Saturday, December 13, 2014

புதிய வசதி அறிமுகம் : இன்டர்நெட் இல்லாமல் யு டியூப் வீடியோ பார்க்கலாம்



மும்பை: கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளித்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் இணைய தள பயன்பாடு அதிகம் இருக்கிறது. எனவே யு டியூப் அப் மூலம் வீடியோக்களை ஆன்லைன் பார்க்கும்போது அது 48 மணி நேரத்துக் சேமித்து வைக்கப்படும். ஒருமுறை இவ்வாறு பார்த்தபிறகு 48 மணி நேரத்துக்குள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோவை பார்க்கலாம். மொபைல் அப் மூலம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. இதே வசதி பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவில் தற்போது உள்ளது. அதையடுத்து இந்தியாவிலும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ‘‘இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது. 

இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் இதன்பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்’’ என்றார். இதற்கென சரிகமா டிசீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யு டியூப் ஒப்பந்தம் செய்துள்ளது. அதுபோல் இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் யு டியூபுக்கு இந்தியா 5வது பெரிய சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்! சரியாகப் பயன்படுத்தினால் நேரம் மிச்சம்!



வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் பணம் போட அல்லது தங்களுக்கு வரும் செக்குகளை கலெக்‌ஷனுக்குப் போட வங்கிகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்புவரை.


இன்றோ பணம் போட, செக்கை கலெக்‌ஷனுக்குப் போட, கணக்குப் புத்தகத்தில் வரவு வைக்க என எதற்கும் வங்கிக்குள் நுழைந்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கென இருக்கும் செல்ஃப் சர்வீஸ் மெஷின் களைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நம் வேலையை எளிதாகச் செய்து முடித்துவிட முடிகிறது.


இந்த செல்ஃப் சர்வீஸ் சேவைகளை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும், இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து வங்கித் துறை சார்ந்த சிலரிடம் பேசினோம். ஆக்ஸிஸ் பேங்கின் ரீடெயில் லெண்டிங் மற்றும் பேமென்ட் பிரிவின் தலைவர் ஜெய்ராம் தரன் இதுபற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார்.


பணத்தை டெபாசிட் செய்ய...


“பெரும்பாலான வங்கிகளில் இந்த செல்ஃப் சர்வீஸ் சேவைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. இதில் ஏடிஎம், கால்சென்டர், இன்டர்நெட் பேக்கிங், மொபைல் ஆப்ஸ் ஆகியவை மிகவும் பிரபலம். இந்தச் சேவைகளை வாடிக்கை யாளர்கள் ஏற்கெனவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதில் பணம் டெபாசிட் செய்யும் மெஷின் தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் பணத்தை டெபாசிட் செய்வது மிகவும் சுலபம்.



இந்த டெபாசிட் மெஷின் மூலமாக பணத்தை முதலீடு செய்வதற்குமுன் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, யாருடைய பெயரில் பணத்தை வரவு வைக்கிறீர்கள், அவரது பெயர், வங்கிக் கணக்கு எண், டெபாசிட் செய்யும் தொகை, ரூபாய் நோட்டு விவரம் ஆகியவற்றை முன்கூட்டியே தெளிவாக எழுதிவைத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை கசங்கிய, கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த ரூபாய் நோட்டுகள் மெஷினில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.


மேலும், ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொருவிதமான மெஷின் உள்ளது. இதில் ரூபாய் நோட்டுகளை எப்படி வைக்க வேண்டும் என்ற விவரம் இருக்கும். அதன்படி செயல்படுவதன் மூலமே சிக்கல் இல்லாமல் இந்த மெஷின்களை பயன்படுத்த முடியும். இந்த மெஷின்கள் பெரும்பாலும் வங்கிக் கிளையுடன் சேர்ந்துதான் இருக்கும். எனவே, ஏதாவது சந்தேகம் இருந்தால், வங்கி ஊழியர்களிடம் கேட்டு, பதில் பெறலாம்.


இந்த மெஷின்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ளாது.


