Saturday, November 26, 2016

துன்பத்தில் இன்பம் காணலாமா?

By எஸ். ஸ்ரீதுரை  |   Published on : 26th November 2016 05:29 AM 

பத்திரிகையாயினும் சரி, தொலைக்காட்சி ஒளிபரப்பாயினும் சரி, இந்தச் செய்தியைப் படிக்கவும் பார்க்கவும் கோபத்தில் நமது மனம் கொந்தளிக்கின்றது.

என்ன ஆகி விட்டது இந்த இளைய தலைமுறைக்கு? பூமியில் நம்மோடு சக வாழ்வு வாழ்ந்து வரும் அப்பாவி மிருகங்களிடம் இவர்களுக்கு ஏன் இப்படிப்பட்டதொரு துவேஷம்?

வேலூரைச் சேர்ந்த சில மருத்துவ மாணவர்கள் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தைத்தான் சொல்கிறேன்.
ஓர் அப்பாவிக் குரங்கைப் பிடித்த அந்த மருத்துவ மாணவர்கள், வார்த்தைகளால் விவரிக்க இயலாத சித்திரவதைகளுக்கு அதை ஆளாக்கிக் கடைசியில் அதைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள்.

கொடூர மனம் படைத்தவர்கள்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு செயலை இந்த இளம் மாணவர்கள் நிகழ்த்தியிருப்பது மனித இனத்துக்கே அவமானம்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு நாயைத் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே போட்டு, அது கீழே விழுந்து கொண்டிருப்பதையும், விழுந்த பின்பு வலியால் துடிப்பதையும் செல்லிடப்பேசி மூலம் படம் எடுத்து ரசித்ததன் மூலம் நம்மையெல்லாம் அதிர வைத்தார்கள்.

பிற ஜீவனின் துன்பத்தில் இன்பம் காண்கின்றவர்களை மனிதர்கள் என்று சொல்லவே நா கூசுகின்றது.
மனித உயிர்களை நோயினின்று காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்கின்ற மகத்தான பணிதான் மருத்துவப் பணி.
அதனால்தான், மருத்துவத் தொழில் புரிபவர்களைக் கடவுளுக்குச் சமமாக அனைவரும் மதிக்கின்றனர்.

அப்படிப்பட்ட புனிதமான தொழிலில் ஈடுபடுவதற்காகப் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் சிலரது நெஞ்சம் இப்படிக் கொடுமை எண்ணங்கள் நிறைந்ததாக எப்படி இருக்க முடியும்?
இப்படிப்பட்டவர்கள் படித்து முடித்து எதிர்காலத்தில் மருத்துவப் பணியில் ஈடு பட்டால் அவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளை எவ்வாறு கருணையுடன் கவனிப்பார்கள்?

இதேபோன்றுதான், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட நாவரசு கொலை வழக்கிலும் நடந்தது.
மருத்துவக் கல்லூரி மாணவரான நாவரசு தன்னுடைய சீனியரான ஜான் டேவிட் என்பவரால் கொடுமைப்படுத்தப்பட்டுப் பல துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு கல்வி நிலையங்களில் நிகழ்த்தப்படும் ராகிங் கொடுமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மனிதராயினும், விலங்குகளாயினும், மற்ற ஜீவராசிகளின் துன்பத்திலும் மரணத்திலும் இன்பம் காணக்கூடியவர்கள் இந்தச் சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள் அல்லவா?

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும், ஜீவகாருண்யம் போற்றும் இன்னும் எத்தனையோ மகான்களும் அவதரித்து வாழ்ந்து வந்த இந்தப் புண்ணியத் தமிழ் பூமியில், இப்படிப்பட்ட கொடூரர்களும் பிறந்திருப்பதை என்னவென்று சொல்ல?
இத்தகைய சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தானே நடைபெறுகின்றன என்றும் சிலர் கேட்கலாம்.
ஒரு குடம் பாலை பயனற்றதாக்குவதற்கு ஒரு துளி விஷமே போதுமானது.
அதேபோலத்தான் இத்தகைய சம்பவங்களும். இவை ஏற்படுத்துகின்ற எதிர்மறை அதிர்வுகளும், இந்நிகழ்வுகளைப் பார்க்க நேரிடும் இளைய தலைமுறையினர் மனதில் ஏற்படும் பாதிப்புகளும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

ஒரு சுவாதி கொலை வழக்கில் துப்பு துலக்கப்படுவதற்கு முன் தமிழகம் முழுவதும் எத்தனை ஒருதலைக் காதல் கொலைகள் அரங்கேறிவிட்டன....
தனது காதலை ஏற்காத பெண் உயிரோடு இருக்கவே தகுதி அற்றவள் என்று இன்றைய இளைஞர்கள் பலரும் நினைக்கத் துவங்கி இருப்பதையே நாள்தோறும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏதோ ஓரிடத்தில் பச்சிளம் பாலகன் ஒருவனை கயவர்கள் சிலர் மதுவருந்த வைத்த செய்தி, இப்போது தொடர்கதையாகி இருக்கிறது.
இன்றைய சூழலில் நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களின் மீதே ஊடக வெளிச்சம் அதிகம் பாய்கிறது.

அத்தகைய வெளிச்ச விளம்பரமானது, இளைய சமுதாயத்தினர் சிந்தனைகளில் ஏற்படுத்தும் பாதிப்பு சொல்லி முடியாதது. தங்கள் மீதும் தாற்காலிகமாகவாவது சிறிது நேரம் ஊடக வெளிச்சம் பாயட்டும் என்ற அற்ப ஆசையில்கூட கொடுஞ்செயல்களைப் பலர் அரங்கேற்றும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய சூழலில்தான், தங்களிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி மிருகங்களைச் சித்திரவதை செய்த இளைஞர்களின் செய்கைகளும் பல சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவே கருத வேண்டியுள்ளது.

காட்டுமிராண்டித்தன செயலை நிறைவேற்றுவதோடு நிற்காமல், அதனை படம் பிடித்தும், முக நூல் உள்ளிட்டவற்றில் பதிவேற்றியும் சுகம் காணும் குரூர மனப்போக்கும் இங்கு வளர்ந்து வருகிறது.
இனி இத்தகைய நிகழ்வுகள், கலாசாரம், பண்பாடு நிறைந்த நமது தமிழ்மண்ணின் எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும் அதை நம் அனைவருக்கும் அவமானம் தரும் நிகழ்வாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அரசாங்கம், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், மனநல நிபுணர்கள் ஆகிய பல துறையினரும் இணைந்து, இன்றைய இளைய தலைமுறையினரின் மனங்களில் வேரோடிப்போயிருக்கும் குரூர சிந்தனைகளையும், குறுகிய விளம்பரம் தேடும் முயற்சிகளையும் களைய வழிவகை செய்ய வேண்டியது மிக மிக அவசியம்; அவசரமும் கூட.

