Tuesday, July 5, 2016

எது ஊடக அறம்?

Dinamani
எது ஊடக அறம்?


By ஆசிரியர்


First Published : 05 July 2016 12:52 AM IST


மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் எழுந்துள்ள முதன்மையான கேள்வி, ஊடக அறம் என்றால் என்ன என்பதுதான். சுவாதியைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பாக நிறுத்தியபோது, "சுவாதி கொலை வழக்கை நடத்துவது நீதிமன்றமா, ஊடகமா? வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும், படங்களும் எவ்வாறு உடனுக்குடன் வெளியாகின?' என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

மும்பைத் தாக்குதலில், தாஜ் ஓட்டலில் பலரை பிணைக்கைதிகளாக வைத்திருந்த பயங்கரவாதிகளுக்கு, வெளியே காவல் துறை, ராணுவம் இவற்றின் நடவடிக்கை அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக பார்க்க முடிந்த அவலமும், அதற்கான கண்டனமும் தெரிந்தவைதான். சமூக வலைத்தளங்களின் கருத்தோட்டத்துக்கு இணையாக, மூச்சிறைக்க ஓடும் நேரத்தில் ஊடக அறம், சில நேரங்களில் தெரிந்தே மீறப்படுகிறது.

கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் சுவாதி கொலை குறித்து இடம்பெற்ற தகவல்கள் அனைத்தும் மிகவும் தரமற்றவையாகவும் வரம்பு மீறியவையாகவும் இருந்தன.

கொலையான சுவாதியின் பல்வேறு தோற்றங்களிலான புகைப்படங்கள் எவ்வாறு கிடைத்தன? அவை அவரது முகநூல் பதிவில் உள்ள நண்பர்கள் மூலம்தான் பகிரப்பட்டிருக்க வேண்டும். அதை அப்படியே ஊடகங்கள் பயன்படுத்தியது சரியா? இந்தப் புகைப்

படங்கள் இந்த கொலைவழக்கில் அத்தனை இன்றியமையாதவையா? ஒரு பெண்ணை இழந்த குடும்பத்துக்கு இது மேலும் மனவருத்தம் தரும் செயல் அல்லவா?

இப்போது கொலையாளி ராம்குமாரை நீதிமன்றத்துக்கு முகமூடி போட்டு அழைத்து வருகிறார்கள். கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் மருத்துவமனையில், தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கும்போது, கழுத்தில் கட்டுடன் இருக்கும் அவரது முகத்தை செல்போனில் படம் பிடித்து அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது எப்படி? அந்தப் படத்தை காவல் துறையைத் தவிர வேறு யார் தந்திருக்க முடியும்?

கொலையாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில், அவர் கொலையாளி என்று கருதுவதற்கான காரணங்கள் உள்ளன என்று நீதிமன்றம் தெரிவிக்காத நிலையில், அவரது முகப்படத்தை வெளியிடலாமா? அதுமட்டுமன்றி, அவரது தந்தை, தாய், சகோதரிகளின் பெயர்கள், அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள், எங்கே வேலை பார்க்கிறார்கள் என்று எல்லாத் தகவல்களும் வெளியிட்டு, அந்தக் குடும்பத்தையே அவமானப்படுத்துவது முறையா? அவர்

களுக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன தொடர்பு?

சமூக வலைத்தளத்தில் பலர் பகிர்ந்துகொண்ட ஒரு கேள்வி: ஆடி காரை போதையில் ஓட்டிவந்து ஒருவரது இறப்புக்குக் காரணமான பெண் யார்? தொழிலதிபர் எனப்படும் அவரது தந்தை யார்? ராம்குமார் பெயர், குடும்ப வரலாறை வெளியிடும் ஊடகங்கள் இவற்றை மட்டும் ஏன் வெளியிடவில்லை?

கத்தியின் கைப்பிடியில் ரேகைகள் பதிவு இல்லை என்பதில் தொடங்கி, சுவாதியின் செல்லிடப்பேசி எண்ணின் டூப்ளிகேட் மூலம் அவரது அனைத்து செயலிகளையும் மீட்டெடுத்து காவல் துறை ஆய்வு செய்கிறது என்ற தகவல் வரை அனைத்தையும் ஊடகங்களும் பத்திரிகைகளும் போட்டிபோட்டு வெளியிடவும், சமூக வலைத்தளங்கள் அதைப் பகிர்ந்துகொள்ளவுமாக அனைத்தும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல்தான் நடந்தேறின. இது தேவையற்றது. குற்றவாளிக்குத் தகவல் தருவதாக அமையக்கூடியது. இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

இதனை சமூக வலைத்தளங்களின் பொறுப்பின்மை, ஊடகங்களின் பொறுப்பின்மை என்று இருவகையாக பிரித்துப் பார்ப்பதைக் காட்டிலும், இந்தத் தவறுகள் மீண்டும் நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை ஊடகங்களுக்கே அதிகம்.