சில மெஷின்கள் ஏற்றுக்கொண்டாலும் அந்தப் பணத்தை வரவில் வைக்காது. வங்கி ஊழியர் அடுத்தநாள் மெஷினில் இருந்து பணத்தை எடுக்கும்போது கள்ள நோட்டுகள் தனியாக இருக்கும். மேலும், இந்த மெஷினில் உள்ள சாஃப்ட்வேர், கள்ள ரூபாய் நோட்டை யார், எந்த நேரத்தில் டெபாசிட் செய்தார்கள் என்பதை கச்சிதமாக தெரிவித்துவிடும். இதுகுறித்த விவரம் ஆர்பிஐக்குத் தெரிவிக்கப்படும். எனவே, ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்முன், அவற்றை ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்துவிட்டு, அதன்பிறகு டெபாசிட் செய்வது நல்லது” என்றார்.


தவறு ஏற்பட்டால்..?


இந்த மெஷின்களில் பணத்தை டெபாசிட் செய்யும்போது ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மெஷின் தவறாகக் காண்பித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் எடுத்துச் சொன்னார்.


“பெரும்பாலான மெஷின்கள் ரூபாய் நோட்டுகளை மிகச் சரியாக எண்ணி உங்களுக்குக் காட்டும். அதில் எதாவது பிரச்னை இருந்தால், அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பைத் தவறவிட்டீர்கள் எனில், இதுகுறித்து வங்கிக் கிளையில் புகார் தெரிவிக்கலாம். அடுத்தநாள் வங்கி ஊழியர் மெஷினை திறந்து பரிசோதனை செய்யும்போது, முதலீடு செய்த தொகை குறித்த விவரம் தெரிந்துவிடும். நீங்கள் சொல்வது உண்மை எனில், சரியான தொகையை உங்கள் கணக்கில் வங்கி ஊழியர்கள் வரவு வைப்பார்கள்.


பணத்தை முதலீடு செய்யும் கணக்கு எண்ணை பதிவு செய்ததும், வாடிக்கையாளரின் பெயரை திரையில் காண்பிக்கும். இது சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்வது அவசியம். நோட்டுகளின் விவரத்தை இப்படி சரிபார்த்துக் கொள்வது நல்லது. பரிவர்த்தனை முடிந்ததும் பணத்தை டெபாசிட் செய்ததற்கான ரசீது வரும். இதைப் பெறுவது முக்கியம்” என்றார்.

காசோலையை கலெக்‌ஷனுக்குப் போட..!

அடுத்து, காசோலையை எப்படி கலெக்‌ஷனுக்குப் போடுவது என்று பார்ப்போம். முன்பெல்லாம் காசோலைக்கு உண்டான விண்ணப்பத்தை நிரப்பி, கவுன்டர் ஃபைலை மட்டும் நாம் கிழித்து வைத்துக் கொண்டு, அதற்கென இருக்கும் பெட்டியில் கலெக்‌ஷனுக்குப் போட்டுவிடுவோம். ஆனால், இப்போது இதையும் மெஷின் மூலமாக முதலீடு செய்ய முடியும். இதுகுறித்து கனரா வங்கி அதிகாரிகள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.


“யாருடைய வங்கிக் கணக்கில் காசோலை முதலீடு செய்யப்படுகிறதோ, அவர் பற்றிய விவரம், செக்கில் குறிப்பிட்டுள்ள தொகை, தேதி, ஆகியவற்றைக் கொடுத்து காசோலையை மெஷினில் வைக்க வேண்டும்.


அதன்பிறகு காசோலையை, மெஷின் திரையில் காட்டும். அதைப் பார்த்து ஓகே செய்தால் போதும். இப்படி டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஒரேநாளில் பணமாக்கப்பட்டு உங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், கசங்கிய, கிழிந்த காசோலைகளை மெஷின் அனுமதிக்காது. எனவே, காசோலைகளை மடிக்காமல் வைத்திருப்பது நல்லது” என்றார்கள்.


வங்கிகளின் வேலைபளுவைக் குறைக்க வும், வாடிக்கையாளர்களின் பொன்னான நேரம் வீணாகாமல் இருக்கவும்தான் இந்த செல்ஃப் சர்வீஸ்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதனைச் சரியாகப் பயன் படுத்துவதன் மூலம் அங்குமிங்கும் அலையாமல், நேரத்தை மிச்சப்படுத்தலாமே!

மாலைப்பொழுது...மயக்கும் கடை வீதி!


