Thursday, November 27, 2014

Irani interfering, assertive, says UGC member Ansari

University Grants Commission (UGC) member M M Ansari has slammed HRD Minister Smriti Irani for her “excessive interference” in the functioning of the commission and for taking “arbitrary and abrupt” decisions, while depending entirely on a “well-planted bureaucracy” and the RSS for running the ministry.
The first such attack on the minister by a serving UGC member comes at a time when she is in the eye of a storm for her ministry’s decision to scrap German as a third language in Kendriya Vidyalayas.

“There is excessive interference from the minister in the UGC. One saw it in the FYUP issue, or in the way the ministry first decided on the Swacch Bharat implementation in the education sector and then informed us and asked us to send a circular to universities, or in how she announced the Swami Vivekanand scholarship programme for a single girl child without consulting us. The ministry has been simply imposing decisions. Any decision of the UGC should emerge from an exercise within the UGC,” Ansari told The Indian Express.
The former CIC termed Irani’s decisions as being “very arbitrary” and “abrupt” and claimed she was “too assertive”. Ansari, who has been a UGC member since 2012, also questioned Irani’s capabilities to lead the crucial education sector.

“The minister has no exposure of the education system. She has to depend on notes from bureaucrats, who have been well-planted by the government in the ministry, and think tanks comprising those from RSS and BJP. So how will she interact with academicians if she does not know the issues? It is demoralising for us,” he said, adding “all appointments were being made bypassing procedures”.

He also criticised the ministry’s move to scrap German as a third language in KVs mid-session and said in a globalised world, it was important to give children the choice to pick what language they want to study.

Ansari also slammed the appointment of Ram Shankar Katheria as Minister of State for HRD. Katheria has been in the midst of controversy over allegations that his graduation marksheet was forged.

“There have been several questions about Katheria’s marksheets. We don’t know the truth but there can be no smoke without fire.
such ministers, there will be a bad impact on children, an adverse impact on the youth. HRD Ministry talks of youth empowerment and then we have such ministers to lead the education system,” he said.

Ansari’s term with the UGC expires in August next year.

Source: Indian Express

-

SAVEETHA SCHOOL OF LAW CELEBRATES ;LAW DAY

BHARATHIAR UNIVERSITY CONVOCATION 22ND DECEMBER 2014

இதுவரை, சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத, பா.ஜ., - எம்.பி.,க்கள், 48 மணி நேரத்தில், சொத்து விவரங்களை, பார்லி., இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்'

இதுவரை, சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத, பா.ஜ., - எம்.பி.,க்கள், 48 மணி நேரத்தில், சொத்து விவரங்களை, பார்லி., இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்' என, பிரதமர் மோடி, நேற்று காலை, அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 90 நாட்களுக்குள், எம்.பி.,க்கள் தங்கள் சொத்து கணக்கை, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை நன்கு தெரிந்த பிறகும், நடப்பு, 16வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, 543 எம்.பி.,க்களில், 400க்கும் மேற்பட்டவர்கள், இன்னமும் தங்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்காமல் உள்ளதாக, கடந்த செப்., 26ல் வெளியான தகவல் தெரிவிக்கிறது.

முக்கியமானவர்கள் : காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்
பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, நிதின் கட்காரி
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பலர்

சமர்ப்பிக்காத பிரபலங்கள்: மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்த்தன், ராதாமோகன் சிங், ஆனந்த் கீதே, ஆனந்த்குமார், கிரண் ரிஜிஜூ, லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், காங்கிரசை சேர்ந்த கேப்டன்அம்ரிந்தர் சிங், வீரப்ப மொய்லி, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே. முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ.,வின் மீனாட்சி லெகி, வினோத் கன்னா, கிரண் கெர், ஹேமமாலினி.
என்னென்ன விவரங்கள் அவசியம்
*உறுப்பினர் பெயர், முகவரி, கட்சி.
*அசையாத சொத்துகள் விவரம் - எப்போது வாங்கப்பட்டது, யார், யார் பங்குதாரர்கள், யார் பெயரில் உள்ளது.
*அசையும் சொத்துகள் விவரம் - பைக், கார், வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்டுஉள்ள முதலீடு.
*எம்.பி.,யின் மனைவி பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகள்.
*எம்.பி.,யின் வாரிசுகள் பெயரில் உள்ள அசையும்,அசையா சொத்துகள்.

