Tuesday, November 8, 2016

GO issued on enhanced maternity leave

: Following up on the announcement made by Chief Minister Jayalalithaa in the Legislative Assembly, the Tamil Nadu Government on Monday issued an order enhancing the maternity leave period from 180 days to 270 days to married women in government service, who have less than two children.

The GO said that the maternity leave might span pre-confinement rest to post-confinement recuperation with full pay.

Women employees who are on maternity leave currently prior to the date of issue of this order and will continue to be on leave are also eligible for this enhanced leave.

‘Raise age limit to 40 for Group 1 exams’


PMK youth wing leader Anbumani Ramadoss on Monday urged the Tamil Nadu government to declare the maximum age for candidates appearing for Group 1 examinations to qualify for sub-collectors as 40. In a statement, Anbumani argued that the exams are difficult to crack and eliminating candidates on the basis that they are above 35 years was unfair. “Most candidates write these exams several times and there is very tough competition,” said Anbumani Ramadoss.

Further, he pointed out that these exams have been held only six times between 2006-2015.

“For four years, the exams weren’t held. And to compensate, the maximum age must be raised from 35 to 40 years,” he said.

He further said that several States in India had already raised the maximum age. “ When the maximum age has been raised by States such Andhra, West Bengal, Assam and Tripura to 40 and by Kerala to 50, Tamil Nadu must not hesitate to do raise it as well,” he said.

PMK founder Dr. S. Ramadoss also urged MPs from the State to raise the issue of filling up of vacancies in nationalised banks in Tamil Nadu with candidates from other States.

“Candidates from Kerala and North India have filled most of the 1,563 vacancies available in State Bank of India. Parliamentarians from Tamil Nadu must raise the issue to ensure that candidates from Tamil Nadu are given preference for bank jobs in Tamil Nadu.

The government of Tamil Nadu must also reframe the syllabus in the State so that candidates can qualify easily in the test,” he said.

நாம் வளர்ந்திருக்கிறோமா?

