Saturday, December 6, 2014

6.12.2014 BIG PUSH FOR INCLUSION...TIMES OF INDIA CHENNAI EDITION

imggallery

DINAMALAR NEWS

கேந்திரிய வித்யாலயா: தமிழும் ஜெர்மனும்


கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் அல்லது ஜெர்மன் என்று இருந்த மொழிப் பாடத்தில் ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சம்ஸ்கிருத மொழியை மட்டும் கற்றுத் தர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியை உச்சநீதிமன்றம் தடுத்திருக்கிறது.

சம்ஸ்கிருத மொழியைச் சொல்லித் தரக் கூடாது என்றோ ஜெர்மன் மொழியை எடுக்கக் கூடாது என்றோ உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. கல்வி ஆண்டின் நடுவில் இப்படிப் பாடத் திட்டத்தை மாற்றுவதற்குத் தடை விதித்திருக்கிறது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜெ. ஹெலன் டேவிட்சன் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் மொழி சொல்லித் தரப்பட வேண்டும் என்று 8-5-2013 அன்று நாடாளுமன்ற விதி 377-இன்கீழ் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றுகிறவர்களின் பணியிட மாற்றங்களால் குழந்தைகளின் படிப்புக்கு இடையூறு வரக் கூடாது என்பதற்காக 1962-இல் தொடங்கப்பட்ட மத்திய அரசுப் பள்ளிகள் (Central schools) பின்னர் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளாகப் பெயர் மாற்றம் பெற்றன.

பின்னர், இராணுவத்தினரின் குழந்தைகளுக்காக இராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்டதும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மற்றவர்களுக்கும் இடம் கிடைத்து வருகின்றன.

இந்தியாவில் 1,090 பள்ளிகளும் காத்மண்டு, மாஸ்கோ, தெஹ்ரான் (ஈரான்) என்று வெளிநாடுகளில் மூன்றுமாக 1,093 கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றின் தலைநகரம் புது தில்லி. மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையின் கீழ் இப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

2012-இல் இப்பள்ளிகளில் 11,21,012 மாணவர்கள் படித்துள்ளனர். ஆசிரியர்களும் பணியாளர்களுமாக 56,445 பேர் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 44 பள்ளிகள் உள்ளன.

2012-13 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2454.34 கோடி (திட்டம் சாராப் பணிகளுக்கு ரூ.2104.34 கோடி, திட்டம் சார்ந்த பணிகளுக்கு ரூ.350 கோடி). முதல் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை இப்பள்ளிகளில் மாணவர்கள் இருபாலரும் சேர்ந்து படித்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தொடக்க நிலையில் நடைமுறையில் உள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகளுக்கும் கேந்திரிய வித்யாலயாவில் பணிபுரிவோர் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக உள்ள பெண் குழந்தைகளுக்கும் கட்டணம் இல்லை.

கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் இந்தியா முழுதும் ஒரே மாதிரியான பொதுப்பாடத் திட்டம்தான் உள்ளது. கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும் இந்தியும் பயிற்றுமொழிகளாக உள்ளன.

முதல் ஐந்து வகுப்புகளுக்குப் பாடமொழிகளாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம், இந்தி, சம்ஸ்

கிருதம் அல்லது ஜெர்மன் என்று மூன்று மொழிகளும் பாடமொழிகளாக உள்ளன.

ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் ஆங்கிலம், இந்தி அல்லது சம்ஸ்கிருதம் என்று இரண்டு மொழிகள் பாடமொழிகளாக உள்ளன. 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் கணிதப் பிரிவு எடுப்போர்க்கு ஆங்கிலம் மட்டுமே பாடமொழி. பிற பிரிவுகளில் படிப்போர்க்கு ஆங்கிலமும் இந்தியும் பாடமொழிகள்.

இந்தியாவில் சம்ஸ்கிருதம் அல்லது ஜெர்மன் மொழியும் மாஸ்கோவில் பிரெஞ்சு அல்லது ருஷ்ய மொழியும் பாடமொழிகளாக இருந்து வருகின்றன. வேலை

வாய்ப்பினைக் கருதி இந்தியாவில் சம்ஸ்கிருதத்தைப் படிக்காமல் ஜெர்மன் மொழியைப் படிக்க மாணவர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சம்ஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்த எண்ணியது.