தடம்புரளும் ரயில்வே!

By ஆசிரியர்  |   Published on : 26th November 2016 05:28 AM  |   
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தூர் - பாட்னா விரைவு ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஏறத்தாழ 150 பேர் பலியானதுடன், நூற்றுக்கணக்கான பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ரயில்வே 1990-களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் மேலிடுகிறது. ரயில்வேயின் சரித்திரத்திலேயே மிக அதிகமான விபத்துகள் நிகழ்ந்தது தொண்ணூறுகளில்தான்.
ஆங்காங்கே சரக்கு ரயில் தடம் புரள்வதும், பயணிகள் ரயில் தடம் புரள்வதும் வழக்கமாகி விட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் மூன்று மிகப்பெரிய விபத்துகள் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த மாதம், பஞ்சாபிலுள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஜீலம் விரைவு ரயில் நல்ல வேளையாக சட்லஜ் நதியைக் கடப்பதற்கு 50 மீட்டர் முன்னால் தடம் புரண்டது. அதுவே நதியின்மீது செல்லும்போது தடம் புரண்டிருந்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் பலியாகி இருப்பார்கள்.
இந்த ஆண்டில் மொத்தம் 80 ரயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டைவிட 11 விபத்துகள் அதிகம். டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்தால் அதிர்ஷ்டம். இந்த 80 விபத்துகளில் பாதிக்குமேல் ரயில் தடம் புரண்டதால் நிகழ்ந்த விபத்துகள்தான். ரயில் தடம் புரள்வதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, தண்டவாளத்தில் ஏற்படும் விரிசல் அல்லது முறையான பராமரிப்பு இன்மை. இரண்டு, ரயில் பெட்டிகள் பழையதாகி விட்டிருப்பது.
பாதுகாப்புக்கு சில அடிப்படைத் தேவைகள் இருந்தாக வேண்டும். தண்டவாளங்களின் பராமரிப்பு, சிக்னல்கள் சரியாக இயங்குவது, ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் என்று அனைத்துமே முறையாக இருந்தால்தான் பாதுகாப்பாக ரயில் இயங்க முடியும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர்கள் நடத்திய துறை சார்ந்த விசாரணைகளில், மிகப்பெரிய ரயில் விபத்துகளில் 70% விபத்துகள் மனித கவனக்குறைவால்தான் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. மனித கவனக்குறைவு என்றால், தண்டவாளங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, சிக்னல்களை சரியாக இயக்காமல் இருப்பது போன்றவை. இதற்குக் காரணம், ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாமல் இருப்பதும், கண்டிப்பான செயல்பாட்டு ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படாமல் இருப்பதும்தான். இதற்கு, ரயில்வே தொழிலாளர்களின் யூனியன்களும் ஒரு காரணம்.
ரயில்வேயின் பாதுகாப்புக்காக அனில் ககோட்கர் குழுவும், ரயில்வே சீரமைப்புக்காக விவேக் தேவ்ராய் குழுவும் அமைக்கப்பட்டன. அவர்கள் பல பரிந்துரைகளை முன்வைத்தனர். ஆனால் அவை எதுவுமே செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
2011-இல் அனில் ககோட்கர் குழு அமைக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல், பழைய தண்டவாளங்களை மாற்றுதல், சிக்னல் முறைகளை நவீனப்படுத்துதல் போன்றவற்றிற்காக ஐந்தாண்டு காலகட்டத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யக் கேட்டுக்கொண்டது ககோட்கர் குழு. அதேபோல, கனமான ரயில் பெட்டிகளுக்கு பதிலாக, எடை குறைந்த நவீன ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்தி, பழைய பெட்டிகளை மாற்றுவதற்கு ஐந்தாண்டு இடைவெளியில் ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யக் கோரியது. பரிந்துரை அளித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட வெறும் 10% ரயில் பெட்டிகள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால், தேய்மான ஒதுக்கீடு நிதி என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 2006 - 09இல் ரூ.6,000 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு 2015 - 17இல் ரூ.3,000 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. உண்மையான தேவை ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை. ஏறத்தாழ 2.3 கோடி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை ரயில்வே நிர்வாகம் உணராததுதான் இதற்குக் காரணம்.
இந்திய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது ரயில்கள்தான். 2.3 கோடி பயணிகளை மட்டுமல்ல, தினந்தோறும்
30 லட்சம் டன் சரக்குகளையும் கையாள்கிறது. ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதில் குறியாக இருக்கும் நிர்வாகம், பொதுமக்களைக் கவர்வதற்காக புதிய ரயில்களை அறிவிப்பதும், அளவுக்கதிகமாக சரக்கு ரயில்களை இயக்குவதுமாக இருக்கிறது. அதிகரிக்கும் ரயில் இயக்கத்துக்குத் தகுந்தவாறு, தண்டவாளங்களை மேம்படுத்துவதிலும் சிக்னல்களை நவீனப்படுத்துவதிலும், ஊழியர்களின் தரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் ரயில் விபத்துகளுக்குக் காரணம்.
புதிய வழித்தடங்கள், புல்லட் ரயில், ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் வைஃபை இவையெல்லாம் அல்ல ரயில்வேத் துறையின் உடனடித் தேவைகள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யாமல் இவையெல்லாம் இருந்து என்ன பயன்? ரயில்வே போர்டு ஒருபுறம், ரயில்வே அமைச்சகம் இன்னொருபுறம் என்று இரட்டை நிர்வாகக் கேந்திரங்கள் இருப்பதும்கூட ரயில்வே துறையின் செயலின்மைக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
இந்தூர் - பாட்னா ரயில் விபத்தைத் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும். ஒருசில ஊழியர்களின் கவனக்குறைவு காரணம் என்று கண்டறிவார்கள். அந்த ஊழியர்கள் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். யூனியன்களின் தலையீட்டால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ரயில்வேயின் நிரந்தரக் குறைகளுக்குக் காரணமான தலைமை எந்தவித பொறுப்பும் ஏற்காது; தண்டவாளங்களும், சிக்னல்களும், பழைய ரயில் பெட்டிகளும் இருப்பது போலவே தொடரும். இனி, அடுத்த ரயில் தடம் புரளும் வரை இதுகுறித்து யோசிக்கவும் மாட்டார்கள்!

இந்த 10 தவறுகளைச் செய்யாதீர்கள் இளைஞர்களே! #Alert


பொதுவாக நாற்பது வயதில் தான் ஒரு மனிதன் முழுமையாகிறான் எனச் சொல்வார்கள் ஆனால் இப்போது வேலைப்பளு, மனம் போன வாழ்வு, ஒழுக்கமின்மை என பல காரணங்களால், தவறுகளால் இப்போது நாற்பதிலியே மனிதன் முடமாகிறான். அறுபது - எழுபது வயதுகளில் வர வேண்டிய பல வகையான நோய்கள் தற்போது முப்பது - நாற்பது வயதுகளிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் இளம் வயது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருக்கிறது. . சர்க்கரை வியாதி, பிபி, கொலஸ்ட்ரால், கல்லீரல் பிரச்னை என அத்தனையும் நாற்பது வயதிலேயே வர ஆரம்பித்திருக்கிறது.