By மாலன்  |   Published on : 07th November 2016 02:07 AM  |   
'ஒற்றை வருமானம் கொண்ட கடந்த தலைமுறைக் குடும்பங்களை விட இருவர் சம்பாதிக்கும் இந்தத் தலைமுறைக் குடும்பங்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்களது கடன் சுமை அதிகரித்திருக்கிறது. செலவுகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் சேமிப்புகள் குறைந்திருக்கின்றன'.
அண்மையில், அமெரிக்கத் தேர்தல் களத்தில், ஹார்வேர்ட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எலிசபெத் வாரன் ஆற்றிய உரையில் காணப்படும் வரிகள் இவை. அமெரிக்க நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய இந்தக் கருத்துக்கள் இந்திய நடுத்தரக் குடும்பங்களுக்கும் பொருந்துமோ?
கடந்த முப்பது ஆண்டுகள். இதுதான் இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் விவாதத்தின் மையப் புள்ளியாக அமைந்திருந்தது.
முப்பதாண்டுகள் என்பது தனி மனிதர்கள் வாழ்வில் வேண்டுமானால் நீண்டதொரு காலமாக இருக்கலாம், ஆனால் ஒரு நாட்டின் சரித்திரத்தில் பெரிய காலம் அல்ல என்று சொல்வார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகள் உலகத்தையே புரட்டிப் போட்ட ஆண்டுகள்.
இணையம், மடிக்கணினி, செல்லிடப்பேசி, மின்னஞ்சல், டிஜிட்டல்
கேமரா, கூகுள், முகநூல், கட்செவி
அஞ்சல் போன்ற நட்பு ஊடகங்கள், காணொலிக் காட்சிகள், ஆன் லைன் வர்த்தகம் எனப் பலவும் நம்மை வந்தடைந்தது இந்த முப்பதாண்டுகளுக்குள்தான்.
இந்தத் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் ஏராளம். பணம் எடுக்க வங்கிக்குப் போக வேண்டியதில்லை. கடிதம் அனுப்ப அஞ்சலகம் செல்லத் தேவையில்லை. பயணச் சீட்டு பதிவு செய்ய ரயில் நிலையம் போக வேண்டாம். ஏன், துணிமணிகள், பலசரக்கு காய்கறிகள் வாங்க அங்காடிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அயலகத்தில் வாழும் உறவுகளிடம் உரையாட அதிகச் செலவில்லை. செய்தி அறிந்து கொள்ள செய்தித்தாள் வாங்க வேண்டாம். விழாக்களுக்கு வாழ்த்துச் சொல்ல வண்ண அட்டைகள் வாங்க வேண்டாம். திறன்மிகு செல்லிடப்பேசிகள், நாட்
குறிப்பேடுகள், நாட்காட்டிகள், வானொலிப் பெட்டி, கேமரா, அலாரம் கடிகாரம், ஒலிப்பதிவு கருவிகள், இசைப்பேழைகள் தொலைநகல், கார்பன் காகிதம், குறுந்தகடுகள் எனப் பலவற்றிற்கும் விடை கொடுக்கப்பட்டுவிட்டது.
செல்லிடப்பேசிகள், பேசுவதைக் காட்டிலும் வேறு பணிகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் பலரது அனுபவம்.
ஆனால் என் சிந்தனையைப் பெரிதும் ஈர்ப்பது தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் மட்டுமல்ல. கடந்த முப்பதாண்டுகளில் அரசியல் உலகில்
ஏற்பட்ட அதிர்வுகளும், பொருளாதார உலகின் பூகம்பங்களும்தான்.
சென்ற முப்பதாண்டுகளில்தான்-
1987 -ம் ஆண்டு ஜூன் 12-ஆம் நாள், அந்தச் சுவரை இடித்துத் தள்ளுங்கள் என்று ஜெர்மனிகளைப் பிரித்த பெர்லின் சுவரை அகற்றுமாறு அமெரிக்க அதிபர் ரீகன், சோவியத் யூனியன் அதிபரான
கொர்பச்சேவிற்கு சவால் விடுத்தார். 1991 நவம்பருக்குள் சுவர் முற்றிலுமாகத் தகர்ந்து வீழ்ந்தது. இரு ஜெர்மனிகளும் ஒன்றாகின.
அதே 1991 டிசம்பர் 26-ஆம் நாள் சோவியத் யூனியன் பிரிந்து சிதறியது. அமெரிக்கா சோவியத் யூனியன் என்ற இரு துருவங்களிடையே இயங்கிக் கொண்டிருந்த உலக அரசியல், ஒற்றைப் புள்ளியை நோக்கிக் குவியும் நிர்ப்பந்தம் நேர்ந்தது. சமன் குலைந்த உலகின் அரசியல் சதுரங்கத்தில் பொருளாதாரம் காய் நகர்த்த ஆரம்பித்தது.