சுவாதியின் நண்பர் ஒரு முஸ்லிம் என்பதால் இந்த விவகாரத்துக்கு வேறு நிறம் கொடுக்கவும் சிலர் முற்பட்டனர். அசம்பாவிதமாகிவிடுமோ என்று அஞ்சுகிற அளவுக்கு அது சென்றது. கொலை செய்தவராகக் கருதப்படும் ராம்குமாரின் பின்னணியில் வேறு சில சக்திகள் உள்ளதாக பேட்டிகள் தரப்படுகின்றன. ஆனால், அதற்கான ஆதாரங்களை பேட்டியளிப்போர் முன்வைக்காத நிலையில், வெறும் சந்தேகங்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டிய, பத்திரிகைகளில் வெளியிட வேண்டிய கட்டாயம் என்ன? இது குறித்தும் ஊடகங்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

காட்சி ஊடகங்களும், புலனாய்வு ஊடகவியலும் சமூக அவலங்களையும், அரசின் தவறுகளையும் படம் பிடித்துக்காட்டி, தவறுகள் திருத்தப்படவும், மாற்றங்கள் ஏற்படவும் வழிகோலுகின்றன என்

பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், ஊடகங்களுக்கு இடையே நிலவும் தொழில் போட்டியும், வியாபார நிர்பந்தங்களும் அவற்றை வரம்புமீறச் செய்கின்றன. காட்சி ஊடகங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிப்பதிலும், புலனாய்வு இதழ்கள் விற்பனையை அதிகரிப்பதிலும் காட்டும் ஆர்வத்தை, ஊடக தர்மத்தைப் பின்பற்றுவதிலும் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் பெயர் இடம்பெறக் கூடாது என்கிற ஊடக அறம் அண்மையில்தான் நடைமுறைக்கு வந்தது. தில்லியில் நிர்பயா வழக்குக்குப் பின் எந்த ஊடகமும் வல்லுறவு மற்றும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படம் வெளியிடக் கூடாது என்ற அறம் அமலானது. அண்மைக்காலமாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கைதாகும் 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்கின்ற அறம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோன்று இந்த விவகாரத்திலும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும். தவறுகளில் இருந்துதான் ஊடக அறம் தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறது.
சுவாதி கொலையில் தொடர்பு இல்லை: உண்மையான குற்றவாளியை தப்ப வைக்க போலீஸ் முயற்சி- ராம்குமார் பகீர் By: Mayura Akilan Updated: Tuesday, July 5, 2016, 13:54 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-murder-case-ramkumars-files-bail-petition-257413.html

சென்னை: சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என் மீது போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ராம்குமார் ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24ம் தேதியன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணியளவில் பணிக்கு செல்வதற்காக காத்திருந்த இளம்பெண் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் ஜூலை 1ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நலம் தேறியதும், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ராம்குமாரிடம், எழும்பூர் குற்றவியல் 14வது நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) நேற்று விசாரணை நடத்தினார். பின்னர், ராம்குமாருக்கு ஜூலை 18ம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்தார். ராம்குமார் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நலம் தேறிய உடன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்குமார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கோட்டை போலீசார், ஐ.பி.சி., 309 கீழ் ராம்குமார் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை போலீசாரின் விசாரணை முடிந்த பின், செங்கோட்டை அழைத்து வரப்படும் அவன், மீண்டும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார். இதன் மூலம் கொலை வழக்கில் அவனுக்கு கிடைக்கும் தண்டனையுடன், தற்கொலை முயற்சி வழக்கில் கூடுதலாக 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது. சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது செய்துள்ளனர். சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவத்தில், குற்றவாளி ராம்குமார்தான் உறுதியாக கூறி வந்த நிலையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-murder-case-ramkumars-files-bail-petition-257413.html

தற்கொலைக்கு முயலவில்லை; போலீஸாருடன் வந்தவர்களே கழுத்தை அறுத்தனர்: ஜாமீன் மனுவில் தகவல்

