Friday, April 29, 2016

எம்ஜிஆர் 100 | 54 - ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்! ....தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்கிறாரோ? ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. தன் ரசிகர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதேபோல அவர் மீதும் ரசிகர்கள் உயிரையே வைத்திருந்தனர். உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் படம் பார்த்த வெறி பிடித்த ரசிகர்களும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை பார்க்கத் துடித்த, அளவுக்கு மீறிய பாசக்கார ரசிகர்களும் உண்டு.

எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணரா மல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.

அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப் பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.

நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’

- தொடரும்...

எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டி லேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங் கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது.

திரையில் மிளிரும் வரிகள்

திரையில் மிளிரும் வரிகள் 11: சாலை வழி எங்கும் பூவை இறைத்திடுங்கள்


பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படமும் அதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் தமிழ்த் திரைப்பட உலகில் பேரும் புகழும் பெற்றன. அதிலும் 16-வயது தேவி கூந்தல் அலைபாய, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு ‘சீமையிலிருந்து கோட்டு சூட்டு போட்டு வரும்’ மணாளனை நினைத்துப் பாடும் ‘செந்தூரப் பூவே’ தமிழில் சிறந்த திரைப்படப் பாடல்களைத் தொகுத்தால் முதல் 25 இடத்தில் கட்டாயம் இடம்பெறும்.

ஆனால், செந்தூரப் பூ என்றொரு பூ கிடையாது. தேவி உட்கார்ந்திருக்கும் மரத்தில் குங்குமும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் காணப்படும் பூவைத்தான் பாடலாசிரியர் கங்கை அமரன் குத்துமதிப்பாக ‘செந்தூரப் பூவே’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். பாடலில் ஒரு கட்டத்தில் அந்த மரத்தின் கிளைகளில் தொங்கியபடியும் பாடுகிறார்.

அந்த மரத்தின் பெயர் முருக்க மரம். புரசு என்றும் குறிப்பிடப்படும் இம்மரம் குறிஞ்சிப் பாட்டில் பலாசம் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் புரசு, பொரசு, புரசை போன்ற பெயர்களைப் பெற்றது. புரசு மரங்கள் செழித்து வளர்ந்திருந்ததால் சென்னையில் உள்ள சிற்றூர் புரசைவாக்கம் என்ற பெயர் பெற்றது. இங்குள்ள கங்காதீஸ்வரர் கோயிலின் தல விருட்சம் புரசு மரம்தான். ஆங்கிலத்தில் இதை Flame of Forest என்று அழைப்பார்கள். இந்த மரம் பூத்துக் குலுங்கும் காலங்களில் வனம் முழுவதும் தீப்பற்றிச் செந்தழலால் சூழப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதால் அப்பெயர். பூவின் வடிவம் கிளியின் அலகையொத்துக் காணப்படும்.

பருவத்தின் வாசலைக் கடந்து நிற்கும் கதாநாயகி செந்தூரப் பூவையும் சில்லெனக் குளிறும் காற்றையும் ‘என் மன்னன் எங்கே’ என்று கேட்டுத் தூது விடுகிறாள்.

தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்

கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்

கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே..

என்னை இழுக்குது அந்த நினைவதுவே..\

வண்ணப் பூவே… தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ..

தமிழ் இலக்கியத்தில் தூது இலக்கியத்துக்குச் சிறப்பிடம் உண்டு. நாகணவாய் (மைனா), நாரை, மேகம், வண்டு, அன்னம், மயில், கிளி, தென்றல், விறலி என ஏராளமான தூதுவர்கள் காதலுக்காகக் களமிறங்குகிறார்கள்.

பக்தி இலக்கியத்தில் திருமங்கை யாழ்வார் செம்போத்து, பல்லி, காகம், ஏன் கோழியைக்கூடத் தூது விடுகிறார்.