இந்தியப் பொருளாதாரமோ அந்த காலகட்டத்தில் படு பாதாளத்தில் இருந்தது. 1990-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசேகர் பிரதமராகப் பதவி ஏற்றபோது, வளைகுடாப் போரின் காரணமாக பெட்ரோல் விலை எகிறிப் போயிருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு வெகுவேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. எந்த நேரமும் செலாவணி நாணய மாற்று விகிதம் குறைக்கப்படும் என்ற அச்சத்தில் அயல் நாட்டில் வசித்த இந்தியர்கள், இந்தியாவில் போட்டு வைத்திருந்த வைப்புத் தொகை கணக்குகளை மூடிக் கொண்டிருந்தார்கள். இதே காரணத்திற்காக அயல் நாட்டு வணிகர்கள் நமக்குக் கொடுக்க வேண்டிய தொகைகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த நிதிப்பற்றாக்குறைக்கும், நிஜமான பற்றாக்குறைக்கும் இடையே மலைக்கும் மடுவிற்குமான இடைவெளி. இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தது இந்தியா.
முழு பட்ஜெட்டிற்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா. உலக வங்கியிடம் கடன் கேட்டுப் போய் நின்றார். முதலில் உதட்டைப் பிதுக்கியது. முழுமையாக ஒரு பட்ஜெட் கூட இல்லாமல், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் திட்டம் ஏதும் அறிவிக்கப்படாமல், எப்படிக் கடன் கேட்கிறீர்கள் என வியந்தது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான இடைவெளி ஒரு பில்லியன் டாலர் என்றிருக்கும் போது எப்படிக் கடன் கொடுக்க முடியும் எனக் கேட்டது.
நெருக்கடி ஏற்படும் நேரத்தில் இந்திய மத்தியதர வர்க்கம் என்ன செய்யுமோ அதை இந்த தேசம் செய்தது. கைவசம் இருந்த தங்கத்தை 400 மில்லியன் டாலருக்கு அடகு வைத்தது.
1991-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் மதச்சார்பற்ற இந்திய சோஷலிச குடியரசு பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்து அந்நிய முதலீட்டிற்குக் கதவுகளைத் திறந்து விட்டது.
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட இந்த 25 ஆண்டுகளில், 90-களில் நாம் எதிர்கொண்டநெருக்கடிகளிலிருந்து நிச்சயமாக மீண்டு விட்டோம். பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறோம். அடிப்படைக் கட்டுமானங்கள் அதிகரித்திருக்கின்றன. அன்றிருந்ததை விடவும் இன்று நம் சாலைகளின் மொத்த நீளம் நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது நம் நகரங்கள் கிராமங்களிடையேயான தொடர்பு அதிகரித்திருக்கிறது.
மக்களிடையே தொடர்பு அதிகரித்திருப்பதைத் தொலைபேசிகளின் எண்ணிக்கை சொல்கிறது. கல்விக் கூடங்களின் எண்ணிக்கை கூடியிருப்பதையும், கற்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் கணக்குகள் காட்டுகின்றன. முப்பதாண்டுகளுக்கு முன்பு கிராமப்புறத்து இளம் பெண் ஒருவர் எம்.பி.ஏ. போன்ற படிப்புகளைப் படிப்பதென்பது பெரும் கனவாகவே இருந்தது. அந்நிய முதலீடும், அதன் விளைவாக வேலை வாய்ப்புக்களும் பெருகியிருக்கின்றன.
ஆனால்-
வளர்ந்திருக்கிறோம் எனச் சொல்லி வைக்கப்படும் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து ஆராய்ந்தால் மகிழ்ச்சியை விட கவலைகளே மிஞ்சுகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை விவசாயம் செய்து வந்தது. ஆனால் அது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இப்போது நாம் கண்டிருக்கும் வளர்ச்சியின் பெரும்பகுதி சேவைத்துறையின் வழியே நமக்குக் கிடைத்திருக்கும் வளர்ச்சி.
1991-இல் இருந்ததைவிட சேவைத்துறை 20 சதவீதப் புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் விவசாயம் எதிர்மறை வளர்ச்சி கண்டிருக்கிறது.