கார்த்திக்குக்கு 28 வயது தான் ஆகிறது, கடும் உழைப்பாளி, நல்ல சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்தான். பெற்றோர்கள் அவனுக்கு வரன் பார்த்திருந்தார்கள், ஆசை ஆசையாக ஊருக்குச் சென்றவன், அங்கே திடீரென மயங்கி விழுந்தான். முதன் முதலாக மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற கார்த்திக்கிடம், அவருக்கு சர்க்கரை நோய், பி.பி, இதய நோய் வந்துள்ளது என மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தான், மனமுடைந்தான். கொஞ்சம் நிதானித்து முன் கூட்டியே உடல்நலனை கவனித்திருந்தால் இந்த நோய்களை தடுத்திருக்கமுடியும் என மருத்துவர் சொன்னதை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனான். இன்று தமிழகம் முழுவதும் கார்த்திக்கை போன்ற பல நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு நூறு பேர் அய்யோ கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே என உச் கொட்டுகிறார்கள். இதற்கு யார் காரணம்? எது தீர்வு ?


உலகம் முழுவதும் மருத்துவ உலகில் தற்போது பிரபலாமாகி வரும் சொல் பிரிவென்டிவ் மெடிசின் என சொல்லப்படும் முன்காப்பு மருத்துவம். ஒரு நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதை விடவும், அவ்வபோது உரிய பரிசோதனைகளைச் செய்து, கூடுமானவரை நோய்களை தடுப்பதையே நோக்கமாக கொண்டது தான் பிரிவென்டிவ் மெடிசின். நாம், இருபது வயதுகளில் செய்யும் தவறுகளின் வெளிப்பாடே நாற்பதில் வரும் பிரச்னைகள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, கல்லூரி பருவத்துக்கு பிறகு அடுத்த பத்தாண்டுகளில் எவ்வாறு தங்களது உடல்நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அவர்களது பிற்பாதி வாழ்க்கை அமைகிறது. இளம் வயதில் நாம் செய்யும் சின்ன சின்னத் தவறுகள் எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக பின்னாளில் வந்து சேர்வது தான் எக்கச்சக்க நோய்கள்.

சரி, நாம் செய்யும் தவறுகள் தான் என்ன? இது குறித்து மருத்துவர் சி. ராஜேந்திரன் விரிவாகச் சொல்கிறார்.


1. மோசமான நேர மேலாண்மை :-

சிறுவயதில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வளர்பவர்களுக்கு, அதன் பின்னர் அவர்களை பிரிந்து வெளியூரில் வேலைக்கு செல்லும் ஆரம்பகட்ட வருடங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்கிறது. காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுப்பது வரை அத்தனையிலும் மெத்தனம் மேலோங்குகிறது. உடலை பற்றியும், சுகாதாரம் பற்றியும் அறவே கவலைப்படாமல் இருப்பார்கள். கட்டற்ற சுதந்திரத்தை சோம்பேறித்தனத்தால் தவறாக பயன்படுத்துவார்கள். எந்த நேரத்தை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் திணறுவார்கள்.சிலர் பாதை மாறுவார்கள். நேரத்தை சரியாக கடைபிடிக்காமல் இருக்கும் தவறு தான் வாழ்வியல் முறை மாறுவதற்கான அடிப்படை காரணம்.

2. உணவில் அக்கறையின்மை!

சுமார் இருபது வருடங்கள் வரை பெரும்பாலும் வீட்டில் செய்த உணவையே சாப்பிட்டு வந்தவர்கள், வேலைக்கு சென்ற பின்னர் சொந்த சம்பாத்தியம் இருந்தாலும் வீட்டு சாப்பாடு கிடைக்காமல் தவிக்க நேரிடலாம். இந்த சமயங்களில் ஹோட்டல் உணவுகளையே நாடுவது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது , காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை வெளுத்து கட்டுவது, சத்தான சமச்சீரான உணவுகளை தவிர்ப்பது என உணவு முறை முற்றிலும் மாறிவிடுகிறது.

இந்த தவறுகளால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை தவிர்ப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரியாக உடலுக்கு கிடைப்பதில்லை அதே சமயம் மோசமான உணவு பழக்க வழக்கத்தால் உடலில் தேவையற்ற கொழுப்பும் சேருகிறது, புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருள்களை தொடர்ந்துச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

3. நண்பர்கள் சேர்க்கை : -

பள்ளி, கல்லூரி நண்பர்களை தாண்டி புது இடம், புது நண்பர்கள் என இளம் வயதில் பலருக்கும் புது சேர்க்கை உருவாகும். நண்பர்கள் எப்போதுமே நல்ல விஷயம் தான், ஆனால் சில சமயங்களில் தவறான நண்பர்களுடன் சேர்ந்தால் வாழ்கை பாதை மாறிவிடவும் வாய்ப்புண்டு. கல்லூரி செல்லும் வரை பணத்துக்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கும் ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்தவர்களுக்கு தனது பணம் தானே தாரளமாக செலவு செய்யலாம் என்ற எண்ணம் பிறக்கும். மது, புகைப்பிடித்தல் போன்ற விஷயங்களில் இளம் வயதினர் பலர் சிக்கிக்கொள்வது தவறான சேர்க்கையால் தான்.



4. தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகுதல் : -

எதையும் முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், பகிர வேண்டும் என்ற ஆவல் இளம் வயதினரிடையே மிகவும் அதிகம்.பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை எந்த அளவுக்கு அணுக வேண்டும். எந்த புள்ளியில் நிறுத்திவிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பதிலும், தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளுவதும், தொழில்நுட்ப அப்டேட்களை விரல் நுனியில் வைத்திருப்பதும் நல்ல விஷயம். ஆனால் அதே சமயம் டிஜிட்டல் சாதனங்களில் அடிமையாவது நல்லதல்ல. மனதையும், உடலையும் பாதிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது மொபைலும், டிஜிட்டல் சாதனங்களும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

5. வேலைவாய்ப்பின்மை : -

வேலைவாய்ப்பின்மை ஒரு மிகப்பெரிய மன அழுத்தம் தரக்கூடிய பிரச்னை. தன்னம்பிக்கையை தளர வைக்கும் கடினமான கால கட்டம் இது. ஒரு சிலர் வெற்றிகரமாக மன உறுதியுதியுடன் இந்த காலத்தை கடந்தாலும், பலர் இந்நாட்களில் தளர்ந்து விடுகிறார்கள். ஒரு நாளை எப்படி கடத்துவது என தெரியாமல் பலர் வித விதமாக யோசிப்பார்கள். சிலர் எப்போதும் மனதுக்குள் புழுங்கி கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் சோகத்தை மறைப்பதற்காக போதை வஸ்துகளை நாடுகிறார்கள். இவை எல்லாமே உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மனதை பாதித்து புத்துணர்ச்சியை கெடுக்கின்றன.



