துபாய்: இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் அரபு நாட்டு நிறுவனங்கள், அவர்களின் விவரங்களை, தங்கள் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, அந்நாட்டிலுள்ள இந்திய துாதரகம், உத்தரவிட்டுள்ளது.கடந்த வாரம், இந்தியத் துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடிமக்களை வேலைக்கு எடுக்கும் அரபு நிறுவனங்கள், அவர்களின் விவரங்களை, அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.50 லிருந்து 150 வரை ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள், ஜூன் 30க்கு முன்னரும்; 20லிருந்து 50 வரை ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள், ஜூலை 31க்கு முன்னரும்; 20க்கும் குறைவான ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள், ஆகஸ்ட் 31க்குள்ளும் பதிவு செய்ய வேண்டும். 150க்கும் மேல் ஆட்களை எடுக்கும்போது உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.ஊழியர் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும்போது, நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாக குறிப்பிட வேண்டும்.இது, அரபு நாடுகளில் வேலைக்கு சேரும் இந்தியர்களின் விவரங்களை எளிதாக அறியவும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கவும் உதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது
Wednesday, June 3, 2015
நர்சிங் கல்லூரிகளில் ஆய்வு: அரசு உத்தரவு
தமிழகத்தில் தனியார் நர்சிங் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க, சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நர்சிங் கல்லுாரி, நான்கு ஏக்கரில் அமைந்து இருக்க வேண்டும்; 4,000 சதுர அடியில் கட்டடங்கள் அமைந்து இருக்க வேண்டும்; 2,000 சதுரடி கட்டடத்தில், 20 மாணவியர் படிக்க வேண்டும். விடுதியில், ஓர் அறையில், இரண்டு மாணவியர் தங்கியிருக்க வேண்டும்; ஆறு மாணவியருக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும். போதுமான வகுப்பாசிரியர்கள் இருக்க வேண்டும். இவர்கள் எம்.எஸ்சி., - பி.எஸ்சி., நர்சிங் படித்து போதுமான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
நுாலகத்தில் படிக்கும் வசதியுடன், அனைத்து புத்தகங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதங்கள் குறித்தும் ஆய்வு செய்து விவரங்களை பெற வேண்டும். கல்லுாரியில் இருந்து பஸ் போக்குவரத்து வசதி உள்ளதா என்பதை ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை உடனே அளிக்க வேண்டும், என, அரசு உத்தரவிட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில், தரமற்ற நர்சிங் கல்லுாரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. - நமது நிருபர்

வெளிநாட்டு வேலைக்கு செல்ல புது நடைமுறை
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர், இந்திய துாதரகத்தின், இடம் பெயர்வு பிரிவில் (மைக்ரேஷன்) அனுமதி பெற வேண்டும் என்ற, புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து, பல்வேறு வேலைகளுக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில், வெளிநாட்டில் வேலைக்கு செல்வோருக்கான, தனி அமைச்சகமே உண்டு.
விவரம் இல்லைஆனால், தமிழகத்தில், இதுபோன்ற அமைச்சகம் இல்லை. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டில் வேலைக்கு சென்று உள்ளோர் விவரம், இதுவரை முழுமையாக இல்லை.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர, தனி நிறுவனத்தை, தமிழக அரசு வைத்திருந்தாலும், அதன்மூலம் வேலை பெறுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.
தனியார் ஏஜன்டுகள் மூலம், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் தான் மிக அதிகம். இவர்களின் விவரங்களை சேகரிக்க, தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அவை முழுமையான பயன் அளிக்கவில்லை.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான, மத்திய அமைச்சகத்தின் தகவலின் படி, 2015 ஜனவரி வரை, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2.71 கோடி. இதில், இந்திய வம்சாவளியினர், 1.57 கோடி. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், 1.13 கோடி.வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் பற்றிய போதிய தகவல்கள் இல்லாத நிலையில், அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் நெருக்கடிகளின் போது, உதவுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. பல நேரங்களில், அவர்கள் எங்கு பணியாற்றுகின்றனர்; ஊதியம் எவ்வளவு; தங்கி உள்ள வெளிநாட்டு முகவரி என்ன என்பது கூட, அரசுக்கு தெரிவதில்லை.