விவசாயத்தின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் அரசு அதற்கு அளித்து வந்த பல்வேறு வகையான ஆதரவுகளை விலக்கிக் கொண்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட வேளாண் கடன்களைக் குறைத்துக் கொண்டன. கூட்டுறவு வங்கிகள் ஏற்கெனவே நலிவுற்று வந்த நிலையில் விவசாயிகள் தனியாரிடம் (அவர்களில் கணிசமானோர் புதிதாக உருவான கந்து வட்டிக்காரர்கள்) கடன் வாங்கத் தலைப்பட்டனர். விவசாயிகளின் தற்கொலைகள் அன்றாடச் செய்திகளாயின.
அந்நிய முதலீட்டைத் தக்க வைத்துக் கொள்வதே அரசின் முதன்மை நோக்கமாக இருந்ததால் அது அதற்கான சலுகைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதைச் சமன் செய்ய வேளாண்மைக்கு அளித்து வந்த ஆதரவைக் குறைத்துக் கொண்டது.
வேளாண்மையையே வாழ்வாதாரமாகக் கொண்டு கணிசமானோர் வாழ்ந்த நம் நாட்டில், இந்த திடீர் மாற்றம் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும் சமூகத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. ஏனெனில், நாம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஒரு பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் படிப்படியாக ஏற்பட்டவை அல்ல. மாறாக ஒரு நெருக்கடியின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கை
இந்த அவசர நடவடிக்கையின் காரணமாக, கடந்த முப்பதாண்டுகளில் சமூகத்தின் சமநிலை குலைந்திருக்கிறது. கிராமப்புற வறுமையைத் தீர்மானிக்க வரையறுக்கப்பட்டிருக்கும் அளவுகோல், ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 2,200 கலோரி உணவு. இதற்குக் கீழாக பெறுவோர் வறுமையில் உழல்வோர் எனக் கருதப்பட்டனர். 1993-94-இல் இவர்களது எண்ணிக்கை 58.5 சதவீதம்; 2011-12-இல் 68 சதவீதம் .
ஒரு புறம் விவசாயிகள், நடுத்தர மக்கள், மாணவர்களின் கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில் இன்று நாட்டின் செல்வத்தில் முக்கால் பகுதி 10 சதவீத மக்களின் கைகளில் இருக்கிறது (இழ்ங்க்ண்ற் நன்ண்ள்ள்ங்ள் எப்ர்க்ஷஹப் ரங்ஹப்ற்ட் ஈஹற்ஹக்ஷர்ர்ந் 2014). ஏழைகள் வசமுள்ள சொத்துகளைப் போல 370 மடங்கு, மக்கள்தொகையில் 10 சதவீதமே உள்ள பணக்காரர்கள் வசம் இருக்கிறது.
அவர்களது செல்வம் எப்படி உயர்ந்தது? நிலம், நீர், வனம், தாதுப் பொருட்கள், அலைக்கற்றை போன்ற இயற்கை வளங்களைக் கையாளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியதுதான். அது உற்பத்தித் துறையின் மூலம் மட்டும் அடைந்த வளர்ச்சி அல்ல.
கடந்த 30 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த எந்த ஒரு பெரிய நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு இந்த வளங்களில் ஏதேனும் ஒன்றுடன் அல்லது பலவற்றோடு தொடர்பு இருப்பதைக் காணலாம்.
அவசர அவசரமாகப் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய நம் ஆட்சியாளர்கள், தேர்தல், நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, கல்வி இவற்றில் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள கடந்த முப்பதாண்டுகளில் முன்வரவில்லை. ஏன்?
கடந்த முப்பதாண்டுகளில் நடந்திருப்பவைகளை ஒரு சேரத் தொகுத்து யோசித்தால், வாழ்க்கை முறை மாறியிருக்கிறது (தொழில் நுட்பத்திற்கு நன்றி). நாட்டின் பொருளாதாரம் மாறியிருக்கிறது. தொழில் நுட்பத்தின் கொடைகள் சாதாரண மனிதனுக்குக்கூட (காசு கொடுத்தால்) கிடைக்கிறது. ஆனால் நாட்டிற்குப் பொதுவான இயற்கை வளங்களிலிருந்து அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
குடும்ப வருமானங்கள் கூடியிருக்கின்றன. ஆனால், அவை அதிகம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன.
நாம் வளர்ந்திருக்கிறோமா? மாறியிருக்கிறோமா?