எந்த கட்சி;எத்தனை பேர்
பா.ஜ.,:209
காங்., :31
திரிணமுல் காங்.,:27
பிஜு ஜனதா தளம்:18
சிவசேனா:15தெலுங்கு தேசம்:14
அ.தி.மு.க., :9
டி.ஆர்.எஸ்., :8
ஒய்.எஸ்.ஆர்., காங்.,:7
ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி:6



அவசரம், மிக மிக அவசியம்!

உலக நாடுகள் எல்லாம் "எபோலா' பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. வியர்வை பட்டால்கூடத் தொற்றிக் கொள்ளும் இந்த அபாயகரமான நோய் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டால் காட்டுத் தீ போலப் பரவும் என்பதில் சந்தேகமில்லை. ஆப்பிரிக்க நாடுகள் கட்டுப்படுத்தியதுபோல நம்மால் எபோலாவை எதிர்கொள்ள முடியுமா என்பது சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

26 வயது இளைஞர் ஒருவர் லைபீரியாவிலிருந்து தில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவராகவே முன்வந்து விமான நிலைய அதிகாரிகளிடம் தன்னை "எபோலா' தொற்றுநோய்க்கான பரிசோதனைக்கு உள்படுத்தும்படி கேட்டிருக்காவிட்டால், இந்தியாவுக்குள் "எபோலா' நுழைந்தது பற்றியே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்.

அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்தபோது, அதில் எபோலா விஷ நுண்ணுயிரிக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எதற்கும் பரிசோதிப்போமே என்று அவரது சிறுநீரையும், விந்தையும் சோதனை செய்தபோது, எபோலா நுண்ணுயிரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறையினர் அவரை உடனடி

யாகத் தனிமைப்படுத்தி, சிகிச்சையைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், பயணத்தின்போது சக பயணி யாரையாவது இவர் தொட்டிருக்கிறாரா, இவரது வியர்வை பட்டு யாருக்காவது "எபோலா' தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதுதான் இப்போதைய கவலை.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, "எபோலா' நுண்ணுயிரி பரவுவதைத் தடுத்திருக்கிறது. அதுபோல, இந்தியாவில் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். சந்தேகத்துக்கு இடமில்லாத கண்காணிப்பு, சோதனை, மருத்துவப் பரிசோதனை, தனிமைப்படுத்தும் வசதி போன்றவற்றை எல்லா மட்டத்திலும் உறுதிப்படுத்துவது என்பது இந்தியாவில் மிகமிகக் கடினம்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி "எபோலா' நுண்ணுயிரிப் பரிசோதனைக்கான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படியான வசதிகள், இந்தியாவிலுள்ள 14 விமான நிலையங்களில் இரண்டே இரண்டில்தான் காணப்படுகின்றன. கடந்த 21 நாள்களுக்கான பயணிகள் வருகைப் பட்டியலோ, அவர்களது உடல்நிலை பற்றிய தகவல்களோ சேகரிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.

அதைவிட அச்சுறுத்தும் விஷயம், "எபோலா'வை எதிர்கொள்ள அடையாளம் காணப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பது. அங்கே பணிபுரியும் மருத்துவ சேவகர்கள் போதுமான பாதுகாப்புடன் இயங்குவதாகவும் தெரியவில்லை. ஆப்பிரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகள் மட்டுமல்ல, "எபோலா'வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும்கூட "எபோலா' நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டு, தொற்றுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள் என்பது அச்சுறுத்தும் உண்மை.

"எபோலா' நுண்ணுயிரிப் பரிசோதனைக்காக மேலும் 10 பரிசோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அதேபோல, "எபோலா'வைக் கண்டறிய "ஒருங்கிணைக்கப்பட்ட நோய் கண்காணிப்புத் திட்டம்' ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் டைபாயிடு, காலரா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற விஷக் காய்ச்சல்களுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்குமே தவிர, "எபோலா' போன்ற அதிபயங்கரத் தொற்றுநோய்க்குப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கையாகத் தெரியவில்லை.

உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டிய இடம் நமது விமான நிலையங்கள்தான். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரையும் முறையான சோதனைக்கு உள்படுத்தாமல் இந்தியாவுக்குள் அனுமதிப்பதே ஆபத்து. ஆனால், விமான நிலையங்களில் இன்னும்கூட முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

"எபோலா' என்பது நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரமான உயிர்க்கொல்லி நுண்ணுயிரி. குணப்படுத்தப்பட்ட பிறகும்கூடப் பல வாரங்கள் ரத்தத்தில் உயிர் வாழும் தன்மையுடையது. "எபோலா'வால் உயிரிழந்த சடலத்திலிருந்துகூட இந்த நுண்ணுயிரி பரவக்கூடும் என்கிறார்கள். இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள ஒரு நாட்டில், அதிலும் பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில் "எபோலா' உயிர்க்கொல்லி ஆழிப்பேரலையாக மாறக்கூடும். நாம் அதைப் புரிந்து கொள்ளாமல், எரிமலையின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறோம்.

"எபோலா' நுழைந்து விட்டால், இந்தியா பேரழிவைச் சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது! அதனால், உடனடியாக விழித்துக் கொள்வோம்!

Tuesday, November 25, 2014

குடும்ப அட்டைகள் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு: அடுத்த மாதம் முதல் உள்தாள் ஒட்டப்படும்


குடும்ப அட்டைகளை புதுப்பிக்க, டிசம்பர் மாதம் கடைகளில் உள்தாள் இணைத்துக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடும்ப அட்டை

பொது விநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு போதுமான தரமான விலை இல்லா அரிசி அனைத்து கிடங்குகளிலும் சுமார் 3 மாத தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருள்களும் சீரான முறையில் விநியோகம் செய்வது உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

பொது விநியோக திட்ட கிடங்குகளிலிருந்து நியாயவிலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் நகர்வு செய்யப்படுவதை கண்காணிக்கவும், கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பினை அறிந்து அவ்வப்போது தேவையான பொருள்களை நகர்வு செய்யவும், புதிய குடும்ப அட்டைகளை வழங்கவும், போலி குடும்ப அட்டைகளை களையவும், இத்திட்டங்களை கணினி மயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி 5 கோடியே 87 ஆயிரத்து 395 நபர்களுக்கு உடற்கூறு பதிவுகள் (பயோ மெட்ரிக்ஸ்) கணினியில் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 நபர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.

உள்தாள் இணைப்பு

எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015-ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலத்தை 1.1.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க அரசு ஆணையிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெறவரும்போது, அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015-ம் ஆண்டிற்கான உள்தாளினை இணைத்து வழங்குமாறும் உத்திரவிடப்பட்டுள்ளது. எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கலந்து கொண்டோர்

இது தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில், அரசு உணவுத்துறை முதன்மை செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன், உணவுப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் கே.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் கே.நாகராஜன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கையால் எழுதப்பட்ட, 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள் அடுத்த ஆண்டு முதல் செல்லாது

கையால் எழுதப்பட்ட மற்றும் 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செல்லாது என்று சென்னை மண்டல ‘பாஸ்போர்ட்’ அதிகாரி சி.செந்தில்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து தினத்தந்தி நிருபரிடம், சென்னை மண்டல ‘பாஸ்போர்ட்’ அதிகாரி சி.செந்தில்பாண்டியன் கூறியதாவது:–

‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’கள்

வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்’ முறையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற நேரங்களில் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்து ‘பாஸ்போர்ட்’களை பெறுவதை தவிர்த்துக் கொள்ளலாம். காரணம் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் உடனடியாக ‘பாஸ்போர்ட்’கள் வழங்கப்படுகிறது.

பின்னர் போலீஸ் விசாரணையில் ‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதனை தவிர்க்க சாதாரண வகையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கலாம். ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 நாட்களிலும், சாதாரண வகையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 10 முதல் 15 நாட்களிலும் ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது.