புது உத்தரவு:இந்நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர், குறிப்பாக, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர், இந்திய துாதரகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.இதன் மூலம், வெளியுறவு அமைச்சகத்தின், இடம்பெயர்வு இணைய தளத்தில், வேலையின் விவரம், வேலைக்கு அமர்த்தப்படும் நிறுவனத்தின் விவரம், வேலை ஒப்பந்தம் ஆகியவற்றை தெரிவித்து, அனுமதி பெற வேண்டும்.
'இந்த நடைமுறை, அரசு சார்ந்த வேலைவாய்ப்பு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம், செல்லும் அனைவருக்கும் பொருந்தும்' என, உத்தரவிடப்பட்டு
உள்ளது. இப்புதிய நடைமுறை மூலம், வெளிநாட்டுக்கு செல்வோரின் முழு விவரங்கள், அரசுக்குக் கிடைக்கும் என, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர் -
பிஎஸ்என்எல் ரோமிங்: ஜூன் 15 முதல் இலவசம்
புதுடெல்லி
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு வரும் 15-ந்தேதி முதல் இலவச ‘ரோமிங்’ சலுகை வழங்கப்படும் என மத்திய தொலைதொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
மீளும் பி.எஸ்.என்.எல்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, ஓராண்டை நிறைவு செய்துள்ளதையொட்டி, மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். நிறுவனம், 2004-ம் ஆண்டு, ரூ.10 ஆயிரம் கோடி லாபம் சம்பாதித்தது. 2014-ம் ஆண்டு, பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றபோது பி.எஸ்.என்.எல். ரூ.7 ஆயிரத்து 500 கோடி நஷ்டத்தில் இயங்கியது. எம்.டி.என்.எல். நிறுவனம், 2008-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்தது. இப்போது நஷ்டத்தை சந்தித்து வருகிறது. (எம்.டி. என்.எல்., டெல்லி, மும்பையில் தொலைதொடர்பு சேவை வழங்குகிறது. நாட்டின் எஞ்சிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை அளிக்கிறது).
பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இருந்து மீள தொடங்கி இருக்கிறது.
இலவச ‘ரோமிங்’
வரும் 15-ந்தேதி முதல் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங் சலுகையை வழங்கும். (இதன் காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு செல்கிறபோது பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் வருகிற இன்மிங் கால்ஸ் என்னும் உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது.)
இரு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் புத்துயிரூட்ட சாத்தியமாகக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இவை வெற்றி அளித்து வருகின்றன. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வருமானம், 2014-15 ஆண்டில் 2.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. செயல்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 47 லட்சமாக உயர்ந்துள்ளது.
அலைக்கற்றைகள் (பிற நிறுவனங்களுடன்) பகிர்தல், வர்த்தகக்கொள்கை ஆகியவை, இந்த மாதம் மந்திரிசபை முன் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் ரோமிங் சலுகை, ஓராண்டு காலத்திற்கு மட்டும்தான் என தகவல்கள் கூறுகின்றன.
‘ஈடு கட்டலாம்’
நிருபர்கள் சந்திப்பின்போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா, “இலவச ரோமிங் சலுகை காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வருமானம் சற்றே குறையும். ஆனால் பிற சேவை நிறுவனங்களுக்கு பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மாறுவதை தடுத்து நிறுத்த முடியும். புதிய வாடிக்கையாளர்களை கவர முடியும். இதன்மூலம் வருவாய் குறைவை ஈடுகட்டி விட முடியும் என எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.
அரசு மருத்துவர்கள் 600 பேருக்கு நோட்டீஸ்; ஒடிஸா நடவடிக்கை: முகவரி தெரியாமல் நாளிதழ்களில் விளம்பரம்
ஒடிஸா மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் உள்ள 613 மருத்துவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அந்த மாநில அரசு திணறி வருகிறது.