அரசே செய்தாலென்ன?

By எம். அருண்குமார்  |   Published on : 07th November 2016 02:06 AM  |   
திருமணமாகி குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முறையான சிகிச்சை பெற்றால் குழந்தைப் பேறு கண்டிப்பாக கிடைக்கும்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களைக் குறிவைத்து செயற்கை முறையில் கருத்தரித்தல், ஆலோசனை, டெஸ்ட் டியூப் பேபி என பல ஆலோசனை மையங்கள் தனியார் மருத்துவமனைகளில் துவக்கப்பட்டு சிகிச்சை என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணத்தை வருவாயாக அந்த மருத்துவமனைகள் ஈட்டுகின்றன.
குழந்தைப் பேறு சிகிச்சைக்காக செல்பவர்கள் செய்யும் செலவுக்கு அளவே இல்லை. அந்த அளவுக்கு மருத்துவமனைகள் கட்டணத்தை வசூலிக்கின்றன. பரிசோதனைக்காகவே அதிக அளவு பணம் வசூலிக்கப்படுகிறது.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில், ஒரே சிகிச்சையிலேயே வெற்றி பெற்று கருத்தரிப்பு நடந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. பெரும்பாலானவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று சிகிச்சைகளுக்கு பிறகே கருத்தரிப்பு நடைபெறுகிறது.
இதற்காக பல லட்சங்களை செலவழிக்க வேண்டியது. கருத்தரிப்பு வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென்பதற்காக வெகு தூரத்திலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள் கருத்தரிக்க வேண்டிய பெண்ணின் நலனை கருதி காரில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
செயற்கை முறையில் கருதரிப்பு சிகிச்சைக்கு செல்லும் தம்பதிக்கு பல கட்டுப்பாடுகளை தனியார் மருத்துவமனைகள் விதிக்கின்றன. அந்த மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும். அங்கேயே அனைத்து பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாளில், கட்டாயமாக சிகிச்சைக்கு வந்தே ஆக வேண்டும், இல்லையெனில் கருத்தரிப்பு நிகழாது என அச்சத்தை உருவாக்குகின்றனர்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த சிகிச்சையை பெற முடிகின்றது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அந்த மருத்துவமனைக்கு ஆலோசனைக்குகூட செல்ல முடியவில்லை.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தமிழகத்தில் லட்சக் கணக்கானவர்கள் உள்ளனர். அதில் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் வசதியில்லாத ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாதபடி அவர்களுடைய பொருளாதாரச் சூழ்நிலை உள்ளது.
இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு மாறிவரும் இச்சூழ்நிலையில் செயற்கை கருத்தரிப்புக்காக தனியார் மருத்துவமனைகளை மட்டுமே மக்கள் நம்பியிருக்க வேண்டுமா? தனியார் மருத்துவமனைகளுக்கு சமமாக அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள், உபகரணங்களுக்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும் அதன் பலன் முறையாக மக்களை சென்றடைவதில்லை.
தமிழக அரசு மக்களின் நலனை கருதி பல்வேறு விலையில்லா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு
குழந்தைப் பேறு வழங்கும் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சையினை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையினை வழங்கும் சிறப்பு திட்டத்தை துவங்கி செயல்படுத்த வேண்டும். இதற்கென தனியாக சிறப்பு பிரிவையும் அரசு மருத்துவமனைகளில் தொடங்க வேண்டும். அந்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை பிரிவில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை சாதாரண சிகிச்சை போல வழங்காமல் தனியார் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையை காட்டிலும் தரமானதாக வழங்கி செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையை வெற்றிகரமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் முதல் கட்டமாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை சிறப்பு பிரிவை துவக்கி செயல்படுத்த வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக தாலுகா மருத்துவமனைகளில் அச்சிறப்பு சிகிச்சை பிரிவை துவக்கி தரமான சிகிச்சையினை வழங்க வேண்டும். அந்த சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு தரமான மருந்துகளையே வழங்க வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குழந்தையில்லா தம்பதிகள் பயனடைவார்கள் என்பது உறுதி.