First Published : 05 July 2016 01:05 PM IST

சென்னை: சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது, தான் தற்கொலைக்கு முயலவில்லை என்று ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், நெல்லை செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் ஜூலை 1ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், ராம்குமார் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று  வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. காவல்துறையினருடன் வந்தவர்களே ராம்குமாரின் கழுத்தை அறுத்துள்ளனர்.
சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுவாதி கொலை செய்யப்படுவதற்கு முன்வே, அவரை யாரோ தாக்கியதாக தகவல்கள் வெளிவந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எங்களுக்கு வந்த அறிவுரையின்படி ராம்குமாருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளேன் என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சுவாதி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை: ராம்குமார்

Dinamani

சென்னை: சுவாதி கொலைக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று நெல்லையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது செய்துள்ளனர்.

சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே என்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலை சம்பவம் நடைபெறவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

என்னை கொன்று விடுவீர்களா? : ஆம்புலன்சில் அலறிய ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை பாளையங்கோட்டை மருத்துவமனையிலிருந்து சென்னை அழைத்து வரும்போது பீதியுடன் இருந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
அதாவது, ஆம்புலன்சில், மருத்துவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலத்த பாதுகாப்போடு ராம்குமார் சென்னை அழைத்து வரப்பட்டார். அன்று இரவு முழுவதும் ராம்குமார் தூங்கவே இல்லையாம். தன்னை எங்கே போலீசார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் பீதியுடன் முழித்தே இருந்தாராம். 
 
அதனைக் கண்ட மருத்துவர்கள் “நீ ஏம்பா முழிச்சிருக்கே.. தூங்கு” என்றார்களாம். ஆனால் ராம்குமாரோ “என்னைக் கொன்று விடுவீர்களா சார்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஒரு புள்ளையை கொன்று விட்டு உனக்கென்னடா உயிர் பயம். கம்முனு தூங்கு” என்றார்களாம் போலீசார்.
 
ஆம்புலன்ஸ் வண்டி திருச்சியை தாண்டிய போது, மரண பீதியில் உறைந்து போயிருந்தாராம் ராம்குமார். சென்னை வந்தபின்தான் ஓரளவு இயல்பான நிலைக்கு வந்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பார்வை: வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதே குற்றமா?

பிருந்தா சீனிவாசன்

THE HINDU TAMIL
கொலை செய்வதைவிடக் கொடூரமானது அமைதிகாப்பது. ஒரு பெண்ணைப் படுகொலை செய்வதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை அவளை அவளே படுகொலை செய்துகொள்ளத் தூண்டுவது. அப்படித் தூண்டப்பட்டுத் தன்னையே மாய்த்துக்கொண்டிருக்கிறார் சேலம் வினுப்பிரியா. முகநூலில் பதிவிட்டிருந்த வினுப்பிரியாவின் புகைப்படத்தை யாரோ ஒருவர் மார்ஃபிங் செய்து அநாகரிகமாக வெளியிட, அவமானம் தாங்காமல் தன்னைத் தானே கொலை செய்துகொண்டார் வினுப்பிரியா.

வினுப்பிரியாவின் மரணத்துக்கு அவரது புகைப்படத்தை அநாகரிகமாக வெளியிட்ட நபர் மட்டும்தான் காரணமா? அதுபோன்ற படங்களைத் தேடித்தேடிப் பார்க்கிறவர்களுக்கும், பகிர்கிறவர்களுக்கும் இதில் பங்கு இல்லையா? இப்படி அவமானத்துக்குள்ளாகும் பெண்ணைத் தரக்குறைவாகப் பார்க்கும் சமூகம் இதில் சம்பந்தப்படவில்லையா? பொதுவெளியில் பகிரப்படும் தகவல்களால் ஏற்படுகிற நெருக்கடிகளைச் சமாளிக்கும் மனோதிடத்தை நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறோமா?

இதுபோன்ற சம்பவங்களின்போது குடும்பம் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறதா? முதலில் பெற்றோருக்குப் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா? பாதிக்கப்படும் பெண்ணைக் குறித்து இந்தச் சமூகம் முன்வைக்கும் சித்திரம் நாகரிகமானதா? அந்தப் பெண் மீது வீசப்படும் அவதூறுகளும் பழிச்சொற்களும் அவளுடைய நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சிதைக்காதா? மக்களிடையே சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறதா? சைபர் குற்றப் பிரிவில் தரப்படும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறதா? வினுப்பிரியாவின் மரணம் இப்படிப் பல்வேறு கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறது.

