருக்கு அரசு எச்சரிக்கை

        பதிவு செய்த நாள்15செப்
        2017
        23:57

        'ஸ்மார்ட் ரேஷன் கார்டில், குடும்ப தலைவர் படம் சரியாக இருக்கிறதா என்பதை, ஆய்வு செய்யாமல் வழங்கும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவுத்துறை எச்சரித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலுார் அருகில், பெண் ஒருவருக்கு வழங்கிய, 'ஸ்மார்ட்' கார்டில், நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றது. இதையடுத்து, ஆய்வு செய்யாமல் கார்டுகளை வழங்கும் ஊழியர்கள் மீது, உணவு துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

        இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டுக்காக வாங்கிய, 30 லட்சத்திற்கும் அதிகமான, 'ஆதார்' கார்டுகளில், குடும்ப தலைவர் புகைப்படம் தெளிவாக இல்லை. சரியான புகைப்படத்தை, இணையதளம், 'மொபைல் ஆப்' வழியாக தரும்படி அறிவுறுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி, விபரம் தெரியாதவர்களுக்கு உதவுவதாக கூறி, சில குறும்புக்காரர்கள், வேண்டுமென்றே சினிமா பிரபலங்கள், கடவுளின் படங்களை குடும்ப தலைவராக, 'அப்லோடு' செய்கின்றனர். அவை, இணையதளம் வாயிலாக, அச்சுக்கு அனுப்பப்படுகிறது. ஒரே சமயத்தில், லட்சக்கணக்கில் கார்டுகள் அச்சிடுவதால், யாருடைய படம் என்பது கவனிப்பது சிரமம். இதனால், கடைக்கு அனுப்பும் கார்டில் குடும்ப தலைவர் படம், உறுப்பினர்கள் விபரம் சரியாக இருக்கிறதா என்பதை, ஆய்வு செய்த பின், பழைய கார்டில் கார்டில் முத்திரை இட்டு வழங்கும்படி, ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

        ஆனால், அவர்கள் கார்டுகளை, ஊர் தலைவர், அரசியல்வாதிகளிடம் வழங்கி, அவர்கள் வாயிலாக, மக்களுக்கு தருவதாகவும் புகார்கள் வருகின்றன. அவ்வாறு செய்வோர் மீதும், ஸ்மார்ட் கார்டை ஆய்வு செய்யாமல் வழங்கும் ஊழியர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

        தவறான படம் எங்கிருந்து, 'அப்லோடு' செய்யப்படுகிறது என்பதை கண்டறிவது சுலபம். எனவே, அவ்வாறு செய்வோர் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
        'எம்.எல்.ஏ.,க்களை நீதிமன்றம் எச்சரிக்காதா?' : கமல்

        பதிவு செய்த நாள்16செப்
        2017
        00:50




        'வேலை செய்யாமல், சொகுசு விடுதியில் ஓய்வு எடுக்கும், எம்.எல்.ஏ.,க்களை, நீதிமன்றம் எச்சரிக்காதா' என, நடிகர் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.

        'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் கிடையாது என்பது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பொருந்தாதா? வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை எச்சரிக்கும் நீதிமன்றம், குதிரை பேரத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ.,வுக்கான பணியை செய்யாமல், சொகுசு விடுதியில் ஓய்வு எடுக்கும் அரசியல்வாதிகளையும் கண்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

        - நமது நிருபர்- -
        வரவிருக்கும் விசேஷங்கள்

        செப்டம்பர் 19 (செ) மகாளய அமாவாசை

        செப்டம்பர் 21 (வி) நவராத்திரி ஆரம்பம்

        செப்டம்பர் 29 (வெ) சரஸ்வதி பூஜை

        செப்டம்பர் 30 (ச) விஜயதசமி

        அக்டோபர் 01 (ஞா) மொகரம்

        அக்டோபர் 02 (தி) காந்தி ஜெயந்தி

        வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

        DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...