பற்களைக் காப்போம்!

By மா. ஆறுமுககண்ணன்  |   Published on : 08th November 2016 01:15 AM  |   
முத்துப்போன்ற பற்களை உடைய என் நண்பரை சில நாள்களுக்கு முன்பு சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தபோது கடைவாயில் இரண்டு பற்கள் இல்லாதது தெரிந்தது. "என்னாயிற்று?' என்றேன். "பல் விழும் பலன்' என்றார். "பல்லி விழும் பலன் தெரியும், அதென்ன பல் விழும் பலன்?' என்றேன்.
"நெருங்கிய நண்பனுக்கு இருநூறு ரூபாய் கடன் கொடுத்து ஆறு மாசமாயிற்று. பார்க்கும்போதெல்லாம் கேட்பேன். நேற்றும் கேட்டேன். என்ன கோபத்திலிருந்தானோ கைநீட்டிவிட்டான். அதன்விளைவுதான் இந்தப் பல் விழுந்ததால் உண்டான பலன்' என்றார்.
"கோபம் வரவில்லையா' என்றேன். "கோபமில்லை. லாபம்தான் வந்தது' என்றார். "எப்படி?' என்றேன். "மூன்று பற்கள் ஏற்கெனவே ஆடிக்கொண்டிருந்தன. அதில்தான் இரண்டு விழுந்துவிட்டன. மருத்துவரிடம் சென்றிருந்தால் குறைந்தது அறுநூறாவது செலவாகியிருக்கும். இப்போது நானூறு லாபம்தானே' என்றார்.
"எனக்கு ஒரு நூறு ரூபாய் கடன் கிடைக்குமா' என்றேன். மனிதர் காற்றாய்ப் பறந்துவிட்டார். கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டது அவரது நாக்கு; ஆனால் பலன் கிடைத்ததோ பல்லுக்கு!
கை, கால் என எந்த உறுப்புகளில் வலி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், பல்லில் வலி என்றால் அது பல்லுடன் நின்றுவிடுவதில்லை. கண், காது, கழுத்து, முகம், தலை என பல உறுப்புகளிலும் வலியை உண்டாக்கி பாடாய்ப்படுத்திவிடும்.
எனவே, பல்வேறு உறுப்புகளிலும் வலியைத் தரும் அதைப் "பல் - வலி' எனச் சொல்வது ஒருவகையில் பொருத்தம்தான்!
"பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. காலையில் எழுந்ததும் காலாற நடந்து சென்று, நீர்நிலைக் கரையோரங்களில் நின்றிருக்கும் வேம்பிலிருந்தோ, ஆலிலிருந்தோ சிறு குச்சியை உடைத்து பல்துலக்கி வளர்ந்தவர்கள் தமிழர்கள். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்னும் பழமொழி.
நாளடைவில், நீர்நிலைகளும் சுருங்கி, வீட்டிலேயே பற்களைத் துலக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதனை பற்பசை நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சில நிறுவனங்களின் ஒரே மாதிரியான பற்பசை மட்டுமே விற்பனைக்கு வந்தன. இப்போதோ ஒவ்வொரு நிறுவனமும் விதவிதமான பற்பசைகளை விற்பனை செய்கின்றன. ஒவ்வொரு விளம்பரத்திலும் "இதுதான் சிறந்தது; மற்றவையெல்லாம் சரியல்ல' என்பதுபோல கூறப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் மற்ற நிறுவனத்தைக் குறைகூறுகின்றனரா, அல்லது தங்களது நிறுவனத்தின் மற்ற பற்பசைகளையே குறைகூறுகின்றனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
உங்க பற்பசையில் உப்பு இருக்கிறதா என அக்கறையுடன் வினவுகிறது ஒரு விளம்பரம். உப்புள்ள பற்பசைதான் பல்லுக்கு நன்மை செய்யும் போலிருக்கிறதே என நினைத்து உடனே சென்று வாங்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தால், வேம்பு இருக்கிறதா உங்கள் பற்பசையில் என்கிறது அதே நிறுவனத்தின் வேறொரு விளம்பரம்.
சரி, உப்புள்ள பற்பசையை விட்டுவிட்டு வேம்புள்ள பற்பசையை வாங்கிக்கொண்டு வேகமாக வீடு வந்தால், கிராம்பு இல்லையா உங்கள் பற்பசையில் என்று கேட்கிறது மற்றொரு விளம்பரம். நமக்குத்தான் கிறுகிறுத்துப்போய்விடுகிறது!
நாம் பயன்படுத்தும் பற்பசை எத்தகைய பொருள்களால் தயாரிக்கப்பட்டது என்பதை பற்பசை டியூபின் அடிப்புறத்திலிருக்கும் சிறிய கோடுகள் மூலம் அறியலாம்.
நீல வண்ணக் கோடு இருந்தால் இயற்கைப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்களாலும், சிவப்பு வண்ணக் கோடு இருந்தால் இயற்கை மற்றும் வேதிப்பொருள்களாலும், கருப்பு வண்ணக் கோடு இருந்தால் முழுவதும் வேதிப்பொருளாலும் தயாரிக்கப்பட்டது எனத் தெரிந்துகொள்ளலாம்.
பல்லில் சொத்தை, பற்சிதைவு, காரை படிதல் போன்ற பிரச்னைகளால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று.
சிறுவர்களுக்கு ஏற்படும் பல்நோய்க்கு காரணங்களாக பிள்ளைகளுக்கு முறையாக பல் துலக்கக் கற்றுக்கொடுக்காதது, காலையிலேயே பள்ளிக்குப் புறப்பட வேண்டியிருப்பதால் அவசர அவசரமாக பல் துலக்குதல், இரவில் உறங்கச் செல்லும் முன் பல் துலக்காதது போன்ற காரணங்களைக் கூறுகிறது அந்த அறிக்கை.
பல்வேறு வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளை அடிக்கடியும் அதிகமாகவும் உள்கொள்வதும் இப்பிரச்னைக்குக் காரணமாம்.
பற்களில் சின்னதாய் கருப்புப் புள்ளிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. பணத்தில் மட்டுமல்ல, பல்லிலும் கருப்பு ஆகாது.
பல் சொத்தையால் வலி ஏற்படும்போது சிலர் பொடி, புகையிலை என கைக்குக் கிடைத்தவற்றை வைக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். இது நாளடைவில் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கிவிடும்.
இதேபோல, பற்களில் நீண்டகாலமாக இருக்கும் பல்சொத்தையால் நெஞ்சுவலி வரும் அபாயம் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
கண், காது, இதயம் என மனித உடலின் அனைத்து உறுப்புகளையும் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் படைத்த இயற்கை, பற்களை மட்டும் முப்பத்திரண்டு என படைத்ததால்தானோ என்னவோ அதைப் பேணிக் காக்க பொதுவாக யாரும் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
ஒன்றிரண்டு போனாலும் இருப்பதை வைத்து சரிக்கட்டிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாகவே போனாலும் கட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
என்னதான் செயற்கை என்றாலும் அது இயற்கையைப்போல வராது. இருக்கின்ற ஒவ்வொரு பல்லையும் முறையாகப் பராமரித்து, வசீகரப் புன்னகையுடன் வாழ்வோம்.