ஜெர்மனி அரசு, இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் ஜெர்மன் மொழியை நீக்கக் கூடாது என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி இருக்கிறது.

ஹெலன் டேவிட்சன், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளுக்கு 26-6-13 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கேந்திரிய வித்யாலயாவின் கல்வி விதியின் 112-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மாநில மொழி அல்லது தாய்மொழியைக் கற்க 20 அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் கூடுதல் ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும் என்றும் இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களைத் துணை ஆணையரின் அனுமதி பெற்று நியமித்துக் கொள்ளலாம் என்றும் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரையிலும் தேவைப்பட்டால்

ஒன்பது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்கூட கற்றுத் தரலாம் என்றும் பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் 2013 - 14-ஆம் கல்வி ஆண்டிலிருந்தே தமிழகக் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை 1-7-2013-க்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன.

தேர்ச்சி பெறுவதற்குத் தமிழ்ப் பாடத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் தமிழகக் கேந்திரியப் பள்ளிகள் பலவற்றில் தமிழ்மொழியைக் கற்றுத் தர போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம் (சென்னை), துணை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் மொழி இருக்க வேண்டும் என்று ஜெர்மனி அரசு வற்புறுத்துகிறது. நாமும் ஜெர்மன் மொழி இருக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம்.

முன்னரே ஆணையிட்டும் தமிழைத் தொடங்காமல் உள்ள தமிழகக் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளிலும் தமிழைக் கற்றுத் தர வேண்டுமென்று குரல் வந்ததாகத் தெரியவில்லை.

மாஸ்கோவில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் பிரெஞ்சு அல்லது ருஷ்யன் என்றிருப்பதைப் போல, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் அல்லது சம்ஸ்கிருதம் என்று வைக்கலாம்.

முடிந்தால் கேந்திரியப் பள்ளிகளில் இந்தியா முழுதும் தமிழ் அல்லது சம்ஸ்கிருதம் என்று பாடமொழியை மாற்றலாம். அல்லது விருப்பப் பாட மொழியில் தேர்வு இல்லை என்பதால் இரண்டு மொழிகளையும் விருப்பப் பாடமாகச் சேர்க்கலாம்.

உலகச் செம்மொழிகளில் தமிழும் சம்ஸ்கிருதமும் இடம்பெற்றிருப்பதைப் போல கேந்திரியப் பள்ளிகளிலும் இடம்பெறுவது பண்பாட்டு இந்தியாவைப் பார்க்கத் துணை செய்யும்.

கேந்திரியப் பள்ளிகளின் நோக்கங்களில் இந்திய ஒருமைப்பாட்டை மாணவர்கள் மனதில் வளர்த்தல் வளரும் தலைமுறையை இந்தியராக உணரச் செய்தல் ஆகியவை குறிப்பிட்த் தக்கவையாக உள்ளன.

இந்தியப் பண்பாட்டு வரலாறு தமிழைத் தவிர்த்து எழுத முடியாது.

கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளின் நோக்கங்கள் பண்பாட்டின் அடித்தளத்தில் நிறைவேற்றப்பட வேண்டியவை. அவை நிறைவேற, தமிழ்மொழி

தொல்லையாக இருக்காது. மாறாக வேறு எந்த மொழியை விடவும் துணையாக இருக்கும்.



கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு கிடையாது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் 3-வது மொழியாக பயிற்றுவிக்கப்படும் என்றும், ஆனால் இந்த கல்வியாண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

சமஸ்கிருத பாடம்

கடந்த அக்டோபர் 27-ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடத்தை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஏற்கனவே படித்து வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக புதிதாக சமஸ்கிருத மொழியை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வி.எஸ்.ராமநாதன் உள்ளிட்ட பெற்றோர் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

தேர்வு கிடையாது

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, நடப்பு கல்வியாண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ-மாணவியர் ஜெர்மன் மொழி பாடத்தை கூடுதல் பாடமாக தொடரலாம் என்றும், சமஸ்கிருத பாடத்தில் இந்த நடப்பு கல்வியாண்டில் தேர்வு எதுவும் இருக்காது என்றும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த முடிவு மத்திய அரசின் உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறி, இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணைச்செயலாளர் எழுதியுள்ள கடிதத்தின் நகலையும் கோர்ட்டில் அப்போது அவர் தாக்கல் செய்தார்.