நம்முடைய கதாநாயகி தென்றலைத் தூது விட்டு சேதிக்காகக் காத்திருக்கிறாள். அது வரும் வரையில் கண்களை மூடிக் காதலனின் தோற்றத்தை உருவகம் செய்து இன்பக் கனவினில் துய்க்கிறாள். கன்னிப் பருவத்தில் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது காதல். அந்தச் சுகந்த நினைவுகள் அவளை இழுக்கின்றன. ‘என்னை இழுக்குது அந்த நினைவதுவே’ என்ற வரிகளைத் தாபம் பொங்கப் பாடுகிறார் எஸ். ஜானகி. அதற்கு தேவியின் முக பாவனைகளும் கச்சிதம். பூவையும் தென்றலையும் மீண்டும் ஒருமுறை அழைத்து, தன்னைத் தேடி சுகம் வருமா என்று வினவுகிறாள்.

புல்லாங்குழல் குயில் போல் பாடும் இடத்திலிருந்து, “நீலக் கருங்குயிலே… தென்னஞ் சோலைக் குருவிகளே” என்று சரணம் தொடங்குகிறது.

மணலில் தடம் பதித்து பின்னர் அதில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூ கொடிகளில் புரள்கிறாள். கடற்கரை மணலில் ஊதா நிறத்தில் பூக்கும் அடுப்பம் பூவும் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றிருக்கிறது.

அடுத்து,

‘கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே

மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்

சாலை வழி எங்கும் பூவை இறைத்திடுங்கள்

வண்ணப் பூவே… தென்றல் காற்றே

என்னைத் தேடி சுகம் வருமோ’

என்று கேட்கிறாள்.

மயிலையும் பாடித் திரியும் பறவை களையும் அழைத்து மண மாலை வரும் நாள் குறித்துக் கேட்கிறாள்.

பராங்குச நாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார்,

‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னிலப் புள்ளினங்காள்’

என்று பறவைகளை அழைத்து ‘என் நிலை மையுரத்தே’ என்று பறவைகளைத் தூது விடுகிறார். மணவாளன் வரும் நாளில் சாலையெங்கும் பூவைத் தூவச் சொல்கிறாள் ‘16 வயதினிலே’ நாயகி.

கண்ணனுக்காகத் தூது விட்ட ஆண்டாள், ‘வாரணம் ஆயிரம் வலம் சூழ’ அந்த அரங்கனை மணந்துகொண்டாள். பராங்குசநாயகியும் பரகாலநாயகியும் கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையவர்களாகி அவன் தாள் அடைந்தனர். ஆனால், மயிலையும் குயிலையும் தூது விட்ட நம்முடைய கதாநாயகி மயிலு, சீமையிலிருந்து வந்தவனை நம்பி ஏமாறுகையில் மனம் வலிக்கிறது. அவள் மனதை மட்டுமே விரும்பும் சப்பாணி என்ற கோபாலகிருஷ்ணனுக்காக அவள் காத்திருக்கிறாள்.

தொடர்புக்கு: bagwathi@gmail.com

இன்னும் தகவல் வரவில்லை: மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, தமிழகத் தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை எந்த முறையில் அமைந்திருக்கும்? என்ற சந்தேகம் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்குமா அல்லது பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளுமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலாவிடம் கேட்டபோது, “மருத் துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து (எம்சிஐ) எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. தமிழக அரசு என்ன சொல்கிறதோ, அதை மருத்துவ கல்வி இயக்ககம் பின்பற்றும்” என்றார்.

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு:

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு


மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 சதவீத இடங்கள் அதாவது, 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன). எஞ்சிய 2,257 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இந்த இடங்கள் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.

தமிழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வரை மருத்துவ படிப்புக்கான இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கருதிய தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. அதுமுதல் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு பிடிஎஸ் படிப்புக்கு மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுப் போய்விடும். எஞ்சிய 85 இடங்களை தமிழக அரசு நிரப்புகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் வழங்கப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஒரு விஷயத்தை பயன்பாடு சார்ந்த அடிப்படையில் படித்துவந்த சிபிஎஸ்இ மாணவர்களுடன் தேர்வுக்கு நேரடி வினா-விடை அடிப்படையில் படித்துவந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் போட்டிபோடுவது என்பது இயலாத காரியம்.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் துணை இயக்குநரான சிவா தமிழ்மணி கூறும்போது, “இந்தியாவில் பள்ளி மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். எனவே, கல்வியின் தரம் நிச்சயம் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த சூழலில் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் அதை எப்படி ஏற்க முடியும்?. இந்த நுழைவுத்தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும்தான் பயன்பெறுவார்களே தவிர மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரான கே.பி.ஓ. சுரேஷ் கூறும்போது, “மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்புகள் கண்டிப்பாக குறையும்” என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிவிட்டு எம்பிபிஎஸ் சேரும் ஆசையில் இருக்கும் மாணவி மு.வெ.கவின்மொழி கூறும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும், மாநிலப் பாடத்திட்டத்துக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு என்றால் நிச்சயம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படிதான் அமைந்திருக்கும். அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நுழைவுத்தேர்வுக்கான மாதிரி விடைகளுக்கு விடையளிக்க முயன்றேன். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த என்னால் 10 கேள்விகளில் வெறும் 2 கேள்விக்கு மட்டுமே சரியாக விடையளிக்க முடிந்தது. தற்போது திடீரென நுழைவுத்தேர்வு என்று அறிவித்தால் என்னைப் போன்ற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளால் எப்படி தயாராக முடியும்?. தனியார் பள்ளிகளில் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எளிதாக இருக்கும் பிளஸ் 2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேர்ந்துவிடலாம் என்ற கனவில் நிறைய மாணவ, மாணவிகள் உள்ளனர். இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பு என்னைப் போன்ற கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

கட்டாய நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்..DINAMALAR

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்படுகின்றன. இந்த இடங்களுக்கு மட்டுமே, சி.பி.எஸ்.இ., மூலம், அகில இந்திய மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கோ, சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் இடங்களுக்கோ, நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதில்லை. 

இதற்காக, 2006ல், 'தமிழ்நாடு தொழில்படிப்பு கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம் - 2006' இயற்றப்பட்டது

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பானவழக்கில், சுப்ரீம் கோர்ட், பொது மருத்துவ நுழைவுத்தேர்வை கட்டாயம் ஆக்கி உள்ளது; இது, தமிழகத்தில், 2007 முதல், நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு சிக்கலாக அமையும்.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தின், 'தொழில் ரீதியான கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம் - 2006' குறித்து, சுப்ரீம் கோர்ட், எதுவும் தெரிவிக்க வில்லை. இருந்தபோதிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்தே நுழைவுத்தேர்வு நடத்த வழி வகை

செய்கிறது. தமிழகத்தில் உள்ள சூழல் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப் பட்டது. 

வட மாநில மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துவர் என்பது ஏற்புடையது அல்ல. இருந்த போதும், தமிழகத்தின் தொடர் நடைமுறைகள் குறித்து தெரிவித்து, மறு சீராய்வு கோரி, மாநில அரசு சார்பில், மனு தாக்கல்செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'பொது நுழைவுத்தேர்வு நடந்தாலும், 85 சதவீத இடங்கள், நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக மாணவர்களுக்குத் தான் கிடைக்கும்' என, சுகாதாரத்துறை 

அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., படித்த மாணவர்கள் தான் அதிக அளவில் இடம் பிடிக்க முடியும் என்பதால், கிராமப்புற மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர்வது சிக்கலாக அமையும்.

'அழுத்தம் தர வேண்டும்'

சுப்ரீம் கோர்ட் உத்தரவு, தமிழக மாணவ, மாணவியரிடம், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழகத்திற்கு, நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற, மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில், உடனடியாகப் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும், தமிழக நிலைமைகளை தெளிவுபடுத்தவும், மூத்த அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரச் செயலரையும் அனுப்பி வைக்க வேண்டும்.