Sunday, November 6, 2016

அனல் பறக்க பேசி எதிர்க் கட்சிகளை தெறிக்கவிட்ட தீப்பொறி ஆறுமுகம் !

மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். கடந்த தலைமுறையினருக்கு இந்த பெயர் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோருக்கு இணையாக பரிட்சையம்.

தனது அபரீதமான பேச்சாற்றலால் அதிமுக, திமுக தொண்டர்களை கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கட்டிப்போட்டவர் தீப்பொறி ஆறுமுகம். திமுக சார்பாக உதிர்த்த இவரது பொறி பறக்கும் பேச்சால்தான் இந்த அடைமொழி அவருக்கு கிடைத்தது. 1970களில் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து, நீண்ட காலமாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார்.

கன்னிப்பேச்சு

பேச்சு மீதான ஆர்வத்தால் பள்ளி காலங்களில் பேச்சு போட்டிகளிலேயே பல பரிசுகளை வென்றுள்ளார்.


ஆரம்ப காலத்தில் பெரியார், அண்ணா பேச்சுக்கள் பிடித்து போனதால் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துகொண்டார். 19 வயதில் இருந்தே பேச ஆரம்பித்த ஆறுமுகம் பிறகு திமுகவில் இணைந்தார்.


எம்ஜிஆர் மீது விமர்சனம்

எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தாக்கி இவரைப் போல கடுமையாக விமர்சித்தவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு சூடு பறக்கப் பேசியவர் தீப்பொறி ஆறுமுகம். இவரது கூட்டங்களுக்கு பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் வருவார்கள். அந்த அளவுக்கு இவரது பேச்சில் இரட்டை அர்த்தங்கள் அதிகம். பச்சை பச்சையாக பேசும் தீப்பொறி ஆறுமுகம், தான் கூட்டங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு பெண்களை போகச் சொல்லி விடுவார். அந்த அளவுக்கு அவரது பேச்சில் ஆபாச அனல் பறக்கும்.