6. வேலைபளு : -

முன்னெப்போதும் விட தற்போதைய தலைமுறை மிக அதிகமாக இளம் வயதிலேயே உழைக்க தொடங்குகிறார்கள், ஐ.டி உட்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் அதிக லாபம் என்பதையே நோக்கமாக கொண்டு ஊழியர்களை பிழிய ஆரம்பித்திருகின்றன. உடல் உழைப்பு என்பதை விடவும் அறிவு உழைப்பு அதிகம் தேவைப்படும் நிறுவனங்களில் நித்தம் நித்தம் புதுப்புது ஐடியாக்களை யோசித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தங்கள், சக்திக்கு மீறிய டார்கெட்டுகள் போன்றவை வைக்கப்படுவதால் வேலைபளு அதிகமாகிறது,

இதனால் பலர் வீக் எண்ட் என்றாலே மது, சிகரெட் போதையில் திளைத்து மன அழுத்தத்தை குறைக்க முயலுகின்றனர். மன அழுத்தத்தோடு, புகை, மது ஆகியவற்றின் பாதிப்புகளும் சேர்ந்து தாக்க ஆரம்பிக்கிறது.

அறிவு சரக்கு, கற்பனைத் திறன் போன்றவை ஒரு கட்டத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால் நாற்பது வயதாகும் போது, அப்போது நிறுவனத்துக்குள் நுழையும் இளைஞர்களுடன் போட்டி போட்டு பலரால் உழைக்க முடிவதில்லை. விளைவு நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இது மீண்டும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது.



7. ரிலேஷன்ஷிப் சிக்கல்கள் :-

ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் இளம் வயதில் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரிலேஷன் ஷிப் சிக்கல்கள் தான். முப்பது வயதுக்குள்ளாகவே திருமணம் முடிந்து விவாகரத்து கோருவோர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

படிப்பு, வேலை என இயந்திரத்தனமாக வளர்ந்த மனிதர்களுக்கு, சக பார்ட்னரை எப்படி கையாளுவது என தெரிவதில்லை. கணவன் - மனைவி குடும்ப உறவில் பிரச்னை ஏற்படும் போது உச்சக்கட்ட மன அழுத்தத்துக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். இதனால் மீண்டும் பலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாகிறார்கள். ரிலேஷன்ஷிப் பிரச்னைகளால் அலுவலகத்தில் பலர் சரியாக பணி புரியாமால் போவதால் அங்கேயும் மரியாதை குறைவதால் இந்த பிரச்னைகள் எல்லாம் ஒரு சுழற்சியாக சுழன்று அடிக்கும்.

8.பாலியல் கோளாறுகள் :-

இந்தியாவில் பாலியல் கல்வி இல்லை, பாலியல் தொடர்பான விழிப்புணர்வும் கிடையாது. ஆண்களும் சரி, பெண்களும் சரி பாலியல் ரீதியாக பாதிக்கபடுவது இந்தக் காலகட்டத்தில் தான். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாத அதே சமயம் பாலியல் குறித்த அத்தனை தவறான தகவல்களையும் புரிதல்களையும் இணையம், போலி டாக்டர்களின் நிகழ்ச்சிகள் போன்றவை வழியாக தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பாலியல் கோளாறுகளால் தீவிர மன அழுத்தம் ஏற்படுகின்றன.



9. உடற்பயிற்சியின்மை :-

கல்லூரி வரை செல்வதற்கு முன்னதாக பெரும்பாலும் பலர் ஏதாவதொரு வகையில் விளையாடி கொண்டிருப்பார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்னை இருக்காது. ஆனால் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பலர் தங்கியிருக்கும் இடத்துக்கும் வீடுக்கும் மட்டுமே பயணிப்பார்கள். அதுவும் இரு சக்கர வாகனம் அல்லது காரில் தான். உடல் உழைப்பு, உடற்பயிற்சி இரண்டும் இல்லாததால் உடலில் கொழுப்புகள் படிய ஆரம்பிக்கும். சரியான உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடல் பருமன் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடற்பருமன் வரும்போது கூடவே வரிசையில் நான்கு நோய்கள் நிற்கும்.



10. தொலைந்து போன தூக்கம்!

தற்போதைய தலைமுறையில் இளம் வயதினர் அநேகம் பேர் தூக்கமின்மை பிரச்னையால் அவதிபடுகின்றனர். நைட் ஷிப்ட் ஒரு காரணம் என்றாலும் லேப்டாப்பில் இரவு இரண்டு படம் பார்ப்பது, நைட் ஷோ தியேட்டருக்கு செல்வது, நள்ளிரவை தாண்டியும் யாருக்காவது மெசேஜ் செய்து கொண்டிருப்பது, சமூக வலைதளங்களில் மூழ்குவது போன்றவற்றால் இரவு தூக்கம் தடைபடுகிறது.

இரவு தூக்கம் தாமதமாகும் சமயத்தில் வளர்சிதை மாற்றம் பாதிக்கபடுகிறது. இரவு தூக்கம் தாமதமாவதால், அதிகாலை எழுந்திருக்க முடிவதில்லை, அதிகாலையில் மட்டுமே கிடைக்கும் சுத்தமான ஓசோன் வாயுவை சுவாசிக்கும் வாய்ப்பும் பறிபோகிறது. காலையில் தாமதமாக எழுவதால் அவசர அவசரமாக வேலைக்கு செல்ல நேர்கிறது. இதனால் உடற்பயிற்சி, காலை உணவுக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை . இதன் காரணமாக அன்றைய தினம் சுறுசுறுப்பாக செயல்பட முடிவதில்லை.

தவறான வாழ்வியல் முறை காரணாமாக என்னென்ன நோய்கள் வருகிறது ?



1.உடற்பருமன்

2. வைட்டமின் டி குறைபாடு

3. சர்க்கரை நோய்

4. உயர் ரத்த அழுத்தம்

5. தைராய்டு கோளாறுகள்

6.ஹார்மோன்கள் சமசீரின்மை

7. புற்றுநோய்

8. செரிமான கோளாறுகள்

9. மன அழுத்தம்

10. இதய நோய்கள்

11. நரம்பு மண்டல பாதிப்புகள்

12. முதுகு வலி, மூட்டு வலி

13. சரும கோளாறுகள்

14.பாலியல் தொந்தரவுகள்

15. சுவாச பிரச்னைகள் .



தீர்வு என்ன?