கோர்ட்டு வழிகாட்டுதலின் படியும், மாணவ-மாணவியருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையிலும் மூன்றாவது மொழியாக ஜெர்மன் பயிலும் மாணவ-மாணவியருக்கு சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிகளில் இந்த நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு எதுவும் நடத்தப்படமாட்டாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதி கருத்து

இது நல்ல தீர்வு என்றும், புதிதாக அறிமுகப்படுத்தும் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எதுவும் நடக்காது என்றும் உறுதியளித்து இருப்பதால் மாணவர்களுக்கு அழுத்தம் எதுவும் இருக்காது. ஒரு தந்தையாகவும் இதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி அனில் ஆர்.தவே கருத்து தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர்களான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் பெற்றோர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ரீனா சிங், மத்திய அரசாங்கம் தற்போது முன் வைத்திருக்கும் இந்த முடிவு குறித்து தன்னுடைய கட்சிக்காரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தங்கள் தரப்பு பதிலை முன்வைக்க சிறிது அவகாசம் தேவை என்று கூறினார்.

ஒத்திவைப்பு

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அறிமுகம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் பொதுவாக அறிவுறுத்தினர்.

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன? எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்



சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதுபற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஜனவரியில் அமல்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

வங்கியில் மானியம்

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும்.

எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் இதில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான்.

யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.

ஆதார் இல்லாவிட்டால்

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.

வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Friday, December 5, 2014

அவனுக்கென்ன.. அழகிய மனம்!



கடிவாளம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பிய திரைப்படங்களைத்தான் ‘டிரெண்ட்செட்டிங் பிலிம்ஸ்’ என்று கொண்டாடி வந்திருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 11- 12- 1964-ல் வெளியாகித் தமிழ் சினிமா ரசனைக்குப் புது ரத்தம் பாய்ச்சிய படமே ‘சர்வர் சுந்தரம், திரையுலகைக் கதைக் களமாக்கிய முதல் தமிழ்த் திரைப்படம்.

சினிமா ஸ்டுடியோக்களில் எப்படிப் படப்பிடிப்பு நடக்கிறது, பாடல் எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்ற ரகசியத்தை உடைத்துக் காட்டியது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியும், விருதுகளும், இதே போன்ற கதையம்சத்துடன் கூடிய பல படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தன. அவற்றில் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’, சிவகுமார் நடித்த ‘ஏணிப்படிகள்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்தன.

நகைச்சுவை நாயகன்

அன்று முன்னணி நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் நாகேஷ். எம்.ஜி.ஆர். – சிவாஜி இருவருமே தங்களது படங்களில் நாகேஷ் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் நாகேஷ் கதைகளில் நுழைக்கப்பட்டார். இரண்டு பேரின் படங்களுக்கும் சிக்கல் வராதவாறு தனது கால்ஷீட்டைக் கவனமாகப் பிரித்துக் கொடுத்து நடித்துவந்தார். என்றாலும் அதிகப் படப்பிடிப்புகள் காரணமாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரண்டு பேரின் படப்பிடிப்புகளுக்குப் பல சமயங்களில் தாமதமாகப் போவார் நாகேஷ். ஆனால் அவர்கள் கோபித்துக்கொண்டதில்லை.