ஜில்லுனு அடிக்கிற காற்று... இதமா இருக்கிற கால நிலை... சுளீர்னு அடிக்கிற வெயிலின் தாக்கம் குறைந்து சூரியனின் அழகான இன்னொரு முகம்... மாலை ஒரு 5 மணி இருக்கும்.
இடம்- புதுக்கோட்டை கலெக்டர் ஆபீஸ் நோக்கி  செல்லும் வீதி...

ரோட்டு ஓரத்துல இருக்குற மாலை நேரக் கடைகள் எல்லாம், மழை பொழிந்த உடனே தலை நீட்டும் காளான்களை போல மெல்ல மெல்ல தனது இடங்களில் முளைக்க ஆரம்பிக்கின்றன. சும்மா "கம கம"னு அடிக்கிற மசால் வாசம்,  ரோட்ல போறவங்களை எல்லாம் தன் பக்கமா ஈர்க்க ஆரம்பிக்க, சுடச்சுட உடனே ரெடியாகுற ஃபாஸ்ட்புட் வியாபாரம் களைக்கட்ட ஆரம்பிக்குது...
"வாங்க சார் என்ன சாப்பிடுறீங்க? வாங்க சார் நம்ம கடைக்கு வாங்க சார்! வாங்க சார்..!."னு ரிசர்வேசன் இல்லாத லாங்க் டிராவல் பஸ்ல, டிக்கெட் ஃபில் பண்ற மாதிரி பாஸ்ட்புட் கடைகளிலும் வாடிக்கையாளர்களை புக் பண்றதுக்குன்னே நிறைய ஆளுங்க அங்கேயும் இங்கேயும் தங்களோட ஆள் பிடிக்கிற வேலையில மும்முரமா இருக்காங்க!

அந்த வழியா போன நம்மளையும் "வாங்க சார்!., சூடா சிக்கன் 65, காளான் கிரேவி, மட்டன் சுக்கா, பானி பூரி, பேல் பூரி, போலி, சிக்கன் பக்கோடா, சிக்கன் நூடல்ஸ், சிக்கன் ரைஸ், எக் நூடல்ஸ், எக் ரைஸ், மட்டன் சூப்!..." இப்படி எல்லா வகையான டிஷ்சையும் ஒரே மூச்சுல சொல்லிமுடிச்சு நம்மள கையோட அவங்க கடைக்கு கூட்டிட்டு போய் உட்காரவைச்சுட்டாரு ஒரு ஆள் பிடிக்கிறவரு!

மேலும் கீழுமாக பார்வையை ஓடவிட்டோம். 20 பேர் ஒரே நேரத்துல உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி மரத்துக்கு கீழே டேபிள் எல்லாம் போட்டு, மழை பெய்தால் வாடிக்கையாளர்கள் நனையாம இருக்க, மரக்கிளைகளில் தார்பாய்கள் எல்லாம் விரிச்சு, ஒரு மினி ஹோட்டல் பீலிங்ஸ் ஏற்பட்டது.  நம்மளோட ஆர்டரை வாங்கிட்டு போய்ட்டு மூணே நிமிடத்துல, சுடச்சுட கொண்டுவந்து "சார் இந்தாங்க சார் உங்களோட ஆர்டர்"னு பணிவோட ஒரு பிளேட் நீட்டப்பட்டது!
அதை ருசி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,  நம்மை மாலைப்பொழுதின் மயக்கத்திலிருந்து விழித்தெழ வைப்பதுபோன்று, "பளீர்னு நம் கண்களை கவரும் மின்விளக்குகளும், சீரியல் செட்டுகளும் மினிமினுப்புடன் ஒளிருகின்றன.  நேரம் செல்லச்செல்ல கூட்டம் அலைமோதுகிறது. கடையைச்சுற்றி நிற்பதற்கு கூட இடமில்லை எங்கின்ற போது "ஆள் பிடிப்பவர்கள்" பார்சல் கட்டும் டிபார்ட்மெண்ட்டிற்கு உடனடியாக மாற்றப்படுகிறார்கள்.