இளம் வயதில் சரியாக தன்னை பராமரிக்க வில்லை என்றால் பல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக வேலைக்கு செல்லுதல், பேச்சலர் வாழ்கை, திருமணம் போன்ற பல விஷங்களை எல்லோராலும் கடந்து வராமலும் இருக்க முடியாது.

தனி மனித ஒழுக்கம், தனி மனித சுகாதரம், மன நலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ ஆரம்பித்தாலே பாதி பிரச்னைகள் சரியாகிவிடும், பல்வேறு நோய்கள் வருவதையும் தடுக்க முடியும் . நீண்ட காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழலாம்.

சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதே சமயம் மோசமான குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி போன்றவற்றுக்கு தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், உடலை தூய்மையாக வைத்து கொள்ளுதல், தன்னைச் சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வது போன்ற, சில நல்ல பழக்க வழக்கங்களை வழக்கமாக்கி கொண்டால் அறுபதிலும் ஆரோக்கியம் உண்டு.



ஹெல்த் இன்சுரன்ஸ் அவசியம் :-

ஹெல்த் இன்சுரன்ஸ் பலருக்கும் ஆபத்தான கால கட்டத்தில் ஓரளவு கை கொடுக்கும் விஷயம். எதாவது நோய் வந்தபிறகு இன்சுரன்ஸ் எடுக்கலாம் என நினைத்தால் பிரீமியம் அதிகம் கட்ட நேரிடும். இளம் வயதிலேயே ஹெல்த் நன்றாக அலசி ஆராய்ந்து அவரவர்களுக்கு ஏற்ற பாலிசிகளை எடுத்துகொள்ளும் போது பிரீமியம் வெகுவாக குறையும். எதிர்பாராத காலகட்டத்தில் அவசர அவசியத்தேவைகள் ஏற்படும் சமயங்களில் இன்சுரன்ஸ் கைகொடுக்கும். இன்சூரன்ஸ் தொகை, நிறுவனம் ஆகியவற்றை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு தேர்ந்தெடுப்பது நல்லது.

ஹெல்த் செக் அப் பண்ணுங்க :-

முப்பந்தைந்து வயதுக்கு மேல் தான் பலர் மருத்துவமனை வாசலுக்கே பலர் செல்லுகின்றனர். இது தவறு. மருத்துவமனை சென்றாலே பணம் செலவாகும், தனக்கு எதாவது நோய் இருக்கும் என சொல்லிவிடுவார்கள் என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. இதனால் எதாவது பெரிய நோய் வரும் வரை மருத்துவமனை பக்கமே பலர் தலைவைத்து படுப்பதில்லை.



'வரும் முன் காப்பது சிறந்தது' என்பது பலருக்கு புரிவதில்லை. ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ, சுவாச நோயோ, உடல் பருமனோ, புற்றுநோயோ எதுவாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் பரிசோதனை மூலம் கண்டறிந்தால் இந்த நோய்கள் எல்லாவற்றையுமே தடுக்க முடியும். அதன் பாதிப்புகளை குறைக்க முடியும்.

ஆக, 25 வயதில் இருந்தே ஆண்கள், பெண்கள் இருவரும் வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில், பரம்பரையில் யாருக்காவது மேற்சொன்ன வாழ்வியல் நோய்கள் வந்திருந்தால் அந்த இளைஞர்கள் கண்டிப்பாக குடும்ப மருத்துவரை அனுக்கி அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை எடுத்துகொண்டு நோய்களை தடுக்க முயற்சிப்பதே புத்திசாலித்தனம். தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது சலுகை விலையில் பொதுமக்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யப்படுகிறது, ஆனால் இதை பலர் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை



இந்தியாவில் பரிசோதனைகள் குறித்த தெளிவின்மை மக்களுக்கு அதிகம், எனவே தான் பல நோய்கள் வருகின்றன, ஒரு சிலர் தனக்கு எதாவது நோய் இருக்குமோ என பயந்து பயந்தே தேவையற்ற பதற்றத்ததை உருவாக்கி கொள்கிறார்கள். ஒருவேளை நோய் வந்துவிட்டாலும் அதிக பதற்றமடைகிறார்கள். முன்காப்பு சிகிச்சை குறித்தது தெளிவு வரும்போது, எதாவது நோய் வந்தால் கூட ஆரம்பக்கட்டதிலேயே மாத்திரை, மருந்துகள் போன்ற சிகிச்சைகளே தேவைப்படாமல் வாழ்வியல் முறை மாற்றத்தால் மட்டுமே பல்வேறு நோய்களை தடுத்து விட முடியும் என்ற நிலை இருக்கும்போது தேவையற்ற பதற்றத்தை தவிர்போம். நலமாக, மகிழ்ச்சியுடன் வாழ்வோம்

What’s wrong with medical students in TN?

A few months after the shocking incident in which a dog was thrown off the rooftop of a building in Chennai by two medical students, a similar incident that took place at the Christian Medical College(CMC) in Vellore a few days ago, came as a shock to many animal lovers and activists. A monkey that had entered the CMC campus, was tortured, killed and buried by four students of the college. Is it just a coincidence that the two back-to-back incidents of animal cruelty involve medical students? Aren't attributes of compassion and love towards living beings expected from the future doctors of our nation? Experts reason it out...

It all boils down to their upbringing

Psychologist Mini Rao says that she can't think of anything else other than their upbringing at home as a reason that would have led the students to do something this terrible. "I think it is just a coincidence that both the incidents involve medical students. These individuals have no regard for other living creatures and have treated them cruelly. Definitely, it has to do with the kind of upbringing they have had. They wouldn't have been taught to respect and show kindness to other living creatures. Also, youngsters who were brought up by strict parents and had no freedom at home, tend to misuse the liberty that they are allowed in colleges. They try to show their power and control over lesser mortals. The same could have happened in this case also."

More incidents are being reported due to better awareness

According to Dawn Williams, general manager of Blue Cross, cruelty to animals has been happening for the longest time. "It is just that more incidents are being reported these days, because of better awareness. Thanks goes to media and social media for propagating animal rights awareness. In this case also, other students who witnessed the crime informed animal activists about it. The students who were involved in this must have thought that no one would talk about it after burying the monkey's body and that they could get away scot-free. Good that such a heinous crime was brought to light by other students. To tell you the truth, I am happy that more number of people are taking the imitative to fight for animal rights, today. And this particular case will be taken very seriously by the authorities as killing of a monkey comes under the Wildlife Protection Act, 1972," says Dawn. However, reiterating the fact that this was only a coincidence that both the incidents involved medicos, director of clinics at the Tamil Nadu Veterinary and Animal Sciences University, Dr R Jayaprakash, says, "In general, many aren't compassionate towards animals. See, what happened in Kerala. The news of culling of stray dogs in Kerala made headlines, recently. In fact, the alumni association of a prominent college even announced gifts to the civic authorities who would kill the maximum number of stray dogs. Life is precious — be it that of a man or of an animal."