இவ்விரு சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்துவந்த அதேவேளை தன் மனதுக்குப் பிடித்தமான குணச்சித்திர வேடங்கள் கிடைத்தால், அவற்றுக்குச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு நடித்தார். அது போன்ற வேடங்களில் கதாபாத்திரமாக வாழ ஆரம்பித்தார். ஏ.வி.எம். செட்டியாரின் பார்வையில் நாகேஷ் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதைவிட, சிறந்த குணச்சித்திர நடிகராகத் தெரிந்தார். அப்போது தமிழ் நாடக மேடைக்கு சமகாலக் கதைகளை நாடகங்களாக எழுதிப் பெயர்பெற்று வந்தார் கே.பாலச்சந்தர். ‘சர்வர் சுந்தரம்’ கே. பாலச்சந்தர் எழுதிய நாடகம்தான். அந்த நாடகத்தைப் பார்த்த செட்டியார், அதை வாங்கித் திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷிடம் டிரங்க் காலில் பேசினார் செட்டியார். அத்தனை பெரிய பட அதிபர் நம்மிடம் பேசுவதா என்று நெகிழ்ந்த நாகேஷ், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் செட்டியாரைச் சென்று சந்தித்தார்.

“சர்வர் சுந்தரம் நாடகத்தோட ரைட்ஸ் வாங்கிவிட்டேன்” என்றார் செட்டியார். “நீங்க ஒரு முடிவு எடுத்துட்டா அது சரியா இருக்கும். ஆனால், நல்ல மார்க்கெட் உள்ள ஹீரோவா போடுங்க” என்றார் நாகேஷ். “இந்தக் கதையில நீதான் நடிக்கணும். அதுதான் சரியா இருக்கும்” என்றார் செட்டியார். “நீங்க முடிவு எடுத்துட்டா அதை மாத்த முடியுமா?” என்றார் நாகேஷ். செட்டியார் சிரித்துவிட்டார். கதை, திரைக்கதை, வசனத்தைக் கே. பாலச்சந்தர் எழுத, சமூகப் படங்களை வரிசையாக இயக்கிப் புகழ்பெற்றிருந்த கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்க, நாகேஷ் கதையின் நாயகனாக நடித்தார்.

உணர்ச்சிகரமான போராட்டம்

சினிமாவில் பெரிய நடிகனாகப் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வருகிறார் நாகேஷ். எனினும் தனது தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார். வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் முன் வயிற்றைக் காயவிடக் கூடாது அல்லவா? அதற்காக உணவு விடுதி ஒன்றில் சர்வராக வேலை செய்கிறார். நாகேஷின் உணவு பறிமாறும் குறும்புகளைப் பல வாடிக்கையாளர்கள் ரசிக்கிறார்கள்.

சிலர் சிடுசிடுக்கிறார்கள். அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மேஜர் சுந்தரராஜன். அவரது மகள் கே.ஆர். விஜயா அங்கே அடிக்கடி வருகிறார். நாகேஷைப் பாராட்டுகிறார். தனது முதலாளியின் மகள் என்பதை அறியாத நாகேஷ், கே.ஆர்.விஜயாவின் ஊக்குவிப்பால் உந்தப்பட்டு அவர்பால் ஈர்க்கப்படுகிறார். பிறகு அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். கே.ஆர்.விஜயாவோ தனது கல்லூரி நண்பரான முத்துராமனைக் காதலிக்கிறார். முத்துராமன், நாகேஷின் உயிர் நண்பன்.

ஒருநாள் முத்துராமனிடம் சென்று கே.ஆர். விஜயாவைக் காதலிப்பதாகச் சொல்கிறார் நாகேஷ். அதைக் கேட்டு காதலனாகிய முத்துராமன் துடிக்கிறார். அதைக் காதலியிடம் சொல்ல, அவரும் துடிக்கிறார். நட்பாகப் பழகியது தப்பாகிவிட்டதே என கே.ஆர். விஜயா தவிக்கிறார். இதற்கிடையில் நாகேஷின் திரையுலகத் தேடல் தீவிரமாகிறது. ஒரு கட்டத்தில் நாகேஷின் திறமை கண்டறியப்பட்டு நாடு போற்றும் நடிகனாகிவிடுகிறார். பணம், புகழ், அந்தஸ்து எல்லாமே கிடைக்க, சர்வர் சுந்தரம் இப்போது ஆக்டர் சுந்தரம்.