காலஅவகாசம்


விசா விண்ணப்பிக்கும் போது குறைந்த பட்சம் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் காலம் 6 மாதங்களாவது இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கும் காலம் குறுகிய காலமாக இருந்தால் விசா வந்தும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படும் என்பதால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

கையால் எழுதப்பட்டவை


கடந்த 1995, 1996–ம் ஆண்டுகளில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்’கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சில ‘பாஸ்போர்ட்’கள் புதுப்பிக்க 20 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ‘பாஸ்போர்ட்’களும் 2015–ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு செல்லாததாகும். எனவே இந்த இரண்டு வகை பாஸ்போர்டுகளையும் மாற்றித்தர வெளிவிவகாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்’களை பெற்றுக்கொண்டு புதிதாக கணினி மூலம் தட்டச்சு செய்யப்பட்டும், 20 ஆண்டுகள் புதுப்பிக்கும் காலஅவகாசத்தை மாற்றி 10 ஆண்டுகளாக குறைத்தும் புதிய ‘பாஸ்போர்ட்’கள் வழங்கப்பட உள்ளது. எனவே இதுபோன்ற ‘பாஸ்போர்ட்’களை வைத்திருப்பவர்கள் கடைசி நேர கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக உடனடியாக மண்டல ‘பாஸ்போர்ட்’ அலுவலகத்துக்கு சென்றோ அல்லது ஆன்–லைனிலோ தங்கள் ‘பாஸ்போர்ட்’களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தற்காலிக முகவரியில்


நிரந்தர முகவரியில் வசிக்காமல், தற்காலிக முகவரியில் வசிப்பவர்கள் நிரந்தர முகவரியில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது நிரந்தர முகவரியில் போலீஸ் விசாரணை செய்யும் போது விண்ணப்பதாரர் அங்கு இல்லாததால் ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக தற்காலிக முகவரியில் வசிப்பவர்கள், தற்காலிக முகவரியில் ஆவணங்களை பெற்றுக் கொண்டு அதன் மூலம் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் உடனடியாக ‘பாஸ்போர்ட்’கள் பெறுவதுடன், அபராதம் கட்டுவதையும் தவிர்க்கலாம்.

பாஸ்போர்ட் சேவா மையம்


சென்னையில் உள்ள மண்டல ‘பாஸ்போர்ட்’ அலுவலகத்தின் கீழ் சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய 5 இடங்களிலும் ‘பாஸ்போர்ட்’ சேவா மையம் செயல்படுகிறது. இதில் புதுச்சேரியில் உள்ள மையம் ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பம் வசூலிக்கும் மையமாக செயல்படுகிறது. இதனை விரைவில் மினி ‘பாஸ்போர்ட்’ சேவா மையமாக மாற்றுவதற்காக புதுச்சேரி அரசுடன் பேசி வருகிறோம். அத்துடன் நிலுவையில் உள்ள ‘பாஸ்போர்ட்’களை உடனுக்குடன் வழங்குவதற்காக குறைதீர்வு அமைப்பு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 3 சேவா மையங்களிலும் நடத்தப்பட்ட முகாமில் 1,600 முதல் 1,700 விண்ணப்பங்கள் கையாளப்பட்டன. அதேபோல் புதுச்சேரியல் நடத்தப்பட்ட ‘பாஸ்போர்ட்’ முகாமில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 262 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. தொடர்ந்து கடலூரில் நடந்த முகாமில் 325 பேர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு 20 விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ‘பாஸ்போர்ட்’ வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

29–ந்தேதி சிறப்பு முகாம்


சென்னையில் உள்ள அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய 3 ‘பாஸ்போர்ட்’ சேவை மையங்களில் வரும் 29–ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் 60 வயதுக்கு மேலான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும். விடுமுறை நாளில் நடத்தப்படும் இந்த முகாமில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடனும், சிறுவர்கள் பெற்றோருடனும் கலந்து கொள்ளலாம். இவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

முகாமுக்கு வருபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை பதிவு செய்துவிட்டு, இணையதளத்திலிருந்து பெறப்பட்ட நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். வரும் போது உண்மை ஆவணங்கள் மற்றும் நகல்களையும் எடுத்து வரவேண்டும். முகாம் நாளில் சாதாரண வகை விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மாறாக ‘தட்கல்’ முறை விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...