What's with medicos and animals in both the incidents

Meanwhile, Shravan Krishnan, an animal rights activist explains the need of a background check of students applying for medical courses. "Shouldn't compassion be one of the attributes these people should have? Apart from their score in entrance exams, medical colleges should also check their background on their experience of interning in NGOs and their involvement in social welfare activities during school days. They aren't going to work with bricks and stones. For them to be good doctors, they should have compassion and respect for all living creatures.


 A student's educational proficiency and his/her parents' ability to pay high capitation fees don't really matter," states Shravan Krishnan. Agreeing with Shravan is Dr Shiranee Pereira, founder of Mahatma Gandhi-Doerenkamp Centre (MGDC) for Alternatives to Use of Animals in Life Science Education. Shiranee who is also a former member of the Committee for the Purpose of Control And Supervision of Experiments on Animals says, "After a long fight I along with others managed to put an end to dissection and take it out of Biology curriculum. But there are still animal houses in medical colleges and experiments are still conducted on animals. But my question is after doing so much experiments on animals for so many years, how much have these doctors been able to translate that into human health. And specifically, I think CMC ranks the highest in the country when it comes to high-distress, high-pain studies. 

The sad part is that many of these experiments are done by students just for their Ph.D or post-graduate thesis. Why don't they choose a non-animal method to fulfill the curricular need? In general, whatever a teacher says is considered holy by most students. So, it is only natural that when animals are considered in such inanimate ways for experiments, students end up doing such horrific things outside their classrooms also. We need to rethink our education system and ensure that no blood is shed in a classroom, in the name of experimentation."

Friday, November 25, 2016

கள்ளக்காதலைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு போட முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

டெல்லி: கணவரோ அல்லது மனைவியோ கள்ளக்காதல் வைத்துக் கொள்வதைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்ட முடியாது. அதேசமயம், இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோர உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்காதலை மன ரீதியான கொடுமையாகவும் சித்தரிக்க முடியாது. அதைக் கொடுமையாகவும் கூற முடியாது. இதன் காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டவும் கூடாது. வேண்டுமென்றால் இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் கள்ளக்காதலால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக புகார் கூறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நபருடன் இணைத்துப் பேசப்பட்ட பெண்ணும், அப்பெண்ணின் தாயார் மற்றும் சகோதரரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கர்நாடக நீதிமன்றங்களில் அப்பீல் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை விதிக்கப்பட்ட நபர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கிலிருந்தும் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது 306, 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமாகும். தவறானதாகும்.

கள்ளக்காதல் என்பதை 498ஏ பிரிவின் கீழ் 'ஹராஸ்மென்ட்' என்று சொல்ல முடியாது. அது தவறான நடவடிக்கைதான், செயல்தான் என்றாலும் கூட அதை சித்திரவதை என்ற பட்டியலில் கொண்டு வர முடியாது. குற்றச் செயலாக கருத முடியாது.

ஒரு கணவர் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்காக அதைக் கொடுமையாக கருதி மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார் என்று மனைவி கூற முடியாது. அதேபோலத்தான் மனைவிக்கும்.

மன ரீதியான கொடுமை, சித்திரவதை என்பதற்குரிய அம்சங்கள் கள்ளக்காதலுக்கு இல்லை. எனவே அதை அதில் சேர்க்க முடியாது. மாறாக இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்று கூறியுள்ளனர்.

Source: tamil.oneindia.com
Dailyhunt

எம்.ஜி.ஆர் அறிவிப்பும் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா சந்தித்த சர்ச்சையும்..!

 எஸ்.கிருபாகரன்

இன்றைக்கு சர்ச்சையானாலும் எந்த சலசலப்பானாலும் அது சினிமா சினிமா சினிமா...தமிழுலகின் சகல உணர்ச்சிகளும் சினிமாவாகவே மக்களுக்கு உள்ளது. பல பத்து ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தை இசையுலகம் பற்றியிருந்தது. ஆம் இசையுலகில் ஆரோக்கியமான சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்து இசையுலகத்துக்கு அது புது ரத்தம் பாய்ச்சிய நாட்கள் அவை. இந்த சர்ச்சை வளையத்துக்குள் சிக்காத இசைமேதைகள் கிடையாது. எரியும் நெருப்பில் சுப்புடு என்ற மனிதர் வேறு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தது தனிக்கதை.

70 களில் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவந்த இளைஞரான மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவும் 70 களின் இறுதியில் அப்படி ஓர் சர்ச்சைக்குள் சிக்கினார். கிட்டதட்ட ஒரு வருடங்கள் அது இசையுலகில் கொழுந்துவிட்டு எரிந்தது அந்த விவகாரம். பரபரப்பான அந்த சர்ச்சைக்கு வித்திட்டது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அறிவிப்பு



ஆம் 1978-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'பாரம்பரியம் குன்றாமல் புதிய தமிழ்ப்பாடல்கள் மற்றும் தமிழ்க் கலாசாரத்தின் ஜீவன் சிதையாமல் கர்த்தா மற்றும் ஜன்யத்தின் வழியில் புதிய ராகங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசும் தமிழக அரசின் விருதும் வழங்கப்படும்' என்பதுதான் அந்த அறிவிப்பு. இதற்காக இசைக்கலைஞர் செம்மங்குடி சீனிவாசன் தலைமையில் ஓர் குழுவும் அமைக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான சில மாதங்களுக்குப்பின் டிசம்பர் மாதம் 21 ந்தேதி மியூசிக் அகாடமியில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். விழாவில் தலைமை ஏற்றிருந்த பாரமுரளி கிருஷ்ணா பெரும் குற்றச்சாட்டை எம்.ஜி.ஆர் அமர்ந்திருந்த மேடையில் துணிச்சலாக முன்வைத்தார். அதாவது தான் பல புதிய ராகங்களை கண்டுபிடித்திருப்பதாகவும் ஆனால் தமிழக அரசின் விருதுக்குழு தன்னை புறக்கணித்துவிட்டதாகவும் முதல்வர் அதை பரிசீலிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுக்கு அவர் ஆதாரமாக மியூசிக் அகாடமி அந்த வருடம் வெளியிட்டிருந்த ஆண்டுமலரை குறிப்பிட்டார்.

மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் ஆண்டு மலர் வெளியிடுவது வழக்கம். அந்த வருடத்தில் அகாடமியினால் சங்கீத கலாநிதி விருதை வளர்ந்து வரும் இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பெற்றிருந்தார். இதனால் ஆண்டு மலரில் அவரைப்பற்றிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதில் 'மஹதி, சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி போன்ற புதியராகங்களையும், ஹம்சவிநோதினி, ரேவதி, ரோஹினி, பிரதிமத்யமாவதி போன்ற சில ராகங்களையும் கண்டறிந்தவர் என பாலமுரளி பற்றிய அறிமுக குறிப்பு வெளியிட்டிருந்தது அகாடமி. இதை ஆதாரமாகக் கொண்டே பாலமுரளி எம்.ஜி.ஆர் முன் தைரியமாக பேசினார்



பாலமுரளியின் கோரிக்கையை எம்.ஜி.ஆர் விருதுக்குழுவுக்கு பரிசீலிக்கச் சொன்ன சில நாட்களில் பிரபல வீணை வித்வானும் 'அந்தநாள்' 'பொம்மை' போன்ற மறக்கமுடியாத படங்களை தமிழ்த்திரையுலகுக்குத் தந்தவருமான வீணை பாலசந்தரிடமிருந்து பலத்த கண்டனம் எழுந்தது. பாலமுரளி கிருஷ்ணா குறிப்பிட்டிருந்த ராகங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டவை என அவர் கொதித்தார். இதுகுறித்து மியூசிக் அகாடமிக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதிய பாலசந்தர் அதற்கான ஆதாரங்களையும் விரிவாக அதில் இணைத்திருந்தார். மியூசிக் அகாடமியின் பொறுப்பற்ற செயல் என இதனைக் கண்டித்திருந்தார்.இசையுலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தமிழக அரசு இதை ஒதுங்கி வேடிக்கை பார்க்க, இசையுலகம் பாலசந்தர் மற்றும் பாலமுரளிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு அணிகளாக பிரிந்து நின்றன.

சினிமா உலகில் தனக்கென ஒரு பாணியைக் கொண்டு வெற்றிகரமானவராக இருந்த பாலசந்தர், சினிமாவை ஒரேநாள் இரவில் கைகழுவிட்டு இசையுலகுக்குத் திரும்பியவர். தன் மனதுக்கு படுவதை யாருக்காகவும் பயந்து ஒதுங்காமல் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தார். நியாயம் என்றால் யாருக்காகவும் நெகிழாத சுபாவமுடையவர். இசையுலகில் ஓர் கலகக்காரர் என்ற பெயர் அவருக்குண்டு.

“ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ராகங்களை தான் கண்டுபிடித்ததாக அகாடமியை ஏமாற்றியிருக்கிறார், அப்படி அகாடமி வெளியிட்ட மலரில் அது அச்சானதும் அதை ஆதாரமாக வைத்து அரசையும் ஏமாற்றி விருது பெறுவதுதான் அவரது நோக்கம்” என வரிந்துகட்டினார் பாலசந்தர்.



பாலமுரளியின் நட்பை இழக்க விரும்பாத பலர் 'ஏன் இவருக்கு இந்த வேலை என அறிவுரைகளை பாலசந்தருக்கு வழங்கினர். ஆனால் கொஞ்சமும் பின்வாங்கவில்லை பாலசந்தர். அப்போது வளர்ந்துவந்த கலைஞரான பாலமுரளிகிருஷ்ணாவுக்கு சில மூத்த கலைஞர்களின் ஆதரவு இருந்தது. சொற்போர் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படையான யுத்தமானது. அவை பல தலைப்புகளில் இதை பரபரப்பாக எழுதி தீர்த்தன. பாலசந்தரின் குற்றச்சாட்டின் மீது கருத்து கேட்டு மியூசிக் அகாடமி பாலமுரளிக்கு கடிதம் எழுத. “இசை குறித்த முறையான ஞானம் இல்லாத பாலசந்தர் தப்பும் தவறுமாக இப்படி குற்றஞ்சாட்டுவது வெட்கக்கேடானது. ராகத்தும் ஆரோக அவரோகணத்துக்கும் வித்தியாசம் தெரியாத பாலசந்தர் தன்னை இசைக்கலைஞர் என்று கூறிக்கொள்வது வெட்கக்கேடானது” என கொதித்து அதற்கு பதில் எழுதினார் பாலமுரளி கிருஷ்ணா.

தன் தரப்பு விளக்கங்களையும் அவர் தேவைப்பட்ட இடங்களில் விவரித்ததோடு “என் புதிய ராக கண்டுபிடிப்புகள் பற்றி பாலசந்தர் முன் விவாதிப்பது என் நேர்மைக்கு குறைவானதாக நினைக்கிறேன். தேவைப்படும்போது என் ரசிகர்கள் முன் அதை விவரிப்பேன்” என கறார் முகம் காட்டியிருந்தார் கடிதத்தில். தனக்கு உண்டான ஆத்திரத்தில் பாலசந்தரை கடுமையான வார்த்தைகளாலும் அவர் அர்ச்சித்திருந்தார். இரண்டு மேதைகள் முட்டிக்கொண்டு நிற்பதை கண்டு இசையுலகம் கவலைப்பட்டது. பத்திரிகைகளுக்கு பரபரப்பு தீனியானது இந்த விவகாரம். ஒரு கட்டத்தில் தன் கருத்துகளை துண்டறிக்கையாக வெளியிடும் நிலைக்கு போனார் பாலசந்தர்.

பாலமுரளியின் வார்த்தைகளால் காயமடைந்த பாலசந்தர் முன்னைவிடவும் அதிகமாக சீற ஆரம்பித்தார். அந்நாட்களில் காலையில் துாங்கி எழுந்து பார்த்தால் பாலசந்தர் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் அவரது அன்றைய பரபரப்பு பேட்டிக்காக காத்திருப்பார்கள். அப்படி ஓர் நிலை உண்டானது.

அமைதி காக்கச்சொல்லி இரு தரப்பிலும் நெருங்கிய நண்பர்கள் சொல்லியும் அவர்கள் காது கொடுக்கவில்லை நண்பர்களுக்கு. ஒரு கட்டத்தில் பாலசந்தர் இதுகுறித்து நிபுணத்துவம் பெற்ற குழுவினரால் விசாரணை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தினார். ஆச்சர்யமாக கடந்த பல ஆண்டுகளாக அவருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த சுப்புடுவும் பாலசந்தருக்கு ஆதரவாக களத்தில் நிற்க இன்னும் பரபரப்பானது இசையுலகம். இன்னும் சில வேத விற்பன்னர்களும் பாலசந்தருக்கு ஆதரவாக நின்றார்கள். ஆனால் சரிபாதிபேர் பாலசந்தரின் கருத்துக்கு ஆதரவு தந்தாலும் அவர் அதை வெளிப்படுத்தும் விதத்தை கண்டித்தார்கள். இந்த விவகாரம் மியூசிக் அகாடமியின் உறுப்பினர்களிடையேயும் பிளவை ஏற்படுத்தியிருந்தது.

'நல்ல சாரீரமும் அதீத இசைமேதைமையும் கொண்டவர்தான் பாலமுரளி. என்றாலும் அதற்காக அவரது அத்துமீறலை அனுமதிக்கமுடியாது. இசை என்பது ஒருவருடைய தனிப்பட்ட கருத்துகளால் சிறைபிடிக்கப்பட்டுவிடக்கூடாது' என இசையுலகம் தொடர்பான இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டிருந்தது. தொடர்ந்த இந்த சர்ச்சைகளுக்குப்பின் ஒரே தீர்வாக இந்த பிரச்னையை ஆய்வதற்கு குழு ஓன்று அமைக்கப்பட்டது.