வாழ்க்கையில் எண்ணியதெல்லாம் கிடைத்த பிறகு அடுத்து என்ன? தனது காதலைத் தெரிவிக்கக் கையில் பூங்கொத்தை ஏந்தியபடி கே.ஆர்.விஜயாவைத் தேடி வருகிறார். அப்போது காதலனும் உடன் இருக்க, நாகேஷ் தன் காதலைச் சொல்ல, அந்த நொடியில் ஆரம்பிக்கும் உணர்ச்சிப் போராட்டம் படத்தின் முடிவாக அமைந்தது. காதல் ஒரு மனிதனை உயர்த்தும். அதேநேரம் அதுவே தோல்வியில் முடிந்தால் அந்த மனிதனின் மனதை உடைப்பதற்குப் பதிலாகப் பண்படுத்தும் என்ற கருத்தைத் தூக்கிப்பிடித்தது பாலச்சந்தரின் தேர்ந்த திரை எழுத்து.

காதல் தோல்விக்குப் பிறகு தாயின் இறப்பை எதிர்கொள்ளும் சர்வர் சுந்தரம், ஒரு எளிய மனிதனாக சர்வர் வேலைசெய்தபோது கிடைத்த நிம்மதி, நடிகனாக உயர்ந்தபோது இல்லை என்பதைப் புரியவைப்பதோடு படம் முடியும். வில்லன் இல்லாத படம்.

இரண்டு நட்சத்திரங்கள்

ஐம்பதாண்டுகள் நிறைவைக் கொண்டாடும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இன்றைய தலைமுறை ரசிகர்கள் பார்த்தால் அதன் திரைக்கதை நேர்த்தியை, கதாபாத்திரங்களின் கட்டமைப்பைப் பாராட்டித் தள்ளுவார்கள். சிவந்த நிறமும், எடுப்பான தோற்றமும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நாயகனாக உருவாக முடியும் என்ற மூடநம்பிக்கையைச் சர்வர் சுந்தரம்தான் முதன்முதலாக உடைத்தெறிந்தது.

இந்தப் படத்தில் சர்வர் சுந்தரமாக வாழ்ந்த நாகேஷின் நடிப்புத் திறமை எல்லாப் பரிமாணங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டு நின்றது. அவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. படத்தில் வரும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற பாடலில் தனது நடனத் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தியதால் ‘அழகிய மனம்’ கொண்ட கதாபாத்திரமாக நாகேஷை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக்கியது.

இந்தப் படத்தின் வழியாகப் பிரபலமாகி ஒரு நட்சத்திர எழுத்தாளராகவும், இயக்குநராகவும் உயர்ந்தார் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். இப்படம் தேசிய விருதைப் பெற்றதோடு, இந்தி உட்பட பல மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றிகளைக் குவித்தது.

படங்கள் உதவி: ஞானம்

UP SP MLA's daughter forges MBBS answersheet, on run: Police

Indore: A team of Madhya Pradesh police will soon be heading to Hardoi in Uttar Pradesh to trace Reema Verma, daughter of Samajwadi Party MLA Rajeshwari Devi, who is wanted for allegedly forging her original answersheet of MBBS exam with the help of her two friends, police said today.
"While Nikhil Tiwari (22), a peon with Evaluation Centre of Devi Ahilya Vishwavidayala (DAVV), and Umesh Mandloi (25), a final year MBBS student of Mahatma Gandhi Memorial Medical College were arrested last night in this connection, Verma is at large," Bhawarkua police station In-charge Rajendra Soni told PTI today.
Verma, daughter of Rajeshwari Devi who represents Sandi seat in Hardoi, is the second-year student of MBBS professional at Index Medical College here.
According to police, Tiwari allegedly took out the original answersheet of Verma's Pathology paper at the behest of Mandloi, along with two blank answer sheets, outside the evaluation centre in October.
"Verma wrote on the two blank answersheets and neatly attached them with her main answersheet of Pathology subject," the inspector said, adding that no money was exchanged as all three accused are friends.
A police team will be sent to Hardoi to nab Verma, Soni added.
PTI 

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...