கேஷ் கவுண்டரில் இருக்கும் இருவர் பணத்தை உள்ளே வைப்பதும், வெளியே எடுப்பதுமாக மாறி மாறி கணக்கில் தவறில்லாமல் தனது வேலையை செய்கின்றனர். "வியர்த்து விறுவிறுத்துக்கிட்டே நிற்பதற்கு கூட நேரமில்லாமல் கேட்குற ஆர்டரை உடனே செஞ்சு தர ஷெப்தான் அங்க ஹைலைட் பர்சன்!
"ஆர்டர் மொத்தத்தையும் காதுல வாங்கி உடனே செஞ்சு, அத கேட்குற வாடிக்கையாளர்களுக்கு கரெக்டா சப்ளையரை கூப்பிட்டு சர்வ் பண்ற வேலையை கொஞ்சமும் சலிப்பு இல்லாம தொடர்ந்து செய்யுற ஷெப்ப்பிடம் பேச்சுக்கொடுத்தோம்.
" என் பேரு ஜெயராமன். நான் 8-வது வரைக்கும் படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே நல்லா சமைப்பேன் சார்.  சாயங்காலம் 5 மணிக்கு திறக்குற நம்ம கடை இரவு 10 மணிக்கு தான் மூடுவோம். கடைய திறந்த 1.30 மணி நேரத்துலயே போட்ட முதலீட்டை எடுத்துடுவோம். மத்தது எல்லாம் லாபம் தான். இப்ப நம்ம கடைக்கு நிறைய ரெகுலர் கஸ்டமர்ஸ் வர்றாங்க!. சிலர் நம்ம கடையோட டேஸ்ட்ட கேள்விப்பட்டு வர்றாங்க. அவங்களோட உடல் நலத்தையும் கருத்துல எடுத்துக்கிட்டு நாங்க நல்ல சுத்தமான முறையில சமைக்கிறதுனால நிறைய வாடிக்கையாளர்கள் மன நிறைவோட சாப்பிடுறாங்க!..." என்றார் உற்சாகத்துடன்!
"இப்ப நமக்கு போட்டியா நிறையபேர் ஃபாஸ்ட்புட் கடையை நமக்கு பக்கத்துல திறந்துருக்காங்க. ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் இடையே இருக்கிற நட்பும் ஆதரவும்தான் நம்ம வியாபாரத்தை நல்ல முறையில கொண்டுசெல்லுது!..." என்று பேசிமுடித்துவிட்டு மீண்டும் தனது ஆர்டர்களை கேட்டு விறுவிறுப்புடன் வேலையை தொடங்கிவிட்டார்!.

நாம் நடை கட்ட துவங்க, மீண்டும் அந்த "வாங்க சார்! வாங்க சார்! " குரல்,  மெல்ல மெல்ல சுருதி குறைந்து கேட்டுக்கொண்டிருந்தது.

ர.நந்தகுமார்

ஆயிரம் வாரங்கள் தாண்டிய காதல்!



ஒரு திரைப்படத்தை குறைந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு, ஓடும் நாட்களின் அடிப்படையில் வெற்றியைக் கணித்தது ஒரு காலம். அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்து, முதல்நாள் வசூல் அடிப்படையில் திரைப்படம் வெளியான அன்று மாலையே படத்தின் வெற்றிவிழா கொண்டாடுவது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலை.



அந்த அளவுக்கு டெக்னாலஜியின் வேகத்துக்கு சினிமாவும் ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நிலையான காலக்கட்டத்திலும் ஒரு படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, தொடர்ந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அதுதான் ஒரு படைப்பின் உச்சகட்ட வெற்றி!

அந்த உச்சகட்ட வெற்றியைத் தொட்டுத் தொடர்ந்துகொண்டிருக்கிறது 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே' என்ற இந்திப்படம். ஷாரூக்கான், கஜோல், அனுபம் கெர், கரண் ஜோஹர் நடிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படம் வெளியானது அக்டோபர் 20, 1995. காதலை மையமாகக்கொண்ட சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம்தான், ஷாரூக்கானை இந்தியாவைக் கடந்தும் பரவலாக்கியது.



படம் வெளியான நாளிலிருந்து மும்பை 'மரதா மந்திர் சினிமா' திரையரங்கில் 19 வருடங்களாகத் தொடர்ந்து திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லி ஜாயங்கே' திரைப்படம் நேற்றுடன் 1000 வாரங்களை நிறைவு செய்திருப்பதோடு, பகல் 11.30 மணிக்காட்சியாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

- கே.ஜி.மணிகண்டன்

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...