வெளிப்படும் வக்கிரம்

உலகமயமாக்கலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நல்லது கெட்டது அனைத்தையும் நம் உள்ளங்கைக்குள்ளேயே கொண்டுவந்துவிடுகின்றன. அவற்றில் வக்கிரம் நிறைந்த குப்பைகள் அதிகம். விவசாயம் பொய்த்துப்போன கிராமங்களில்கூட இன்று ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி செழிப்புடன் இருக்கிறது. இணையப் பயன்பாடு அதிகரித்த பின் இணையவழி நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

ஒவ்வொரு குற்றத்திலும் ஒரு பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவளது எதிர்காலம் சிதைக்கப்படுகிறது. அவளது வாழ்வு மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. பெண்ணின் உடல் புனிதமானதாகவும் பெண்ணின் செயல்கள் அனைத்தும் நம் பண்பாட்டின், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பிரகடனப்படுத்தப்படுகிற சமூகத்தில் அந்த உடலை வைத்தே ஒரு பெண்ணைச் சாய்ப்பது ஆணுக்கு எளிதாகிறது. அவளது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டை வைத்தாலே போதும்,

அவள் முடங்கிப்போக. அப்படியும் முடங்கவில்லையெனில் இருக்கவே இருக்கின்றன அநாகரிகச் செயல்பாடுகள். வெட்டு, கொலை, அமிலவீச்சு ஆகியவற்றைவிட ஒரு பெண்ணின் அந்தரங்கத்தைக் கடைவிரிப்பது ஆண்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. நம் சமூகச் சூழலில் அது பெண்களுக்கு மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையாகவும் அமைகிறது.

இணைந்து போராட வேண்டும்

“நம் சமூக அமைப்பில் இருக்கிற குறைபாடு இது” என்கிறார் இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பரிமளா. “பஸ்ஸில் ஒருவன் தன்னை உரசினால், அதை வெளியே சொல்லக்கூடத் தயங்குகிற பெண்கள் அதிகம். காரணம் பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு நம் சமூகத்தில் எந்த உரிமையும் இல்லை. படிக்கும் படிப்பு, அணியும் உடை, வாழ்க்கைத்துணை என்று சகலமும் அடுத்தவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவனை வேண்டாம் என்று நிராகரிக்கக்கூட ஒரு பெண்ணுக்கு நம் சமூகத்தில் உரிமையில்லை” என்று சொல்லும் பரிமளா, பெண்ணின் மீது திணிக்கப்படும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் சமூகக் கட்டுகளையும் எதிர்த்துப் பெண்கள் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார்.

“இது யாரோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது நேரலாம். பெண்ணின் அங்கம் கொஞ்சம் வெளிப்பட்டாலே அவளது ஒழுக்கம் கெட்டுவிட்டது என்று சமூகம் வகுத்துவைத்திருக்கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தவறு செய்கிறவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்” என்கிறார் அவர்.

தற்கொலை தீர்வல்ல

தற்காலிகப் பிரச்சினைக்காக மரணம் என்னும் நிரந்தர முடிவை நோக்கிச் செல்வது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் லக்ஷ்மி விஜயகுமார். சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனரான இவர், ஒரு பெண் தன் மீது வைக்கும் நம்பிக்கையே தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் என்கிறார்.

“ஒவ்வொரு பெண்ணும் தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைக்கணும். நாம் செய்யாத தவறுக்காக, நாம் ஏன் சாக வேண்டும் என்ற தெளிவு வேண்டும். வாழ்வில் எந்தச் சிக்கலும் இல்லாதபோது துணிச்சலுடன் இருப்பதைவிட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போதுதான் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.

வெளியே சொல்ல முடியாத பிரச்சினையாக இருந்தால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். பிறகு பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பகிர்ந்துகொள்கிறபோது பிரச்சினை பாதியாகிவிடும்” என்று சொல்லும் லக்ஷ்மி விஜயகுமார், இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க ஊடகங்களும் முக்கியக் காரணம் என்கிறார்.