கருணாநிதி, தி.மு.க., தலைவர்

'அவகாசம் வேண்டும்'


'மெரிட்' அடிப்படையில் சேர்க்கை என்பது நல்லதுதான். இதற்கு, இரண்டு ஆண்டுகளாவது அவகாசம் கொடுத்து செயல்படுத்தி இருக்க வேண்டும். உடனே செயல்படுத்தினால், சி.பி.எஸ்.இ., தேர்வுஎன்பதால், கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிப்பர். 
கே.செந்தில், தலைவர், தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம்

'சூழலுக்கு ஏற்ப முடிவு'


நுழைவுத்தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும். அதன் மூலம், திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். மிக குறுகிய காலத்தில் இந்த தேர்வை அறிவித்துள்ளதால், நுழைவுத்தேர்வு

மதிப்பெண் அளவை, சூழலுக்கு ஏற்ப, தமிழக அரசே முடிவு செய்து, அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில், சேர்க்கை நடத்த வேண்டும்.ஜேம்ஸ்பாண்டியன், இயக்குனர் எஸ்.ஆர்.எம்., மருத்துவ பல்கலை

'பாதிப்பு வராமல் இருக்க புது ஐடியா'


சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழக அரசு, மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தி, மாணவர்களை சேர்க்க முடியும். அதேநேரம், நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை, 1 சதவீதமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்ணை, 99 சதவீதமாகவும் கணக்கிட்டு, சேர்க்கை நடத்தலாம். அதனால், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில், நுழைவுத்தேர்வை நடத்தியதாகவும் இருக்கும். ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்

கட்டாயப்படுத்துவது சரியல்ல

தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்த சிந்தனையே இல்லாத மாணவர்களை, இரண்டரை மாதங்களில் ஆயத்தமாக வேண்டும் என, கட்டாயப்படுத்து வது சரியல்ல. 

நுழைவுத்தேர்வுகளை எதிர்க்கும், மாநில அரசுகளுடன் இணைந்து, 'பொது மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாது' என, தமிழக அரசு அறிவிப்பதோடு, பொது மருத்துவ நுழைவு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்ய வேண்டும். 

-அன்புமணி, இளைஞரணி தலைவர், பா.ம.க.,

- நமது நிருபர் குழு -

SC Orders National Eligibility Cum Entrance Test (NEET) in Two Phases; Exams on 1st May and July 24th [Read Order] Read more at: http://www.livelaw.in/sc-orders-national-eligibility-cum-entrance-test-neet-two-phases-exams-1st-may-july-24th/ thanks to livelaw.in




document source: livelaw.in..thanks to the webpage

Thursday, April 28, 2016

எம்ஜிஆர் 100 | 53 - உச்சம், தாழ்வு என்பதெல்லாம் ஒரு மயக்க நிலை!

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.

1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’

இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மை யார் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.

‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்ட ரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன். காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆர். தொடர்ந்து, ‘‘கே.பி.கேசவ னின் நடிப்பாற்றல் ‘மர்மயோகி’ படம் வெளியானபோதும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. கலைஞர் களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த் தும்’’ என்று கூறியுள்ளார். இப்படி புகழைப் பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக் கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ் வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.

அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும், குறிப்பாக இன்றைய அரசியல் வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன் னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் அரங்கண்ணல்.’’

அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார். ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான், மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். உச்ச நிலையிலேயே இருந்தார், இருக்கிறார், இருப்பார்!

- தொடரும்...

‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு நாடகத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததால் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் 1959-ம் ஆண்டு அவர் நடித்த ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படம் மட்டுமே டிசம்பர் 31-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை எழுதி யவர் அண்ணா. வசனம் இராம.அரங்கண்ணல். எம்.ஜி.ஆருடன் நடிகை ஜமுனா இந்த ஒரு படத்தில் தான் நடித்து உள்ளார்.

NEWS TODAY 18.12.2025