இதையடுத்து, விளக்கம் கோரும் நோட்டீஸ்களை நாளிதழ்களில் பொது விளம்பரமாக வெளியிட்டு, ஒரு மாதத்தில் பதிலளிக்கக் கோரியும், தவறினால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
ஒடிஸா அரசின் அறிவிப்பு விவரம் வருமாறு:
சரியான முகவரியின்றி, தேடிக் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருக்கும் மேற்கண்ட 613 அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்புவது என்பது இயலாத செயல்.
எனவே 10 நாள்களில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ளுமாறு மேற்கண்ட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நோட்டீûஸ பெற்றுக்கொண்ட 20 நாளில் எழுத்துபூர்வமான விளக்கத்தை அளிக்குமாறு அவர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
நோட்டீûஸ பெற்று 30 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க தவறினால், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் சரியானவை எனக் கருதப்படும்.
அதற்கேற்ப துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் அதானு எஸ். நாயக் கூறியதாது:
அனுமதியின்றி விடுப்பில் இருந்துகொண்டு நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருந்த 67 மருத்துவர்களை இதற்கு முன் அரசு பணி நீக்கம் செய்திருக்கிறது.
மருத்துவர்களின் தட்டுப்பாட்டைப் போக்க தாற்காலிக அடிப்படையில் 370 மருத்துவர்களை சில தினங்களில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று நாயக் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலவசப் பேருந்து அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணிக்கலாம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
பள்ளி மாணவ, மாணவிகள் புதிய இலவசப் பேருந்து அட்டை கிடைக்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவசப் பயண அட்டையைக் காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பேருந்து அட்டை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை செவ்வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 25 லட்சத்து 44 ஆயிரத்து 576 இலவச பேருந்து பயண அட்டைகள் 17 மையங்களில் தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இம்முறை இந்தப் பணியைத் துரிதப்படுத்தும் வகையில், கூடுதலாக 5 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 22 மையங்கள் மூலம் பயண அட்டைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் புதிய இலவசப் பேருந்து பயண அட்டை கிடைக்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைக் காண்பித்து அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸ் விவகாரம்; அமிதாப், மாதுரி, பிரீத்தி ஜிந்தாவை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி
மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ்லே நிறுவன அதிகாரிகள் இருவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய பிகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 5 பேரையும் காவல் துறை கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் மீது புகார் தெரிவித்து பிகார் மாநில வழக்குரைஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸாஃபர்பூரின் லெனின் செüக் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 30-ஆம் தேதி மேகி நூடுல்ஸ் வாங்கி வந்து சாப்பிட்டேன்.
அதன் பிறகு, எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோகன் குப்தா, இணை இயக்குநர் சபாப் ஆலம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேகி நூடுல்ஸ் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, மாவட்ட தலைமை நீதிபதி ராமசந்திர பிரசாத் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஹரியாணா அரசு அதிரடி நடவடிக்கை: இதனிடையே, மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு உகந்ததா? என்பதை ஆய்வு செய்ய ஹரியாணா மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்வோம். அதில், உணவு தரக் கட்டுப்பாடு விதிகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வந்துள்ள மேகி நூடுல்ஸ் பொட்டலங்களை திரும்ப பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர்.
"மேகி நூடுல்ஸ்' மாதிரிகளை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் "மேகி நூடுல்ஸ்' மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை செய்யுமாறு தமிழக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் "மேகி நூடுல்ஸ்' மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை,கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய ஆறு இடங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வு பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
"மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருளில் சுவையை அளிக்கும் "மோனோசோடியம் குளுட்டாமேட்' என்ற ரசாயனப் பொருள், ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா என சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருளுக்கு கேரள மாநிலம் தடை விதித்திருப்பதையடுத்து தமிழக அரசும் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
Subscribe to:
Comments (Atom)
கார்த்திகையில் அணைந்த தீபம்!
கார்த்திகையில் அணைந்த தீபம்! பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...