“எந்தத் திரைப்படமாக இருந்தாலும் அதில் பெண் என்பவள், ஆண் அனுபவிக்க வேண்டிய ஒரு பண்டமாகவே காட்சிப்படுத்தப்படுகிறாள். பெண்ணின் விருப்பு, வெறுப்புக்கு அங்கே இடமில்லை. ஒருவனை வேண்டாம் என்று மறுக்கும் உரிமையும் அவளுக்கு இல்லை. ஆரம்பத்தில் மறுக்கிற பெண்ணையும் எப்படியாவது மசியவைப்பதுதான் ஆண்மை என்று கேவலமாகச் சித்தரிக்கப்படுகிறது. இதைப் பார்த்து வளர்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தச் சிந்தனைதானே இருக்கும்? அனைவருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டும்” என்று சொல்கிறார் அவர்.

எப்படி வளர்க்கிறோம் பிள்ளைகளை?

சமீபகாலமாக இள வயதுத் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்லும் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், “பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோபலத்துடன் குழந்தைகளை வளர்க்கிறோமா?” என்று கேட்கிறார்.

“படிப்பு, மதிப்பெண் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். சிக்கல்களை, பிரச்சினைகளை எதிர்கொள்கிற பக்கு வத்தைச் சொல்லித் தருவதுதான் முக்கியம். ஃபேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி தங்கள் படங்களை மாற்றுகிறவர்களும் எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பவர்களும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். தன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இப்படிச் சமூக ஊடகங்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன், ஒரு பிரச்சினை வெடிக்கும்போது அந்த நேரத்தில் குரல்கொடுத்துவிட்டு அடங்கிப் போவதைவிட அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரை களத்தில் நிற்க வேண்டும் என்கிறார்.

“புகார் கொடுத்ததுமே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பும் கடமையும் அவசியம். சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அவற்றின் முடிவு குறித்து காவல்துறை சமூகப் பொறுப்புடன் தானே முன்வந்து அறிவித்தால் பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

வினுப்பிரியாவின் தற்கொலை மட்டுமல்ல, சுவாதியின் படுகொலை, ராயப்பேட்டையைச் சேர்ந்த மூன்று பெண்களின் கொலை என்று சமூகத்தில் நடக்கிற கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஆர்வமாக இருக்கிறோமா? குறைந்தபட்சம் நம் கண்ணெதிரில் நடக்கிற குற்றத்தையாவது தட்டிக் கேட்டிருக்கிறோமா? ஒரு பெண்ணைப் பற்றிய அவதூறு செய்தி வந்ததும் அதை அடுத்தவருக்கு ஃபார்வேர்ட் செய்யாமல் இருந்திருக்கிறோமா?

குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் அதை காவல்துறைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோமா? பெண்களை சக மனுஷியாக, உயிரும் உணர்வும் கொண்ட ஒரு பிறவியாக நினைக்கவாவது முயற்சித்திருக்கிறோமா? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறோமா? இவற்றுக்கான பதில்களில்தான் வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது.

Monday, July 4, 2016

மகளை கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்: சுவாதி பெற்றோர் கோரிக்கை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-s-parents-seek-death-penalty-their-daughter-killer-257324.html

சென்னை: மகளை கொடூரமாக கொலை செய்த கொலையாளிக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சுவாதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் சுவாதி. இந்த கொலை வழக்கில் , குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராம்குமாரின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்னமாதிரியான தண்டனை கிடைக்கும் என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. சுவாதியின் பெற்றோர், மகளை கொன்ற குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் செங்கோட்டையில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், இந்த வழக்கில் அவருக்கு என்ன என்ன தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என சட்ட நிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில், இந்த வழக்கில், குற்றவாளியாக கருதப்படும் நபர் கிடைத்துள்ளார். அவருக்கே ஏற்பட்ட ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம் முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும். அதற்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் இப்போது மாவட்டந்தோறும் மகிளா நீதிமன்றங்கள் உள்ளன. சென்னையிலும் மகிளா நீதிமன்றம் உள்ளது. மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கினை விரைவாகவும் துரிதமாகவும் வழக்கை நடத்த வாய்ப்புள்ளது. ஒரு மாதத்திற்குள்ளோ இரு மாதத்திற்குள்ளோ தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ள ஒரு வழக்குதான் இது. பொதுமக்களை மிகவும் பாதிக்க வைத்த கொலை சம்பவம் அனைவர் கவனமும் இந்த வழக்கின் மீது இருக்கிறது. இவர்தான் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டால், மரணதண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர் அஜீதா கூறினார். இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை. அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம். காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளதது என்றும் கூறியுள்ளார் அஜீதா.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-s-parents-seek-death-penalty-their-daughter-killer-257324.html

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...