“ஓர் இசைக்கலைஞர் ஓர் ராகத்தை கண்டுபிடிக்கிறார் என்று சொல்ல முடியாது. புதிய ராகத்தை அவர் கண்டறிகிறார் என்று சொல்லலாம். சாகித்தியக்கர்த்தாக்களின் உள்ளுக்குள் புதைந்திருக்கும் மனநிலையை அழகுபட வெளிப்படுத்துவது ராகம் என்று சொல்லலாம். அலங்காரம் செய்யப்பட்ட ஸ்வரங்கள் ஆரோகண - அவரோகணத்தில் அதிர்ந்து அசைந்து கமகங்கள் நுட்பமான சுருதிகள் சஞ்சாரங்கள் விசேஷ பிரயோகங்கள் முலமாகவும் ஸ்வரங்களின் அசைவுகள் மூலமாகவும் உயிர்பெறுகிறது. பாடலாசிரியரின் திறமையால் அது ராகமாகிறது. ஆகவே ராகத்தை படைப்பவர் அவர். அதன் ஆரோகண அவரோகணத்தை தான் படைக்கும் பாடல் மூலம் ராகமாக முன்வைக்கிறார். அந்த வகையில் குறிப்பிட்ட ஆரோகண அவரோகணத்தில் ஒரு பாடலை இயற்றும் முதல் நபராக அந்த பாடகர் ஆகிறார்” என தன் தரப்பு விளக்கத்தை இறுதியாக மியூசிக் அகாடமிக்கு தான் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டார் பாலமுரளி. 7 மாதங்களுக்குப்பின் இந்த நீண்ட போர் முடிவுக்கு வந்தது



ஆம், 1979 ஏப்ரல் மாதத்தில் இறுதிவாரத்தில் மியூசிக் அகாடமியினால் நியமிக்கப்பட்ட 60 தேர்ந்த இசை மேதைகள் அடங்கிய நிபுணர்கள் குழு தன் தீர்ப்பை தந்தது. “ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஒரு ராகத்தை ஒரு பாடகர் புதிய வடிவம் கொடுத்தால் அதற்கு அபூர்வ ராகம் என்று சொல்லலாம். முன்பே அது படைக்கப்பட்டிருப்பதனால் அதை பிரபலப்படுத்தும் உரிமையை வேண்டுமானால் பாடகர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாட முடியாது” என பாலமுரளிக்கு எதிராக தீர்ப்பை எழுதியது நிபுணர்கள் குழு. இந்த தீர்ப்பை பக்கம் பக்கமாக பத்திரிகைகள் விமர்சனம் செய்திருந்தாலும், பாலமுரளியின் மேதமையை யாரும் குற்றம் குறை சொல்லவில்லை. பாலமுரளியின் திறமையை புகழ்ந்து எழுதின பத்திரிகைகள்.

இந்த சர்ச்சையினால் கசப்படைந்த பாலமுரளி தனக்கு எதிராக பேசிய, அவதுாறுகளை பரப்பியதாக செம்மங்குடி மீது வழக்குதொடர்ந்தார் என்பதும் தனிக்கதை. கிட்டதட்ட 4 வருடங்களுக்குப்பின் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இசைமேதைகளுடனான அவரது பிணக்கு அப்படியே தொடர்ந்தது. இறுதிவரை பாலசந்தருடன் அவர் நட்பு பாராட்டவில்லை. ஆனால் செம்மங்குடியிடம் அவர் இணக்கம் காட்டினார். அவரது கச்சேரி ஒன்றில் வயலின் வாசித்து மீண்டும் இணக்கமானார்கள் இருவரும்.

இந்த சர்ச்சைகளினால் தன் இசைமேதைமையை கொஞ்சமும் இழக்காமல் இன்னும் அதிவேகமாக தன் இசைப்பயணத்தை தொடர்ந்தார் பாலமுரளி.
It’s time to pull the plug on Medical Council of India

KumKum Dasgupta, Hindustan Times

The winter session of Parliament is in progress and one of the key Bills that is scheduled to be presented for passage is the National Medical Commission Bill, 2016, which seeks to replace the Medical Council of India (MCI) with a national medical commission (NMC).

With demonetisation hogging the time and energy of MPs, one doesn’t know if this new Bill will be discussed during this session, but it’s time to scrap the corrupt and derelict Medical Council of India (MCI).

The MCI is a statutory body with the responsibility of establishing and maintaining “high standards of medical education and recognition of medical qualifications in India”.

Read: MCI moves SC against order on Lodha panel, wants modification

It registers doctors to practice in India, in order to protect and “promote the health and safety of the public” by ensuring “proper standards” in the practice of medicine.

While the MCI’s stated intentions are no doubt righteous, the reality is different: Four years after doctors removed the uteruses of 703 women in Bihar to siphon off surgery reimbursements under the Rashtriya Swasthya Bima Yojna, the central health insurance scheme for poor families, MCI has failed to take action against even one doctor.

Read: Parliamentary panel pulls up MCI over corruption

They managed to put off any action against the corrupt and unethical doctors even after the Bihar Human Rights Commission (BHRC) wrote to the MCI in April to punish the physicians involved in the “uterus scam”.

As directed by the BHRC, the Bihar government lodged FIRs against 33 empanelled hospitals and 13 doctors but the doctors continue to practice and the hospitals remain functional.

If approved, the NMC, which will replace MCI, will become the main regulatory body and take over all roles and responsibilities of the organisation.

The new body will have eminent doctors and experts from related fields to steer medical education in the country so as to ensure quality of education is at par with global standards.

The demand for revamping the MCI has been doing the rounds for some time: Earlier this year, a parliamentary panel had called for revamping the MCI, saying it has failed in its role as a regulator, which has led to a downfall in India’s medical education system.

The MCI president admitted to the committee that there is rampant corruption in the country’s apex medical education regulator. The report noted that the president admitted “corruption was there when there was sanctioning of medical colleges, or increasing or decreasing seats. The committee has also been informed that private medical colleges arrange ghost faculty and patients during inspections by MCI and no action is taken for the irregularity”.

In May, the Supreme Court appointed the Lodha panel to oversee the MCI because the regulator is often accused of indulging in corrupt practices.

The MCI, however, thinks that there is organised vendetta against it.

In an application to the SC in June, the MCI said the SC order is based on a perception that the organisation is corrupt.

Voicing its strong reservations against the reasons the top court cited to appoint the panel, the MCI said vested interests have orchestrated a well-designed propaganda against the council to render it weak and toothless.

The MCI has its reasons to defend itself, but how would it explain its lax attitude towards erring doctors in the Bihar case?

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...