அண்ணா கூட்டத்தில் பேச்சு

1967 தேர்தல்ல விழுப்புரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்துல பேசுறதுக்கு பேரறிஞர் அண்ணா வந்திருந்தார். இரவு இரண்டரை மணிக்கு அண்ணா வந்தார். ரெண்டு மணிநேரமா அவர் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் ஆறுமுகம் பேசிட்டு இருந்தார். அண்ணா வந்துட்டாருன்றதுக்காக அவரது பேச்சை நிறுத்தச் சொன்னாங்க. அப்போ அண்ணா அவர்கள் ஆறுமுகத்திடம் சைகையில் எனக்கு சோர்வா இருக்கு டீ குடித்துவிட்டு பேசுகிறேன் என்றார். தொடர்ந்து பேசிமுடித்தார் ஆறுமுகம்.

அண்ணா பேச்சில் உதிர்ந்த அடைமொழி:

கூட்டத்தில் ஒரு முறை அண்ணா பேசும்போது, 'ஆறுமுகம் பேச்சு தீப்பொறியாய் பறந்தது' என்று சொன்னார். இதையடுத்து விழுப்புரம் கண்டமங்கலம் பகுதியில் ஆறுமுகம் பேசப்போகும்போது அங்கிருந்த ஒன்றிய செயலாளர், 'தீப்பொறி' ஆறுமுகம் என்று அடைமொழி வைத்து போஸ்டர் ஒட்டினார். அது அப்படியே பல இடங்களில் தொடர ஆரம்பித்து இன்று வரை 'தீப்பொறி ஆறுமுகம்' என்ற பெயராகவே வலம் வருகிறார் ஆறுமுகம். அதுவே அவரின் மிகப்பெரும் அடையாளமாக மாறியது.

திமுக டூ அதிமுக

கடந்த 2001 ஆம் ஆண்டு கருணாநிதியிடம் மருத்துவ உதவி கேட்டு அது கிடைக்காமல்போனதால் விரக்தியில் இருந்த தீப்பொறியாரை, ரூ. 5 லட்சம் நிதியுதவி கொடுத்து அதிமுகவுக்கு இழுத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அதிமுகவில் தலைமைக்கழக பேச்சாளராக வலம் வந்த தீப்பொறி ஆறுமுகம், சில காலம் திமுகவினரை ஒரு பிடி பிடித்தார். பின்னர் 2010ல் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார் தீப்பொறி ஆறுமுகம்.

வரவேற்பும், எதிர்ப்பும்

இவரது பேச்சால் எரிச்சலுற்று எதிர்க்கட்சியினர் மேடையிலேயே கற்களை வீசிய சம்பவங்களும், ஜீப்பை விட்டு ஏற்றிய சம்பவங்களுமெல்லாம் நடந்துள்ளன. ஆனாலும் அச்சம் இன்றி அதிரடி, சரவெடியை கொளுத்திபோட இவர் தயங்கியது இல்லை. திமுகவில் இருக்கும் போது அதிமுகவை தாக்கி பேசுவதிலும், அதேபோல் அதிமுகவில் இருந்த போது கருணாநிதி பற்றியும் திமுக பற்றியும் விமர்சனம் செய்வதில் வள்ளவர் ஆறுமுகம்.

ஸ்டாலின் சந்திப்பு

மேடை பேச்சில் தனக்கென தனி முத்திரை பதித்த தீப்பொறி ஆறுமுகம் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ செலவுகளுக்கு அவர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், அதுகுறித்து அறிந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீப்பொறி ஆறுமுகத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு முதல்கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, மருத்துவ செலவீனங்களுக்கு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் உடல் நலக் குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தீப்பொறி ஆறுமுகம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

Source: tamil.oneindia.com

மனசு போல வாழ்க்கை 32: அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே!


இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது.

பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது.

நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும்.

போலிப் பகலாகும் இரவு

இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது.

ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும்.

இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது.

படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்.

சிந்தனைகளைக் கழட்டுங்கள்

வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

என் பரிந்துரைகள் இதோ:

ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள்.

தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்!

கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள்.

நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம்.

அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான்.

வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம்.

என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு.

நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?

தொகுப்பு: gemba.karthikeyan@gmail.com

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...